ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று தொடக்கம்

Go down

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று தொடக்கம் Empty தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று தொடக்கம்

Post by ayyasamy ram Sat Feb 01, 2020 6:02 am

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று தொடக்கம் 202002010154017098_Tanjore-Big-Temple-Yagasala-pujas-begin-today_SECVPF

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று(சனிக்கிழமை) தொடங்குகிறது. யாகசாலை பூஜைக்காக காவிரி ஆற்றில் இருந்து யானை மீது புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 5-ந் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 27-ந் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை கோபூஜை, கஜ பூஜை, அஸ்வபூஜை நடந்தது. மாலையில் அங்குரார்ப்பணம் நடந்தது.

இன்று(சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும், 3-ந் தேதி காலை 9 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜையும், 4-ந் தேதி காலை 8 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 7-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.

5-ந் தேதி காலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து காலை 7.25 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

காலை 10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. யாக பூஜைக்காக 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பூஜையில் 300 சிவாச்சாரியார்களும், 60 ஓதுவார்களும் பங்கேற்கின்றனர்.

யாகசாலை பூஜைக்காக திருவையாறு காவிரி ஆற்றில் இருந்து கலசத்தில் புனிதநீர் எடுத்து வரப்பட்டு வெண்ணாற்றங்கரையில் உள்ள தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டது. அங்கு நேற்று காலையில் புனிதநீர் வைக்கப்பட்ட கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

புனிதநீர் வைக்கப்பட்ட கலசத்தை கொண்டு செல்வதற்காக கும்பகோணத்தில் இருந்து யானை வரவழைக்கப்பட்டது. அந்த யானைக்கு கலெக்டர் கோவிந்தராவ் மாலை அணிவித்தார்.

பின்னர் யானையின் மீது புனிதநீர் கலசம் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்திற்கு முன்பு ஓதுவார்கள் தேவாரம் மற்றும் திருமுறை பாடல்களை பாடி வந்தனர். மேள, தாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் புறப்பட்ட இந்த ஊர்வலம் பெரியகோவிலை வந்தடைந்தது.

இதையடுத்து யானை மீது வைக்கப்பட்டிருந்த புனிதநீர் கலசத்தை சிவாச்சாரியார்கள் பெருவுடையார் சன்னதிக்கு எடுத்து சென்று பூஜை செய்தனர். இதேபோல் கங்கை, யமுனா, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஆறுகளில் இருந்தும் புனிதநீர் கொண்டு வரப்பட்டு பெரியகோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த புனிதநீர் அனைத்தும் கலக்கப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு யாகசாலையில் வைக்கப்படுகிறது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83751
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum