ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா இனி பரவாது
by T.N.Balasubramanian Today at 5:53 pm

» பாடல்கள் டவுன்லோடு லிங்க் பதிவிடலாமா ?
by T.N.Balasubramanian Today at 5:39 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by T.N.Balasubramanian Today at 5:27 pm

» திரைக் கதிர் - திரைச் செய்திகள்
by ayyasamy ram Today at 4:39 pm

» இருவர் கூட்டணியும் ஒரு இசை சகாப்தமும்
by ayyasamy ram Today at 4:07 pm

» புத்தகங்கள் கிடைக்குமா
by nsatheeshkumar Today at 3:27 pm

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by velmarun Today at 1:00 pm

» பாமாயில் ஒன்றும் கெடுதல் கிடையாது
by ayyasamy ram Today at 12:41 pm

» பேரிடரால் வீட்டுக்குள் வந்து விட்டோம்…!!
by ayyasamy ram Today at 12:24 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by ayyasamy ram Today at 12:22 pm

» புண்ணியம் தேடி காசிக்கு போவார்…
by ayyasamy ram Today at 12:10 pm

» அமிதாப் குணமடைய நாடு முழுவதும் பிரபலங்கள் பிரார்த்தனை
by T.N.Balasubramanian Today at 11:26 am

» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
by ayyasamy ram Today at 8:40 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by ayyasamy ram Today at 8:38 am

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by ayyasamy ram Today at 6:47 am

» அப்பாடா., ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்
by ayyasamy ram Today at 6:42 am

» விநாயகர்சிலை: ஆன்லைனில் விண்ணப்பிக்க மும்பை மாநகரட்சி ஆணை
by ayyasamy ram Today at 6:37 am

» தெலங்கானா:கொரோனவால் இறந்தவர் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற அவலம்
by ayyasamy ram Today at 6:35 am

» இந்திய ரயில்வே நூறு சதவீதம் மின்மயமாக்கல்: பிரதமர் ஒப்புதல்
by ayyasamy ram Today at 6:32 am

» நாவல்கள் தேவை
by rukman1304 Yesterday at 11:23 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by rukman1304 Yesterday at 11:11 pm

» வானவல்லி நாவல்
by rukman1304 Yesterday at 11:07 pm

» கொரோனா நகைச்சுவைகள்
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நான் உயிரோடு இருக்கிறேனா ? -(நகைச்சுவை) -திரு.பாக்கியம் ராமசாமி.
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by T.N.Balasubramanian Yesterday at 9:01 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by சிவனாசான் Yesterday at 9:00 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by சிவனாசான் Yesterday at 8:57 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Yesterday at 7:13 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Yesterday at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Yesterday at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Yesterday at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Yesterday at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Yesterday at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Yesterday at 9:49 am

Admins Online

தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63

Go down

தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63 Empty தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63

Post by ayyasamy ram on Fri Dec 13, 2019 9:06 am

தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63 Tamil-Daily-News-Paper_2223169207573


சனத்குமாரர் என்ற மகாயோகியை நாரதர் அணுகி, ‘ஐயனே! எனக்கு உபதேசம் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.‘‘நல்லது நாரதா! உபதேசம் செய்வதற்கு முன்னால் ஒரு வார்த்தை, உனக்கு ஏற்கெனவே என்னென்ன தெரியும் என்பதை முன்கூட்டிச் சொல்லிவிடு. அதன்பிறகுதான் எதை உபதேசிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்!’’ என்றார் சனத்குமாரர். நாரதர் தான் கற்ற வித்தைகளைக் கூறத் தொடங்கினார்.

‘‘குருதேவா! எனக்கு ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் தெரியும். இதிகாச, புராணங்கள் எல்லாமும் தெரியும். வேதங்களின் வேதமாகிய இலக்கணம், பிதுரு, கல்பம், கணித சாஸ்திரம், சகுன சாஸ்திரம், கால நிர்ணயம், தர்க்க சாஸ்திரம், நீதி சாஸ்திரம், நிருத்தம், பூதவித்தை, போர்முறை, வான சாஸ்திரம், சர்ப்ப வித்தை, கந்தர்வ வித்தை இவை அனைத்துமே தெரியும்’’ என்றார் நாரதர்.

அப்படிச் சொன்ன நாரதர் தன் சந்தேகம் ஒன்றையும் பணிவுடன் கேட்டார்: ‘‘தேவா! இவ்வளவு வேத மந்திரங்களை நான் கற்றுக்கொண்டேனே தவிர, துன்பங்களைக் கடந்து செல்லும் ஆத்ம யோகத்தை அறிந்தவனாக இல்லை. ‘எவனொருவன் ஆத்மாவை அறிந்துகொள்கிறானோ அவனே துன்பத்தைக் கடப்பான்’ என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். தயை கூர்ந்து எனக்கு நீங்கள் துன்பத்தைக் கடக்கும் மார்க்கத்தைக்
கற்றுத் தரவேண்டும்’’ என்றார் நாரதர்.

சனத்குமாரர் சிரித்தார். ‘‘நாரதரே! நீர் கற்றுக்கொண்ட வித்தைகள் எல்லாம் பெயரளவில் வித்தைகளே. அவற்றைவிடப் பெரிய விஷயங்கள் சில உண்டு. அவற்றின் மூலமே ஆத்மாவை அறிய முடியும்’’ என்றார் அவர்.‘‘எவையெவை, பெரியவை?’’ என்று கேட்டார் நாரதர்.‘‘நீ சொன்ன பெயர்கள் எல்லாவற்றையும்விட வாக்குப் பெரியது. அந்த வாக்கைவிட மனது பெரியது. எப்படி ஒரு கைப்பிடிக்குள் இரண்டு நெல்லிக்காயோ, இலந்தைப் பழமோ அடங்கி விடுகிறதோ, அப்படியே பெயரும், வாக்கும் மனதுக்குள் அடங்கி விடும். மனத்தால் நினைத்த பின்தானே நீ சொல்லுகிறாய், செயலில் இறங்குகிறாய் அந்த மனதுதான் ஆத்மா. அந்த மனதுதான் உலகம்.

அந்த மனதுதான் பிரம்மம். ஆகையால் மனதை நேசிப்பாயாக. அதே நேரத்தில் இன்னொன்று - சங்கற்பம் செய்வது மனதைவிடப் பெரியது. எப்போது ஒருவன் சங்கற்பம் செய்யத் தொடங்குகிறானோ, அப்போது யோசிக்கத் தொடங்குகிறான் - அது மனது. உடனே பேச ஆரம்பிக்கிறான் - அது வாக்கு. அந்த வாக்கு பெயர் வடிவமாகிறது. அதில் மந்திரங்கள் ஒடுங்கி விடுகின்றன. மந்திரங்களில் கருமங்கள் ஒடுங்கி விடுகின்றன. அதேநேரத்தில் சங்கற்பத்தைக் காட்டிலும் தியானம் பெரியது. பூமி தியானம் செய்கிறது. வானம் தியானம் செய்கிறது. மலைகள் தியானம் செய்கின்றன.

ஆகையால் பெருமைக்குரிய மனிதர்கள் தியான பலத்தில் ஒரு அம்சத்தையாவது பெற்றிருக்கிறார்கள். அற்பர்களுக்கும் கலகக்காரர்களுக்கும் அது வாய்ப்பதில்லை. ‘‘தியானத்தை விடவும் பெரியது எது என்று கேட்கிறாயா? விஞ்ஞானம் பெரியது. ஆத்ம பலம், விஞ்ஞானத்தைக் காட்டிலும் பெரியது. விஞ்ஞானம் என்பது அனுபவம், அவ்வளவுதான். ஆத்ம பலம் படைத்த யோகி, நூறு விஞ்ஞானவான்களை ஆட்டி வைக்க முடியும். ஒருவன் பலமுள்ளவனாக இருந்தால் அவன் படுக்கையில் கிடக்க மாட்டான்; எழுவான்; நடப்பான்; சேவை செய்வான்.’’நாரதருக்கும் சனத்குமாரருக்கும் நடந்த இந்த விவாதத்தில் ஆத்ம பலமே
பொதுவாகப் பேசப்படுகிறது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58268
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63 Empty Re: தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63

Post by ayyasamy ram on Fri Dec 13, 2019 9:06 am

ஆத்ம பலம் என்பது என்ன? தன்னை உணர்தல்.‘‘நானே பிரம்மம்! நானே ஈஸ்வரன்’’ என்ற நிலையை எய்துதல். கடமைகளை ஒழுங்காகச் செய்வதன் மூலம் ஆத்மா பலம் பெறுகிறது. ஒரு கதை உண்டு. ஒரு நதியில் வெள்ளம் வந்து, பாலத்தின் இரண்டு பக்கங்களையும் அடித்துக்கொண்டு போய்விட்டது. பாலத்தின் நடுவே ஒரு குடும்பம் நின்று தத்தளித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து பரிதாபப்பட்ட ஒரு பணக்காரர், ஒரு ஓடக்காரனைக் கூப்பிட்டு அவர்களைக் காப்பாற்றும்படியும் நூறு ரூபாய் தருவதாகவும் சொன்னார். ஓடக்காரன் அவர்களைக் காப்பாற்றினான். நூறு ரூபாய் எடுத்து அவர் கொடுத்தார்.

அவன் ‘இது என் கடமை’ என்று கூறிப் பணத்தை வாங்காமல் மறுத்துவிட்டான். இந்த பலன் கருதாத கருமமே, ‘கடமை’ என்பது. இதைக் கருமம் என்பதைவிடத் ‘தர்மம்’ என்பது பொருந்தும். இத்தகைய தர்மம் தலைமாட்டில் நின்று காப்பாற்றும்.‘‘நான் லண்டனுக்குப் போனேன்; நான் பாரிஸுக்குப் போனேன். அனுபவித்தேன்’ என்ற அகங்காரம் கடைசிக் காலத்தில் எந்த உதவியையும் செய்யாது. முதலில் இந்த ‘நான்’ தன்மையை வென்றவர்கள்தான் பெரிய யோகிகளாக மாறுகிறார்கள்.

அந்த யோகிகளிடம் இறைவனே வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், ‘பொன்னைக் கொடு, பொருளைக் கொடு’ என்று கேட்க மாட்டார்கள்; ‘என்னையே எனக்குக் கொடு’ என்றுதான் கேட்பார்கள். இப்படி தன்னை உணர்ந்து கொண்டுவிட்ட மனிதன் மரணத்தில் இருந்து விடுதலை பெற்று விடுகிறான். ‘அவன் செத்து விட்டான்’ என்று சொன்னால் ‘அவன் உடம்புதான் செத்து விட்டது. ஆத்மா சாகவில்லை’ என்பது பொருள். ‘என்னையே எனக்குக் கொடு’ எனும் தத்துவத்தில் ஆன்மாவே உணரப்படுகிறது. அதற்குள் இருக்கும் ஈஸ்வரன் அறியப்படுகிறான்.

துயரங்கள் தோன்றாமல், சிரித்துக்கொண்டே அவன் மரணமடைந்து விடுகிறான். அதாவது அவன் உடம்பு அழிந்து விடுகிறது. இந்த ஆன்ம யோகத்தை மிக ஆழமாக நமது சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் சிந்தித்தார்கள். இமயமலையில் குடி புகுந்தவன் மாத்திரை வாங்குவதற்காக டாக்டரைப் பார்த்ததுண்டா? ஆன்மாவை உணர்ந்துகொண்டவன் பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது? அவனுக்குச் சொல்வதற்குத்தான் பிறரிடம் என்ன இருக்கிறது?

சக்திக்கும் சிவனுக்கும் நாரதர் ஒரு மாம்பழத்தை அளித்தார். சக்திதேவிக்கு அதை மூத்த மகனுக்கு அளிக்க வேண்டும் என்ற ஆசை. சிவபிரானுக்கோ இளைய மகனுக்குத் தரவேண்டும் என்ற விருப்பம். பிள்ளைகள் போட்டியே, பெற்றோர்கள் போட்டியாகி விட்டது.‘‘சரி, எதற்கு வம்பு? உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இந்த மாங்கனி!’’ என்று கூறிவிட்டார் சிவன். முருகனிடம் மயில் இருக்கிறது. கணபதியிடம் மூஞ்சூறு தானே இருக்கிறது! மயில் மீது ஏறி முருகப்பெருமான் உலகை வலம் வரத்தொடங்கினார்.

தாய்-தகப்பனை மூன்று முறை சுற்றிவிட்டு, கையை நீட்டினார் விநாயகப் பெருமான். மாங்கனி அவருக்குப் போய்விட்டது. இது கதை! ‘உலகத்தைவிட மிகப் பெரியவர்கள் தாயும் தகப்பனுமே’ என்ற தத்துவத்தை இந்துக்கள் எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்கள்! மகாலட்சுமிக்குச் சுயம்வரம். சாதாரண லட்சுமிக்குத் திருமணம் என்றாலே, ஊர் எவ்வளவ அல்லோலகல்லோலப்படுகிறது?பத்திரிகைகளில் எல்லாம் அந்தச் செய்திதானே வருகிறது. மகாலட்சுமிக்கே சுயம்வரம் என்றால் ஏழு உலகங்களும், தேவாதி தேவர்களும் திரளக்கூடும் இல்லையா?முப்பத்து முக்கோடி தேவர்களும் கழுத்தை நீட்டினார்கள். ஆனால், மகாலட்சுமி ஒரு நிபந்தனை வைத்தாள்.

‘என்னை எவன் விரும்பவில்லையோ, அவனைத்தான் மணப்பேன்’ என்றாள். அவளை விரும்பாதது மாதிரி தேவர்களால் நடிக்கக்கூட முடியவில்லை. ஏழு உலகங்களிலும் நடந்தாள், மகாலட்சுமி. கடைசியில் பாற்கடலில் நடந்தாள். அங்கே பள்ளி கொண்டிருந்தது ஒரு கரிய திருமேனி. மகாலட்சுமியை அது லட்சியம் செய்யவே இல்லை. ‘‘என்ன, உங்களுக்கு ஆசையே இல்லையா?’’ என்று கேட்டாள் மகாலட்சுமி.‘‘நீ யாரம்மா?’’ என்று கேட்டது திருமேனி.‘‘நான்தான் மகாலட்சுமி!’’ என்றாள்.‘‘அப்படியென்றால்...?’’ என்று அது திருப்பிக் கேட்டது.

மகாலட்சுமிக்குச் சிரிப்பு வந்தது.‘‘உன்னை அறிவதுதான் என் வேலையா? உலகத்தில் எனக்கு வேறு வேலை இருக்கிறது!’’ என்றார் திருமால். அவர் கழுத்தில் மாலையைப் போட்டுக் காலடியிலேயே உட்கார்ந்து விட்டாள் மகாலட்சுமி. உலக ரட்சகன் எதிலும் மயங்கி விடுவதில்லை என்பதையும், மனிதனும் அப்படி மயங்காமல் இருக்கும் வரைதான் மரியாதை என்பதையும் இந்தக் கதை எவ்வளவு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது!

ஒரு அரண்மனை, அதன் மேன்மாடத்திலே ஒரு ராஜா. அவர் பக்கத்திலே அழகான ராணி. இருவரும் பழங்களை உரித்துத் தின்றபடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சுளைகளைத் தின்றுவிட்டு தோல்களை வெளியே எறிகிறார்கள். ஒரு சந்நியாசி. அவனுக்கோ பசி. வெளித் திண்ணையில் அவன் உட்கார்ந்திருக்கிறான். ராஜா தூக்கியெறிந்த தோல்களை எடுத்து அவன் தின்கிறான். சேவகர்கள் பார்க்கிறார்கள். சந்நியாசியை இழுத்துக் கொண்டுபோய் ராஜா முன்னால் நிறுத்துகிறார்கள். அவனைச் சவுக்கால் அடிக்கும்படி ராஜா ஆணையிடுகிறான்.

அடி விழ, அடி விழச் சந்நியாசி சிரிக்கிறான். ‘‘ஏன் சிரிக்கிறாய்?’’ என்று ராஜா கேட்கிறான். ‘‘அரசே, தோலைத் தின்றவனுக்கே இவ்வளவு அடி என்றால் சுளையைத் தின்றவனுக்கு எவ்வளவு அடி என்று எண்ணிப்பார்த்தேன். சிரிப்பு வந்துவிட்டது!’’ என்றான் சந்நியாசி. பாவத்தின் அளவுக்கே தண்டனை என்பதற்கு இதை விடவா வேறு கதை வேண்டும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்குத் துலாபாரம். துலாபாரம் என்றால் இந்தக் காலம்போல வெங்காயம், விறகு, பத்துக்காசு நாணயம் அல்ல. தங்கத்திலே துலாபாரம்! சத்தியபாமா தன் நகைகளையெல்லாம் கழற்றி வைக்கிறாள்.

தான் செல்வம் படைத்தவள் என்பதைக் காட்டத் தாய்வீட்டுச் சீதனங்களையெல்லாம் கொண்டுவந்து வைக்கிறாள். தட்டு நகரவில்லை. மெதுவாக வருகிறாள் ருக்மணி. ஒரு துளசி தளத்தைக் கொண்டுவந்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு, அதைத் தட்டிலே வைக்கிறாள். என்ன ஆச்சரியம், தராசு சமமாகிறது! ஆணவத்தோடு கொடுக்கப்படும் தங்கத்தைவிட அன்போடு கொடுக்கப்படும் இலை தழைகளுக்குச் சக்தியும், மரியாதையும் அதிகம் என்பதை இந்தக் கதை நிரூபிக்கவில்லையா?
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58268
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63 Empty Re: தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63

Post by ayyasamy ram on Fri Dec 13, 2019 9:07 am

பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் வந்தார்.‘‘சுவாமி! ஒரு சந்தேகம்!’’ என்றார்.‘‘என்ன?’’ என்று கேட்டார் பரமஹம்சர்.‘‘நீங்கள் விஷ்ணு என்கிறீர்கள், சிவன் என்கிறீர்கள். அதே விஷ்ணுவின் அவதாரம்தான் ராமனும், கிருஷ்ணனும் என்கிறீர்கள். ஒரே விஷ்ணுவுக்கு இத்தனை வடிவங்கள் எதற்கு? ஏன் ஒரே கடவுளாக வைத்துக் கொண்டால் என்ன?’’ என்று கேட்டார். அதற்குப் பரமஹம்சர் உடனே, ‘‘ஐயா! ஒரு விஷயம். நீங்கள் ஒருவர்தான். ஆனால் உங்கள் அப்பாவுக்கு மகன், மகனுக்கு அப்பா, மனைவிக்கு கணவன், மாமனாருக்கு மாப்பிள்ளை, மாப்பிள்ளைக்கு மாமனார், மைத்துனனுக்கு மைத்துனன்,

பாட்டனுக்குப் பேரன், பேரனுக்குப் பாட்டன் - உங்கள் ஒருவருக்கே இத்தனை வடிவங்கள் இருக்கும்போது, ஈஸ்வரனுக்கு இருக்கக் கூடாதா?’’ என்றார். கேள்வி கேட்டவர் முகத்திலே அசடு வழிந்தது. பல தெய்வ வணக்கம் நியாயம் என்பதற்கு இதற்குமேல் ஒரு உதாரணம் தேவையா இந்தப் பல தேவதை வணக்கத்தைப்பற்றி காஞ்சிப் பெரியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். மனுஷ்யர்களின் மனப்பான்மைகள் பல தினுசாக இருக்கின்றன. ஒவ்வொரு விதமான மனப்பான்மை உள்ளவர்களையும் ஆகர்ஷித்து, அவர்களை பக்தி செலுத்த வைத்து, அவர்களுடைய மனத்தைச் சுத்தம் செய்து, சித்தத்தை ஏகாக்ரப் (ஒருமைப்)படுத்தவே பரமாத்மா பலப்பல தேவதா ரூபங்களாக வந்திருக்கிறது.

‘இந்த இந்துக்களுக்கு எத்தனை கோடிச் சாமிகள்!’ என்று அந்நிய மதத்தவர்கள் நம்மைக் கேலி செய்வதுண்டு. உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வாமி இருப்பதாக விஷயம் தெரிந்த எந்த இந்துவும் எண்ணவில்லை. இந்த வைதிக மதம் ஸ்வாமி ஒருவரே என்று கண்டது மட்டுமில்லை; இந்த ஜீவனும்கூட அதே ஸ்வாமிதான் என்று வேறெந்த மதமும் கண்டுபிடிக்காததையும் கண்டுபிடித்திருக்கிறது. எனவே பிரபஞ்ச வியாபாரத்தை நடத்துகிற மகாசக்தியாக ஒரு ஸ்வாமிதான் இருக்கிறது என்பதில், எந்த விஷயமறிந்த இந்துவுக்கும் சந்தேகமில்லை. ஆனால், அந்த யோக்கியதையும் கருணையும் அதற்கு உண்டு என்று இவன் நம்புகிறான்.

ஒரே ஸ்வாமி நம் தேசத்தின் மகா புருஷர்களுக்கும் பல ரூபங்களில் தரிசனம் தந்திருக்கிறார். அந்தந்த ரூபங்களுக்குரிய மந்திரம், உபாசனா மார்க்கம் எல்லாவற்றையும் அந்த மகா புருஷர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள். இவற்றை முறைப்படி அனுஷ்டித்தால் நாமும் அந்தந்தத் தேவதை அனுக்கிரகத்தைப் பெற்ற பரமாத்மாவே! ஆகையால், நாம் சந்தேகம் கொள்ளாமல் பூரண சிரத்தையோடு பக்தி வைத்தால் அது நமக்கு சம்ஸார பந்தத்திலிருந்து விடுதலை தரும். இந்த விடுதலைக்கு நாம் பக்குவப்படுவதற்கு முன் நம் லௌகீக வேண்டுதலைக்கூட நிறைவேற்றி அனுக்கிரகிக்கும்.

அவரவர் மனதைப் பொறுத்து ஒன்றில் பிடிமானம் கொள்வதற்கென்றே இத்தனைத் தேவதைகள் இருக்கின்றன. தாயாரிடம் குழந்தைபோல் பரமாத்மாவை அனுபவிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை உடையவனுக்கு. அம்பாள் உபாசனை இருக்கிறது. ஒரே சாந்தத்தில் அழுந்திப் போக வேண்டும் என்ற மனோபாவம் உள்ளவனுக்குத் தக்ஷிணாமூர்த்தி இருக்கிறார். ஆனந்தமாக ஆடிப்பாடி பக்தி செலுத்துவதற்குக் கிருஷ்ண பரமாத்மா இருக்கிறார். இஷ்டம் இருந்தாலும், இஷ்டம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மகா சக்தியிடம் பக்தி செய்வது என்று ஏதோ ஒரு தத்துவத்தை மட்டும் காட்டாமல்,

நம் மனசுக்கு எப்படி இஷ்டமோ, அதற்கு அனுசரணையாகவே அந்த மகா சக்தியை ஒரு மூர்த்தியில் பாவித்து, வெறும் தத்துவத்தை ஜீவனுள்ள ஒரு அன்பு உருவமாகப் பாவித்து, பக்தி செய்வதற்கு நம் மதத்திலுள்ள ‘இஷ்ட தேவதை’ வழிபாடே வழி வகுக்கிறது. அன்போடு உபசரிக்க வேண்டுமானால் உபாசனைக்குரிய மூர்த்தி நம் மனோபாவத்துக்குப் பிடித்தமானதாக இருந்தால்தானே முடியும்? இதனாலேயே இஷ்ட தேவதை என்று தனக்குப் பிடித்த மூர்த்தியை உபாசிக்க நமது மதம் சுதந்திரம் தருகிறது. ‘நம் மனப்போக்குக்குப் பிடித்தது’ என்கிற நிலையில் ஆரம்பத்தில் ஏதோ மூர்த்தியை இஷ்ட தேவதையாக்கிக் கொண்டாலும்,

போகப் போக, அதனிடம் உண்மையான பக்தி உண்டாக உண்டாக ‘‘நமக்கென்று என்ன ஒரு தனி மனப்போக்கு?’’ என்று அதையும் விட்டுவிட அந்தத் தேவதையேஅனுக்கிரகம் செய்யும். அவரவரும் தமக்கு இஷ்டமான தேவதையை உபாசிக்கும்போதே மற்றவர்களுடைய இஷ்ட தேவதைகளைத் தாழ்வாக எண்ணக்கூடாது. நமக்கு எப்படிப் பரமாத்மா அனுக்கிரகம் பண்ணுகிறாரோ அப்படியே மற்றவர்களுக்கு மற்ற ரூபங்களின் மூலம் அனுக்கிரகம் பண்ணுகிறார் என்று தெளிவு பெற வேண்டும். ‘‘அந்த அந்தத் தேவதைக்குரிய புராணத்தைப் பார்த்தால் அது ஒன்றே ஸ்வாமி, மற்ற தேவதையெல்லாம் அதற்குக் கீழானவை.

இதை அவை பூஜை செய்தன. இதனிடம் அவை தோற்றுப்போயின என்றெல்லாம் இருக்கிறது’’, என்று கேட்கலாம். இதற்கு ‘நஹி நிந்தா நியாயம்’ என்று பெயர். அதாவது இதர தேவதைகளை நிந்திப்பது பௌராணிகரின் நோக்கமல்ல. இந்த ஒரு தேவதையை ஆராதிப்பவருக்கு மனது சிதறாமல் இது ஒன்றிடமே தீவிரமாகப் பற்றுதல் ஏற்படுத்த வேண்டும் என்பதே புராணத்தின் நோக்கம்! இதற்காகவே இந்தத் தேவதைக்கு மட்டும் மற்ற தேவதைக்கு இல்லாத உத்கர்ஷம் சொல்லப்படுகிறது. மகானுபாவர்களாக இருந்தவர்கள் எல்லாத் தேவதைகளையும் சமமாகவே பார்த்தார்கள்.

மகா கவிகளான காளிதாசன், பாணன் முதலியவர்களும், ‘ஒரே வஸ்துதான் பல மூர்த்திகளாகவும் வருகிறது’ என்று சந்தேகமில்லாமல் கூறுகிறார்கள். பக்தர்களின் மனோபாவத்தை பொறுத்துப் பரமாத்மா பல ரூபம் கொள்கிறபோதே, பிரபஞ்சத்தில் தன்னுடைய வெவ்வெறு காரியங்களைப் பொறுத்தும் வெவ்வேறு ரூபங்களை எடுத்துக்கொள்கிறது. ரஜோ குணத்தால் சிருஷ்டி செய்யும்போது அதற்கேற்ப பிரம்மாவாகிறது. ஸத்வ குணத்தால் பரிபாலிக்கும்போது அதற்கேற்ப மகாவிஷ்ணுவாகிறது. தமோ குணத்தால் சம்ஹரிக்கும்போது அதற்குரிய முறையில் ருத்ர ரூபம் கொள்கிறது.

இந்த மூன்றைப் பாணனும், காளிதாசனும் ஒரே சக்தியின் மூன்று வடிவங்களாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த மூன்றுக்கும் பொருந்துவது முப்பத்து முக்கோடி தேவதைகளுக்கும் பொருந்தும். எனவே, ‘என் தெய்வம் உசந்தது; உன் தெய்வம் தாழ்ந்தது’ என்று சண்டை பிடிப்பதில் அர்த்தமே இல்லை. ஆனாலும், நம் தேசத்தில் பல இஷ்ட தெய்வங்கள் இருந்தாலும் கூடப் பிரதானமாக இருந்து வரும் சைவத்திற்கும், வைணவத்திற்கும் இடையே ரொம்பவும் சண்டை நடந்துதான் வந்திருக்கிறது. நன்றாக ஆலோசித்துப் பார்த்தால் இந்த இரண்டும் ஒரே வஸ்துதான் என்ற ஞானம் பெறுவோம்.’’

- கவிஞர் கண்ணாதாசன்
-------------------------
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை - 600 017.
-தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58268
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63 Empty Re: தன்னை உணர்தலே ஆத்ம பலம்! --அர்த்தமுள்ள இந்து மதம் - 63

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum