புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10 
15 Posts - 79%
heezulia
ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10 
1 Post - 5%
Barushree
ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10 
1 Post - 5%
kavithasankar
ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10 
4 Posts - 5%
prajai
ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10 
1 Post - 1%
heezulia
ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_m10ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:26 pm

நம்மை நாமே வாழ்த்தலாம்







* உள்ளத்தில் இருக்கும் அமைதி உடல் முழுவதும் பரவினால் புத்துணர்ச்சியும், புது பலமும் உண்டாகும். அந்த சமயத்தில்,""ஆண்டவன் அருளால் மனதில் அமைதி நிலவுகிறது. உடல் முழுவதும் புத்துணர்ச்சியும், புதுபலமும் தொடர்ந்து நீடிக்க வேண்டும். ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்க வேண்டும்'' என்று மனப்பூர்வமாக நினைக்க வேண்டும். இவ்வாறு நினைப்பது நமக்கு நாமே வழங்கிக் கொள்ளும் வாழ்த்தாகும்.


* நீங்கள் உங்களுக்கும், இந்த சமுதாயத்திற்கும் பயனுள்ளவராக இருக்க வேண்டும். அதற்கு உடல்பலம், ஆயுள், ஆரோக்கியம் ஆகியவை மிகவும் அவசியமானவை. நாள்தோறும் உங்களுக்கு நீங்களே இந்த எண்ணங்களை வற்புறுத்தி சிந்திக்கும் போது அவை மனப்பதிவிலும், உடலிலும் ஆழ்ந்த முத்திரைகளைப் பதிக்கிறது. மொத்தத்தில் இது நமக்கு நாமே ஆசி வழங்குவது போலத் தான். அப்பதிவுகள் நம் செயல்களில் வெளிப்படத் தொடங்கும். அதனால், நம் வாழ்க்கை மேம்பாடு அடையும்.


* விழித்திருக்கும் போது மட்டுமின்றி, தூக்கத்திலும் நல்ல எண்ணஅலைகள் சிறந்த பலன்களை நமக்குத் தரும். நாளடைவில் நாம் தன்னிறைவு பெற்றதோடு அல்லாமல் மனைவி,மக்கள், நண்பர்கள் என்று எல்லாத் தரப்பினரும் நலம் பெற சிந்திக்க வேண்டும். நல்ல மனதோடு எல்லோருக்கும் வாழ்த்து வழங்கும் போது நல்ல சமுதாயம் உருவாகிறது. ஒருவருக்கொருவர் கொள்ளும் நட்புறவும் அன்பும் பலப்படுகிறது.


- வேதாத்ரி மகரிஷி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:27 pm

வாழ்க வளமுடன்!
நவம்பர் 29,2008,10:26 IST






* எல்லா பேறுகளையும், உங்களுடைய வாழ்க்கையிலே பெற்று சிறப்பாக வாழ வேண்டும் என பிறரை "வாழ்க வளமுடன்' என்று வாழ்த்துவது மிக உயர்ந்த பலனை அளிக்கும். ஒரு செடியைப் பார்த்துக்கூட வாழ்த்தி மகிழலாம். அவ்வாறு வாழ்த்தும் போது, அச்செடியின் பலவீனம் நீங்கி நன்கு வளரும். அன்பு, அருள், இன்முகம், களை இவற்றோடு கூடிய உருவப்படங்களை வீட்டில் மாட்டி வையுங்கள். இதனால், குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். குழந்தைகளும் நல்லவர்களாக, அழகு மிக்கவர் களாக திகழ்வார்கள்.



* தனிமனிதன் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமானால் உலக மனித சமுதாயம் முழுவதுமே அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும். ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் உலகம் முழுவதையும் நினைத்து "வாழ்க வையகம்', "வாழ்க வளமுடன்' என வாழ்த்த வாழ்த்த, அந்த வாழ்த்து அலைகள் உலக மனித சமுதாயத்தின் அறிவிலே பதிவாகி பிரதிபலித்து, உலகம் முழுமைக்கும் மகிழ்ச்சியை அளிக்கும்.

ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Tblanmegamideanews_1740664244

"வாழ்க வளமுடன்' என்று பிறரை வாழ்த்துவது மிக உயர்ந்த பலனை அளிக்கும். வாழ்த்தும் பழக்கத்தினால் கோபம் முதலிய தீய குணங்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
* தனிமனிதன் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமானால் உலக மனித சமுதாயம் முழுவதுமே அமைதியாக வாழ வேண்டும்.
* ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் உலகம் முழுவதையும் நினைத்து வாழ்த்த வேண்டும். அந்த வாழ்த்து அலை மனித சமுதாயத்தில், அவர்கள் அறிவிலே பதிவாகி பிரதிபலித்து காலத்தால் உலகம் முழுவதும் மகிழ்ச்சியை அமைதியை நிலவிடச் செய்யும்.
* பிறக்கும் போது எவரும் எதுவும் கொண்டு வருவதும் இல்லை. இறக்கும் போது கொண்டு போவதும் இல்லை. மனித சமுதாயம் தான் ஒவ்வொருவருக்கும் வாழ்வளித்து வருகிறது. அத்தகைய சமுதாயத்திற்கு தனது அறிவாற்றல், உடலாற்றல் இரண்டின் மூலமும் கடமையாற்ற வேண்டும்.
* அன்பு, அருள், இன்முகம் இவற்றைச் சிந்தியுங்கள். இதனால், குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். நம் வீட்டு குழந்தைகளும் நல்லவர்களாகவும், அழகுடையவர்களாகவும் வளர்வார்கள்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:29 pm

நல்லதை மட்டுமே சிந்தியுங்கள்







தியானத்தின் பலனாக உங்களுடைய மனதில் அமைதி நிறைந்து விளங்கும். மனதில் ததும்பும் அமைதி உடல் முழுவதும் பரவி புத்துணர்ச்சியையும், புதுபலத்தையும் அளிக்கிறது. அந்த சமயத்தில் நாம் பின்வருமாறு எண்ண வேண்டும். ""ஆண்டவன் அருளால் எனது உடலில் புதுஉணர்வும், புதியபலமும் தோன்றி இருக்கின்றன. மனதில் அமைதி தவழ்கிறது. வாழ்வும் அமைதி நிறைந்ததாகக் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து இறைவன் அருளால் எனக்கு அமைதியான வாழ்க்கையும், நல்ல உடல்நலமும், நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும்.'' என்று நீங்களே உங்களுக்கு ஆசி அளித்துக் கொள்ள வேண்டும்.


நல்ல உள்ளத்துடனும் ஆரோக்கியமான உடல் நிலையுடனும் நீங்கள் சமுதாயத்திற்குப் பயன்படக்கூடியவராக இருக்கவேண்டும் என்றால் உங்களுக்குள் நீங்களே நல்ல சிந்தனைகளை சிந்திப்பது அவசியமாகும். இப்பயிற்சி உங்கள் மனப்பதிவிலும், உடலிலும் ஆழ்ந்த முத்திரைகளை உண்டாக்கும். முதலில் தனக்குத் தானே ஆசி அளித்துவிட்டு, பின்னர் மனைவி,குழந்தைகள், குடும்பம், சமுதாயம் என்று நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களின் நன்மைக்காகவும் தியானிக்க வேண்டும். இப்படி சிந்திப்பதன் மூலம் நல்ல குடும்பமும் சமுதாயமும் உருவாக வழிஉண்டாகிறது.


-வேதாத்ரி மகரிஷி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:30 pm

எண்ணம் போல வாழ்வு



ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Tblanmegamideanews_34354799986

* எண்ணங்க-ளின் பிறப்பிடம் மனம். மனதின் இயக்கத்தை "எண்ணம்' என்ற சொல்லால் குறிக்கிறோம். எண்ண ஓட்டத்தை உணர்ந்து, விழிப்புடன் இருந்தால் வாழ்வு உயரும். அறியாமல் அதன் போக்கிற்கு விட்டு விட்டால் வாழ்க்கை தாழ்வடையும்.


* எண்ணத்தின் சக்தி அளப்பரியது. அது எங்கும் செல்லும் வலிமை கொண்டது. விழிப்பு நிலையில் இல்லாமல் அலட்சியமாக இருந்தால் அசுத்தமான எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்கும்.


* தவறான எண்ணங்களில் இருந்து தப்பிக்கும் வழி எப்போதும் மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவதைத் தவிர வேறில்லை. விருப்பமே இல்லாவிட்டாலும் கூட, நல்லவர்களோடுதான் நாம் பொழுதைக் கழிக்க வேண்டும்.


* எண்ணங்களை கையாளத் தொடங்கி விட்டால் எல்லாமே இன்பமயம் தான். பூரணமான அமைதி நிலை பெற்ற மனதில் ஆனந்தம் நிலைத்து நிற்கும். எண்ணமே நம் வாழ்வைச் செதுக்கும் சிற்பியாகும்.


* எண்ணங்களைப் பொறுத்தே சொற்கள் அமைகின்றன. எண்ணமும், சொல்லும் ஒன்றுபடும்போது செயல்களும் உயர்ந்தவையாக அமைந்து விடும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:31 pm

வீண் கவலை வேண்டாம்!

* கடமை உணர்வோடு கூடிய செயல்கள் தாம் மனித குலத்திற்கு நல் வாழ்வு தருகின்றன. கடமைகளை எல்லாமக்களும் உணர்ந்து அவரவர் பணி செய்தால், எல்லோருடைய உரிமையும் நலன் களும் முழுமையாகக் காக்கப்படும்.

* கடவுள் எல்லாமுமாக இருக்கிறார். நானுமாக இருக்கிறார். நீயுமாக இருக்கிறார். எனக்கும் கடவுளுக்கும் ஒரு சங்கிலிப் பிணைப்பு இருக்கிறது. ஒருமுனை நான், இன்னொரு முனை அவர் என்று இருக்கும் போது அவரைத் தேடி அலையவேண்டியதில்லை.

* கடமையில் சிறந்து விளங்குபவன் கடவுளை நாடுபவன் ஆவான். கடவுளை உணர்ந்த மனிதன் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பான். கடமையை உணர்ந்து செய்யும் போது நிச்சயம் தெய்வீகநிலையைப் பெற முடியும்.

* மனோசக்தியையும், உயிர்ச்சக்தியையும் கணநேரத்தில் வெளியேற்றும் தன்மை கவலைக்கு உண்டு. அதனால், கவலையை ஒழித்து மகிழ்ச்சியோடு வாழும் வகையை அறிவது அவசியம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:32 pm

மனத்தூய்மை நல்வாழ்வு தரும்




ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Tblanmegamideanews_57471865416

* "நான் யார்' என்று ஒருவர் தன்னைத்தானே பற்றி செய்யும் ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலையை உணரத் தொடங்கினால் மனதில் தெளிவுண்டாகும். ஆசைகள் ஒழுங்கு பெறும். எது எல்லாவற்றுக்கும் பெரிதோ, அதைவிடப் பெரியது வேறெதுவும் இல்லையோ, அந்தப் பரம்பொருளை உணரும்போது, ஆசை உண்டாக இடமில்லை.


* உடல் அளவில் குறுக்கிக் கொண்டிருக்கும் போது, நான் வல்லவன், செல்வந்தன், பெரியவன், அழகன் என்ற தற்பெருமை உண்டாகிறது. அல்லது ஏழை, நோயாளி என்ற தாழ்வு நிலை உண்டாகிறது. யாரோடும் ஒப்புவமை இல்லாத ஒரு பெரிய பொருளை (இறைவனை) போல நம்மையும் உணர்ந்துவிட்டால் தற்பெருமை உண்டாகாது.


* நானே பிரம்மமாக (தெய்வமாக) இருக்கிறேன். பிரம்மமே எல்லாமாக இருக்கிறது என்று உணரும்போது, எதன் மீதும் ஆசை வராது. அந்நிலையில் நான் என்னும் அகப்பற்று, எனது என்ற புறப்பற்று ஆகியவை நம்மை விட்டு விலகிவிடும்.


* தன்னை அறிந்த நிலையில் அன்பும் அறிவும் பிறக்கிறது. அந்நிலையில் ஞானிகள் எல்லாம் சொல்கின்ற ஆன்மநேய ஒருமைப்பாடு மலர்கிறது. அறிவில் பூரணத்துவமும், அடக்கமும், அமைதியும் உண்டாகிறது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:32 pm

தவறைத் திருத்துவது எப்படி?







* உடல், உயிர், அறிவு... இம்மூன்றும் உங்களுக்கு சொந்தம் கிடையாது. நீங்கள் உண்பதால் வளரும் உடலும், உயிரும், அனுபவ தேடலால் கிடைக்கும் அறிவும்கூட, இறைவனால் மட்டுமே உங்களுக்கு கிடைக்கிறது. மற்றபடி உங்களுக்கும், அதற்கும் சிறு சம்பந்தம் கூட கிடையாது. ஆகவே, நீங்கள் பெற்றிருக்கும் உடல்பலம் மற்றும் புகழ், பெயருக்காக கர்வம் கொள்ளாதீர்கள். உங்களால் உண்டாவது எதுவும் இல்லை என்ற உண்மையை புரிந்துகொண்டு கர்வத்தை விட்டுவிடுங்கள்.



* நீங்கள் ஒரு உயர்ந்த கட்டடத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அங்கிருந்து கீழே இறங்க வேண்டுமென நினைக்கிறீர்கள். அதற்காக உடனேயே, மேலிருந்து குதித்துவிட முடியாது. படிகளின் வழியாக இறங்கி வருவதுதான் சரியான வழியாக இருக்கும். இதைப்போலவே தவறு செய்துவிட்டு, திருந்த வேண்டுமென நினைப்பவர்கள்



உடனேயே, உணர்ச்சி வசப்பட்டு "திருந்திவிட்டேன்' என்று சொன்னால் மட்டும் போதாது. அவ்வாறு சொல்பவர்களை, முழுமையாக திருந்திவிட்டதாக ஏற்கவும் முடியாது. மனதை படிப்படியாக அமைதிப்படுத்தி, இறைவனின் மீது செலுத்த முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் மனம் திருந்தும். தவறுகள் ஏற்படாது.



* நீங்கள் இறைவனிடம் பக்தி செலுத்தி, நன்னிலை பெறுவதற்காகவே இவ்வுலகில் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். இறைவனிடம் பக்தி செலுத்துபவர்கள் தான் மேன்மையான நிலையை அடைய முடியும். உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உடல் வாகனம் போன்றது. அந்த வாகனத்தை பழுதுபடுத்திவிடாமல், செம்மையாக பராமரித்து, மனதையும், உடலையும் இறைவனிடம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் உங்களது கடமையை முழுமையாக நிறைவேற்றியவர் ஆவீர்கள்.


-வேதாத்திரி மகரிஷி


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 12, 2009 3:33 pm

தேவைகளை குறைப்போம்



ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Tblanmegamideanews_54099673033

* மனிதன் முழுமை பெற வேண்டுமெனில் பரம்பொருளோடு ஒன்றிப் பிறவித் துன்பத்தை ஒழித்து விட முயற்சி செய்ய வேண்டும். இம்முயற்சியை அடையும் வழிமுறைகளுக்கு யோகம் என்று பெயர். யோகப்பயிற்சியை முறையாக மேற் கொள்பவனுக்கு ஞானம் உண்டாகும்.


* நமது மனத்திலும் வாழ்க்கையிலும் தவறு நேர்வதை தவிர்க்க முடியாது. தவறை உடனே திருத்திக் கொள்வது என்பதும் எளிதான செயல் அல்ல. முறையான பயிற்சியால் மட்டுமே மனிதன் தன்னைத் திருத்திக் கொள்ள முடியும்.


* வாழ்வில் மனத்தூய்மை, ஒழுங்கான உணவுமுறை, அளவான உழைப்பு, ஓய்வு இவற்றை முறையாக கடைபிடித்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.


* தவறான எண்ணங்கள் மனதில் உருவாகும் போது தவிர்க்க முயற்சிக்க வேண்டும். அதற்கு மாற்றாக நல்ல எண்ணங்களை நாமே வலிந்து சிந்திக்க வேண்டும். அதன் போக்கில் மனதை போக விட்டால் தறி கெட்டு ஓடத் துவங்கி விடும்.


* தேவைகளைப் பெருக்கிக் கொண்டே சென்றால் சுகபோகங்களில் நாட்டம் வந்து விடும். அதற்காக பழிபாவம் செய்யவேண்டி வந்துவிடும். பிறவிச்சுழலிருந்து என்றுமே தப்பமுடியாமல் போய்விடும்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Oct 12, 2009 5:42 pm

ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Icon_cheers ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Icon_cheers ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Icon_cheers வாழ்க வளமுடன் ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Icon_cheers ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Icon_cheers ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Icon_cheers


மகரிஷி அவர்கள் இறந்தாலும்
வாழும் கலையை நமக்காக அளித்து
இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்

நன்றி தாமு.......
உங்கள் பயணம் மென்மேலும் தொடரட்டும்

வாழ்க வளமுடன்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 5:26 am

ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி 599303 ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி 154550 வாழ்க வளமுடன் ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி 154550 ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி 599303

ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி Icon_lol நன்றி சதீஷ்குமார் ஆன்மீக சிந்தனைகள் » வேதாத்ரி மகரிஷி 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக