ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Poll_c10நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Poll_m10நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Poll_c10 
Dr.S.Soundarapandian
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Poll_c10நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Poll_m10நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Poll_c10 
heezulia
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Poll_c10நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Poll_m10நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Empty நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..

Post by T.N.Balasubramanian Fri Nov 22, 2019 6:06 pm

நடுக்கடலில் உரைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்... மனிதர்கள் சென்றதும் வெடித்து சிதறிய மர்மம்... நடந்தது என்ன?
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184243
நடுக்கடலில் நல்ல வெயில் நேரத்தில் சென்ற ஒரு கப்பலில் பயணித்தவர்கள் எல்லாம் ஒரே நேரத்தில் பனியில் உரைந்து இறந்து போனார்கள் இதைப் படிக்கும் போது ஏதோ கதை என நீங்கள் நினைக்கலாம் ஆனால் இப்படியான ஒரு சம்பவம் உண்மையிலேயே நடந்துள்ளது. இது மட்டுமல்ல இந்த கப்பல் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இந்த சம்பவம் பற்றி முழுமையாக படிக்கலாம் வாருங்கள்.

சில்வர் ஸ்டார்
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184255
1947ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் உலகப்போர் முடிந்த தருணம் அமெரிக்கா தங்கள் பலத்தை உலக நாடுகளுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காக தங்களது ராணுவத்தினரைப் பல நாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அப்படியாக அனுப்பப்பட்ட கப்பல் சில்வர் ஸ்டார். இந்த கப்பல் அமெரிக்க ராணுவ வீரர்களுடன் மலாக்கா வழியாகக் குறிப்பிட்ட அந்த நாளில் பயணம் செய்து கொண்டிருந்தது

தகவல் தொழிற்நுட்பம்
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184264

அந்த காலகட்டங்களில் தொழிற்நுட்பங்கள் பெரிய அளவில் வளரவில்லை. அதனால் கடல் வழியாகக் கப்பல்களுக்கு சிக்னல் அனுப்ப ரேடியோ ப்ரீகொன்ஸி அதாவது அந்த கால டெலிகிராம் முறையைத் தான் பயன்படுத்தி வந்தனர். ஒருவர் டெலிகிராம் மிஷினை தட்டுவது மூலம் அந்த தகவல் சுற்றியுள்ள டெலிகிராமை ரிசிவ் செய்யும் அனைவருக்கும் சென்றடையும்.

நன்றி சமயம்

ரமணியன்

தொடருகிறது


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Empty Re: நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..

Post by T.N.Balasubramanian Fri Nov 22, 2019 6:12 pm

ஓராங் மெடான்
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184256
இந்நிலையில் அந்த பகுதியில் பயணத்திலிருந்த பல கப்பல்களுக்கும் மலேசியா துறைமுகத்திற்கும் ஒரே நேரத்தில் ஒரு சிக்னல் வந்தது. அந்த சிக்னல் "ஓராங் மெடான் கப்பலில் ஆபத்து, கேப்டன் உட்பட அனைவரும் இறந்துவிட்டார்கள்...--- நானும் இறந்துவிட்டேன்" என வந்தது. இதைப் பார்த்தும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அனைத்து கப்பல்களும் இந்த தகவல் எங்கிருந்து வந்தது. என்பதை ஆய்வு செய்யத் துவங்கினர்.

அனாதை கப்பல்
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184266
அப்பொழுது இந்த தகவல் வந்த இடத்திற்கு அருகில் சில்வர் ஸ்டார் கப்பல் தான் இருந்ததால் இந்த கப்பலைத் தகவல் வந்த இடத்தை நோக்கித் திருப்ப சில்வர் ஸ்டார் கப்பலின் கேப்டன் உத்தரவிட்டார். அதன்படி சில்வர் ஸ்டார் கப்பல் அந்த தகவல் வந்த இடத்தை நோக்கிச் சென்றபோது அங்கு எஸ் எஸ் ஒராங் மெடான் என்ற கப்பல் அந்த அசைவும் ஆரவாரமும் இன்றி இருந்தது.

உரைந்த மனிதர்கள்
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184269
இதையடுத்து சில்வர் ஸ்டார் ஊழியர்கள் சிலர் ஒராங் மெடான் கப்பலுக்குள் சென்று பார்த்தபோது அங்கு அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஒராங் மெடானிற்குள் இருந்த எல்லோரும் உரைந்து போன நிலையில் இறந்து கிடந்தனர். கேப்டன் உட்பட அனைவருமே இறந்து கிடந்தனர். இந்த தகவலை அனுப்பியவரைப் பார்க்கும்போது அவரும் உரைந்த நிலையில் இறந்து கிடந்தார்.

தொடருகிறது ..........................

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Empty Re: நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..

Post by T.N.Balasubramanian Fri Nov 22, 2019 6:16 pm

மர்ம மரணம்
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184270
இறந்தவர்கள் எல்லாம் ஏதோ ஒன்றைப் பார்த்துப் பயந்தபடி கைகளை வைத்து எதையோ தடுக்கும்படி கண்கள் வருந்த நிலையில் அப்படியே உரைந்து போயிருந்தனர். இதைப் பார்த்ததும் சில்வர் ஸ்டார் கப்பலிலிருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

கப்பலை நகர்த்த ஏற்பாடு

நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184267

இதைப் பார்த்ததும் இந்த கப்பலை நகர்த்தி அருகில் உள்ள துறைமுகத்திற்குக் கொண்டு செல்ல சில்வர் ஸ்டார் கப்பலின் கேப்டன் முடிவு செய்தார். அதற்காக கப்பல் ஊழியர்கள் எல்லாம் அந்த கப்பலை தங்கள் கப்பலுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்பொழுது அடுத்த மர்மம் நிகழ்ந்தது.

வெடித்தது ஓராங் மெடான்
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184271
திடீரென ஓராங் மெடான் கப்பல் தீ பிடித்து எரியத் துவங்கியது. இதனால் பதற்றமான சில்வர் ஸ்டார் கப்பல் ஊழியர்கள் அந்த கப்பலை இணைக்கும் பணியை நிறுத்திவிட்டு அந்த கப்பலின் இணைப்பைத் துண்டிக்கத் துவங்கினர். ஒரு கட்டத்தில் ஓராங் மெடான் கப்பல் வெடித்து நீரில் மூழ்கியது.

தொடருகிறது .............

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Empty Re: நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..

Post by T.N.Balasubramanian Fri Nov 22, 2019 6:20 pm

அதிர்ச்சி
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184268
சில்வர் ஸ்டார் கப்பலிலிருந்த பலருக்கு இது எப்படிச் சாத்தியமானது என்றே புரியவில்லை. உடனடியாக இப்படி ஒரு கப்பல் இருந்தது குறித்தும், அந்த கப்பலில் உள்ளவர்கள் உரைந்த நிலையில் இறந்து கிடந்தது குறித்தும், அந்த கப்பல் வெடித்தது குறித்து அருகில் உள்ள துறை முகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது.

விசாரணை
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184265
இதையடுத்து அந்த ஓராங் மெடான் கப்பல் எந்த நாட்டை சேர்ந்தது என விசாரணை நடந்தது. விசாரணையில் அந்த கப்பல் எந்த நாட்டிலும் பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மர்மங்கள் என்ன?
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184263
இந்த கப்பல் எப்படிப் பயணித்தது? எங்குத் தயாரிக்கப்பட்டது? அதில் பயணித்தவர்கள் யார் யார்? அதில் என்ன எடுத்துச் செல்லப்பட்டது? அவர்கள் திடீரென உரைந்து போன நிலையில் இறந்து கிடந்தது எதனால்? அந்த கப்பல் திடீரென தீப்பிடித்து வெடித்ததன் காரணம் என என்ற கேள்விகளுக்கு இன்றும் பதில் இல்லை. எனினும் இது குறித்து சில தியரிகள் உள்ளன அதைப் பற்றிப் பார்க்கலாம்.

தொடருகிறது .................

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Empty Re: நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..

Post by T.N.Balasubramanian Fri Nov 22, 2019 6:25 pm

தியரி- 1 கடத்தல் பொருள்
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184262
இந்த கப்பல் கடத்தல்காரர்களின் கப்பலாக இருக்கக்கூடும் எனவும் இவர்கள் பொட்டாஷியம் சைனேடு மற்றும் நைட்ரோகிளஸரின் ஆகியவற்றைக் கடத்தியிருக்கலாம் என்றும் ஒரு பயணத்தின் போது கடல் நீர் உள்ளே புகுந்ததால் ஏற்பட்ட கெமிக்கல் மாற்றத்தில் ஏதேனும் விஷ வாயு பரவி இவர்கள் உரைந்திருக்கலாம் என்றும் பொட்டாஷியம் சைனேடு உடன் தண்ணீர் கலந்ததால் தீ ஏற்பட்டிருக்கும் என்றும் கூறுகின்றனர். ஆனால் இந்த தியரி உண்மையாக இருந்தால் கப்பலில் இறந்து கிடந்தவர்கள் எல்லாம் ஏதோ ஒன்றைப் பார்த்துப் பயந்த படி கண்கள் விரிந்த நிலையில் இறந்து கிடந்தததற்கான காரணம் தெரியவில்லை.

தியரி 2 - இயற்கை சீற்றம்
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184261
மற்றொரு தியரி இது ஏதேனும் வித்தியாசமான இயற்கை சீற்றமாக இருக்கலாம் எனவும், அதன் காரணமாக இவர்கள் இறந்திருக்கலாம் எனவும் இந்த இயற்கை குளிர் மற்றும் வெப்பத்தை மாறி மாறி வழங்கியதால் கப்பல் வெடித்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இப்படி இதற்கு முன்பு நடந்ததும் இல்லை.

தியரி -3 புகுந்து விளையாடிய பேய்
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184260
வழக்கம்போல ஏதேனும் விஷயத்திற்குப் பேய் மீது பலி போடுவது போல இந்த விஷயமும் ஏதேனும் பேயின் செயல் தான் எனவும் கூறுகிறார்கள். அதனால் தான் பேயைப் பார்த்ததுபோல எல்லோரும் ஒரு வித பயந்துடனேயே உரைந்த நிலையில் இறந்து கிடந்தார்கள் என்ற கூற்றும் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

தொடரும் மர்மம்
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184258
எனினும் இன்று வரை இந்த விபத்து எப்படி நடந்தது. என யாருக்கும் தெரியவில்லை. இந்த மர்மம் நிறைந்த விபத்து குறித்து மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களும் சொல்லப்படுகிறது. அந்த கப்பலை ஏலியன்கள் தாக்கியிருக்கலாம் என்றும், சிலர் அந்த கப்பல் பல ஆண்டுகளுக்கு முன்பே விபத்தில் சிக்கியிருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட தகவல் அந்த நேரத்தில் பரவியதால் அப்பொழுது அந்த விபத்து குறித்து நாம் அறிந்திருக்கலாமென கூறுகின்றனர்.

புரியாத புதிர்
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184257



அந்த கப்பல் யாருக்குச் சொந்தமானது? அந்த கப்பல் எதற்காகப் பயன்படுத்தப்பட்டது? யார் யார் அந்த பயணத்தின் போது இறந்தார்கள்? இந்த தகவல் அப்பொழுது வேகமாகப் பரவியபோதும் கூட யாரும் அதற்குச் சொந்தம் கொண்டதற்குக் காரணம் என்ன? அந்த கப்பல் எப்படி திடீரென வெடித்தது? உள்ள இருந்தவர்கள் உறைந்த நிலையில் இறந்த காரணம் என்ன? என்பது எல்லாம் இன்றும் மர்மம் தான்.

தொடருகிறது ......................

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Nov 22, 2019 6:32 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Empty Re: நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..

Post by T.N.Balasubramanian Fri Nov 22, 2019 6:27 pm

உங்கள் கருத்து
நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 72184254
இந்த எஸ்எஸ் ஓராங் மெடான் கப்பல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்த கப்பல் விபத்து எப்படி நிகழ்ந்திருக்கும் என உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இந்த கப்பலில் அப்படி யார் பயணித்திருப்பார்கள்? என்ன கொண்டு சென்றிருப்பார்கள்? உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரிவியுங்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Empty Re: நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..

Post by T.N.Balasubramanian Fri Nov 22, 2019 6:37 pm

தலைப்பில் தவறு
உறைந்த ..........என்று இருக்கவேண்டிய இடத்தில எல்லாம்
உரைந்த............என்றே உள்ளது, மூலப்பதிவில்.
தலைப்பை மட்டுமே மாற்ற பொறுமை இருந்தது.
உரைந்த.......... என்று வருகின்ற இடத்தில எல்லாம்
உறைந்த ........ என்றே படிக்குமாறு வேண்டுகிறேன் :வணக்கம்: சிரி சிரி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Empty Re: நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..

Post by krishnaamma Fri Nov 22, 2019 9:49 pm

நான் நாளை வந்து படிக்கிறேன் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Empty Re: நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..

Post by Guest Sat Nov 23, 2019 12:13 am

நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 3838410834 நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. 1571444738

இந்தக் கதையை நான் முன்னர் ஜேர்மன் மொழியில் படித்திருக்கிறேன்.தென் கடலில் மரணக் கப்பல்(Das Totenschiffin der Südsee) என்ற பெயரில் 1954 இல் Professor Theodor Siersdorfer  எழுதி இருந்தார்.

இந்தக் கதை உண்மையா இல்லையா என பல வாதங்கள் இருந்தாலும் சில உண்மைகள்………இங்கே………….

இரணடாவது உலக யுத்த காலத்தில், 1932 இல், ஜப்பானிய படைத்தளபதி Shirō Ishii ( Unit 731- Japanese bacteriologist) மிக ஆபத்தான இரசாயண உயிரியல் ஆயுதங்களை ( chemical and biological weapons ) தயாரித்ததாகவும்,அதை ஜப்பானியர்களும் நாசிப் படையினரும் கடத்தி இருக்கலாம் அல்லது ஜப்பானிய படையினர் சீனாவில் பதுக்கி வைக்க கொண்டு சென்றிருக்கலாம் எனவும் நம்பப்பட்டது.அதை கடத்திய கப்பல் ஆட்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இந்த சம்பவத்தின் அடிப்படையில், கதை உருவாகி இருக்கலாம் என சொல்கிறார்கள்.

Ourang Medan கப்பலில் potassium cyanide ,nitroglycerin ,sulphuric acid இருந்திருக்கலாம் என்றும் அதனால் ஏற்பட்ட கார்பன் மொனொக்சைட் தான் கப்பலில் இருந்தவர்களை உறை நிலை அடையச் செய்து உயிரிழக்க செய்தது, என்பது கதையை நம்பியவர்கள் சொன்ன விளக்கம்.பின்னர் வெடிப்புக்கு காரணம் கப்பலின் கீழே இருந்த பாயிலர் வெடித்திருக்கலாம் என்பது கதையின் இன்னொரு விளக்கம்.
......................
இந்தக் கதை முதலில் ஒல்லாந்து பத்திரிகையில்(De locomotief: Samarangsch handels- en advertentieblad) 1948 பெப்.3/28/மார்ச்13 தொடராக வந்திருந்தது.அந்தக் கப்பலில் இருந்து வெளியேறி காப்பாற்றப்பட்ட ஜேர்மனை சேர்ந்த ஒருவர் Toangi என்ற மார்ஷல் தீவில் இருந்ததாகவும்,அவர் தான் அந்தக் கப்பலில் ஆபத்தான ஆயுதங்கள் இருப்பதை, இத்தாலியை சேர்ந்த Silvio Scher க்கு (கதையை முதலில் சொல்லியவர்) தெரிவித்ததாகவும் அந்த டச்சுப் பத்திரிகையில் சொல்லப்பட்டிருக்கிறது.

கதை நடந்த காலத்தில் Silver Star  என்ற கப்பல் இருக்கவில்லை என்றும், Grace Line shipping company  க்கு சொந்தமான Santa Juana என்ற கப்பலே பின்னர் பெயர் மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த சமயத்தில் சுமத்திரா-இந்தோனேசியா, அப்போது டச்(ஒல்லாந்து) கிழக்கிந்திய கம்பனியின் கையில் இருந்ததாகவும், Ourang Medan என்பது Man from Medan (Ourang-man,Medan-சுமத்திரா தீவில் உள்ள ஒரு நகரம்) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

1940 இல் லண்டன் பத்திரிகைகளில் இந்தக் கதை வந்ததையும் ஆனால் அப்போது இடமும் (சாலமொன் தீவுகள்) கப்பலுக்கு அனுப்பப்பட்ட செய்தியும்( Morse code: -SOS) வேறாக இருந்ததையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். உலகப் போர் முடிவில் 1948 இல் நடந்ததாக சொல்லப்பட்ட கதை எப்படி 1940 இல் லண்டன் பத்திரிகையில் அதே Silvio Scherzi  சொன்னதாக வந்தது எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

உண்மையோ இல்லையோ கதை மிகவும் சுவராஷ்யமாக இருந்தது. படத்தில் இன்னும் அதிகமாக காட்டி இருக்கிறார்கள்.

கப்பலில் இருந்து வந்ததாக சொல்லப்பட்ட செய்தி……………
முதலில்…….
“SOS from the steamship Ourang Medan. Beg ships with shortwave wireless get touch doctor. Urgent.”
இரண்டாவதாக…..
“Probable second officer dead. Other members crew also killed. Disregard medical consultation. SOS urgent assistance warship.”
அதைத் தொடர்ந்து நிற்கும் இடத்தை சொல்லி “crew has…” என செய்தி தொடங்கி முற்றுப் பெறாது முடிந்ததாகவும் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.
(skittishlibrary/Das Totenschiffin der Südsee)

avatar
Guest
Guest


Back to top Go down

நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Empty Re: நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..

Post by T.N.Balasubramanian Sat Nov 23, 2019 11:07 am

பொய்யோ மெய்யோ மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு சென்று இருக்கிறார்கள் .
படித்து ரசித்தேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடுக்கடலில் உறைந்த  பிணங்களுடன் நின்ற கப்பல்.. Empty Re: நடுக்கடலில் உறைந்த பிணங்களுடன் நின்ற கப்பல்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum