ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள்

Go down

ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள் Empty ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள்

Post by ayyasamy ram Mon Jan 13, 2020 6:42 am


டாக்டர். மெ.ஞானசேகர் எழுதிய, 'சான்றோர் சாதனைகள்'
நுாலிலிருந்து:

விவேகானந்தர், இளைஞராக இருந்தபோது, அவர் வீட்டு
வாசலில் நின்று, யாசகம் கேட்டார், ஒரு துறவி.

அவர் கிழிந்த ஆடைகளை அணிந்திருந்ததைப் பார்த்து,
மறுகணமே, தன் ஆடைகளை கழற்றி, துறவிக்கு கொடுத்தார்,
விவேகானந்தர். மகிழ்ச்சியோடு வாங்கிச் சென்றார், துறவி.

விவேகானந்தரின் வாழ்க்கையில், அவர், ஏழைகளையும்,
பசித்தவர்களையும் கண்டு மனமிரங்கி அன்பு காட்டிய
சம்பவங்கள் பல உண்டு.

'நம்மில் ஒரு சகோதரன், உணவில்லாமல் இருக்கும்போது,
அவருக்கு, உணவு தருவதை தவிர, மேலான விஷயம் இருக்க
முடியாது...' என்று கூறியுள்ளார், விவேகானந்தர்.

'அயல் நாடுகளில் பயணம் செய்தபோது, நம் இந்திய
குழந்தைகளை எண்ணி, நான் பல சமயம் அழுதுள்ளேன்.
காரணம், வசதிகள் இல்லாமல், நம் குழந்தைகள் படும்
துன்பங்கள், என்னை வெகுவாக உலுக்கியிருக்கிறது...' என்று,
ஒரு குறிப்பில் எழுதியுள்ளார், விவேகானந்தர்.
-
--------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள் Empty Re: ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள்

Post by ayyasamy ram Mon Jan 13, 2020 6:43 am


ஆர்.பிரசன்னா எழுதிய,
'பிரபலங்கள் 10, சுவையான சம்பவங்கள் 100' நுாலிலிருந்து:

அமெரிக்காவில் இருந்தபோது, ஒரு நுாலகத்துக்கு சென்றிருந்தார்,
விவேகானந்தர். நுாலகரிடம் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை கேட்டார்.
நுாலகரும், எடுத்து கொடுத்தார். சிறிது நேரத்திலேயே, புத்தகத்தை
திருப்பி கொடுத்து விட்டார், விவேகானந்தர்.

'எவ்வளவு கஷ்டப்பட்டு தேடி எடுத்து கொடுத்தேன். இவ்வளவு
சீக்கிரம் திருப்பி தந்து விட்டீர்களே... இதை, படித்தீர்களா இல்லையா...'
என்று கத்தினார், நுாலகர்.

'நான், புத்தகம் முழுவதையும் படித்து முடித்து விட்டேன்.
வேண்டுமானால் நீங்கள், புத்தகத்திலிருந்து எதையாவது
கேளுங்கள்; பதில் சொல்கிறேன்...' என்றார்.

புத்தகத்திலிருந்து சில கேள்விகளை கேட்டார், நுாலகர்;
உடனுக்குடன் சரியான பதிலை கூறினார், விவேகானந்தர்.

'எப்படி இவ்வளவு விரைவாக, இந்த புத்தகத்தை படித்து
முடித்தீர்...' என்றார், நுாலகர்.

'சிலர், வார்த்தை வார்த்தையாக படிப்பர்; சிலர், வாக்கியம்
வாக்கியமாக படிப்பர்; சிலர், பத்தி பத்தியாக படிப்பர்; சிலர்,
பக்கம் பக்கமாக படிப்பர். ஆனால், நான், புத்தகம் புத்தகமாக
படிப்பவன்...' என, சிரித்தபடியே கூறினார், விவேகானந்தர்.
-
------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள் Empty Re: ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள்

Post by ayyasamy ram Mon Jan 13, 2020 6:43 am



அமெரிக்காவில், ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்,
விவேகானந்தர். அப்போது, இரண்டு ஐரோப்பியர்களுக்கு
நடுவில் அமர்ந்திருந்தார்.

விவேகானந்தருக்கு, ஆங்கிலம் தெரியாது என நினைத்த
ஒரு ஆங்கிலேயன், 'இவன், ஒரு நாய்...' என, ஆங்கிலத்தில்
கூறினான். மற்றொரு ஆங்கிலேயன், 'இவன், ஒரு கழுதை...'
என்று கூறினான்.

இதை கேட்ட, விவேகானந்தர், 'அவை இரண்டிற்கும்
இடையிலே
தான், நான் அமர்ந்திருக்கிறேன்...' என்று, ஆங்கிலத்தில்
கூறினார்.

இதை கேட்ட, இரண்டு ஆங்கிலேயர்களும், அவமானத்தால் தலை
குனிந்தனர்.
-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள் Empty Re: ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள்

Post by ayyasamy ram Mon Jan 13, 2020 6:44 am

ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள் 73210093

ஒருமுறை, ராஜஸ்தானுக்கு சென்றிருந்தார், விவேகானந்தர்.
பாலைவனங்கள் நிறைந்த பகுதியான அங்கு, கடும் வெப்பம்
நிலவியது.

வெயிலின் கொடுமையால், 'லுா' என்ற நோய், மக்களை வாட்டிக்
கொண்டிருந்தது. அதிலிருந்து காத்துக் கொள்ள, பெரிய
தலைப்பாகை கட்டிக் கொண்டனர். அந்நோய் தாக்காமல்
இருப்பதற்காக, விவேகானந்தரை தலைப்பாகை கட்டிக்கொள்ள
சொன்னதோடு, அரசரே, கட்டியும் விட்டார்;

அதோடு, தலைப்பாகை கட்டும் விதம் பற்றியும் சொல்லிக் கொடுத்தார்.
அன்று முதல் தலைப்பாகை கட்ட ஆரம்பித்தார், விவேகானந்தர்.
பின்பு, அதுவே அவரது அடையாளமாகவும் ஆகி விட்டது.
-
---------------------------------

நடுத்தெரு நாராயணன்
திண்ணை - வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள் Empty Re: ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள்

Post by ayyasamy ram Mon Jan 13, 2020 6:49 am

ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள் Vivekananda-Rock-Memorial-Natesh-Ramasamy-Flickr-Creative-commons_0

கொல்கத்தாவில் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி
பிறந்தவர் நரேந்திரன். இவர் சிறுவயது முதல் ராமாயண,
மகாபாரத கதைகளை சொல்லி வளர்க்கப்பட்டார்.
அப்போதே தியானம் செய்வதில் தீவிர ஆர்வம்
கொண்டிருந்தார்.

சில நேரங்களில் ஆழ்ந்த நிலைக்கு சென்றுவிடுவதால்
மிகவும் சிரமப்பட்டே அவரை விழிப்படையச் செய்ய
வேண்டியிருந்தது.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடராகும் வாய்ப்பை
பெற்றார்.

அப்போது தனது குருவால் “விவேகானந்தர்” என்று பெயர்
சூட்டப்பட்டார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு
யாத்திரை மேற்கொண்டார்.
14 ஆண்டுகள் கடும் துறவு வாழ்க்கை மேற்கொண்டார்.

1892ல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் கடல் நடுவில்
அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார்.
அவரது நினைவாக அந்த பாறை விவேகானந்தர்
நினைவிடமாக இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
-
-----------------------------
நன்றி-தமிழ்.சமயம்


Last edited by ayyasamy ram on Mon Jan 13, 2020 9:37 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள் Empty Re: ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள்

Post by ayyasamy ram Mon Jan 13, 2020 6:51 am


ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள் LRG_20190704123420363817
ராமநாதபுர மன்னன் பாஸ்கர சேதுபதி மூலம்
சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில்
சொற்பொழிவாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

அங்கு “அன்புள்ள சகோதர, சகோதரிகளே” என்று
பேச்சை தொடங்கி வரலாற்று சிறப்புமிக்க
உரையை நிகழ்த்தினார்.

இதேபோல் பல்வேறு நாடுகளில் வேதாந்த கருத்துகள்
பற்றி சொற்பொழிவு ஆற்றியுள்ளார். உலக அரங்கில்
இந்து மதத்தின் புகழை தன் சொற்பொழிவால்
நிலைநிறுத்தினார்.

அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை, உறங்கிக் கிடந்த
இந்திய இளைஞர்களை விழிப்படைய செய்யும்
முயற்சியில் ஈடுபட்டார்.

”எதைக் கண்டும் அஞ்சாதீர்கள். நீங்கள் மகத்தான
காரியங்களைச் செய்வீர்கள். பயம் தோன்றினால்
அந்தக் கணமே நீங்கள் ஒன்றுமில்லாதவர்கள் ஆகி
விடுவீர்கள். பயமே உலகத் துன்பங்களுக்குக்
காரணம். இந்தப் பயம் தான் நம் துயரங்களுக்கு
எல்லாம் காரணம்.

பயமின்மை ஒரு நொடியில் சொர்க்கத்தையே நமக்கு
அளிக்க வல்லது. மூட நம்பிக்கைகள் அனைத்திலும்
கொடியது பயமே”

என்று இளைஞர்களுக்கு அடிக்கடி
அறிவுறுத்தி வந்தார்.

கொல்கத்தாவில் ராமகிருஷ்ண இயக்கம் மற்றும்
மடத்தை நிறுவினார். 1902ஆம் ஆண்டு ஜூலை
4ஆம் தேதி தனது 39வது வயதில் விவேகானந்தர்
காலமானார்.
-
-------------------------------
நன்றி-தமிழ்.சமயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள் Empty Re: ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள்

Post by ayyasamy ram Mon Jan 13, 2020 9:42 am

ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள் D-nMmQPUcAEtbNS
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள் Empty Re: ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள்

Post by ayyasamy ram Mon Jan 13, 2020 9:42 am

ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள் Stamp1
-
ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள் Viveka-quote
-
ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள் Images?q=tbn:ANd9GcTUzTGyYFpszGNoIgwYEW74gnaIIks8GEUYOVq6-_cjbz5lvfyL&s
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள் Empty Re: ஜன., 12, விவேகானந்தர் பிறந்த நாள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum