ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது

2 posters

Go down

 குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது Empty குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது

Post by ayyasamy ram Mon Jan 27, 2020 11:38 am

--
படம் -மனிதன்
வருடம் - 1953
பாடியவர்- எம்.எல் வசந்தகுமாரி

------------------------------------------



Last edited by ayyasamy ram on Mon Jan 27, 2020 12:12 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது Empty Re: குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது

Post by ayyasamy ram Mon Jan 27, 2020 11:41 am

தினமலர் பத்திரிகையில் கிடைத்த சுவாரஸ்யமான பகிர்வை
இங்கே தருகிறேன்.

“மாணவப் பருவத்தினராக எம்.எல்.வசந்தகுமாரி இருந்தபோது
மதுரையில் ஒரு சங்கீத விழாவில் ஒரு கச்சேரி மேடையில்
அவருடன் ஒரு பெரியவரும் அமர்ந்திருந்தார். அந்நிகழ்ச்சியை
மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த இளைஞருக்கு இவ்வாறு
மேடையில் எம்.எல்.வி.யின் அருகில் அமர்ந்திருந்த பெரியவரைக்
கண்டதும் கோபம் வந்தது.

கச்சேரி மேடையில் பாடகிக்குப் பக்கத்தில் இந்த மனிதருக்கு
என்ன வேலை? இவ்வாறு நினைத்தவராக அவரிடம் சென்று
உடனே மேடையை விட்டுக் கீழே இறங்கும்படி உத்தரவிட்டார்.

அப்போது அந்தப் பெரியவர் சொன்னார்; பாடிக் கொண்டு
இருப்பது என் பெண்தான். அவரிடம் யாரும் விஷமம் செய்யாமல்
இருக்கவே நான் இங்கே இருக்கிறேன்.

இளைஞர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும்
கேட்டார். பிறகு இந்த இளைஞருக்கும் அவருக்கும் இடையே
நல்ல நட்பு மலர்ந்தது. அவர் பெயர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி.

இந்த நட்பே பின்னால் அவர் எம்.எல்.வி.யை மணந்து
கொள்ளவும் காரணமாயிற்று. நல்ல செல்வந்தராக இருந்த
அவர் சினிமாப்படம் எடுக்கும் முயற்சியில் பொருளிழந்து
பிறகு விகடக்கலையில் புகழ்பெற்று விகடம் கிருஷ்ணமூர்த்தி
என்றழைக்கப்பட்டார். “ என்று தினமலர் செய்தி பகிர்கின்றது.
-
நன்றி- கானா பிரபா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது Empty Re: குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது

Post by ayyasamy ram Mon Jan 27, 2020 11:42 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது Empty Re: குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது

Post by ayyasamy ram Mon Jan 27, 2020 11:52 am

 குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது MLV

எம்.எல்.வசந்தகுமாரியின் முக்கியமான இசை வாரிசாக
திருமதி சுதா ரகுநாதன் விளங்குகிறார். தன் குருவிடம்
இசைக் கல்வியில் தேறி அவருடனேயே ஐந்து ஆண்டுகள்
கச்சேரிகளில் பயணப்பட்ட சுதாவுக்குத் திருமண
ஏற்பாடுகள் நடப்பதையிட்டுக் கரிசனை கொண்டு தான்
மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டுமென்று கூறி
ரகுநாதனைச் சந்தித்து

“சுதாவின் இசைப் பயணம் அவரது திருமண வாழ்வால்
தடைப்படல் கூடாது” என்று வேண்டினாராம்
எம்.எல்.வசந்தகுமாரி.

இதனால் தான் இவர் என் குரு மட்டுமல்ல என் அம்மாவும்
கூட என்று நெகிழ்கிறார் சுதா ரகுநாதன்.

திரையிசையில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில்
நிறையப் பாடியுள்ளார். அவற்றில் குறிப்பாக

“கோபாலனோடு நான் ஆடுவேனே” (வாழ்க்கை),
“ஆகா ஆகா வாழ்விலே” (மந்திரி குமாரி)
“கண்ணன் மன நிலையை” (ஏழை படும் பாடு),
“அய்யா சாமி ஆவோஜி சாமி” (ஓர் இரவு),
“கொஞ்சும் புறாவே” (தாய் உள்ளம்),
“குயிலே உனக்கு” (மனிதன்),
“கூவாமல் கூவும் கோகிலம்” (வைர மாலை)
, “ஆடல் காணீரோ” (மதுரை வீரன்)

போன்றவை இன்றளவும் உலக வானொலிகளாலும்,
வானொலி ரசிகர்களாலும் பெரு விருப்போடு மனதில்
வைத்திருக்கும் பாடல்கள்.
-
-------------------------
நன்றி- கானா பிரபா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது Empty Re: குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது

Post by ayyasamy ram Mon Jan 27, 2020 12:07 pm

திரை பாடல்களிலும் மின்னிய எம்.எல்.வசந்தகுமாரி : திரை உலகில் சங்கீத ஆளுமைகள்
-
கச்சேரி மேடை, திரைப்பாட்டு ஆகிய இரண்டிலும் முன்னணியில் நின்ற வெகு சிலரில் முக்கியமானவர், எம்.எல்.வி., என்று அழைக்கப் பட்ட, எம்.எல்.வசந்தகுமாரி. ஐம்பதுகளில், தமிழ்த்திரை இசையில் கர்நாடக சங்கீதம் கணிசமான அளவு ஒலித்தபோது செயல்பட்டவர் என்றாலும், மெல்லிசையிலும் அவருடைய ரம்மியமான குரல் பரிமளித்தது.கர்நாடக சங்கீத நிபுணரான கூத்தனுார் அய்யாசாமி அய்யருக்கும், இசைப் பாரம்பரியத்தில் வந்த லலிதாங்கிக்கும், ஜூலை 3, 1928ல், சென்னையில் பிறந்தவர் வசந்தகுமாரி.

இரண்டு வயது குழந்தையாக இருக்கும்போதே, பாடல்களின் ஸ்வரங்களை சொல்ல ஆரம்பித்து விட்டாராம்.ஆனால், இசை மீது எல்லையில்லாத நாட்டமுள்ள பெற்றோர், இசையில் இயற்கையாக ஞானமுள்ள தங்கள் ஒரே மகள், பெரிய பாடகியாக வேண்டும் என்பதை விட, நன்றாகப் படிக்க வேண்டும் என்று நினைத்தனர். வசந்தியும் டாக்டராக வேண்டும் என்று படித்தார். எப்படியும், இசை அவரை நிழல்போல் தொடர்ந்தது

.பதினோரு வயதில், லலிதாங்கி யின் கச்சேரிகளில், வசந்தகுமாரி பின்பாட்டு பாடத் துவங்கினார். பின்னிரெண்டு வயதில், பிரபல பாடகர் ஜி.என்.பாலசுப்ரமணியம், அவரை தன் மாணவியாக வரித்துக் கொண்டார். பதிமூன்று வயதில், வசந்தகுமாரி பாடிய முதல் இசைத்தட்டு வெளிவந்தது; முதல் தனிச் கச்சேரியும் நடந்தது.பதினைந்து வயதில் படிப்பை விட்டு, குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை வந்தது.

கச்சேரி வாய்ப்புகளை ஜி.என்.பி., ஏற்படுத்திக் கொடுத்தார். வசந்தகுமாரியின் குரலால் கவரப் பட்டு, முதல் திரை வாய்ப்பைத் தந்தவர், எம்.கே.தியாகராஜ பாகவதர். 'ராஜமுக்தி' என்ற சொந்தப் படத்தில் (1948), பாகவதரின் மனைவி வேடத்தில் நடித்த வி.என்.ஜானகிக்கு பின்னணி பாடினார் வசந்தகுமாரி.

பாகவதருடன் வசந்தகுமாரி இரண்டு பாடல்கள் பாடினார். ராஜமுக்தியின் இசை அமைப்பாளர், திரை இசை மேதை சி.ஆர்.சுப்பராமன். வசந்தகுமாரியின் குரலில் வேறு பல வெற்றிப் பாடல்களைத் தந்தார். அவை, எம்.எல்.வி., பி லீலாவுடன் பாடிய, 'எல்லாம் இன்ப மயம், சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' (மணமகள் 1951). கவர்ச்சிகரமான ராகமாலிகையாக அமைந்த சின்னஞ்சிறுகிளியே, கர்நாடக இசையால் சுவீகரிக்கப்பட்ட திரைப்பாடல்.

இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் திரை உலகில் கோலோச்சிய காலத்தில், ஏராளமான நடனப்பாடல்களை அவருடைய இசையில் பாடினார் எம்.எல்.வி., ஆடல் காணீரோ, திருவிளையாடல் காணீரோ (மதுரை வீரன்), பாற்கடல் அலைமேலே (தசாவதாரப் பாடல் - ராஜா தேசிங்கு) ஆகியவை இந்தத் தலைப்பில் மின்னும் உருப்படிகள்.விஸ்வநாதன் ராமமூர்த்தி லதாங்கி ராகத்தில் அமைத்த, 'ஆடாத மனமும் உண்டோ' - இன்னொரு அழகான பாடல் - 'ஜிலுஜிலுவென்று' வசந்தகுமாரியின் குரலில் வந்து விழும் பிருகாக்களை நான் ரசிப்பேன் என்பார்,

இந்தப் பாடலை அவருடன் இசைத்த டி.எம்.சவுந்தரராஜன். ஐம்பதிற்கும் மேற்பட்ட இத்தகைய பாடல்கள், இன்றைய நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்புடையவை.ராகங்களில் அமைந்த மென் கர்நாடகப் பாடல்கள் என்றாலும், (மஞ்சள் வெயில் மாலையிலே), மெல்லிசைப் பாடல் என்றாலும் (கொஞ்சும் புறாவே, சூவாமல் கூவும் கோமளம்), வசந்தகுமாரி அவற்றை இனிமையாகப் பாடினார்.

அறுபதுகளில் அவருடைய முழு கவனம், கச்சேரி மேடைக்குத் திரும்பியது. 'ஹம்ஸ கீதே' என்ற கன்னடப் படத்தில், 1975ல் பாடினார். பின்னாளிலும் அவருடைய லைட் கிளாசிகல் பாடல்கள், அற்புதமாக அமைந்தன. அவர் வழங்கிய தமிழ் தாலாட்டுப் பாடல்கள் மிக இனிமையானவை.

திருப்பாவை, திருவெம்பாவை போன்ற சமய இலக்கியங்களையும்
இசைத்தட்டுகளில் மிக நேர்த்தியாகப் பதிவு செய்தார்.
இப்படி எல்லாம் பாடியவர், தன்னுடைய சொந்த வாழ்க்கையை,
'ஒரு டிராஜெடி' என்பார். நாம் அதை, 'ஒரு மெலடி' என்போம்.
-------------------
- வாமனன் -திரை இசை வரலாற்று ஆய்வாளர்
நன்றி-தினமலர் : டிச 25, 2014
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது Empty Re: குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது

Post by Guest Mon Jan 27, 2020 3:04 pm

 குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது 3838410834 நல்ல பாடல்கள்.
ஒரு காணொளி இருமுறை வந்து விட்டதா?
avatar
Guest
Guest


Back to top Go down

 குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது Empty Re: குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது

Post by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 7:10 pm

நல்லதோர் தொகுப்பு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது Empty Re: குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது

Post by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

சக்தி18 wrote: குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது 3838410834 நல்ல பாடல்கள்.
ஒரு காணொளி இருமுறை வந்து விட்டதா?
மேற்கோள் செய்த பதிவு: 1312374
-
இருமுறை வந்த பதிவில் ஒன்று நீக்கப்பட்டது...  குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது Empty Re: குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது

Post by Guest Thu Jan 30, 2020 5:09 pm



(நன்றி:சுபசிறி தணிகாசலாம்.)
avatar
Guest
Guest


Back to top Go down

 குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது Empty Re: குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum