ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொன்மா (Dinosaur, டைனசோர்)

Go down

தொன்மா (Dinosaur, டைனசோர்) Empty தொன்மா (Dinosaur, டைனசோர்)

Post by தாமு Mon Jan 04, 2010 3:14 pm

தொன்மா (Dinosaur, டைனசோர்) என்பது ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்கள் ஆகும். இவை ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயிற்று.
தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.

தொன்மா என்னும் பெயரும் அக்காலத்தில் வாழ்ந்த உயிரினங்களும்
தொன்மா என்பது இங்கே முற்றிலுமாய் அழிந்து போன விலங்கினங்களைக் மட்டுமே குறிக்கும் ஒரு சொல்லாகப் பயன்படுகின்றது. மா என்றால் விலங்கு, தொல் என்றால் பழைய, எனவே தொல் + மா = தொன்மா = தொல் பழங்காலத்தில் இருந்த விலங்கினம். தொன்மா என்று கூறினாலும், இவைகளை போலவே தொல் பழங்காலத்தில் இருந்து வாழ்ந்து இன்றும் நம்மோடு இருக்கும் முதலை போன்ற இனங்களை இச்சொல் குறிக்காது. தொன்மாக்கள் வாழ்ந்த காலத்தில் அதே காலத்தில் முதலைகளும், தவளைகளும், பல்லிகளும், ஆமைகளும், நத்தைகளும், பூச்சிகளும் வாழ்ந்திருந்தன. கடலில் கிளிஞ்சலுயிரி, கணவாய் வகைகள் (squids), இளகிநீரிகள் (jelleyfish), விண்மீனிகள் (நட்சத்திர மீன்கள்), சுறா மீன்கள், பிற மீன் இனங்கள், இன்று மறைந்துவிட்ட கடலில்வாழ்ந்த இச்தியோசோர், பிளெசியோசோர், ஊர்வன உடலமைப்புகொண்ட வௌவால் போன்ற இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் மட்டுமல்லாமல் சிறிய எலி அளவிலான பாலூட்டி வகைகளும் வாழ்ந்தன. அக்காலத்தில் பூக்கும் மரம் செடிகொடிகள் இன்னும் நில உலகில் தோன்றவில்லை. தொன்மாக்களில் ஒரு வகையான தெரோபாடு என்னும் ஒரேயொரு இனத்தின் கிளை மட்டும் தப்பி இன்று பறவை இனமாக உள்ளதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். இத் தொன்மாக்கள் என்பவை மிகப்பெரும்பாலும் நீரில் வாழாது நிலத்தின் தரைமீது வாழ்ந்த உயிரினங்களாகும். பறக்கவல்ல ஒருசில இனங்களும் இருந்தன.

தொல்பழங்காலத்தில் வாழ்ந்து அழிந்துபோன சிலவகை ஊர்வன விலங்குகளாகிய பெலிக்கோசோர், டைமெட்ரான் போன்றனவும், இறக்கைகள் கொண்ட இப்டெரோசோர் முதலியனவும் நீர்வாழ் விலங்காக இருந்த இச்தியோசோர், பிளெசியோசோர், மொசசோர் முதலியனவும் இந்த தொன்மா வகையைச் சேர்ந்தவை அல்ல. தொன்மாவை ஆங்கிலத்தில் டயனசோர் (Dinosaur) என்று அழைப்பர். இவ் ஆங்கிலச்சொல் கிரேக்க மொழியில் உள்ள இருசொற்களின் கூட்டாய்ப் பெறப்பட்டது. டைனோஸ் + சோரா = டைனசோர் . டைனோஸ் (deinos ) என்றால் “கொடிய” “அச்சமூட்டும்”, “பெரிய” என்று பொருள்படும்; சோரா அல்லது சௌரா (saura ) என்றால் “பல்லி”, “ஊர்வன” என்று பொருள்படும். எனவே இத் தொன்மாக்களைக் கொடும்பல்லி அல்லது கொடிய ஊர்வன என்றும் சொல்லலாம்.

தொன்மா கண்டுபிடிப்பு
ரிச்சர்டு ஓவன் (Richard Owen) என்னும் ஆங்கிலேய தொல்லுயிரியல் ஆய்வளர், 1842 ஆம் ஆண்டில் தான் கண்டுபிடித்த தொல்லுயிரெச்சங்களைக் கொண்டு, அவ்விலங்குகள், பல்லி போன்ற ஊர்வன வகையைச் சேர்ந்த சோரியன் என்னும் உயிரினத்தின் ஓர் உட்பிரிவில் டயனோசோரியா என்னும் ஒரு புதிய பிரிவில் சேர்த்தார். எனவே இவரே இந்த புதிய டயனசோர் என்னும் தொன்மாக்களை முதன் முதலில் வகைப்படுத்தியவர். கிரேக்கமொழிச் சொற்களில் இருந்து இப்பெயர் சூட்டியவரும் இவரே. ரிச்சர்டு ஓவன் அவர்கள் டயன்சோர் எனப் பெயர் சூட்டக் காரணம் அதன் கொடிய பற்களும் அது ஊட்டிய அச்சத்தாலும் அல்ல, ஆனால் அது வாழ்ந்த காலத்தில் அது எத்தனை வியப்பூட்டும் பெரிய விலங்காக இருந்திருக்கும் என்னும் பெருமை கருதி கொடும்பெரும்பல்லி என்று பொருள் தரும் டயனசோர் எனப் பெயரிட்டார்.

தொன்மாக்கள் மிகப்பல விதமான இனங்களைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். 2006ல் நடத்திய ஆய்வின்படி குறைந்தது கட்டாயம் 527 வெவ்வேறு தொன்மா (டயனசோர்) இனங்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 1844 தொன்மா இனங்கள் இருந்திருக்கக்கூடும் என கணிக்கின்றனர்.
தொன்மாக்களில் சில இனங்கள் இலையுணவு (மரஞ்செடி கொடி உணவுகள்) உண்பனவாகவும், சில ஊனுண்ணிகளாகவும் இருந்தன. சில இருகால்களில் நடப்பனவாகவும், சில நான்கு கால்களில் நடப்பனவாகவும், அம்மோசோரஸ் இகுவானடோன் போன்ற சில தொன்மாக்கள் தேவைக்கேற்றார் போல இருகால்களிலுமோ அல்லது நான்கு கால்களிலுமோ நடக்கவல்லவனவாய் இருந்தன. இன்று அறியப்பட்ட எல்லா தொன்மாக்களும் ஏறத்தாழ நிலத்தில் தரை மீது வாழ்ந்தனவே; நீருள்ளோ, பறந்தோ வாழவில்லை.

உருவ பரும வேறுபாடுகள்
சோராப்போடா போன்ற சில தொன்மாக்கள் இன்றுள்ள திமிங்கிலம் போன்ற ஒரு சில விலங்குகளைத் தவிர மற்ற எல்லா விலங்குகளைக் காட்டிலும் மிக மிகப்பெரியதாக இருந்தன. நீலத் திமிங்கிலம் என்பது 190,000 கிலோ.கி (209 டன்) எடை கொண்டதாகவும் 33.5 மீட்டர் (110 அடி) நீளம் கொண்டதாகவும் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். தொன்மாக்களை ஒப்பிட இன்றுள்ள யானை கூட மிகமிகச் சிறியதாகத் தென்படும்.

பெரும்பாலான தொன்மாக்கள் சோராப்போடா போல் பெரியன அல்ல. சராசரியாக பெரும்பாலான தொன்மாக்கள் 500 கிலோ.கி எடையுள்ளனவாக இருந்ததாக கணக்கிடுகின்றனர். தொன்மாக்களில் 63 இனங்களின் சராசரி எடை 850 கிலோ.கி எனவும் அமெரிக்காவின் கிரிஸ்லி கரடி அளவினதே என்றும் கணக்கிட்டுள்ளனர். தொன்மாக்களில் சரி பாதியானவை 2 டன் எடைக்கும் குறைவானதே என்கின்றனர். இன்றுள்ள பபலூட்டிகளின் சராசரி எடை 1 கிலோ கிராமுக்கும் குறைவானதே (863 கிராம்).
தொன்மா (Dinosaur, டைனசோர்) Size_comparison
தொன்மா (Dinosaur, டைனசோர்) Comparison(v2)
அளவை ஒப்பிட்டுப் பார்க்க டிப்லோடோகஸ் என்னும் தொன்மாவும் மனிதனும்
அளவை ஒப்பிட்டுப் பார்க்க இயோராப்டர் என்னும் தொன்மாவும் மனிதனும்.



க.கிருசாந்தன்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum