ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம்

Go down

நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Empty நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம்

Post by Guest Sat Nov 02, 2019 4:45 pm


சமீபத்தில் Time Bank மத்திய பிரதேசத்தில் முதன் முறையாக திறக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.இந்த டைம் பேங்கிங்க் என்றால் என்ன?

பணத்தை சேமிக்கும் இடமாகவும் பண உதவி பெறும் இடமாகவும் சாதாரண வங்கிகள் செயல்படுகின்றன.டிஜிட்டல் வங்கிகளில் டிஜிட்டல் பணம் (Bitcoin,Litecoin,Libra….)எனவும்,கிரிப்போ கரன்சி எனவும் சில புழக்கத்தில் உள்ளன.

அதேபோல் நேரத்தை சேமிக்கும் இடமாக Time Bank செயல்படுகிறது. பணத்தை அடிப்படையாகக் கொண்ட வங்கிச்சேவையில் பணம் பிரதானமாக இருக்கும். இந்த டைம்பேங் திட்டத்தில் பணத்துக்கு பதிலாக நேரம் பரிமாற்றம் செய்யப்படும்.

ஒருவர் ஒருவருக்கு,ஒருவர் பலருக்கு,பலர் ஒருவருக்கு,பலர் பலருக்கு என உதவி செய்வதன் மூலம் நேரம் இந்த வங்கியில் சேமிக்கப்படுகிறது.

அமெரிக்க பேராசிரியர் Edgar Cahn 1800 இல் முதலில் இதை அறிமுகப்படுத்தினார்.ஜொசையா வாரென் என்பவரால் 1827 இல் சின்சினாட்டி நகரில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.1973 இல் ஜப்பானில் முதல் வங்கி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது 34 நாடுகளில் 500 க்கு மேற்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Truck_system_of_payment_by_order_of_Robert_Owen_and_Benj_Woolfield%2C_July_22nd_1833_%281294620%29

நேர வங்கியியல் அல்லது நேர வைப்பகவியல் என்பது பணத்துக்குப் பதிலாக நேரத்தை அலகாகப் பயன்படுத்தி சேவைப் பரிமாற்றத்தை ஏதுவாக்கும் ஒரு முறைமை ஆகும். நேர வங்கி என்பது நேர வங்கியியலை நடைமுறைப்படுத்தும் ஒரு குமுகம் ஆகும். இந்த வங்கியில் உறுப்பினராக இருக்கும் ஒருவருக்கு சேவையை செய்வதன் மூலம் (நேரத்தை வழங்குதல்) ஒருவர் நேர வங்கியில் வைப்புச் செய்யலாம். பின்னர் அவருக்கு ஒரு உதவி அல்லது சேவை தேவைப்படும் போது அந்த வங்கியில் பிற ஒரு உறுப்பினரிடம் இருந்து தனது வைப்பைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இது ஒரு சமூக இயக்கமாக வளர்ந்து வருகிறது. (விக்கிபீடியா)

(ஜேர்மன் எல்லையில் உள்ள சுவிற்செலாந்து நகர் ஒன்றில் உள்ள நேர வங்கி செயல்பாடானது….……………..)

மருத்துவமனையில் அதிகப் பொருட்செலவு என்பதுடன் வயதானவர்களுக்கு மனத் திருப்தியும் அளிப்பதில்லை. இந்த வகையில் நேர வங்கி முற்றிலும் மாறுபடுகிறது. முதியவர்களின் தனிமையும் இந்த நேர வங்கி ஆர்வலர்களின் மூலம் குறைகிறது. இதன் மூலம் மக்கள் ஒன்று சேரவும், அவர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும் முடிகிறது.

நேர வங்கி என்பதுவும் ஒருவித ஓய்வுதியம் போலத்தான். இதை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர்கள் சுவிஸ் ஃபெடரல் சமூகப் பாதுகாப்பு அமைச்சகம். இளம் வயதுக்காரர்கள் ஒருமணிநேரம் இரண்டு மணிநேரம் என்று முதியவர்களைப் பார்த்துக் கொள்வதன் மூலம் நேரத்தை சேமித்து வைக்கிறார்கள்.
தங்களது வயதான காலத்தில் தங்களைப் பார்த்துக்கொள்ள ஆர்வலர்களை இந்த நேரங்களில் உதவிக்கு அழைக்கிறார்கள். ஆர்வலர்கள் ஆரோக்கியமாகவும், நன்கு பேசத் தெரிந்தவர்களாகவும், வயதானவர்களிடம் அன்பு செலுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். இப்படி ஒரு வருடம் வேலை செய்தவுடன் நேர வங்கி அவர்களுக்கு நேர வங்கி அட்டையை வழங்குகிறது. அவர்களுக்கு உதவி தேவைப்படும் போது நேர வங்கி இவர்களது சேவையை பரிசீலனை செய்துவிட்டு இன்னொரு ஆர்வலரை இவர்களது உதவிக்கு அனுப்பி வைக்கிறது.

இந்த திட்டம் சுவிஸ் அரசின் ஓய்வுதிய செலவைக் குறைப்பது மட்டுமல்லாமல், வேறு சில சமூகப் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறது. சமூகத்தில் கிடைக்கும் வளங்களை பயன்படுத்துவதுடன் கூட்டுக் குடும்பம் போன்ற பலவீனமடைந்துள்ள சமூகக் கட்டுமானங்களையும் புனரமைக்க இந்த திட்டம் உதவும் என்று சுவிஸ் அதிகாரிகள் நம்புகிறார்கள். இந்த நாட்டின் குடிமக்கள் இந்த திட்டத்தை வரவேற்பதுடன், ஆதரவும் கொடுக்கிறார்கள். பல இளம் வயதினரும் இந்தத் திட்டத்தில் பங்கெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அரசும் இதை சட்டபூர்வமாக அமலாக்க இருக்கிறது.

பணிஓய்வு பெற்றவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. மாறாக இந்த சமுதாயத்திற்கு ஏதாவது திருப்பிச் செய்ய விரும்புகிறார்கள். பணத்தேவை இவர்களுக்கு இல்லாதபோதும், வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் சுறுசுறுப்பாகவும் இருக்க முடிகிறது. மனதிற்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது.

சிலரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கும் சந்ததியைச் சேர்ந்தவர்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வெளிநாடு போய் பேரன் பேத்திகளைப் பார்த்துவிட்டு வருபவர்கள். இதுகூட எத்தனை வருடங்கள் நடக்கும்? எல்லோருடைய மனதிலும் இன்னும் வயதாகி முடியாமல் போய்விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் நம்மை என்ற பயம் உண்டு. உடம்பு சரியில்லை என்றால் பிள்ளை, பெண்களுக்குப் பாரமாகி விடுவோமோ என்ற பயமும் உண்டு. உடம்பு முடியவில்லை என்பதையே ஏதோ குற்றம் செய்துவிட்டதைப் போல கூனிக் குறுகிச் சொல்லிக் கொள்ளுவார்கள்.  (நன்றி-Andric Ng , mothership.sg /swissinfo )

இந்த முறை நமக்கு புதிதல்ல. நவீன வாழ்க்கை முறை,தொலைந்து போன கூட்டுக் குடும்பம்,வெளி நாட்டு வாழ்க்கை போன்றவை நம் சமூகத்தில் நாம் செயல்படுத்தி வந்த அனைத்து சமூக கட்டமைப்பையும் மாற்றி விட்டது.அவற்றை அவர்கள் புதிய உருவில் மக்களை ஈர்க்கும் முறையில் அறிமுகப்படுத்தி செயல்படுத்துகின்றனர்.
avatar
Guest
Guest


Back to top Go down

நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Empty Re: நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம்

Post by T.N.Balasubramanian Sat Nov 02, 2019 7:36 pm

முதலில் புரிந்துகொண்டு பிறகு மறுமொழி இடுகிறேன்.

எனது நண்பன் ஒருவன் பிறந்த நாளிருந்து கஷ்டம் கஷ்டம் எனக்கூறி
தன கஷ்டங்களை என்னிடம் கூறி அப்படி பரம் குறைந்தது என்று கூறி சென்றுவிடுவான்.
அவன் கஷ்டங்களை எண்ணி எண்ணி நான் கஷ்டப்படுவேன். நாளடைவில் குறையும் போது திரும்பவும் வந்துவிடுவான்.
அதற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா என்று பார்க்கவேண்டும்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Empty Re: நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம்

Post by Guest Sat Nov 02, 2019 8:56 pm

நிச்சயமாக உண்டு. ஆனால் தற்போது செயல்பட்டு வரும் நேர வங்கி செயல்பாட்டளவில் சற்று வேறுபடுகிறது.அதனால் அந்த நேர வங்கியுடன், நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் அவர்களின் நேர வங்கி கொள்கையுடன் ஒத்துப் போகவில்லை. ஆனால்……………………………

இப்படியான உணர்ச்சிகரமான சம்பவங்கள் வேறொரு வங்கியுடன் ஒத்துப் போகிறது.அது emotional bank account .

முதலில் இந்த உணர்ச்சிகர வங்கி கணக்கு என்பதை டாக்டர் ஸ்டெபன் கோவெ என்பவர் வெளியிட்டார்.அவர் அந்த வங்கியில் 7 பிரிவுகளை உருவாக்கி மனதளவில் பாதிப்பு/கவலை கொண்டவர்களை உற்சாகப்படுத்த தொடங்கினார்.
இதன் மூலம் பணத்திற்குப் பதில் நம்பிக்கையை மனதில் விதைப்பதாகும்.

ஒருவர் சொல்வதை கூர்ந்து கவனிப்பது,ஆறுதல் கூறுவது, கம்பிளிமெண்ட்,தட்டிக் கொடுப்பது,...போன்ற பாசிட்டிவாக சொல்வது,நெகட்டிவ் வார்த்தைகளை தவிர்ப்பது என ……..

இன்று நம்மில் பலரிடம் இவை எதுவும் இல்லாமல் போயிற்று.ஏன்? தெரியவில்லை.

avatar
Guest
Guest


Back to top Go down

நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம் Empty Re: நேர வங்கி-Time Bank திறப்பு-மத்திய பிரதேசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum