ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Today at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Today at 6:15 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by krishnaamma Today at 6:12 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Today at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Today at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Today at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Today at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Today at 5:13 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:11 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 5:10 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Today at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Today at 4:51 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:31 pm

» தமிழே! அழகு மொழியே!!
by krishnaamma Today at 4:02 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Today at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Today at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Today at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Today at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Today at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Today at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Today at 1:09 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by ayyasamy ram Today at 12:24 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Today at 12:22 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Today at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Today at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Today at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Today at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Yesterday at 10:22 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 10:18 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by T.N.Balasubramanian Yesterday at 10:05 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Yesterday at 6:20 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 6:18 pm

» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by ayyasamy ram Yesterday at 6:02 pm

» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்
by krishnaamma Yesterday at 5:21 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» இஞ்சி முரப்பா !
by krishnaamma Yesterday at 5:16 pm

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by krishnaamma Yesterday at 4:36 pm

» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
by krishnaamma Yesterday at 4:10 pm

» சிரி…சிரி…
by krishnaamma Yesterday at 4:08 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by krishnaamma Yesterday at 4:05 pm

Admins Online

பிரபலங்களின் உடற்பயிற்சியாளர் 45 வயது கட்டழகு பெண் கிரண்

Go down

பிரபலங்களின் உடற்பயிற்சியாளர் 45 வயது கட்டழகு பெண் கிரண் Empty பிரபலங்களின் உடற்பயிற்சியாளர் 45 வயது கட்டழகு பெண் கிரண்

Post by ayyasamy ram on Sun Jan 05, 2020 4:51 am

பிரபலங்களின் உடற்பயிற்சியாளர் 45 வயது கட்டழகு பெண் கிரண் 202001041513261797_Meet-Hyds-bodybuilding-champ-Kiran-Dembla-one-of-the-few_SECVPF

ஐதராபாத்

தெலுங்கானா ,மாநிலம் ஐதராபாத்தை பூர்விகமாக கொண்டவர் கிரண் டெம்ப்லா ( வயது 45). இவர் ஒரு பாடி பில்டர் சாம்பியன் ஆவார். உடற்பயிற்சி பயிற்சியாளராகவும் உள்ளார். 45 வயதான கிரண் பிரபலங்களுக்கான உடற்பயிற்சி பயிற்சியாளராகவும் உள்ளார், மேலும் அவரது வாடிக்கையாளர் பட்டியலில் தமன்னா மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் அடங்குவர்.

ஐதராபாத்தைச் சேர்ந்த மிகச் சில பெண்களில் இவர் சிக்ஸ் பேக் உடலைக் கொண்டவர்களில் ஒருவர் ஆவார். ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்டில் நடந்த உலக உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார்.

அவரது சாதனைப் பட்டியல் இத்தோடு முடியவில்லை. அவர் ஒரு டிஸ்கோ ஜாக்கி (டி.ஜே) மற்றும் மலையேறுபவர் ஆவார். அவர் இதுவரை மூன்று முறை எவரெஸ்ட் அடிப்படை முகாமுக்கு சென்று வந்து உள்ளார்.

33 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்தார், அவரது கணவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது ஒரு நாள் அவர் மூளையில் இரத்த உறைவு இருப்பது கண்டறியப்பட்டது. அதில் இருந்து அவரது வாழ்க்கை முறையே மாறி விட்டது.

அதில் இருந்து அவர் எப்படி மீண்டு சாதனை புரிந்தார் என்பதை அவரே விளக்குகிறார்.

நான் அதிர்ச்சியடைந்தேன், என் கணவரும் அப்படித்தான். நான் கண்ணாடியைப் பார்த்து, கடந்த தசாப்தத்தில் நான் எவ்வளவு மாறிவிட்டேன் என்பதை உணர்ந்தேன். நான் என் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். சிகிச்சைக்கு பின் என் உடல் எடை அதிகமானது. நான் அப்போது 75 கிலோ எடையில் இருந்தேன்.

எனது நோயிலிருந்து நான் குணமடைந்த உடனேயே, 2007 ஆம் ஆண்டில், எனது சில நண்பர்களுடன் யோகா வகுப்புகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்.

இது ஜிம்மில் சேர என் ஆர்வத்தைத் அதிகரித்தது.. நான் என் வீடு அருகே உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல ஆரம்பித்தேன், 6-7 மாதங்களில், 24 கிலோவை குறைக்க முடிந்தது. இளமையாக உணர அவ்வளவு அருமையாக இருந்தது என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நான் ஒரு உடற்பயிற்சி பயிற்சியாளராக ஆக படித்தேன். 2008 இல் பேகம்பேட்டில் எனது சொந்த உடற்பயிற்சி கூடத்தைத் திறந்தேன்.

நடிகர் ராம் சரணின் மனைவியான உப்சனா கம்மினேனிக்கு பயிற்சி அளித்தேன். தொடர்ந்து மிர்ச்சி மற்றும் பாகுபாலிக்கு தமன்னா மற்றும் அனுஷ்கா ஷெட்டிக்கு பயிற்சி அளித்தேன். அதற்குள், நான் ஒரு பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளராக அங்கீகாரம் பெறத் தொடங்கினேன். ராஜமவுலி, பிரகாஷ் ராஜ் மற்றும் இன்னும் சிலரும் எனது வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள் என கூறினார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58207
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum