புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
37 Posts - 77%
heezulia

10 Posts - 21%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
373 Posts - 79%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_m10புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 29, 2020 5:34 am

புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Tamil_News_large_2467722
-
புதுடில்லி : புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய சென்னையில் பணியை துவக்கிய டாக்டர் ரவி கண்ணன், தற்போது அசாமின் பாரக் பள்ளத்தாக்கு பகுதியில், புற்றுநோய் மருத்துவமனையை நடத்தி வருகிறார். சேவையைப் பாராட்டி டாக்டர் ரவி கண்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது.

பாரக் பள்ளத்தாக்கு பகுதி, நாட்டிலேயே மருத்துவ வசதியில் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்தது. சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் ரவி கண்ணன் பணிபுரிந்தபோது, அறுவை சிகிச்சை நிபுணராக, ஊக்குவிப்பாளராக பல முறை அசாம் சென்றுள்ளார். 2007ல்அசாம் வந்த போது, அங்கு பணிபுரிவதன் அவசியத்தை ரவிகண்ணன் உணர்ந்தார். அமெரிக்க இந்திய கல்வி மையத்தில் பணிபுரிந்த அவரது மனைவி சீதாவிற்கு ஆரம்பத்தில் ரவிகண்ணன் முடிவின் மீது தயக்கம் இருந்தது. அப்போது, அவர்களின் மகள் 5ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது பயங்கரவாதம், வெடிகுண்டு சம்பவங்கள் அசாமில் நடந்து வந்தன. அசாம் சென்று பார்த்த பிறகு ரவிகண்ணன் சேவை அசாமிற்கு தேவைப்படுவதை சீதா உணர்ந்து, அங்கு செல்வதற்கு ஒப்பு கொண்டார்.
-
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Gallerye_143218896_2467722
-

அசாமில் பணிபுரிவது குறித்து ரவிகண்ணன் கூறியதாவது: புற்றுநோயை குணப்படுத்த முடியாது என மக்கள் நினைத்தது, அதிக செலவு செய்து சிகிச்சை பெறுவதை மக்கள் விரும்பாதது எங்களுக்கு பெரும்சவாலாக இருந்தது. ஒவ்வொரு நோயாளிகளிடமும், புற்றுநோய் என்பது, நீரழிவு போல் அல்லாமல், குணப்படுத்த கூடிய நோய்தான் என விளக்கினேன். புகையிலை, பாக்கு உண்பது, மதுப்பழக்கம் போன்ற வாழ்க்கை முறையால் தான் அப்பகுதி மக்களிடம் புற்றுநோய் அதிகமாக இருக்க காரணம். இந்த நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்றார்.

ரவிகண்ணன், அசாம் வந்தபோது, சச்சாரில் சிறிய புற்றுநோய் மருத்துவமனை மட்டுமே இருந்தது. நிதிப்பற்றாக்குறை, உள்கட்டமைப்பு வசதி இல்லாதது, சிறப்பு நிபுணர்கள் இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகளும் இருந்தன. இன்று இந்த மருத்துவமனையில், ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களை கவனித்துக் கொள்ள நிறைய பேருக்கு வேலை தரப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கப்படுவதுடன், அவர்களுடன் தங்கியிருக்கும் நபர்களுக்கும் உணவுக்கு குறைந்தளவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
-

ரவி கண்ணனுக்கு பத்மஸ்ரீ விருது பெற்ற உடன், இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த ஜாய்திப் பிஸ்வாஸ் என்ற பேராசிரியர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது: நான் கடவுளை பார்த்ததுஇல்லை. ஆனால், சச்சார் புற்றுநோய் மருத்துவமனையில் கடவுள் வாழ்ந்து வருவதை பார்த்துள்ளேன் என்று கூறி உள்ளார்.

விருது குறித்து ரவிகண்ணன் கூறுகையில், ஆயிரகணக்கான மக்கள் சிகிச்சைக்கு பெறுவதற்கு காரணமான அனைவருக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். இது போன்ற அங்கீகாரம் உற்சாகம் அளிப்பதாக இருந்தாலும், ஒவ்வொரு புற்று நோயாளிக்கும் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதே எங்களது நோக்கம். சிகிச்சைக்கு, சில நோயாளிகளை நாங்கள் சம்மதிக்க வைத்த போது, மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதி இல்லாததால், அவர்களை நாங்கள் இழந்தோம். நோயாளிகளுடன் தங்கியவர்கள் பொரியையும், பச்சை மிளகாயையும் சாப்பிட்டு தரையில் படுத்து கிடந்தனர். அவர்களுக்கு தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்ய போதிய வசதி எங்களிடம் இல்லை. இதனால், அவர்கள் மீண்டும் வருவதை நிறுத்திவிட்டனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84888
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 29, 2020 5:36 am

ஒரு முறை வருவதால் மட்டும் புற்றுநோய் குணமாகிவிடாது. தொடர் சிகிச்சைக்கு அவர்கள் வர வேண்டும். ஒரு முறை, நோயாளி ஒருவர் சிகிச்சைக்கு வந்து, கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தினார். மீண்டும் வரவில்லை. விசாரித்த போது, அந்த நபர், சிகிச்சைக்காக தனது மகனை ரூ. 5 ஆயிரத்திற்கு பணக்காரர் ஒருவரிடம் விற்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அந்த சிறுவனை மீட்டதும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது என முடிவு செய்தோம். இதற்காக மருத்துவமனையில் நோயாளி உறவினர்களுக்கு வேலை கொடுத்தோம். இதற்காக, உள்ளூரில் செயல்படும் சில குழுக்கள் மற்றும் அரசிடமிருந்து உதவிகள் கிடைக்க துவங்கின.நோயாளிகளிடம் இருந்து ரூ.500 மட்டும் கட்டணமாக வசூலித்து வாழ்நாள் முழுவதும் இலவசமாக சிகிச்சை அளிக்கிறோம். இது போன்ற சிறிய நடவடிக்கைகள் காரணமாக தொடர் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இன்று 70 சதவீத நோயாளிகள் முழுமையான சிகிச்சை பெறுகின்றனர். நாட்டின் மற்ற பகுதிகளில் செயல்படும் புற்றுநோய் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சை போல், இங்கும் சிகிச்சை வழங்குகிறோம். முறையாக சிகிச்சை அளிக்காதது கொடூரமானது என கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
-
புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர் Gallerye_143400482_2467722
-

புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அருகில் தான் கிடைக்க வேண்டும். அவர் நீண்ட தூரம் செல்லக்கூடாது என்பது டாக்டரின் ரவிகண்ணன் கொள்கை. இதனால், அவர் மற்ற டாக்டர்களுடன் இணைந்து, கரீம்கஞ்ச், ஹைலிகண்டி மற்றும் திடா ஹசோ மாவட்டங்களில் சாட்டிலைட் மருத்துவமனையை துவக்கினார். இதனால், சச்சார் மருத்துவமனைக்கு தொடர் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 90 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு, கடந்த 2006 ல் தான் முதலாவது கதிரியக்க பிரிவு கிடைத்தது. முறையாக படித்து பட்டம் பெற்ற நர்ஸ், 2008 ல் பணியமர்த்தப்பட்டார். 2012ல், மிகநுணுக்கமான அறுவை சிகிச்சை, முதன்முறையாக ரவிகண்ணன் மேற்பார்வையில் செய்யப்பட்டது.
-

ரவி கண்ணனின் தந்தை விமானப்படையில் பணிபுரிந்தவர். சிறப்பாக பணியாற்றியதற்காக விஷிஷ்ட் சேவா பதக்கம் பெற்றவர்.ரவிகண்ணன் தாயார் இந்துமதி கூறுகையில், எங்களது மகன், சாமான்ய மக்களுக்கு சேவை செய்வதற்காக, அவரை டாக்டராக்க வேண்டும் என விரும்பினோம். ரவிகண்ணன், எப்போதும் நேர்மையானவராகவும், பணியில் அர்ப்பணிப்புள்ளவராகவும் இருப்பார். தனக்கு கிடைத்த அங்கீகாரத்தால், அதிக மகிழ்ச்சி அடையாமல், இன்னும் அதிகம் பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
சீதா கூறுகையில், நமது நாடு பெரியது. ஆனால், பல பகுதிகள் இணைக்கப்படவில்லை. நாங்கள் வந்தபோது இம்மக்களின் மொழி எங்களுக்கு புரியாது. ஆனால், இப்போது எங்களை பலர் கவனித்து கொள்கின்றனர். தரம் வாய்ந்த கல்வி எங்கள் மகளுக்கு கிடைத்தது. புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மூலம் ஏராளமான மக்களுக்கு சிகிச்சை அளிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பத்மஸ்ரீ விருது தனி நபருக்கு கிடைத்த விருது அல்ல. டாக்டர் குழுவினரின் கடுமையான அர்ப்பணிப்புடன் கூடிய நீண்ட கால பணிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார்.

கண்ணன் குடும்பத்தினர் செல்ல பிராணிகள் வளர்ப்பதை ஆர்வம் உள்ளவர்கள். அவர்களது வீட்டில் விலங்குகள், பறவைகளை வளர்த்து வருகின்றனர். துணிவு என பொருள்படும் ஜப்பானிய வார்த்தையான ஹிரோ என்பதை, நாய்க்கு பெயராக வைத்துள்ளார்.
அசாம் அரசும், சச்சார் புற்றுநோய் மருத்துவமனைக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. பல முறை மருத்து விநியோகம் செய்ததுடன், உள்கட்டமைப்பு வசதிக்கும் நிதி அளித்துள்ளது. ரவி கண்ணனுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளதால், அரசின் உதவி மேலும் கிடைக்கும் என மருத்துவமனை நிர்வாகம் கருதுகிறது.
-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக