புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
155 Posts - 79%
heezulia
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
3 Posts - 2%
Pampu
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
320 Posts - 78%
heezulia
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
3 Posts - 1%
Barushree
அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_m10அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :)


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 21, 2019 11:45 am

ஒரு வருடம் கழித்து ஊருக்கு , சொந்த நாட்டுக்குத் திரும்பும் ஆர்வம் தெரிந்தது அவனிடம். நேரம் தாழ்த்தி வந்துவிட்டோமோ என்று எண்ணிய படியே ஏர்போர்ட் க்குள் ஓடிவந்தான் அவன். வழி இல் நல்ல நெரிசல், மிகவும் நேரம் ஆகிவிட்டது, என்கிற பதட்டத்தில் வந்தவன் முதலில் போர்டை பார்த்தான், அவனுடைய விமானம் ஒருமணி நேரம் காலதாமதம் என்று போட்டிருந்தது.

எப்பவும் இப்படி பார்க்கும்பொழுது கோபம்தான் வரும் அவனுக்கு , ஆனால் இன்று கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. அப்பாடா பிழைத்தோம் என்கிற எண்ணமே மேலோங்கி இருந்தது. கொஞ்சம் பதட்டம் குறைந்து, பாகேஜ்களை போடுவதற்காக போனான்.

லெப்ட் லக்கேஜுகளை போட்டுவிட்டு கைஇல் எடுத்துக் கொள்ளவேண்டியதை எடுத்துக் கொண்டு வந்தான். தன் நண்பர்கள் இருவரையும் கண்களாலேயே தேடிக்கொண்டே தான் போகவேண்டிய கேட் பக்கம் நடந்தான். எப்பொழுதும் அவர்கள் மூவரும் ஒன்றாகவே இருப்பார்கள்.  

இந்த அலுவலகத்தில் சேரும்போதும் ஒருவார இடைவெளி இல் சேர்ந்தார்கள். மூவரும் தமிழ்நாடு என்பதாலும், கிட்ட தட்ட ஒரே வயது என்பதாலும் சீக்கிரம் நல்ல நண்பர்கள் ஆனார்கள். மூவரும் இப்பொழுதுதான் முதல் முறையாக ஒரே சமயத்தில் ஊர் திரும்புகிறார்கள். இந்தமுறை விடுமுறை அப்படி வாய்த்ததில் அவர்களுக்கு கூடுதல் சந்தோஷம்.

கொஞ்ச தூரத்தில் தன் நண்பர்களை கண்டுவிட்டான் நம் கதாநாயகன் விக்ரம். ஆரவாரமாக, அட்டகாசமாக பேசி சிரித்துக் கொண்டு இருப்பார்கள் என்று நினத்தவனுக்கு அவர்கள் அமைதியாகவும் துயரத்திலும் இருப்பது தெரிந்தது. என்ன இது என்று துணுக்குற்றான். இப்பொழுது அலுவலகத்தில் இருந்து கிளம்பும் வரை நன்றாகத்தானே இருந்தார்கள், அதற்குள் என்ன ஆயிற்று? ஒருவேளை விமான தாமதமானது இவர்கள் வருத்தத்திற்கு காரணமா அல்லது தான் இன்னும் வரவில்லை என்கிற சோகமா என்று நினைத்தான்.

ஆனால் உடனே அந்த நினைப்பை தவிர்த்தான். தன்னை எதிர்பார்த்திருந்தால், வரும் வழிமேல் விழியை வைத்திருந்திருப்பார்களே..இப்படித்  தலையை தொங்கப்போட்டுக்கொண்டு ஏதோ இடி விழுந்தாற்போல இருக்க மாட்டார்களே என்று பல பல சிந்தனைகளுடன் அவர்களை நெருங்கினான். ஏதேதோ யோசனை இல் நடந்ததால், நடுவில் இருந்த டூட்டி பிரீ ஷாப் கடை இன் சின்ன படி இல் தடுக்கிக் கொண்டு தடுமாறிவிட்டான்.

அதைப் பார்த்த அந்த கடைக்கார காஷியர் பெண் புன்னகைத்தாள். இவனும் பதிலுக்கு கொஞ்சம் வழிந்து விட்டு மேலே நடந்தான். கொஞ்ச தூரம் சென்றதும்   திரும்பிப்பார்த்தான், அவள் தன்னையே பார்ப்பது தெரிந்தது. 'சட்' என்று உடனே திரும்பி நண்பர்களை பார்த்தான்.

இருவரும் கொஞ்சம் கூட சுரத்தின்றி 'ஹாய்' என்றனர். இவன் "ஹை டா, என்னடா இப்படி இருக்கீங்க, பிளைட் டிலே என்று சோகமா? எனக்கு லக்கேஜ் ஜாஸ்தி என்று நான் தனி வண்டி இல் வந்தது பிரச்சனை ஆகிப்போச்சுடா. என் டாக்சி ட்ராபிக் இல் மாட்டிக்கிச்சு, அது தான் ரொம்ப லேட்டா வந்தேன், ஓடிவந்து பார்த்தால், நல்ல காலம் பிளைட் டிலே. இன்று தான் பிளைட் டிலே கூட சிலருக்கு நல்லதாகும் என்று தோன்றியது" என்று சொல்லி சிரித்தான்.

ஆனால் அங்கிருந்த அருணும் சந்தரும் வெறும் புன்னகையுடன் இவன் பேசியதை கேட்டதுடன் சரி பதில் ஏதும் சொல்லவில்லை.

இவனே மறுபடியும், "நீங்க எப்ப வந்தீங்க, உங்க லக்கேஜ் எல்லாம் போட்டதில் ஒரு பிரச்சனையும் இல்லையே? ஒருத்தன் பாவம் அங்கே வெய்ட் அதிகம் என்று பிரித்து கட்டிக்கொண்டு இருக்கிறான்... பசிக்குதுடா , ஏதாவது சாப்பிடலாமா? " என்றான்.

அப்போதுதான் வாயைத்திறந்த சந்தர், "எனக்கும் தாண்டா ஆனால் இவனுக்கு இப்படி ஆனதில் நாங்கள் பசி தாகம் தெரியாமல் அதிர்ந்து போய் உட்கார்ந்திருக்கிறோம்" என்றான்.

அதற்கு உடனே விக்ரம், "அதுதான், நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன் நீங்கள் இருவரும் ஊருக்கு போகும் சந்தோஷத்தையே தொலைத்து விட்டது போல் சோகமாய் இருக்கிறீர்களே என்று..என்ன டா ஆச்சு? சொல்லுங்கள் என்றான் .

"என்னத்தை சொல்வது டா.. நான் போலீசில் மாட்டாமல் இருந்தேனே அதுவே பெரிய விஷயம், நல்லபடி உஊருக்கு போய் சேர்ந்தால் போதும்...பணம் எப்பவும் சம்பாதித்துக் கொள்ளலாம்" என்று தொடர்பில்லாமல் பேசினான் அருண்.

"ஏய் !.. ஒழுங்காய் நடந்ததை சொல்லுங்கடா, எதுக்கு போலீஸ் அது இது என்று சொல்கிறாய்? நம் லக்கேஜில் அப்படி எதுவும் இல்லையே . விவரமாய் சொல்லு ? " என்றான் விக்ரம்.

"சொல்கிறேன் டா, உன்கிட்ட சொல்லாமல் நான் யார்கிட்ட சொல்லப்போகிறேன்" என்று கண்கள் கலங்கிய நிலை இல் சொன்னான் அருண். அந்த மூவரில் மிகவும் அழகானவனும் பெண்களை வசீகரிக்கக்கூடியவன் அந்த அருண். அதில் அவனுக்கு ஒரு கர்வம் உண்டு. இது குறித்து மற்ற இருவரையும் கொஞ்சம் சத்தாய்ப்பான் அவன். வாய்ப்பேச்சில் மற்றவர்களை கவரும் திறனும் பெற்றவன். கொஞ்சம் அலம்பல் பேர்வழி, கொஞ்சம் டோன்ட் கேர் மாஸ்டர்  என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

மற்ற இருவரும் கம்பீரத்திலும்  அழகிலும் குறைவில்லதவர்கள் என்றாலும் இவனைப்போல் பெண்களை நான் மயக்கிவிடுவேனாக்கும் என்று சொல்பவர்கள் இல்லை. இப்படிப்பட்ட அவன் கலக்கமாக பேசியதும் விக்ரமுக்கு துணுக் கென்று இருந்தது.

அருண் சொல்ல ஆரம்பித்தான். "எங்கள் டாக்சி சிஃனலில் முன்னாடி வந்துவிட்டது இல்லையா? நாங்களும் போச்சு நீ இன்றைக்கு அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டே வந்து சேர்ந்தோம். லக்கேஜை போடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. கும்பலே இல்லை எனவே எல்லாம் சீக்கிரமே முடிந்துவிட்டது. இங்கு வரும்போது அந்த டூட்டி பிரீ ஷாப் தாண்டி வரும்போது எனக்கு சனியன் பிடித்தது" என்று சொல்லி ஒரு பெருமூச்சை விட்டான்.

சந்தர் அவன் கையை ஆதரவாக தட்டிக்கொடுத்ததும் மீண்டும் தொடர்ந்தான்.... அங்கு ஒரு பெண் இருந்தாள், அந்த பெண்ணைப் பார்த்தபோது அவளும் பார்த்தாள். அவள் என்னைப்பார்த்து கொஞ்சம் சிரித்தது போல இருந்தது. அவ்வளவுதான், எப்பொழுதும் போல எனக்கு உற்சாகமாகிவிட்டது. 'இவனிடம் பார்த்தியா அவ என்னைப்பார்த்து தான் வழிகிறாள், ஐயா ஜாதகம் அப்படி. நீ போயிட்டே இரு நான் கொஞ்சம் ஐட்டம் வாங்குவது போல பாசாங்கு காட்டிவிட்டு அவளுடன் நாலு வார்த்தை பேசிவிட்டு வருகிறேன்' என்று சொல்லி இவனை அனுப்பிவிட்டு கடை இல் நின்றேன்" என்றான்.

மேலே அவனே சொல்லட்டும் என்று பேசாமல் இருந்தான் விக்ரம். நான் கடைக்குள் இங்கும் அங்கும் ஏதேதோ வாங்குவது போல உலாத்தினேன். நடுநடுவில் ஓரக்கண்ணால் அவளையும் பார்த்தேன். பிறகு ஓரிரு பொருட்களை எடுத்துக்கொண்டு பில் போடப் போனேன். 'ஹாய்' சொன்னேன்.அவளும் மோகனமாய் சிரித்துக்கொண்டே , "ஹாய் சார் "
என்று சொல்லிக்கொண்டே பில் போட ஆரம்பித்தாள். இரண்டு சாக்கலேட்டுகள் போட்டதுமே மூன்றாவதை வேண்டாம் விலை அதிகம் என்று சொல்லி வைத்து விட்டேன். அவளும் சரி என்று விட்டு விட்டாள்.

என் பாஸ்போர்ட் , போன் நம்பர் மற்றும் போடிங் பாஸ் விவரங்களை குறித்துக்கொண்டு பில் தந்தாள். நானும் பர்சில் இருந்து பணம் எடுத்துக் கொடுத்தேன். உடனே அவள், எல்லாவற்றையும் ஒரு பை இல் போட்டுத்தந்தாள். அப்படித்தரும்  பொழுது அவள் கை என் கை இல் பட்டது, அதை நான் எனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, உன் போன் நம்பர் என்று இழுத்தேன், உடனே அவள், கொஞ்சம் வெட்கப்பட்டவாறே 'உங்களுடையது தான் என்னிடம் இப்பொழுது இருக்கிறதே, நானே பிறகு கூப்பிடுகிறேன். எப்பொழுது விடுமுறை முடிந்து வருவீர்கள்' என்று கேட்டாள்.

எனக்கு 'ஜிவ்' என்று வானத்தில் பறப்பது போல இருந்தது. ஒருமாதம் , ஒரே ஒருமாதம் தான் என்று சொன்னேன். அந்த கணத்தில் எதுக்குடா இந்த லீவு என்று கூட தோன்றியது. ஆனால் அந்த லீவு இல்லாவிட்டால், இன்று இங்கு இந்த தேவதையை பார்த்திருக்க முடியாதே என்றும் தோன்றியது. ஒருமாதிரி குழப்பமான மனநிலை அது , என்னால் விளக்க முடியவில்லை விக்ரம். இது போல் எனக்கு எப்பொழுதும் இருந்தது இல்லை. ரொம்ப  சந்தோஷமாக உணர்ந்தேன் விக்ரம் " என்றான்.

இதுவரை எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது, இதில் போலீஸ் எங்கே வருகிறது என்று விக்ரமுக்கு புரியாவிட்டாலும் , அவனே தொடரட்டும் என்று காத்திருந்தான்.

அவள் தன்னுடைய டேபிளுக்கு அடி இல் இருந்து ஒரு சிறிய சென்ட் பாட்டிலை எடுத்தாள், இது மிகவும் விலை உயர்ந்தது, உங்களுக்காக ஸ்பெஷல் என்று சொல்லி என் பை இல் போட்டாள். அவ்வளவுதான் எனக்கு தலை கால் புரியவில்லை, மனம் முழுக்க சந்தோஷம். இவ்வளவு அழகான பெண்ணும் கிடைத்து, அவளும் இங்கேயே வேலை செய்தால் நம் எதிர்காலம் எத்தனை நன்றாக இருக்கும் என்று மிகவும் மகிழ்ந்து போனேன்.

சந்தோஷமாக பையை வாங்கிக்கொண்டேன், அதற்கும் மேலும் இரண்டு பேர் பில் போடக் காத்திருந்ததால், என்னால் மேலே எதுவும் பேச முடியவில்லை. 'போய் வருகிறேன்' என்று மட்டும் சொல்லிவிட்டு. காண்ணாலேயே  விடை பெற்றேன் .

இங்கு வந்து உட்கார்ந்ததும், சந்தரிடம் எல்லாவற்றையும் கொட்டித்தீர்த்தேன்.... நீ எப்பொழுதுவருவாய் உன்னிடம் எப்படியெல்லாம் சொல்லவேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தேன். நீ வரும் வழியைத் திரும்பி திரும்பி பார்த்து கொண்டிருந்தேன். சந்தரும் எனக்காக மிகவும் சந்தோஷப்பட்டான். ஆனால்......அந்த சந்தோஷம் கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 21, 2019 11:47 am

அந்த சந்தோஷம் கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை. இரண்டு ஆட்கள் வந்தார்கள். அவர்கள் செக்யூரிட்டியைப் போல உடை அணிந்து கொண்டிருந்தார்கள். எங்கள் அருகில் வந்ததும் யார் அருண் என்று கேட்டார்கள். நான் , 'நான் தான்' என்றதும், உங்கள் பையை சோதனை போடவேண்டும் என்று சொன்னார்கள்.

நான் அதிர்ந்து போனேன். எதற்கு, செக்கிங், ஸ்கேனிங்   எல்லாம் தான் ஆகிவிட்டதே என்று சொன்னேன். அவர்கள் அது இல்லை , டூட்டி பிரீ ஷாப் இல் ஏதும் வாங்கினீர்களா என்று கேட்டார்கள். ஆமாம் என்றேன். அதை காட்டுங்கள் என்றார்கள். எனக்கு எதுவும் புரியவில்லை. எடுத்து நீட்டினேன். இதற்குள்ளே அக்கம் பக்கம் இருப்பவர்கள் எங்களையே பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

அவர்கள் பையை திறந்து பார்த்துவிட்டு, இதோ இருக்கிறதே என்று சொல்லி சென்ட் பாட்டிலை வெளியே எடுத்தார்கள். பில் காப்பியை கை இல் பிடித்தபடி, இது பில் இல் இல்லையே, இங்கு எப்படி வந்தது என்று கேட்டார்கள். நான் என்ன சொல்வது என்று திகைத்து நின்ற நொடி இல், கொஞ்சம் சத்தமாக, "இதை நீங்கள் களவாடிவிட்டீர்கள். இதைக் காரணம் காட்டி உங்களை உள்ளே தள்ள முடியும்; நீங்கள் இப்பொழுது ஊருக்கும் போகமுடியாது, பிறகு இங்கே வேலையும் பார்க்க முடியாது, உங்கள் மிச்ச காலத்தை இங்குள்ள ஜெயிலில் தான் கழிக்கவேண்டும்" என்று சொன்னார்கள்.

"ஐயோ நான் இதை எடுக்கவில்லை என்றுமட்டுமே என்னால் சொல்ல முடிந்தது." ஏதோ சொல்ல வாய் எடுத்த சந்தரை தடுத்து, "இது எப்படி என் பைக்குள் வந்தது என்று எனக்குத் தெரியாது" என்று சொன்னேன். அதற்கு அவர்கள் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது சார், அதோ வரும் ஏர்போர்ட் போலீசுக்கு நான் இப்பொழுது ஜாடை காட்டினால் போதும், உங்களை அரெஸ்ட் செய்து  உள்ளே தள்ளி விடுவார்கள்" என்று சொன்னார்கள்.

எனக்கு உடல் முழுவதும் வியர்த்தது... என்ன செய்வது என்று தெரியவில்லை..மூளை யோசிக்க மறந்தது...எல்லோரும் என்னையே பார்த்து திருடன் என்று சிரிப்பது போல மிக அவமானமாக இருந்தது. "இல்லை, இல்லை, நான் எதையும் திருடவில்லை" என்று அவர்களிடம் சொன்னேன்.

ஆனால் பில் போடாத பொருள் உங்களிடம் இருக்கிறதே சார் , அதுவும் எங்கள் கடை பொருள் , நீங்கள் அங்கும் இங்கும் பலமுறை உலாத்தியதாக எங்கள் கடை பெண் சொல்கிறாளே ..நீங்க போலீசுக்கு போகாமல் இருக்க வேண்டும் என்றால் இதன்  விலை போல இரண்டுமடங்கு விலையை தரவேண்டும். அது இதை திருட்டுத்தனமாக எடுத்ததற்கு அபராதமாக செலுத்தவேண்டும்" என்றார்கள்.

நான் மீண்டும் ,  "இல்லை, இல்லை, நான் எதையும் திருடவில்லை" என்று அவர்களிடம் சொன்னேன். அந்தப்பெண் ஏன் தான் தான் கொடுத்ததாக சொல்லவில்லை என்று எனக்கு குழப்பமாக இருந்தது. அதை நாம் சொல்லலாமா என்று யோசிக்கும் வேளையில்
"ஹலோ, பணம் தருகிறீர்களா அல்லது போலீசை கூப்பிடவா?" என்று அவர்கள் கேட்கவே, போலீஸ் வரும் என்கிறபயத்தில், என்னை அறியாமல் பணத்தை எடுத்து நீட்டிவிட்டேன் விக்ரம்.

பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் பின்னால் போய் அந்த பெண்ணிடம் இது என்ன வம்பு என்று கேட்கலாம் என்று போகும்போது அவர்கள், " அந்த பொண்ணு  சரியாத்தான் கவனிக்குது, யார்கிட்ட எதை தரணும் என்று அதுக்கு தெரிகிறது... இது போல ஜொள்ளு பார்ட்டிகள் இருக்கும் வரை நம் தொழிலுக்கு தடையே இல்லை" என்று பேசியபடி சென்றார்கள். எனக்கு இது மிகவும் அதிர்ச்சியாகவும் அவமானமாகவும் போனது விக்ரம். ஒரு பெண் இப்படி கேவலமாக ஏமாற்றுகிறாளே என்று இருந்தது.

"அப்படியே மனது உடைந்து போய் உட்கார்ந்துவிட்டான் இவன், எனக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை "என்று சந்தர் சொன்னான். கண்களில் நீரே வந்து விட்டது அருணுக்கு.  

"பணத்துக்காக வருத்தப்படுவதா, இல்லை இப்படி  நேர்ந்த அவமானத்துக்காக மனம் நொந்து போவதா " என்று தடுமாறிக்கொண்டு  இருக்கிறேன் விக்ரம் என்று சொல்லிக்கொண்டே விக்ரமின் கைகளை பற்றிக்கொண்டான் அருண்.

பொறுமையாக எல்லாவற்றையும் கேட்ட விக்ரமால் பொறுக்க முடியவில்லை. "எல்லாம் சரி, பணம் வாங்கிக்கொண்டவுடன் அந்த சென்ட் ஐ  உன்னிடம் தந்தார்களா? " என்று கேட்டான். இல்லை என்று அருண் தலையை ஆட்டினான். "நினைத்தேன், ஏன் என்றால், பில் இல்லாமல் அவர்களால் தரமுடியாது, ஒருவேளை  நீ பில் போடுங்கள் நான் இப்பொழுது வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லி இருந்தால் அவர்கள் என்ன செய்திருப்பார்களோ தெரியாது, ஆனால் இப்பொழுது அவர்கள் அந்த சென்ட் ஐ, கொண்டுபோய் மீண்டும் கடையிலேயே  வைத்துவிட்டு, நீ கொடுத்த பணத்தை பங்கு போட்டுக்கொள்வார்கள். புரிகிறதா? .... இது எதுவுமே ஏர்போர்ட் போலீசுக்கு தெரியாது...ஒருவேளை நீ பணம் தர மறுத்து அந்த பெண் தான் எனக்கு தந்தாள் என்று சொன்னால், அவள் இந்த கஸ்டமரை எனக்குத் தெரியவே தெரியாது, எத்தனையோ வருகிறார்கள் போகிறார்கள் எனக்கு அனைவரையும் நினைவில் வைக்க முடியாது ...அது இது என்று சொல்லி எப்படியும் உன்னைத்தான் மாட்டிவிடுவாள். அனைவரும் ஊர்க்கு போகும் அவசரத்தில் இருப்பதால், இவர்களிடம் பணத்தையும் கொடுத்து விட்டு, அவமானத்தில் உழலும் உள்ளத்துடன் இருப்பதால், உரிய பொருளையும் கேட்க மறந்துவிடுவது அவர்களுக்கு இரட்டிப்பு லாபத்தை தருகிறது " என்று கூறி பற்களைக் கடித்தான்.

இது போல எத்தனை அப்பாவிகளை  ஏமாற்றி, மிரட்டி  பணம் பறித்தார்களோ என்று எண்ணத்தோன்றியது. இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்கிற எண்ணம் வந்தது அவனுக்கு.  ஒரு வாரம் முன்பு இதேபோல ஒரு செய்தி யை பேப்பரில் படித்த தாக நினைவு, அதைப்பற்றி ஏதோ சொல்ல வாய் எடுத்தான், அதற்குள் அங்கு ஒலிபரப்பான செய்தி அவனை ஏதும் செல்லவிடாமல் தடுத்தது.

மேலும் இரண்டு மணிநேரம் விமானம் தாமதம் என்கிற செய்திதான் அது. அதைக்கேட்டதும் விக்ரம் முகத்தில் புன்னகை வந்தது. " டேய் அவளை இல்ல இல்ல அவங்களை ஒரு வழி பண்ணலாம். அதற்கு முன் வாங்க சாப்பிட்டு விட்டு வரலாம், வாங்கடா " என்றான்.

அவர்கள் இருவரும் என்னடா இது என்பது போல பார்த்தனர். "கவலைப்படாதீங்கடா, நான் சரி செய்கிறேன், என்னை நம்பு"  என்று சொன்னான்.

சரி என்று மூவரும் உணவருந்தினர். இவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போதே, அதே இருவர் மற்றும் ஒரு பயணி இடம் ஏதோ வாக்குவாதத்தில் ஈடு பட்டது தெரிந்தது. ஓ, இது அடுத்த நாடகம் என்று இவர்களுக்குப் பட்டது. உணவருந்தியதும், விக்ரம் மட்டும் அந்த கடைக்கு சென்றான்.

அதற்கு முன் தன்னுடைய போன் ஐ ரெகார்டிங் மோடில் வைத்து சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். பேசுவது கண்டிப்பாக ரெக்கார்டு ஆகும், வீடியோவும் ஆனால் மிகவும் நல்லது என்று எண்ணிக்கொண்டான். அந்த மற்றும் ஒரு பயணியும் பேய் அறைந்தது போல உட்கார்ந்து இருந்தார், அவரிடமும் நெருங்கி விஷயத்தை வாங்கிக்கொண்டான். அவருக்கு சாக்கலேட்டு கொடுத்தாளாம் அவள். சரி தனக்கு என்னவோ என்று எண்ணிக்கொண்டே கடையை நெருங்கினான்.


விக்ரமும் கடைக்குள் இங்கும் அங்கும் ஏதேதோ வாங்குவது போல உலாத்தினான். நடுநடுவில் ஓரக்கண்ணால் அவளையும் பார்த்தான் . பிறகு ஓரிரு பொருட்களை எடுத்துக்கொண்டு பில் போடப் போனான். 'ஹாய்' சொன்னான். அவளும் மோகனமாய் சிரித்துக்கொண்டே , "ஹாய் சார், எந்த ஊரு நீங்க? " என்று கேட்டாள். விக்ரம் தன் ஊரைச்  சொன்னதும் நானும் உங்க ஊர் பக்கம் தான், ஆனால் படித்தது எல்லாம் சென்னை இல்  என்று  சொல்லிக்கொண்டே பில் போட ஆரம்பித்தாள். இரண்டு சாக்கலேட்டுகள் போட்டதுமே மூன்றாவதை வேண்டாம் விலை அதிகம் என்று சொல்லி வைத்து விடச்சொன்னான் அவன். அவளும் சரி என்று விட்டு விட்டாள். "இன்று பனி அதிகம் அதனால் தான் விமானம் இத்தனை லேட்" என்று அவளே  சொன்னாள். விக்ரம் மௌனமாக தலையை ஆட்டினான்.

பாஸ்போர்ட் , போன் நம்பர் மற்றும் போடிங் பாஸ் விவரங்களை குறித்துக்கொண்டு பில் தந்தாள். விக்ரமும் பர்சில் இருந்து பணம் எடுத்துக் கொடுத்தான். உடனே அவள், எல்லாவற்றையும் ஒரு பை இல் போட்டுத்தந்தாள். அப்படித்தரும்  பொழுது அவள் கை அவன் கை இல் பட்டது. இவன் உடனே பதறி கையை எடுத்துக் கொண்டான்.  அதைக்கண்டதும் அவள் மிக இன்பமாக நகைத்தாள். 'சவுத் பசங்க இங்கு வந்தும் அப்படியே இருக்கீங்க' என்று சொன்னாள். அதற்கு விக்ரம் தன் தலையைக் குனிந்து வெட்கப்பட்டபடி  'நீங்க எல்லாம் பட்டணத்து ஆளுங்க' என்றான், மேலும் தயங்கியபடி, ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்களே? "  என்று கேட்டான். அவள் இல்லை என்று தலை ஆட்டியதும்,  " நீங்கள் நகைக்கும்பொழுது மிகவும் இன்பமாக இருக்கிறது.......  முடிந்தால் உங்கள் போன் நம்பர்..... என்று இழுத்தான். உடனே அவள், 'பரவாயில்லையே , சிறிது நேரத்துக்குள் உங்களுக்கு தைரியம் வந்துவிட்டதே' என்றாள். பிறகு,  'உங்களுடையது தான் என்னிடம் இப்பொழுது இருக்கிறதே, நானே பிறகு கூப்பிடுகிறேன். எப்பொழுது விடுமுறை முடிந்து வருவீர்கள்' என்று கேட்டாள்.

ஒருமாதம் என்று சொன்ன விக்ரம், என் போன் நம்பர் எப்படி உங்களுக்குத்தெரியும் என்று கேட்டான் அப்பாவியாக. அவள் மீண்டும் கல கல வென நகைத்தாள். "இப்பொழுத்தானே பில் இல் போட்டேன். அதை பார்த்து எடுத்துவைத்துக் கொள்வேன்" என்றாள்.

"ஓ... அப்படியா, நீங்கள் மிகவும் புத்திசாலி" என்று அவளை சிலாகித்தான் விக்ரம். அடுத்து வேறு யாரோ பில் போட வரவே இவன், " நான் வரேன்க " என்று சொல்லி கிளம்பினான். வழக்கம் போல அவளும் தன்னுடைய டெஸ்க்கிலிருந்து ஒரு சென்ட் பாட்டிலை எடுத்து அவன் பை இல் போடப் போனாள். இவன் உடனே பதறிப்போய், " ஐயோ அதெல்லாம் வேண்டாங்க" என்றான். அதற்கு அவள் , "இது என்னுடைய சிறிய காதல் பரிசு, இது மிகவும் விலை உயர்ந்தது, இதன் வாசம் நாள் முழுவதும் உங்களுடனே இருக்கும், அப்பொழுது என் நினைவும் உங்களுடன் இருக்கும் தானே" என்று வழிந்தாள். இவனும் , அப்போ சரி என்று சொல்லி தன் பங்குக்கு வழிந்துவிட்டு வந்தான்.

இவன் வந்து தன் போனில் ரெக்கார்டு ஆனது நன்றாக வந்திருக்கிறதா என்று பார்த்துவிட்டு, அந்த வீடியோவை ஜஸ்ட் நண்பர்களுக்கு போட்டு காண்பித்துவிட்டு, சந்தருக்கு வாட்சப் இல் அனுப்பி விட்டு, அவனை, சந்தர், நீ போய் அந்த ஏர்போர்ட் போலீசுக்கு தகவல் சொல்லி இங்கு வரச்சொல். அதாவது, அந்த இரண்டு தடியர்கள் வந்து என்னை மிரட்டும்போது அவர்கள் வரும்படி பார்த்துக்கொள். அந்த பெண்ணையும் விட்டுவிடக்கூடாது, அவளையும் சேர்த்து தான் நாம் அரெஸ்ட் செய்ய வைக்க வேண்டும் . புரிந்ததா?" என்றான்.

சரி என்று சந்தரும் போனான். சரியாக சொல்லிவைத்தது போல கொஞ்ச நேரத்தில் அந்த இரண்டு தடியர்களும் வந்தார்கள் விக்ரமை மிரட்ட. மேலே என்ன நடந்தது என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத்தெரியவேண்டுமா?

அந்த இருவரும் அந்த பெண்ணும் கூட்டாக சேர்ந்து கொண்டு, பலியாகக்கூடிய ஆளாகப் பார்த்து இதுபோல் பலநாட்களாக ஏமாற்றிப் பிழைத்துவந்து அம்பலமானது. சரியான சாக்ஷி  இல்லாததால் போலீசால் ஏதும் செய்ய முடியாமல் இருந்தது. பாதிக்கப் பட்டவர்களும் புகார் ஏதும் தராததால், அவர்களால் ஏதும் செய்ய முடியாயாத நிலைமை. ஆனால், பணம் தர மறுத்தவர்களை அவர்கள் அப்பாவிகள் என்று அறிந்தும் கைது செய்யவேண்டிய நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருந்தார்கள். இவை எல்லாவற்றுக்கும்  நம் கதாநாயகன் ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.

அவனால், இன்று ஏமாற்றப்பட்ட நபர்களுக்கு உடனே அவர்கள் பணம் கிடைத்தது. இதுபோல முன்பு எத்தனை பேரை ஏமாற்றினார்கள் என்று விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர் போலீசார். அதில் பல அப்பாவிகள் சிறை இல் இருந்து வெளி வரக்கூடும். எனவே, அனைவரும் விக்ரமை மிகவும் பாராட்டினார்கள்.

மீண்டும் விமானம் ஒருமணிநேரம் தாமதம் என்று அறிவிப்பு வந்தது...அதைக்கேட்டு எப்பொழுதும் விமானம் லேட்டாக புறப்பட்டால் வருந்தும் அவர்கள் இப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக சிரித்தார்கள்.

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 21, 2019 5:04 pm

கதை ரொம்ப சுவாரசியமாக இருந்தது.
இந்த கதை உங்களுடைய சொந்த கதையா?
நல்லாத செதுக்கியுள்ளீர்கள்.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 21, 2019 6:12 pm

ஜொள்ளு விட்டால் ஆபத்துதான் என நன்றாக ஜொள்ளி .....சாரி...சொல்லி விட்டீர்கள்.

ரெக்கார்ட் பண்ணியது ரெக்கார்ட் திருப்பம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 21, 2019 8:30 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:கதை ரொம்ப சுவாரசியமாக இருந்தது.
இந்த கதை உங்களுடைய சொந்த கதையா?
நல்லாத செதுக்கியுள்ளீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1308060

மிக்க நன்றி ஐயா புன்னகை
.
.
.
ஆமாம் ஐயா, என்னுடைய கதை தான்..............நான் நிறைய கதைகள் எழுதி உள்ளேன், அவை நம் தளத்தில் உள்ளது.முடிந்தால் அவற்றையும் படித்து கருத்து சொல்லுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 21, 2019 8:30 pm

T.N.Balasubramanian wrote:ஜொள்ளு விட்டால் ஆபத்துதான் என நன்றாக ஜொள்ளி .....சாரி...சொல்லி விட்டீர்கள்.

ரெக்கார்ட் பண்ணியது ரெக்கார்ட் திருப்பம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1308065

மிக்க நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 21, 2019 9:04 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:கதை ரொம்ப சுவாரசியமாக இருந்தது.
இந்த கதை உங்களுடைய சொந்த கதையா?
நல்லாத செதுக்கியுள்ளீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1308060

இதோ என்கதைகள் ஐயா புன்னகை @பழ.முத்துராமலிங்கம்

என்னுடைய கதைகளின் PDF இங்கே ! புன்னகை - Krishnaamma புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Sun Nov 24, 2019 5:04 pm

அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) 1571444738 கதையும் நன்றாக இருந்தது.

கிருஷ்ணம்மாவின் கதையையும் எழுதலாமே!
மிகவும் நன்றாக விறுவிறுப்பாகவும் இருக்கும்.கதையை படித்திருக்கிறேன்.படமும் நன்றாக இருந்தது.சும்மா ஒரு யோசனைதான்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 24, 2019 9:20 pm

சக்தி18 wrote:அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :) 1571444738 கதையும் நன்றாக இருந்தது.
.
.
.
"கதையும்".... என்று போட்டுள்ளீர்கள் ... வேறு எது நன்றாக இருந்தது????.எதற்காக இந்த 'உம்'???ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல  

கிருஷ்ணம்மாவின் கதையையும் எழுதலாமே!
என் சுய சரிதையா????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
.
.
.
மிகவும் நன்றாக  விறுவிறுப்பாகவும் இருக்கும்.

பயம் பயம் பயம் இதைவைத்து இப்படி சொல்கிறீர்கள் சக்தி  ???
.
.
.
.
கதையை படித்திருக்கிறேன்..

எந்த கதை????
.
.
.
படமும் நன்றாக இருந்தது.

எந்தப்படம்?????
.
.
.
சும்மா ஒரு யோசனைதான்....
.
.
.

என்ன தான் உங்கள் யோசனை???????
மேற்கோள் செய்த பதிவு: 1308230

சாரி சக்தி சுத்தமாய் புரியவில்லை....அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் .விளக்குங்கள் ப்ளீஸ் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Mon Nov 25, 2019 12:04 pm

1.மெட்ராஸ் ஹைகோட்டில் 1892 சொத்து வழக்கு. (Simanapalli Krishnamma v. Rongali Suranna -madras high court) இந்த வழக்கு சுவராஷ்யமாக சென்றது.

2.திருமலையில் நடந்த உண்மை சம்பவம்.கிருஷ்னம்மா பெருமாள் பக்தை.
ஓம்நமோவெங்கடேஷா (தெலுகு) சினிமா தமிழில் டப் செய்யப்பட்டு அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்  ஆக வந்தது.ஆனால் படம் என்பதால்,திருவிளையாடலில் தருமியை கோமாளியாக்கியது போல், சில வேறுபாடுகள்.சினிமாவில் அனுஷ்கா கிருஷ்னம்மாவாக நடித்துள்ளார்.

இரண்டுமே உண்மைக்கதை.இதுதவிர தமிழக வரலாற்றில் கிரிஷ்னம்மா என்ற பாத்திரம் வீரமங்கையாக இருந்திருக்கிறார்.அவை கதையாக வருமானால் படிக்க முடியும்.

ரமணியின் அய்யாவின் கடந்த பதிவு போல் ஆர்வத்தை தூண்டும் கதைகள் ............................
சுத்தமாக புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக