புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
157 Posts - 79%
heezulia
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
3 Posts - 2%
Pampu
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
1 Post - 1%
prajai
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
322 Posts - 78%
heezulia
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_m10பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் !

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sun Jan 14, 2018 10:18 am

பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! 1AtDlPRcahsdTBn9KjqA+pongal1

பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! WWIuK9CKQuCqzBbfguyS+pongal2

பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் !

சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சந்திரமானம் என்றும், சூரியனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சவுரமானம் என்றும் பெயர்
உழவர்கள் ஆண்டு சூரியனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சவுரமானம் என்றும் , மீனவர்கள் ஆண்டு சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சந்திரமானம் என்றும்,கணக்கிட்டனர் கூறப்படுகிறது .

சவுரமானக் கணக்கின்படி, ஓராண்டில், இரண்டு விஷுக்கள், இரண்டு அயனங்கள் வருகின்றன. ஆண்டை, ஒரு வட்டமாக கணக்கிட்டால், முதல் 90 டிகிரி, சித்திரை விஷூ; அடுத்தது ஆடி அயனம்; மூன்றாவது ஐப்பசி விஷூ; நான்காவது மகர சங்கரமணம் அல்லது தைப் பிறப்பு.
திருவலஞ்சுழி தலத்தில் உள்ள ராஜராஜன் காலத்து கல்வெட்டில், இரண்டு விஷூக்களும், இரண்டு அயனங்களும் முதன்முறையாக குறிப்பிடப்படுகின்றன வேதத்திலும், உத்தராயனத்தை ஒளிக்காலம் எனவும், தட்சிணாயனத்தை இருட்காலம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் ராஜேந்திரனின், காளஹஸ்தி கல்வெட்டில், மகர சங்கராந்தி அன்று, பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவலை, தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி, வெளியிட்டுள்ளார்.
பண்டைத் தமிழர்கள் , தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தங்களது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் – (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக்குரியது)
ஒரு நாள் பொழுதை , அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு
பொழுதுகளாகவும், ஆண்டை ஆறு பருவங்களாகவும் பகுத்த
பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை
இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றனர்
பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய
புத்தாண்டு தினத்தை , தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும்,
கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும்
கற்பிக்கப்பட்டிருக்கும்.ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய
திருநாளாகும்!
காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை
போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி -போகியது)
தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர்
அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், பரிசுகள் பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்
பொங்கல் பொங்குச்சா என்று பலநாட்கள் கேட்டு பரிசு பெறும் வழக்கம் இன்றளவும் கிராமங்களில் உள்ளது .

தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள்
புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது
மேலும் பண்பாட்டுக்கலப்பால் சாய்வைத்திரு நாளாக மாறிப்போன பொங்கலுக்கு
மறுநாள் மாட்டுப்பொங்கல் அன்றுஇரவு நிச்சயமாக அசைவம் சாப்பிடும் அனைத்து தமிழ்சரும் அத்தனைவித அசைவப்பொருளையும் சமைத்து படைத்து உண்டு மகிழ்வர்
அத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைப்பர். இந்த நாளில்
சமைக்கப்படும் படையலின் போது , புலாலும் படையற் பொருட்களாக முன்னர் விளங்கின

பொங்கல் என்பது தென்னிந்திய மக்களின் பழமை வாய்ந்த பண்டிகையாகும்; குறிப்பாக தமிழர்களின் பண்டிகையாகும். இந்த பண்டிகையின் வரலாற்றைப் பார்க்க வேண்டுமானால் நாம் சங்க காலமான கி.மு. 200 - கி.மு. 300 நோக்கி செல்ல வேண்டும். இந்த பண்டிகையை சங்க காலத்தின் போது கொண்டாடப்பட்ட தை நீராடல் என நம்புகின்றனர்சங்க காலத்தின் போது நடந்த கொண்டாட்டங்கள் தான் இன்றைய பொங்கல் கொண்டாட்டமாக மாறியுள்ளது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தை நீராடலின் போது சங்க கால பெண்கள் 'பாவை நோன்பு' என்ற விரதத்தை கடைப்பிடித்து வந்தனர்.

பல்லவர்களின் ஆட்சி காலத்தில் (கி.பி. 400-கி.பி.800) இது மிகவும் முக்கியமான பண்டிகையாக விளங்கியது. தமிழ் மாதமான மார்கழியின் போது இது கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது நாட்டில் மழையும் வளமும் செழிக்க வேண்டி இளம் பெண்கள் வேண்டுவார்கள். இந்த மாதம் முழுவதும் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பார்கள். தங்கள் முடிக்கு எண்ணெயிட்டு கொள்ள மாட்டார்கள். மேலும் பேசும் போது கடுமையான சொல்லை பயன்படுத்த மாட்டார்கள். பெண்கள் அனைவரும் விடியற்காலையில் குளித்து விடுவார்கள். ஈர மண்ணில் செய்யப்பட்ட கட்யாயணி என்ற பெண் தெய்வத்தின் சிலையை அவர்கள் வணங்கி வந்தார்கள். தை மாதத்தின் முதல் நாள் தங்கள் நோன்பை முடித்துக் கொள்வார்கள். தை நீராடல் பண்டிகை பற்றியும், பாவை நோன்பின் போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பற்றியும், ஆண்டாளின் திருப்பாவையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது
குலோத்துங்கா என்ற சோழ அரசன் கோவில்களுக்கு நிலத்தைப் பரிசாக பொங்கல் பண்டிகையின் போது அளித்தார் என திருவள்ளூர் வீரராகவா கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இலக்கியங்களிலும் , வரலாற்றிலேயும் கைத்திருநாள் கொண்டாடப்பட்டது குறித்து ஆதாரங்கள் கிடைக்கின்றன .
தற்போது நடைபெறும் நடைமுறை நிகழ்வுகளும் கொண்டாட்டங்களும் புத்தாண்டுக்கு கொண்டாட்டத்தை ஒத்துப்போகின்றன .
ஆனால் நேரடியாக தைத் திருநாள் தான் தமிழர்களின் புத்தாண்டின் தொடக்கம் என தெரிவிக்கும் ஆதாரங்கள் இதுவரை கிட்டவில்லை எனவேத தெரிகிறது

எனவேதான் 1935ம் ஆண்டு திருச்சியில் அகிலத் தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது.
பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.
“பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். என்றார்

இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது?
ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது.
இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி” – என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.
“இல்லை – நான் ஏற்றுக் கொள்கின்றேன்”- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.
ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்
மேலும் கிராம தெய்வங்களை , குலதெய்வ வழிபாடும் செய்வதை இன்றும் பொங்கல் வைத்தல் என்றுதான் அழைக்கிறோம் .
பொங்கல் வைப்பது நமது வழிபாட்டு வழக்கம் ,
கல்வெட்டுகளும் அக்கார வடிசல்
வைத்து வழிபட்டதைக் குறிப்பிடுகிறது .
சக்கரைப்பொங்கல் சிறந்த வழிபாட்டு நைவேத்தியம் ஆகும் .
இனிப்பு சுவை சத்துவ குணத்தை வளர்த்து , சிறந்த மனிதனாக வாழ வழிவகுக்கும் பொங்கல் உணவில் மட்டும் இல்லாமல் உள்ளத்திலும் இனிக்கட்டும்
பொங்குக எங்கும் அன்பும் , மகிழ்வும் !
வளமான வாழ்வு பெருகிட வாழ்த்துக்கள் !
அண்ணாமலை சுகுமாரன்
14/1/18

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 14, 2018 3:39 pm

பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84837
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 13, 2020 5:03 pm

தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா!
-
சூப்பருங்க சூப்பருங்க
-
பொலிக பொலிக ! பொங்கலோ பொங்கல் ! WWIuK9CKQuCqzBbfguyS+pongal2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 14, 2020 12:01 pm

Code:

தற்போது நடைபெறும் நடைமுறை நிகழ்வுகளும் கொண்டாட்டங்களும் புத்தாண்டுக்கு கொண்டாட்டத்தை ஒத்துப்போகின்றன .
ஆனால் நேரடியாக தைத் திருநாள் தான் தமிழர்களின் புத்தாண்டின் தொடக்கம் என தெரிவிக்கும் ஆதாரங்கள் இதுவரை கிட்டவில்லை எனவேத தெரிகிறது

இதை குழுப்ப வேண்டாம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக