ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவலிக்கு மருந்து

2 posters

Go down

தலைவலிக்கு மருந்து Empty தலைவலிக்கு மருந்து

Post by Guest Thu Dec 19, 2019 5:34 pm

அந்தப் பையனுக்கு மிஞ்சி மிஞ்சி போனால் பதினஞ்சு, பதினாறு வயஸுதான் இருக்கும். பாவம், தாங்க முடியாத தலைவலியால் அவதிப்பட்டான்! டாக்டர்கள், வைத்யம் இதெல்லாம் ஒரு பக்கம் அதுபாட்டுக்கு போய்க் கொண்டிருந்தாலும், அவனுக்கு பேரிடியாக ஞாபகசக்தியும் குறைந்து கொண்டே வந்தது!

சோதனை காலத்திலும் ஒரு நல்ல காலம், ஞாபகம் நன்றாக இருக்கும் போதே "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்"என்று ஆழ்வார் பாடியது போல் பெரியவாளிடம் வந்து கண்ணீர் விட்டான்.

"எனக்கு தலைவலி தாங்க முடியலே பெரியவா.... அதோட மறதி ரொம்ப இருக்கு. பாடத்தை ஞாபகம் வெச்சுக்கவே முடியலே... பெரியவாதான் காப்பாத்தணும்"அழுதான்.

"கொழந்தே! நா..... வைத்யசாஸ்த்ரம் படிச்சதில்லேடா..... வேதாந்த சாஸ்த்ரந்தான் படிச்சிருக்கேன்....."

பையன் நகருவதாக இல்லை. பெரியவாளிடம் prescription வாங்காமல் போவதாக இல்லை. அதற்கு மேல் அவனை சோதிக்க பெரியவா விரும்பவில்லை.

எனவே அவனிடம்,"சரி, நான் சொல்ற வைத்யம் ரொம்ப கடுமையா இருக்குமேப்பா! ஒன்னால follow பண்ண முடியாதேடா கொழந்தே!..."

"அப்டீல்லாம் இல்லே பெரியவா...... ஒங்க வார்த்தைப்படி கட்டாயம் நடக்கறேன்!"

வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையால் பையன் முகம் ப்ரகாஸமானது.

"ரொம்ப சந்தோஷம். அந்தக் காலத்துல, முகத்தளவைன்னு ஒரு கணக்கு உண்டு. அதுப்படி, நாலு பெரிய்....ய்ய படில அரிசி, கோதுமை மாதிரி எதாவுது ஒரு தான்யத்தை அளந்து ஒரு பையில கட்டி ..... சபரி மலைக்கு இருமுடி கட்டிண்டு போறவாளை பாத்திருக்கியோ? அதுமாதிரி, அந்த தான்யத்தை ஒன்னோட தலையில வெச்சுண்டு, தெனோமும் ஒரு மைல் தொலைவு நடக்கணும்! செய்வியா?.... முடியுமா?..."

"கட்டாயம் நடக்கறேன்....."

"இரு .... இரு.... இன்னும் நான் முழுக்க சொல்லி முடிக்கலே! ஒரு மைல் தொலைவு நடக்கறச்சே.... யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூட பேசப்....டாது! சிவ நாமாவோ, ராம நாமாவோ சொல்லிண்டிருக்கணும்! அந்த தான்யத்தை அன்னன்னிக்கி எதாவுது சிவன் கோவிலுக்கோ, பெருமாள் கோவிலுக்கோ,..க்ராம தேவதை கோவிலுக்கோ எதுவானாலும் சரி, குடுத்துடணும்! இல்லாட்டா.... யாராவுது ஒரு ஏழைக்கு அதைக் குடுத்துடணும்! இதுமாதிரி பதினோரு நாள் பண்ணினியானா..... ஒன்னோட தலைவலி போய்டும்; ஞாபகசக்தியும் நன்னா வ்ருத்தியாகும்..."

பையனுக்கு ஒரே சந்தோஷம் !"நிச்சயம் நீங்க சொன்னபடி பண்றேன் பெரியவா"விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு போனான்.

பெரியவாளின் அநுக்ரஹம் வேலை செய்ய ஆரம்பித்ததால், அவர் சொன்ன எதையும் மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொண்டு பண்ணினான். ஒரே வாரத்தில் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தான்... அழுது கொண்டு இல்லை! சிரித்த முகத்துடன் வந்தான்!

"பெரியவா...... என் தலைவலி போய்டுத்து! டாக்டர்ல்லாம் ரொம்ப ஆச்சர்யப்பட்டா! "என்ன மருந்து சாப்ட்டே?"ன்னு கேட்டா..... பெரியவா பண்ணச் சொன்னதை சொன்னேன்.... தலைல ஏதோ நரம்பு பிசகி இருந்திருக்கும், தான்யத்தோட வெயிட் ஏறினதும், அது சரியாகி இருக்கும்ன்னு சொன்னா! இன்னும் பாக்கி இருக்கறதையும் பண்ணிடறேன் பெரியவா"

அவன் சொன்னதை சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு, ப்ரஸாதம் குடுத்தனுப்பினார்.

உண்மைதான்! பெரியவாளுடைய அநுக்ரஹ பாரம் தாங்காமல், பிசகின நரம்பு சரியாகிவிட்டது
................................................................
இதுபற்றி அறிவியல் விளக்கம் காண மருத்துவ இணையத்தை தேடினேன்.இப்படி தலையில் ஏற்கக்கூடிய சுமை ஒன்றை தொடர்ந்து தலையில் வைத்து நடக்கும் போது Migraine போன்ற தலைவலிகளை குணமாக்க முடியும்.
சுமை தலையை மட்டுமல்லாது பின் கழுத்துப் பகுதியில் உள்ள இரண்டு புள்ளிகளையும் முன் நெற்றியில் உள்ள ஒரு புள்ளியையும் ஒன்றாக அழுத்துவதன் மூலம் தலைவலிகளையும் அதேசமயம் நினைவாற்றலை அதிகரிக்கவும் செய்கிறது என்கிறார்கள்.இரண்டு கைகளால் பாரத்தை பிடித்து நடக்கும் போது இரண்டு விரல்களுக்கு இடையில் உள்ள புள்ளியும் அழுத்தப்படுவதாக மருத்துவம் சொல்கிறது.

இதை சீன மருத்துவமும் மேலை நாட்டு மருத்துவமும் Accupressure points-accu points என சொல்கிறார்கள்.(Helps prevent migraines, headaches and back pain. ...Boosts memory capabilities,Relieves symptoms of anxiety and depression)

தலைவலிக்கு மருந்து Pain_headaches-fig_1

(நன்றி-MSKCC – ஜொனதன் சைமன் LA)
avatar
Guest
Guest


Back to top Go down

தலைவலிக்கு மருந்து Empty Re: தலைவலிக்கு மருந்து

Post by krishnaamma Thu Dec 19, 2019 8:53 pm

ம்ம்... பெரியவா பற்றி நிறைய தேடுவது போல இருக்கே சக்தி.... மேல் விவரங்களுக்கு மிக்க நன்றி ! புன்னகை
.
.
.
எத்தனை எத்தனை தெரிந்து வைத்திருந்திருக்கிறார் பாருங்கள்..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by krishnaamma on Fri Dec 20, 2019 10:42 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தலைவலிக்கு மருந்து Empty Re: தலைவலிக்கு மருந்து

Post by T.N.Balasubramanian Thu Dec 19, 2019 9:20 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தலைவலிக்கு மருந்து Empty Re: தலைவலிக்கு மருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum