Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழ மக்கள் வெற்று எண்ணிக்கையாகவும் தகவலாகவும் மாறிவிட்டனர்
2 posters
Page 1 of 1
ஈழ மக்கள் வெற்று எண்ணிக்கையாகவும் தகவலாகவும் மாறிவிட்டனர்
இலங்கையில் தமிழர் நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது. தமிழகம் ஓரணியில் திரண்டு தனது எதிர்ப்பைத்தெரிவிக்கவில்லை. சிங்கள இனவெறிப் பாசிசக் கொடுங்கோலாட்சி நடத்தும் மகிந்த அரசு உலகளாவியமனித உரிமைகளைத் துணிந்து நசுக்குகிறது. தமிழர்களுக்குத் தமிழர்கள் என்ற உணர்வு வராத நிலையில்உலகம் நம்மை எப்படித் திரும்பிப் பார்க்கும்?
அதிபர், முதன்மை அமைச்சர், எதிர்கட்சித் தலைவர், படையணிகள் தலைவர், காவலர், பொதுத் துறை, கல்வித்துறை என்று யாவற்றிலும் 85 விழுக்காட்டிலிருந்து 99 விழுக்காட்டினர் வரையில் சிங்கள பொளத்தர்கள்.
இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகளில் 99 விழுக்காட்டினர் தமிழர்கள். கைது, கொலை, காணாமல்போதல், வல்லுறவு, குடிபெயர்வு போன்றவற்றிற்கு ஆளாவோரில் 99 விழுக்காட்டினர் தமிழர்கள்.
இந்த நிலை திடீரென்று தோன்றிவிடவில்லை.
1927லிலிருந்தே சிங்களர்களின் ஆதிக்க வெறிச் செயல் இலங்கைத் தமிழர் வாழ்வைச் சீரழித்து வருகிறது.
1927, 1971, 1977-82, 1985, 1986, 1989, 1994, 2003-2006 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அத்தனை பேச்சு வார்த்தைகளும் இலங்கை அரசுகளின் நேர்மையற்ற போக்குகளால் தோல்வியடைந்தன. 1956, 1965, 1987, 2002, 2005 ஆகிய ஆண்டுகளில் சிங்கள அரசு ஒப்பந்தங்களைத் தன்னிச்சையாக முறித்துக் கொண்டது.
இதுவரையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் தமிழர்களாய்ப் பிறந்த ஒரே குற்றத்திற்காகக் கொல்லப்பட்டுள்ளனர். 28000க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். 1,26,000 தமிழ்ப் பெண்கள்
பாலியல் வல்லூறு செய்யப்பட்டுள்ளனர். போரினால் எட்டு இலட்சம் தமிழர்கள் உலக நாடுகளுக்குக் குடிபெயர்ந்து சிதறுண்டு போயினர்.
மேற்கு நாடுகளிலும் இந்தியாவிலும் ஆறு இலட்சம் தமிழர்கள் ஏதிலி முகாம்களில் உள்ளனர். எட்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய தமிழர்களின் சொத்துக்கள் சிங்கள வெறியர்களால் சூறையாடப்பட்டுள்ளன.
மூன்று இலட்சம் தமிழர் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. 2375 தமிழ்க் கிறித்தவ, தமிழ் இந்து வழிபாட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. ஓவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அரச பயங்கரவாதத்தை எதிர்க்கும் பத்திரிகை ஆசிரியர்கள் கொல்லப்படுகின்றனர். உலகம் வெட்கித் தலைகுனியும் அத்துமீறல் அட்டூழியங்களை
இலங்கை அரசு தட்டிக் கேட்க யாருமில்லை என்று துணிந்து செய்கிறது. அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் தடுத்து வரும் அனைத்து மீறல்களையும் அரசு என்று சொல்வதற்கான எந்தத் தகுதியும் இல்லாத சிங்களப் பாசிச அரசு செய்கிறது. போக்கிலிகளையும் வன்வெறியாளர்களையும் அரசே ஊக்குவிக்கிறது. இளஞ்சிறார்களும் முதியோர்களும் காயமடைந்து மருத்துவமனையில் நிரம்பி வழிகின்றனர். கொலையுண்ட மனித உடல்கள் புதைமேடுகளில் நிறைகின்றன.
2007ல் மட்டும் ஏழு பத்திரிகையாசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஊடகங்களைப் பொருத்தவரையில் இலங்கை முதன்மை ஆபத்தான நாடாக உள்ளது என்று அனைத்துலக ஊடக ஆய்வகம் கூறுகிறது. காணாமல் போவோர் அதிகரிக்கும் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. அனைத்துலக நாடுகள் அவை (அய்.நா.) அப்பட்டமான மனித உரிமை மீறல்களை ஆதரிக்கும் அரசு என்ற கூறித் தனது மனித உரிமை அமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்றியுள்ளது.
ஓற்றைச் சமயத்தைச் சார்ந்து ஏனைய சமயத்தவர்களின் உரிமைகள் மீறப்படுகின்றன. குறிப்பாக இந்துக்கள்,கிறித்தவர்கள், இசுலாமியர்கள் போன்றோர் தங்களின் சமய நம்பிக்கைகளுக்காகத் துன்புறுத்தப்படுகின்றனர். இலங்கை ஒரு குட்டித் தீவாக இருந்தாலும் ஆசியாவிலேயே அரச பயங்கரவாதத்தால் அதிகம் குடிபெயரும் நாடாக உள்ளது.தன்னார்வலர்கள், உதவும் உலக முகவர்கள், சமயத் தலைவர்கள் என்று யாவரும் நெருக்கடிக்கும் அச்சுறுத்தலுக்கும்ஆளாகி வருகின்றனர். சுதந்திரம் காப்போர் விருது (அமெரிக்கா) பெற்ற கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உயிரச்சுறுத்தல் காரணமாக இந்தியாவிற்குக் குடிபெயர்ந்துள்ளார். குடிமை உரிமைகளுக்காக ஒயாது குரல் எழுப்பி வந்த வழக்கறிஞர் நடராசா ரவிராசு, தியாகராசா மகேசுவரன், அருள்திரு. ஏம்.எக்சு. கருணா ரத்னம்போன்றோர் அரசினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது நான்காம் ஈழப்போர் நடைபெற்று வருகிறது. அமைதிக்கான முயற்சிகளை அரசே முறியடித்த நாடுகளில் இலங்கை 20ஆவது இடத்தில் உள்ளது. தமிழ் மக்களை விரட்டியடித்த இடங்களில் அமைதி தவழும் புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. மக்களைக் கொன்று புதைக்கும் இடத்தில் புத்தருக்குச் சிலைகள்! நல்ல வேடிக்கை! பாவம் புத்தர். ஓரு வேளை புத்தர் திரும்ப வந்து போருக்கெதிராகக் குரல் எழுப்பினால் பெளத்த அரசு அவரைச் சுட்டுத் தள்ளத் தயங்காது. போரும் புத்தரும் ஒத்துப் போக முடியும் என்பதை இலங்கை அரசு எண்பித்துள்ளது.
சிங்களவெறிமயமாதலுக்காகத் தமிழின அழிப்பு தவிர்க்கவியலாதது என்று அரசு கருதுகிறது. பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்த தமிழ் ஊர்களுக்கு ஒரு நொடியில் சிங்களப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. வடகிழக்குப் பகுதியில் நூற்றாண்டுகளாக வசித்து வரும் தமிழரும் இசுலாமியரும் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர்.
இலங்கை அரசு உதவியோடு, இனத் துரோகி கருணா மக்களைக் கொலை செய்து, கொள்ளையடித்து இங்கிலாந்துக்கு 53 கோடி ரூபாய்களைக் கடத்தும்போது அங்கு பிடிபட்டார். எனினும் இலங்கை அரசு அவரையே நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தது. போரின் முதல் களப் பலி உண்மை. அரசு தனது அத்தனை அதிகாரங்களையும் ஊடகங்களையும் பயன்படுத்திப் பொய்க் கருத்துப் பரப்பலில் ஈடுபட்டு வருகிறது.
தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்களர்கள் மகிழ்ச்சியடைவார்கள்; என்றார் செயவர்த்தனா.(பெப் 1978). சிங்கள மரத்தின் ஒட்டுண்ணிக் கொடிகளே தமிழர்கள்,என்றார் விசயதுங்கா. (மே 1993). சிறுபான்மைச் சமூகம் நாட்டின் பூர்வீகக் குடிகள் அல்ல ; என்றார் குமாரதுங்க (நவ 1994). அடுத்தடுத்து பொறுப்புக்கு வந்த அதிபர்களின் பொறுப்பற்ற பேச்சினால் உலகின் மோசமான நாடுகளில் மோசமான நாடு என்று இலங்கை பெயரெடுத்துள்ளது
Last edited by kirupairajah on Mon Jan 04, 2010 7:25 pm; edited 1 time in total
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: ஈழ மக்கள் வெற்று எண்ணிக்கையாகவும் தகவலாகவும் மாறிவிட்டனர்
1944ல். தமிழருக்குத் தன்னாட்சி உரிமையை வலியுறுத்திய இலங்கைக் கம்யூனிசுடு கட்சி, 1972ல், இலங்கையை ஒரு சிங்கள பெளத்த நாடு என்று அறிவித்தது. 1956ல், சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்ட போது, ஒரு மொழி இரு நாடுகள். இரு மொழிகள் ஒரு நாடு; என்று முழங்கிய கொல்வின் டி செல்வா, 1972ல், இலங்கையை ஒரே சிங்கள பெளத்த நாடாக்குவதற்காக, அரசியல் அமைப்புச் சட்டத்தையே மாற்றியமைக்கக் காரணமானார். 1970களில், தமிழரின் தன்னாட்சி உரிமை அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறிய யமுன விமுக்தி பெரமுன 1986ல் தமிழ் விடுதலைப் போராட்டம் நசுக்கியெறியப்பட வேண்டிய ஒன்று என்றது. அமெரிக்க வல்லாதிக்கத்திற்கு எதிராகத் தமிழர்களும் சிங்களர்களும் ஒன்றுபட்டு ஓரணியில் திரளவேண்டும் என்று வலியுறுத்திய செயதிலக தற்போது விடுதலைப் புலிகளை நசுக்க அமெரிக்க உதவியை நாடுவோம் என்கிறார்.
தமிழரின் தன்னாட்சி உரிமையை மறுக்காமல் வழங்கும்போதுதான் இனச் சிக்கலைத் தீர்க்க முடியும் என்றும்தமிழரின் தன்னாட்சி உரிமையை ஏற்க மறுக்கும் எவருடனும் பேசத் தேவையில்லை ;என்றும் முழங்கிய சந்திரிகா அதிபரானதும் தமிழர் மீது அமைதிக்கான போரைத்(!) துவக்கினார்.
அரசு எங்கள் குரலையும் கருத்துக்களையும் புறக்கணிக்கிறது. மக்களாட்சி நாடுகளில் சிறந்த ஒன்றாக மதிக்கப்பட்ட இலங்கை இன்று அவற்றின் எதிர்பார்ப்புகளைப் பொய்த்துப் போகச் செய்துள்ளது. எனவே, இனவெறிச் சிக்கலுக்குத் தீர்வு காணும் முயற்சியிலிருந்து விலகிக் கொள்கிறோம் என்று செருமன் விலகிக் கொண்டது.
குடியிருப்பு இல்லை. குடிநீர் இல்லை. கழிப்பிடங்கள் இல்லை. உணவு இல்லை. மருந்து இல்லை. நாங்கள் வீடிழந்து, தேசமிழந்து தேம்பி நிற்கிறோம். நாங்கள் போர் அகதிகள் என்கிறார் யாழ்ப்பாண ஆயர் சவுந்தர நாயகம். வன்னித் தமிழரைக் காப்பாற்றுங்கள் என்கிறார் வன்னி நீதி-அமைதிக் குழுவின் தலைவர் அருள்திரு. சேம்சு பத்திநாதன்.
கடந்த மார்ச் முதல் தமிழ் இதழியியலாளர் திசநாயகம் அவர்களை இலங்கை அரசு சிறைப்படுத்தியுள்ளது கருத்துக்களை வைத்திருப்பதற்காகவோ பரப்புவதற்காகவோ எவரும் தண்டிக்கப்படக் கூடாது. திபத்திய லாமாவோ, அர்சென்டைனா யூத குருவோ, சுவரொட்டி ஒட்டும் பாலத்தீனியரோ, இலத்தீன் அமெரிக்கக் குருவோ, துருக்கிய நாவலாசிரியரோ எவரும் தமது கருத்தைக் கூறியதற்காகத் தண்டிக்கப்படக் கூடாது என்பதே மனிதநேயர்களின் உலகளாவிய கொள்கை.
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: ஈழ மக்கள் வெற்று எண்ணிக்கையாகவும் தகவலாகவும் மாறிவிட்டனர்
கிருபை இதை படிக்கும் போது மனது என்னமோ பன்னுது...
Re: ஈழ மக்கள் வெற்று எண்ணிக்கையாகவும் தகவலாகவும் மாறிவிட்டனர்
மனித உரிமைகளின் மீது அக்கறை காட்ட வேண்டிய அரசு மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து தனது உள்நாட்டு மக்கள் விரோத அட்டூழியங்களையும் அரச பயங்கரவாதத்தையும் மூடிமறைக்க முயலுகிறது. உலகம் காட்டும் அமைதியைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு தமிழரைப் பூண்டோடு கருவருக்கத் துடிக்கிறது. தமிழர்கள் தமிழர்களாய் விழித்தெழுந்து போராடினால்தான் தமிழினத்தைக் காப்பாற்ற முடியும். ஆனால் என்ன நடக்கிறது?
தூக்கத்திலிருந்து விழித்தெழ மறுத்து அடம்பிடித்தது அனைத்துலக மனசாட்சி. ஈழத்தின் கடைசி நம்பிக்கைகளும் கருகின. மக்களாட்சி, மாந்த உரிமை, இறையாண்மை, கூட்டாட்சி என்றெல்லாம் குரல்கள் வலுக்கும் இன்றைய நூற்றாண்டில் நம் அனைவரின் கண்களுக்கு முன்பாகவும் ஒரு இனப்படுகொலை எளிதாக நிறைவேறியுள்ளது. கடந்த அய்ந்து மாதங்களில் ஒரு இலட்சம் மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்றரை இலட்சம் மக்கள் இடப்பெயர்வுக்கு ஆளாகியுள்ளனர். ஈழ மக்கள் வெற்று எண்ணிக்கையாகவும் தகவலாகவும் மாறிவிட்டனர். இரவு என்ற தனது படைப்பிற்காக நோபல் பரிசு பெற்ற எலி வீசல் எழுதுகிறார்: “என் வாழ்க்கையையே சபிக்கப்பட்ட ஒரு நீண்ட இரவாக மாற்றிய அந்த நாளை நான் என்றுமே மறக்கமாட்டேன். அந்தப் புகையை, அமைதியான நீலவானத்தின் கீழ் புகைவளையங்களாக மாறிய அக் குழந்தைகளின் சிறிய முகங்களை என்னால் மறக்க முடியாது. என் நம்பிக்கையை முற்றிலும் விழுங்கிய அந்தச் சுவாலைகளை வாழும் ஆசையை முற்றாகப் பறித்துவிட்ட, முதலும் முடிவும் அற்ற அந்த இருண்ட அமைதியை எப்படி மறப்பேன்? எனது கடவுள் நம்பிக்கையையும் ஆன்மாவையும் கொன்று எனது கனவுகளை சாம்பலாக்கிய அந்தக் கணங்களை நான் என்றும் மறக்கமாட்டேன். கடவுளைப் போல நான் வாழ விதிக்கப்பட்டாலும் அந்த நாளை என்றென்றும் மறக்கமாட்டேன்!”. ஈழத் தமிழர்கள் தங்களுக்கு நடந்ததை மட்டுமல்ல, தமிழகத் தமிழர்கள் செய்யத் தவறியதையும் மறக்கமாட்டார்கள். மன்னிக்கமாட்டார்கள். தமிழர் குரல் பலவீனப்பட்டுள்ளது. மோசமடைந்து வரும் தமிழக அரசியலை வைத்துக் கொண்டு நாம் நல்லது எதுவும் செய்ய முடியாது.
‘இலங்கை முகாம்களில் வாழும் இடம் பெயர்ந்த தமிழர்களின் துன்பங்களை வார்த்தைகளால் விளக்க முடியாது. இலங்கை நாட்டு சட்டதிட்டப்படி தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு வெளிப்படையாக பேசுவதால் நான் தண்டிக்கப்படலாம்’ என்று அந்நாட்டுத் தலைமை நீதிபதி கூறுகிறார். அவர்களாலேயே சகித்துக் கொள்ள முடியாத ஒன்றைத் தமிழ்மக்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் இப்படி உண்மைகளை உரத்துப் பேசுகிற மனிதர்கள் அரிதாகவே இருக்கின்றனர். உண்மையை விடப் பொய்மைக்கும் போலிக்கும் வதந்திகளுக்கும் தமிழகம் நிறையவே இடம் கொடுத்து சீரழிவுற்றுள்ளது.
‘சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள்’ என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்தப் பதிலும் சொல்லாமல் கள்ள அமைதி காக்கிறது இந்திய ஏகாதிபத்தியம் என்று சாடினான் தன்னுயிர் ஈந்து தமிழ்மானம் காத்த வீர இளைஞன் முத்துக்குமார்.
அந்தக் கள்ள அமைதியையும் கலைத்து விட்டு இந்தியா ஒரு அப்பட்டமான போர்வெறி நாடு என்பதையும் உலகிற்கு அறிவித்து விட்டது. இந்திய ஆட்சியாளர்கள் உலகினர் முன் அரசியல் அம்மணத்தோடு நிற்பதற்காக வெட்கப்படவில்லை. இப்படி ஒரு கேடு கெட்ட, வஞ்சகமான, தமிழர் விரோத இந்தியாவில் நாம் வாழ்வதற்காக நமக்குத்தான் வெட்கமும் வேதனையும் நெஞ்சைக் குமைகின்றன. இந்திய அரசும் வெளியுறவுத் துறையும் ஊடக ஊத்தைகளும் மீண்டும் அம்பலப்பட்டிருக்கின்றன. இந்த ஈனர்களையும் உலகமகா எத்தர்களையும் தாங்கிப் பிடிக்கும் தமிழக அரசியல்வாதிகள் தமிழர் அனைவருக்கும் பிணக்குழி தயாரிக்கின்றனர். இவர்களை அரசியல் பயங்கரவாதிகள் என்பதில் தவறில்லை.
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Similar topics
» அனைவரும் பேஸ் புக்கிற்கு மாறிவிட்டனர்
» வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்!
» வெற்று இலைக்கூடு- கவிதை
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்
» வீட்டுக்கு வந்த வெற்று பார்சல்: பல் இளிக்கும் ஆன்லைன் வர்த்தகம்!
» வெற்று இலைக்கூடு- கவிதை
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum