ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல் 60 விழாவில் இளையராஜா இசை நிகழ்ச்சி: ரஜினி பங்கேற்பு!

Go down

 கமல் 60 விழாவில் இளையராஜா இசை நிகழ்ச்சி: ரஜினி பங்கேற்பு! Empty கமல் 60 விழாவில் இளையராஜா இசை நிகழ்ச்சி: ரஜினி பங்கேற்பு!

Post by ayyasamy ram Fri Nov 01, 2019 5:57 am

 கமல் 60 விழாவில் இளையராஜா இசை நிகழ்ச்சி: ரஜினி பங்கேற்பு! Kamal23xx
-
நடிகர் கமல் ஹாசனின் 60 ஆண்டு திரையுலகப் பயணத்தை விமரிசையாகக் கொண்டாடும் வகையில், 3 நாள்களுக்குப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் ரஜினி பங்கேற்கிறார். இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நவம்பர் 7

நவம்பர் 7 அன்று கமல் ஹாசனின் பிறந்தநாள். அதோடு, கமலின் தந்தை ஸ்ரீனிவாசனின் நினைவு நாள். எனவே தனது சொந்த ஊரான பரமக்குடியில் தந்தையின் உருவச் சிலையைத் திறக்கவுள்ளார்

கமல். காலை 10.30 மணி முதல் 11 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசனின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள்.

நவம்பர் 8

ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ் கமல் நிறுவனத்தின் அலுவலகத்தில் காலை 9.30 மணிக்குத் தனது குரு மறைந்த கே. பாலசந்தரின் உருவச் சிலையை கமல் திறக்கவுள்ளார். இந்த விழாவில் கே.பி.யின் குடும்ப உறுப்பினர்கள், திரையுலகக் கலைஞர்கள், செய்தியாளர்கள் போன்றோர் கலந்துகொள்வார்கள்.

அன்று மதியம் 3.30 மணிக்கு சத்யம் திரையரங்கில் கமலின் ஹே ராம் படம் திரையிடப்படுகிறது. திரையிடலுக்குப் பிறகு கமலுடன் படம் குறித்த உரையாடல் நடைபெறும். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் அதே அரங்கில் சிறப்பு உரையை நிகழ்த்துவார் கமல் ஹாசன். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்வார்கள்.

நவம்பர் 9

உங்கள் நான்

கமல் ஹாசன் – உங்கள் நான் – 60 மகத்தான வருடங்கள் நிகழ்வை இளையராஜா தொடங்கி வைக்கிறார். கமலைப் பாராட்டும் வகையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி., கமல் உள்ளிட்ட பலர் பாடுகிறார்கள்.

கமலுடன் 44 ஆண்டுகள் நட்பைக் கொண்டுள்ள ரஜினி காந்த் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். கமலுடனான அனுபவங்கள் குறித்து அவர்கள் மேடையில் பகிர்ந்துகொள்வார்கள்.

உங்கள் நான் நிகழ்ச்சி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum