ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்)

3 posters

Go down

2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்) Empty 2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்)

Post by தாமு Mon Jan 04, 2010 6:11 am



1-1-2010 முதல் 31-12-2010 வரை

1.மேசம்:-(அசுபதி1,2,3,4 ஆம் பாதம், பரணி1,2,3.4ஆம் பாதம், கார்த்திகை1 ஆம் பாதம் முடிய)
மேசராசி அன்பர்களே இந்த 2010 ஆம் வருட புத்தாண்டில் குல தெய்வ ஆலயத் தீருப்பணிகளை மேற்கொள்வதன் மூலம் மன நிறைவு அடைவீர்கள்.விளையாட்டுத் துறைகளைச் சார்ந்தவர்களுக்கு பரிசு முற்றும் பாராட்டுதல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய முறை விவசாயங்களின் மூலமாக நல்ல பலன்களைப் பெறக் கூடிய ஆண்டாகும்.பழைய கடன்கள் மீண்டும் தொல்லைகள் தர இருப்பதால் மிக கவனமுடன் இருப்பது நல்லதாகும். சமுதாய நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் பெயர் புகழ் ஏற்பட்டு அதனால் மன மகிழ்ச்சி அடையும் காலமாகும்.தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் வெகுவாகக் குறைவதன் மூலம் மருத்துவச் செலவுகள் குறைய வாய்ப்பு உள்ளது.மாமன் வழியின் மூலமாக எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்.வெகு காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்களைத் திரும்hபப் பெறுவதற்கான காலமாகும்.உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருளாதாரச் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் பரிசுகள் மற்றும் பாராட்டுக்களுடன் நல்ல மதிப் பெண்களையும் பெறுவார்கள்.வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் மற்றவர்களிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த உதவிகள் கிடைக்கும்.தீராத நாட்பட்ட நோய்கள் தீருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும்.பங்காளிகளுடன் செய் தொழில் விசயங்களில் சற்று பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது.பூஜைப் பொருட்கள்,நீர்வளத்துறை சார்ந்தவர்கள்,தண்ணீர் மற்றும் திரவ சம்பந்தமான வியாபாரிகள்,ஆலயப் பணி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். குடும்பத்தில் மன அமைதியுடன் சந்தோசம் நிலவும் காலமாகும்.குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

சிறப்பு பலன்கள்:-மற்றவர்களிடம் இருந்து எதிர் பார்த்த பண உதவிகள் கிடைக்கும்.விவசாயம் செய்பவர்களுக்கு மிகவும் நல்ல பலன்களைத் தரும் ஆண்டாகும்.

இராசியான எண்:-2,4
இராசியான நிறம்:-வெள்ளை,கருப்பு
இராசியான திசை:-மேற்கு,வடமேற்கு

பரிகாரம்:-திங்கள்,ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருந்து அம்மன் ஆலய வழிபாடு மற்றும் பிதுர் வழிபாடு செய்து வெள்ளை,கருப்பு வஸ்திரங்களைத் தானம் செய்து வர கிரக தோசங்கள் நீங்கி நன்மை தரும்!

மந்திரம்:-1.ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்னியாகுமாரி தீமஹி
தந்நோ துர்க்கி: ப்ரசோதயாத்!

2.ஓம் பிரம்ம புத்ராய வித்மஹே
ஸைம் ஹிகேயா தீமஹி
தந்நோ ராஹீ: ப்ரசோதயாத்! –என்று ஜெபம் செய்து வழிபாடு செய்யவும்.

2.ரிசபம்:-(கார்த்திகை2,3,4ஆம்பாதம்,ரோகிணி1,2,3,4ஆம் பாதம்,மிருகசீரிடம்1,2ஆம் பாதம் முடிய)
ரிசபராசி அன்பர்களே இப் புத்தாண்டில் நண்பர்களிடம் இருந்து எதிர் பார்த்து இருந்த பண உதவிகள் கிடைக்கும்.யாத்திரையில் பெரிய மனிதர்கள்,அரசியல் வாதிகள் மற்றும் உயரதிகாரிகளின் சந்திப்புக்களால் நன்மை அடைவீர்கள்.உடல் நிலையில் கண் காதுகளில் கவனமுடன் இருந்து வரவும்.தந்தை மகன் உறவுகளில் வெகு காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் குறைந்து மன நிம்மதியை அடைவீர்கள்.கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.புதிய வீடு மற்றும் நில புலன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் வெற்றி பெறலாம்.புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சினைகளும் மனக் குழப்பங்களும் வர இருப்பதால் கவனமுடன் இருக்கவும்.உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும்.காய்கரிகள், இலை ,ப+, போன்ற பொருட்களை உற்பத்தி விற்பனை செய்வோர்கள்,அரசுத்துறை சார்ந்த வழக்கறிஞர்கள்,இரும்பு இயந்திரப் பொருட்களை விற்பனை செய்வோர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,விஞ்ஞானத் துறைகளைச் சார்ந்தவர்கள்,பொதுத் தொண்டுகளில் ஈடுபடுவோர்கள்,மீன்,முட்டை,மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,மடாதிபதிகள்,துப்புரவுப் பணிகளைச் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள்.வெளிநாடு சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் பிற மதத்தவர்களால் எதிர் பாராத சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள்.குடும்பத்தில் வெகு காலமாகத் தடை பட்டு வந்துள்ள சுப காரியங்கள் நண்பர்களின் உதவியால் தடை நீங்கி இனிது நடைபெற வாய்ப்பு உள்ள மிகச் சிறந்த ஆண்டாகும்.மாணவர்களுக்குத் தங்களது கல்வியில் பரிசுகள் மற்றும் பாராட்டுதல்கள் கிடைக்கக் கூடிய காலமாகும்.நீண்ட காலமாகப் பிரிந்து போன உறவுகளுடன் திரும்ப ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உள்ளது.பொது நலத் தொண்டுகளில் ஈடு படுவோர்கள் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது.

சிறப்பு பலன்கள்:-செய்தொழிலில் நல்ல லாபம் பெற வாய்ப்பு உள்ள காலமாகும்.பிள்ளைகளால் எதிர் பாராத ஆதாயமும் பொருள் வரவும் உள்ள ஆண்டாகும்.

இராசியான எண்:-5,7
இராசியான நிறம்:-பச்சை,கருஞ் சிகப்பு
இராசியான திசை:-வடக்கு,வடமேற்கு

பரிகாரம்:-புதன்,திங்கள் கிழமைகளில் விரதம் இருந்து மஹாவிஷ்ணு வழிபாடு,கணபதி வழிபாடு செய்து பச்சை,கருஞ்சிகப்பு நிற வஸ்திரங்களைத் தானம் செய்து வர சகல கிரக தோசங்களும் நீங்கி நன்மை தரும்!

மந்திரம்:-1.ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோவிஷ்ணு: ப்ரசோதயாத்!

2.ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தி: ப்ரசோதயாத்!–என்று மந்திரம் சொல்லி வழிபாடு செய்து வரவும்.

3.மிதுனம்:-(மிருகசீரிடம்3,4ஆம்பாதம்,திருவாதிரை1,2,3,4ஆம்பாதம்,புனர்பூசம்1,2,3ஆம் பாதம்முடிய)
மிதுனராசி அன்பர்களே இப் புத்தாண்டில் .ஜவுளி நூல் வியாபாரிகள்,நோட்டு புத்தகம் போன்ற ஸ்டேசனரி பொருட்கள் விற்பனை மற்றும் உற்பத்தி செய்வோர்கள்,தபால் தந்தித் துறை சார்ந்தவர்கள்,எழுத்துப் பணி ஆற்றுபவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.வெகு காலமாக விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடரும் காலமாகும்.பொருளாதாரத்தில் இது நாள் வரை இருந்து வந்த நெருக்கடிகள் மாறி பணப் புழக்கம் நன்றாக இருக்கும்.வெளி நாடுகள் சென்று வருதல் போன்ற புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.குடும்பச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் இன்னும் சிறிது காலம் நீடிக்கும்.வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்த்தல் மூலம் புதிய கடன்கள் ஏற்படலாம்.உறவினர்களின் வரவுகளால் எதிர் பாராத பணச் செலவுகள் ஏற்படலாம். உத்தி
யோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய காலமாகும். மஹான்களின் தரிசனங்களால் பிரச்சனைகள் குறைந்து மன நிம்மதி அடையும் காலமாகும்.யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் சென்று வருதல் சிறந்ததாகும். திருமண சம்பந்தமான விசயங்களில் நீண்ட காலமாக ஏற்படடு வந்த தடைகள் விலகி திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது.அடுத்தவர்களின் பிரச்சனைகளில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் பிரச்சனைகளில் அகப்பட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம்.குடும்பத்தில் காரணமற்ற மனக் கசப்புகளும் சச்சரவுகளும் வந்து விலகிப் போகும்.உத்தியோகத்துறையினர்களுக்கு மேலதிகாரிகளுடன் பிரச்சனைகள் வர இருப்பதால் மிகுந்த கவனமுடன் பணி ஆற்றுதல் நல்லது.வேலை இல்லாதவர்கள் புதிய வேலை வாய்ப்பு சம்பந்தமாக பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.பழைய வீடு மற்றும் நில்களை விற்றுப் புதிய வீடு நிலம் வாங்க எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

சிறப்புபலன்கள்:- பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றம் காணப்படும்.
உத்தியோகத் துறையைச் சார்ந்தவர்களுக்கு உத்தயோக உயர்வும் நினைத்த இடங்களுக்குப் பணி இட மாற்றமும் ஏற்படலாம்.

இராசியான எண்:-2,9
இராசியான நிறம்:-வெள்ளை,சிகப்பு
இராசியான திசை:-மேற்கு,தெற்கு

பரிகாரம்:-திங்கள்,செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து அம்மன்,முருகள் ஆலய வழிபாடு செய்து வெள்ளை,சிகப்பு ஆடை தானம் செய்து வர அனைத்து தோசங்களும் நீங்கி நற் பயனைச் செய்யும்!

மந்திரம்:-1.ஓம் காத்யாயின்யாய வித்மஹே
கன்னியாகுமாரி தீமஹி
தந்நோ துர்க்கி: ப்ரசோதயாத்!

2.ஓம் சுப்ரமண்யாய வித்மஹே
மஹா சூராய தீமஹி
தந்நோ ஸ்கந்த: ப்ரசோதயாத்! –என்று ஜெபம் செய்து வழிபாடு செய்யவும்.

4.கடகம்:-(புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம்1,2,3,4ஆம் பாதம், ஆயில்யம்1,2,3,4ஆம் பாதம் முடிய)
கடகராசி அன்பர்களே இப் புத்தாண்டில் நீண்ட காலமாக உத்தியோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்களை வாங்குவதற்கான முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். பொருளாதரரத்தில் இருந்து வந்துள்ள நெருக்கடிகள் சற்று மாறி முன்னேற்றமான சூழ் நிலைகள் உருவாகும். விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் தொடருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்படுவதன் மூலமாக குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள்.ஆடு மாடு போன்றவற்றை விற்பனை செய்வோர்கள், கார் லாரி போன்ற வாகனங்களின் வியாபாரிகள்,ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள், சினிமா,நாடகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், திருமண மண்டபங்கள் மற்றும் திருமண தகவல் நிலையங்களை நடத்துபவர்கள்,நகைக் கடை நடத்துபவர்கள்,வாகன ஓட்டுனர்கள்,அரசுத் துறையை சார்ந்த கலைக் கல்லூரி சார்ந்தவர்கள்,கட்டிட சம்பந்தமான மண் மணல் சிமிண்ட் மற்றும் செங்கல் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடையப் போகும் காலமாகும்.தங்களுக்குச் செய் தொழிலில் சிற்சில பிரச்சனைகள் வந்த போதிலும் மிகவும் சாமர்த்தியமாகச் சமாளித்துக் கொள்ளுவீர்கள்.புதிதாகிய தொழில்களை தொடங்குவதற்கான முயற்சிகளைச் சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லதாகும்.. செய் தொழிலில் புதிய பங்காளிகளுடன் சேர்ந்து கூட்டுத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.நெடுங்காலமாக பிரிந்து போன கணவன் மனைவி பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமையுடன் இருக்க வாய்ப்புகள் உள்ள காலமாகும். சமுதாய முன்னேற்றத்திற்கான பொதுப் பணிகளில் ஈடுபடுவோர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லதாகும்.

சிறப்பு பலன்கள்:-பொதுவாக இந்த ஆண்டில் தங்கள் உடல் நிலையில் நோய்கள் குறைந்து மருத்துவச் செலவுகள் குறையும். வேலை இல்லாத
வர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.பிரிந்து போன கணவன் மனைவி இருவரும் ஒன்று சேருவார்கள்.

இராசியான எண்:-6,8
இராசியான நிறம்:-வெள்ளை,நீலம்
இராசியான திசை:-தென்கிழக்கு,தென்மேற்கு

பரிகாரம்:-வெள்ளி,சனிக் கிழமைகளில் விரதம் இருந்து மஹாலட்சுமி வழிபாடு,சனீஸ்வர வழிபாடு செய்து வெள்ளை மற்றும் நீல வஸ்திரம் மற்றவர்களுக்குத் தானம் கொடுத்து,அன்ன தானம் செய்து வர கிரக தோசங்கள் குறைந்து நல்ல பலன்களைச் செய்யும்!

மந்திரம்:-1.ஓம் பார்க்கவாய வித்மஹே
அசுராச்சார்யாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்!

2.ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்!---என்று மந்திரம் சொல்லி வழிபட்டு வரவும்.


5.சிம்மம்:-(மகம் 1,2,3,4 ஆம் பாதம், பூரம்1,2,3,4 ஆம் பாதம், உத்திரம்1 ஆம் பாதம் முடிய)
சிமம்மராசி அன்பர்களே இப் புத்தாண்டில் திருமணம் போன்ற சுப காரிய நகழ்ச்சிகளுக்கான முயற்சிகளைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது.மாணவர்கள் கல்வியில் கல்வி பயிலும் இடங்களில் சிற்றில சச்சரவுகள் வர இருப்பதால் மிகுந்த கவனமுடன் கல்வி பயிலுதல் சிறந்ததாகும்.வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று வர வாய்ப்பு உள்ள காலமாகும்.தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.சமுதாய முன்னேற்றம் மற்றும் பொது நலத் தொண்டுகளில் ஈடு பட்டு நற் பெயர் புகழ் அடைவீர்கள்..பழைய வீடு மற்றும் வாகனங்களைப் புதுப்பித்தலுக்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.தங்கம் வெள்ளி போன்ற உலோகப் பொருள் வியாபாரிகள்,நெருப்பு ராணுவம்,காவல் துறை சார்ந்தவர்கள்,பூமி சம்பந்தமான நில புலன்களை வாங்குவோர் விற்போர் நற்பலன் அடைவார்கள். நீண்ட காலமாக வராமல் இருந்த கடன் கொடுத்த பணம் பொருட்கள் திரும்பக் கைக்கு வந்து சேரும்.பங்காளிகளுடன் சேர்ந்து நடத்தும் கூட்டுத் தொழிலில் காரணமற்ற பிரச்சனைகள் உருவாக இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லதாகும்.பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்டிருந்த திட்டங்களில் சற்று கால தாமதம் ஏற்படலாம்.உற்றார் மற்றும் உறவினர்களின் எதிர் பாராத வரவுகளால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும்.திருமணம் ஆகாத மூத்த சகோதர சகோதரிகளின் திருமண காரியங்கள் நிறைவேறும் காலமாகும். பொருளாதாரத்தில் வெகு நாட்களாக இருந்து வந்துள்ள நெருக்கடிகள் மாறிப் பணப் புழக்கம் நன்றாக இருக்கும்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் ஏற்படலாம்.புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதற்காகப் புதிய கடன் வாங்குவீர்கள்.தம்மிடம் வேலை செய்யும் அடிமை ஆட்களால் பொருள் வரவும் மனக் குழப்பங்களும் தீரும்.

சிறப்பு பலன்கள்:-வெகு காலமாக எதிர் பார்த்து முயற்சித்து வந்து வெளி நாடு சென்று வருதல் போன்ற விசயங்களில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

இராசியான எண்:-2,9
இராசியான நிறம்:-வெள்ளை,சிகப்பு
இராசியான திசை:-மேற்கு,தெற்கு

பரிகாரம்:-திங்கள்,செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து அம்மன்,முருகள் ஆலய வழிபாடு செய்து வெள்ளை,சிகப்பு ஆடை தானம் செய்து வர அனைத்து தோசங்களும் நீங்கி நற் பயனைச் செய்யும்!

மந்திரம்:-1.ஓம் காத்யாயின்யாய வித்மஹே
கன்னியாகுமாரி தீமஹி
தந்நோ துர்க்கி: ப்ரசோதயாத்!

2.ஓம் சுப்ரமண்யாய வித்மஹே
மஹா சூராய தீமஹி
தந்நோ ஸ்கந்த: ப்ரசோதயாத்! –என்று ஜெபம் செய்து வழிபாடு செய்யவும்.

6.கன்னி:-(உத்திரம்2,3,4ஆம் பாதம்,ஹஸ்தம் 1,2,3,4ஆம் பாதம்,சித்திரை1,2 ஆம் பாதம் முடிய)
கன்னிராசி அன்பர்களே இப் புத்தாண்டில் வெளி நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளைத் தேடிச் சென்று வர வாய்ப்புகள் உள்ளது. ஒரு சிலருக்கு குடும்பச் சொத்துக்களை விற்பதன் மூலமாகப் பணம் வந்து சேரலாம்.அநாதைக் குழந்தைகளுக்கு உதவிகள் செய்வதன் மூலம் மன நிறைவடைவீர்கள்.பழுது பட்ட வீடு மற்றும் வாகனங்களை விற்றுப் புதிய வீடு வாகனங்களை வாங்குவீர்கள்.உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளிடம் மிகவும் எச்சரிக்கையுடன் பணி ஆற்றுதல் நல்லது.உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் பொருட் செலவகுள் ஏற்படக் கூடிய காலமாகும்.சகோதர சகோதரிகளின் தடை பட்ட திருமண காரியங்கள் தடையின்றி நிறைவேறலாம்.மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டி கொண்டு மன நிம்மதி இழக்காதீர்கள்.குழந்தைகளுக்குப் பரிசு மற்றும் பாராட்டுதல்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.ஆலயப் பணிகளில் பங்கு கொண்டு நற் பெயர் மற்றும் புகழ் அடைவீர்கள். யாத்திரை
யின் போது சம்பந்தம் இல்லாத நபர்களால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள்வெகு காலமாக வராமல் இருந்த பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்களின் உதவிகளால் திரும்பக் கை வந்து சேரும் காலமாகும்.கூட்டுத் தொழில் செய்வதற்கான புதிய முயற்சிகளில் சிற்சில தடைகள் வந்து சேரும்.பூர்வீகச் சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான நல்ல முடிவுகளை எதிர் பார்க்கலாம்..இரும்பு,இயந்திரம்,இரசாயன சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,எண.ணை,பல சரக்கு வியாபாரிகள்,பழைய இரும்பு தகரம் போன்ற பொருட்களின் வியாபாரிகள்,துப்புரவுத் தொழிற் செய்வோர்கள், வழக்குறைஞர்கள்,சட்டத் துறை சாரந்த இதர வல்லுனர்கள்,பழைய பேப்பர் மற்றும் பிளாஷ்டிக் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,பெட்ரோல்,டீசல்,மண் எண்ணை போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைய வாய்ப்பு உள்ளது.

சிறப்பு பலன்கள்:-பொதுவாக இந்த ஆண்டில் பழைய சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். உத்தியோகத் துறையினர்
களுக்குப் பணி இட மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சி
கள் நடைபெறும்.

இராசியான எண்:-8,2
இராசியான நிறம்:-நீலம்,வெள்ளை
இராசியான திசை:-தென்மேற்கு,மேற்கு

பரிகாரம்:-சனி,திங்கள் கிழமைகளில் விரதம் இருந்து ஐயப்பன் வழிபாடு,
அம்மன் வழிபாடு செய்து நீலம்,வெள்ளை ஆடைகளைத் தானம் செய்து அன்ன தானம் செய்து வர சகல தோசமும் தீர்;;ந்து நல்ல பலன்களைச் செய்யும்!

மந்திரம்:-1.ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்!

2.ஓம் சீதப்ரபாய வித்மஹே
ஷோடச கலாய தீமஹி
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்! ---என்று செபம் செய்து வழிபாடு செய்து வரவும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்) Empty Re: 2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்)

Post by தாமு Mon Jan 04, 2010 6:13 am

தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்) Empty Re: 2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்)

Post by தாமு Mon Jan 04, 2010 6:14 am

7.துலாம்;:-(சித்திரை3,4 ஆம் பாதம், சுவாதி1,2,3,4ஆம் பாதம், விசாகம்1,2,3ஆம் பாதம் முடிய)
துலாம்ராசி அன்பர்களே இப் புத்தாண்டில் உடம்பில் வாயு வயிறு போன்ற உபாதைகள் வந்து போகலாம்.புதிய கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.கணவன் மனைவி உறவுகளில் காரணமற்ற வீண் பிர்ச்சனைகள் உருவாகி மனக் கசப்புகள் ஏற்படலாம்.புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்.விவசாயம் செய்வோர்கள் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது.செய் தொழிலில் வங்கிகளின் மூலமாகப் புதிய கடன்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் சிறிது காலதாமதம் ஆகலாம்.சகோதரர்களில் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.வெகு தூரப் பயணங்களால் எதிர் பாரத்த காரியங்கள் நிறைவேறும் காலமாகும்.காதல் விசயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நன்றாகும்.தந்தை வழிப் பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். பழைய இரும்புகள்.யந்திரம்,இராசயனம் போன்ற தொழிற் சாலைகளில் பணி செய்வோர்கள் இவற்றை வாங்குவோர்கள்,விற்பனை செய்வோர்கள், அழுகல் சம்பந்தமான மீன், முட்டை, இறைச்சி போன்ற உணவுப் பொருள் வியாபாரிகள்,அணு ஆராய்ச்சி துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள். தந்தை வழியின் மூலமாக வர வேண்டிய சொத்துக்கள் கை வந்து சேரும்.தீர்த்த யாத்திரைகளைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.வங்கிகளின் மூலமாக கேட்டிருந்த கடன் தொகைகள் மற்றவர்களின் உதவியால் கிடைக்க வாய்ப்பு உள்ள ஆண்டாகும்.உடல் நிலையில் சுரம் மற்றும் உஷ்ணம் போன்ற உபாதைகள் வந்து போகலாம்.மாணவர்களுக்கு கல்வியில் மிகுந்த கவனமுடன் பயின்று வருதல் நல்லது.உற்றார் உறவினர்களால் எதிர் பார்த்து இருந்த ஆதாயங்கள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் ஏற்படலாம்.புதிய ஆடை மற்றும் அணிகலன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்படும்.

சிறப்புபலன்கள்:-குடும்பத்தில் தடை பட்ட சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெறும்.விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலோடு லாபம் தரும் காலமாகும்.புதிய முயற்சிகள் வெற்றி தேடித் தரும்.

இராசியான எண்:-6,8
இராசியான நிறம்:-வெள்ளை,நீலம்
இராசியான திசை:-தென்கிழக்கு,தென்மேற்கு

பரிகாரம்:-வெள்ளி,சனிக் கிழமைகளில் விரதம் இருந்து மஹாலட்சுமி வழிபாடு,சனீஸ்வர வழிபாடு செய்து வெள்ளை மற்றும் நீல வஸ்திரம் மற்றவர்களுக்குத் தானம் கொடுத்து வர கிரக தோசங்கள் குறைந்து நல்ல பலன்களைச் செய்யும்!

மந்திரம்:-1.ஓம் பார்க்கவாய வித்மஹே
அசுராச்சார்யாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்!

2.ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்! ---என்று மந்திரம் சொல்லி வழிபட்டு வரவும்.

8.விருச்சிகம்;:-(விசாகம்4ஆம் பாதம், அனுசம் 1,2,3,4 ஆம் பாதம், கேட்டை1,2,3,4 ஆம் பாதம் விருச்சிகராசி அன்பர்களே இப் புத்தாண்டில் சகோதர சகோதரிகளுடன் சிற் சில பொருளாதாரம் மற்றும் சொத்து விசயங்களுக்காக சில மனக் கசப்புகள் வந்து சேரலாம்.தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகலாம்.கோர்ட் வழக்கு சம்பந்தமாக நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்ப்புக் கிடைக்கும் காலமாகும்.பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்கும் முயற்சிகளில் சில பின்னடைவுகள் ஏற்படலாம்.திருமணம் ஆகாத பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகும்.கணவன் மனைவி உறவுகளுக்குள் இருந்து வந்த நாட் பட்ட மனக் கசப்புகள் தீர்ந்து ஒன்று சேரும் காலமாகும்.விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்கு நல்ல பெயர் புகழ் மற்றும் பரிசுகள் கிடைக்கும்.புதிய தொழில்களை ஆரம்பம் செய்ய நினைப்பவர்களுக்கு வங்கிகளில் இருந்து எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும்.கணவன் மனைவி உறவுகளுக்குள் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.கூட்டுத் தொழிற் செய்யும் முயற்சிகளைச் சிறிது காலம் தள்ளிப் போடுதல் நல்லது.பூர்வீகச் சொத்துக்களை விற்பதன் மூலமாகப் பொருள் வரவுகள் உண்டாக வாய்ப்பு உள்ள காலமாகும். கம்யுட்டர் தொழிற் செய்வோர்கள்,பேராசிரியர்கள்,பூ பழம்,நறுமணப் பொருட்கள்,இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள்,அரசுத்துறை சார்ந்த உயர் பதவிகளை வகிப்பவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்,மடாதிபதிகள்,ஆலயப்பணி செய்வோர்கள்,அறநிலையத்துறை சார்ந்தவர்கள்,பொது நலத் தொண்டு நிறுவனங்களை நடத்துபவர்கள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,ரத்தின வியாபாரிகள்,அணு ஆராய்ச்சித்துறை சார்ந்த விஞ்ஞானிகள்,பிளாஷ்டிக் பேப்பர் போன்ற தொழிற்சாலைகளை நடத்துபவர்கள்,பைனான்ஸ் தொழிற் செய்பவர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைய வாய்ப்பு உள்ள காலமாகும்.ஆலயத் திருப்பணிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களின் மூலமாகத் திடிர் தன வரவுகள் ஏற்படலாம்.

சிறப்பு பலன்கள்:-திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் நிறைவேறும்.புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் மற்றும் பொருட்கள் வந்து சேரக்கூடிய சிறந்த காலமாகும்.நாட்பட்ட வழக்கு விசயங்களில் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும்.

இராசியான எண்:-7,3
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு,மஞ்சள்
இராசியான திசை:-வடமேற்கு,வடகிழக்கு

பரிகாரம்:-திங்கள்,வியாழக் கிழமைகளில் விரதம் இருந்து கணபதி,சிவன் வழிபாடு செய்து அன்னதானம்,கருஞ் சிகப்பு,மஞ்சள் வஸ்திர தானமும் செய்து வர சகல கிரக தோசமும் நீங்கி நற்பலன் உண்டாகும்!

மந்திரம்:-1.ஓம் ஜைமினி கோத்ராய வித்மஹே
தூம்ர வர்ணாய தீமஹி
தந்நோ கேது: ப்ரசோதயாத்!

2.ஓம் ஆங்கிரஸாய வித்மஹே
சுரா சார்யாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்!–என்று ஜெபம் செய்து வழிபாடு செய்யவும்.

9.தநுசு:-(மூலம்1,2,3,4ஆம் பாதம், பூராடம் 1,2,3,4ஆம் பாதம், உத்திராடம்1 ஆம் பாதம் முடிய)
தனுசுராசி அன்பர்களே சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் பெரயவர்களின் உதவியால் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும்.பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படுவதுடன் பொருட் செலவுகளும் ஏற்படலாம்.குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.பங்கு வர்த்தகம்,அரசு உயர் பதவிகள் வகிப்பவர்கள்,நெருப்புத் தொழிற் செய்வோர்கள்,ஜவுளி நூல் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் சிக்கல்களில் மாட்டிக் கொண்டு மன நிம்மதியை இழக்காதீர்கள்.உறவினர்களின் திடீர் வரவுகளால் மன தைரியமும் பொருள் வரவும் உண்டாகலாம்.சகோதர சகோதரிகளுடன் வீண் மன சஞ்சலங்களும் பிரச்சனைகளும் உருவாகும். பெண்களால் தென் திசையில் இருந்து நல்ல செய்திகளுடன் பொருள் வரவுகள் உண்டாலாம்.யாத்திரையின் போது மிக கவனமுடன் சென்று வருதல் நல்லது. புதிய வீடு நிலம் வாங்குவதற்காக வங்கிகள் மூலமாக எதிர் பார்த்து இருந்த உதவித் தொகைகள் கிடைக்கும். தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் வர இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லதாகும்.கணவன் மனைவி உறவுகளில் வெகு காலமாக ஏற்பட்டு இருந்த விரிசல்கள் நீங்கி மிக ஒற்றுமையுடன் காணப்படுவார்கள்.உடல நிலையில் இருந்து வநத தொல்லைகள் தீருவதற்காக ஆபரேசன் போறன்ற காரியங்களைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது.உற்றார் உறவினர்களின் வரவுகளால் மன நிம்மதியும் பொருளாதார முன்னேற்றம் காண்பதற்கான வழி முறைகளும் வந்து சேரும்.மற்றவர்களை நம்பிப் பணம் பொருட்களை கடன் கொடுத்தாலும் பண விசயங்களுக்காக பிறருக்காக ஜாமீன் போடுதல் போன்ற காரியங்களில் தலையிட்டாலும் வீண் பிரச்சனைகள் வந்து சேரலாம்.உடல் நிலையில் கண் காது வாய் பற்கள் போன்றவற்றில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லதாகும்.கொடுக்கல் வாங்கலில் நாணயம் காப்பாற்ற இயலாது தொல்லைகளுக்கு ஆளாக வேண்டி வரும்.

சிறப்பு பலன்கள்:-வெகு காலமாக விரும்பி வந்த புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.திடீர் அதிர்ஷ்டம் மூலமாகப் பணம் மற்றும் பொருட்கள் வந்து சேரக்கூடிய சிறந்த காலமாகும்.

இராசியான எண்:-7,3
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு,மஞ்சள்
இராசியான திசை:-வடமேற்கு,வடகிழக்கு

பரிகாரம்:-திங்கள்,வியாழக் கிழமைகளில் விரதம் இருந்து கணபதி,சிவன் வழிபாடு செய்து அன்னதானம்,கருஞ் சிகப்பு,மஞ்சள் வஸ்திர தானமும் செய்து வர சகல கிரக தோசமும் நீங்கி நற்பலன் உண்டாகும்!

மந்திரம்:-1.ஓம் ஜைமினி கோத்ராய வித்மஹே
தூம்ர வர்ணாய தீமஹி
தந்நோ கேது: ப்ரசோதயாத்!

2.ஓம் ஆங்கிரஸாய வித்மஹே
சுரா சார்யாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்! –என்று ஜெபம் செய்து வழிபாடு செய்யவும்.

10.மகரம்சோகம்உத்திராடம் 2,3,4ஆம் பாதம், திருவோணம்1,2,3,4ஆம் பாதம்,அவிட்டம்1,2ஆம் பாதம்)
மகரராசி அன்பர்களே இப் புத்தாண்டில் புதிய நண்பர்களின் சேர்க்கையால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.மாணவர்களுக்கு கல்வி பயிலும் இடங்களில் அவப் பெயர்கள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் கல்வி பயிலுதல் நல்லது.வீடு மற்றும் தொழிற்சாலைகளைப் புதிய இடங்களுக்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.வங்கிகளின் மூலம் எதிர் பார்த்து இருந்த பணம் கை வந்து சேரும்.காதல் விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும்.பொருளாதாரம் சற்று சுமாராகவே இருப்தால் புதிய கடன்களை வாங்க முயற்சி செய்வீர்கள்.யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களால் சில காரியங்களை நிறை வேற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.தீராத நாட் பட்ட நோய்கள் தீர புதிய முயற்சிகளை மேற் கொள்ளுவீர்கள்.உடம்பில் கண் காதுகளில் சிற்சில உபாதைகள் வந்து போகும்.வராத நாட்பட்ட கடன் கொடுத்து இருந்த பணம் மற்றவர்களின் தலையிடுதலால் திரும்பக் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது.இராசயனத் தெழிற்சாலைகளில் பணி செய்வோர்கள்,,மத போதகர்கள் நற்பலன் அடைவார்கள்.உத்தியோகம் இல்லாதவர்களுக்குப் புதிய உத்தியோகங்கள் கிடைகக் கூடிய காலமாகும்.வேற்று மதத்தவரால் வெளி நாடுகளுக்குச் சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். ஒரு சிலருக்கு புதிய வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ள ஆண்டாகும்.பிரிந்து போன கணவன் மனைவிகள் மற்றும் உறவினர்கள் திரும்ப ஒன்று சேர வாய்ப்பு உள்ளது.வெளி நாட்டில் வசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்பி வருவார்கள்.கலைத்துறை சார்நத மாணவர்கள் ஆசிரியர்கள்,சினிமா நாடகம் போன்றவற்றை நடத்துபவர்கள்,அலங்கார நிலையங்கள் வைத்து இருப்பவர்கள்,திருமணத் தகவல் மையம் நடத்துபவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.

சிறப்பு பலன்கள்:-தொழிற்சாலைகளை இட மாற்றம் செய்வதன் மூலம் செய் தொழிலில் நல்ல லாபம் அடையப் போகிறீர்கள்.வெளி நாட்டில் விசிப்பவர்கள் தாய்நாடு சென்று திரும்ப வாய்ப்பு உள்ள காலமாகும்.

இராசியான எண்:-2,4
இராசியான நிறம்:-வெள்ளை,கருப்பு
இராசியான திசை:-மேற்கு,வடமேற்கு

பரிகாரம்:-திங்கள்,ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருந்து அம்மன் ஆலய வழிபாடு மற்றும் பிதுர் வழிபாடு செய்து வெள்ளை,கருப்பு வஸ்திரங்களைத் தானம் செய்து வர கிரக தோசங்கள் நீங்கி நன்மை தரும்!

மந்திரம்:-1.ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்னியாகுமாரி தீமஹி
தந்நோ துர்க்கி: ப்ரசோதயாத்!

2.ஓம் பிரம்ம புத்ராய வித்மஹே
ஸைம் ஹிகேயா தீமஹி
தந்நோ ராஹீ: ப்ரசோதயாத்! –என்று ஜெபம் செய்து வழிபாடு செய்யவும்.

11.கும்பம்::-(அவிட்டம்3,4ஆம் பாதம்,சதயம்1,2,3,4ஆம் பாதம், பூரட்டாதி1,2,3ஆம் பாதம் முடிய)
கும்பராசி அன்பர்களே இப் புத்தாண்டில் செய் தொழிலில் பங்காளிகளுடன் இருந்த மன சஞ்சலங்கள் தீரந்து நிம்மதி அடைவீர்கள்.தாய்வழி மாமன் மூலம் சில பிரச்சனைகள் வந்து சேரும். மற்றவர்களை நம்பி பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடையவேண்டாம்.தீர்த்த யாத்திரைகள் சென்று வருவதற்கான முயற்சிகளில் சற்று பின்னடைவுகள் ஏற்பட்டு விலகும். வெளி நாட்டு விசயங்களில் எதிர் பாரத்த நபர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.யாத்திரைகளால் ஆதாயம் இல்லை.பெண்கள் விசயத்தில் அவப் பெயர்கள் ஏற்பட இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லது.பூமி நிலம் சம்பந்தமாகிய கோர்ட் வழக்கு விசயங்களுக்கான முடிவுகளை இன்னும் சற்று கால தாமதமாகவே எதிர் பார்க்கலாம்.கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைய கால தாமதம் ஆகலாம்.பொருளாதாரத்தில் இருந்து வந்துள்ள செருக்கடிகள் சற்று குறைந்து காணப்படும்.நண்பர்கள் மற்றும் உறவினர்களின் திடீர் வரவால் புதிய குழப்பங்களும் பொருட் செலவும் உண்டாகலாம்.பெண்களால் செய்யாத குற்றங்களுக்காக அவப் பெயர்கள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.தீராத நாட்பட்ட நோய்கள் தீர்வதற்காக வெகு தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள்.தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,வட்டித் தொழிற் செய்வோர்கள் ,அரசு வழக்கறிஞர்கள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள் கார் லாரி போன்ற வாகன உற்பத்தி மற்றும் விற்பனை செய்வோர்கள்,ஆடு மாடுகளை விற்பனை செய்வோர்கள்,பால் வளத்துறை சார்ந்தவர்கள்,கலை கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்,இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள்,சினிமா மற்றும் நாடகத்துறை சார்ந்தவர்கள்,சிற்றுண்டி உணவு வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள்.உத்தியோகம் பாரப்பவர்களுக்கு மேலரிகாரிகளுடன் மனக் கசப்புகளும் அவர்களால் பணி இட மாற்றமும் ஏற்படலாம்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிக கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது.

சிறப்பு பலன்கள்:-நீண்ட காலமாக தடை பட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேறும் காலமாகும்.பெண்களால் எதிர் பாராத பாராத ஆதாயங்களை அடையக் கூடிய காலமாகும்.

இராசியான எண்:-3,1
இராசியான நிறம்:-மஞ்சள்,வெள்ளை
இராசியான திசை:-வடகிழக்கு,கிழக்கு

பரிகாரம்:-வியாழக்கிழமை,ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து
தட்சிணாமூர்த்தி வழிபாடு, சிவ ஆலய வழிபாடு செய்து மஞ்சள், வெள்ளை ஆடைகளைத் தானம் செய்து வர கிரக தோசம் தீர்ந்து நன்மைகளைச் செய்யும்!

மந்திரம்:-1ஓம் தக்ஷிணா மூர்த்தயே ச வித்மஹே
த்யாநஸ்த்தாய தீமஹி
தந்நோ தீஸ: ப்ரசோதயாத்!

2.ஓம் தன்மகேசாய வித்மஹே
வாக் விசுத்யாய தீமஹி
தந்நோ சிவ: ப்ரசோதயாத்!–என்று ஜெபம் செய்து வழிபாடு செய்யவும்.

12.மீனம்;:-(பூரட்டாதி2,3,4ஆம்பாதம்,உத்திரட்டாதி1,2,3,4ஆம்பாதம்,ரேவதி1,2,3,4ஆம்பாதம் முடிய)
மீனராசி அன்பர்களே இப் புத்தாண்டில் நாட்பட்ட சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் மிகு எச்சரிக்கையுடன் இருக்கவும்.விட்டுப் போன பழைய பிரச்சனைகளால் மீண்டும் தொல்லைகள் வந்து நீங்கும்.தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,ஆலயப் பணி செய்வோர்கள்,இன்சினியரிங்,கம்யுட்டர் போன்ற துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். கணவன் மனைவி உறவுகளுக்குள் சிறிய பிரச்சனைகளுக்காக வீண் மனக் கசப்புகள் வந்து சேரும்.அரசியல் வாதிகளிடம் இருந்து எதிர் பார்த்த காரியங்கள் நிறைவேறும் காலமாகும்.ஆலயத் தொண்டுகளிலும்,பொதுநலச் சேவைகளிலும் பிரியமுடன் ஈடு பட்டு நற் பெயர் எடுப்பீர்கள்.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர எடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைவேறும்.நண்பர்களால் பொருள் நஷ்டமும் மன சஞ்சலமும் ஏற்படலாம்.புதிய ஆடை அணிகலன்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை வாங்கக்கூடிய காலமாகும். வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு பழுது பார்க்கும் புதிய செலவுகள் வந்து சேரலாம்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் காரணமற்ற சச்சரவுகள் ஏற்பட்டு பிரச்சகைள் வந்து சேர வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பதோடு முன் கோபம் தவிர்த்தல் உகந்ததாகும்.அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் மற்றவர்களின் உதவிகளோடு சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும்.தந்தை மகன் உறவுகளில் காரணமற்ற மனக் கசப்புகள் வந்து நீங்கும்.பொதுத் தொண்டுகளைச் செய்வோர்களுக்கு நற் பெயர் புகழ் உண்டாகும். பங்காளிளுடன் சேரந்து புதிய தொழிகளை ஆரம்பம் செய்வீர்கள்.வீட்டைத் திருத்திக் கட்டி அலங்காரம் செய்வதில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். பழைய கடன்களை அடைத்து விட்டுப் புதிய கடன் வாங்குவீர்கள். உடம்பில் வாயு மற்றும் சுரம் போன்ற உபாதைகள் வந்து போகும்.யாத்திரையின் போது வாகனங்களில் மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வர நல்லதாகும்.

சிறப்பு பலன்கள்:-எதிர் பாராத பணச் சேர்க்கையும்,புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி அடைதலும் உண்டாகும்.வராத பணம் மற்றும் நபர்கள் திரும்ப வாய்ப்பு உள்ளது.

இராசியான எண்:-2,4
இராசியான நிறம்:-வெள்ளை,கருப்பு
இராசியான திசை:-மேற்கு,வடமேற்கு

பரிகாரம்:-திங்கள்,ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருந்து அம்மன் ஆலய வழிபாடு மற்றும் பிதுர் வழிபாடு செய்து வெள்ளை,கருப்பு வஸ்திரங்களைத் தானம் செய்து வர கிரக தோசங்கள் நீங்கி நன்மை தரும்!ய

மந்திரம்:-1.ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்னியாகுமாரி தீமஹி
தந்நோ துர்க்கி: ப்ரசோதயாத்!

2.ஓம் பிரம்ம புத்ராய வித்மஹே
ஸைம் ஹிகேயா தீமஹி
தந்நோ ராஹீ: ப்ரசோதயாத்! –என்று ஜெபம் செய்து வழிபாடு செய்யவும்.




சுபம்!


http://www.joothidam.com/2010.php
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்) Empty Re: 2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்)

Post by உதயசுதா Mon Jan 04, 2010 12:10 pm

ROMBA ROMBA THANKS DAMU.YOUR ARTICLE GIVING ME A HAPPINESS.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்) Empty Re: 2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்)

Post by தாமு Mon Jan 04, 2010 2:58 pm

உதயக்குமார் 2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்) 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்) Empty Re: 2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்)

Post by jeyasri Mon Feb 15, 2010 8:21 pm

2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்) 755837 thanks 2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்) Icon_lol
avatar
jeyasri
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்) Empty Re: 2010 ஆம் வருட புத்தாண்டு இராசிபலன்கள் (பொதுப் பலன்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum