ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 பயங்கரவாதிகளை விடுதலை செய்ததால் பணய கைதிகளாக இருந்த 3 இந்திய என்ஜினீயர்களை தலீபான்கள் விடுவித்தனர்

Go down

11 பயங்கரவாதிகளை விடுதலை செய்ததால் பணய கைதிகளாக இருந்த 3 இந்திய என்ஜினீயர்களை தலீபான்கள் விடுவித்தனர் Empty 11 பயங்கரவாதிகளை விடுதலை செய்ததால் பணய கைதிகளாக இருந்த 3 இந்திய என்ஜினீயர்களை தலீபான்கள் விடுவித்தனர்

Post by ayyasamy ram Wed Oct 09, 2019 7:17 am

இஸ்லாமாபாத்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் பாக்லான் மாகாணம் பாக் இ ‌‌ஷமல்
பகுதியில் 2018-ம் ஆண்டு மே மாதம் துணை மின்நிலையம்
அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 7 இந்திய என்ஜினீயர்கள்
அவர்களது ஆப்கானிஸ்தான் டிரைவர் ஆகியோர் ஒரு கும்பலால்
கடத்தப்பட்டனர்.
இதற்கு உடனடியாக எந்த இயக்கமும் பொறுப்பேற்க
முன்வரவில்லை.

பின்னர் அவர்களை தலீபான் பயங்கரவாத இயக்கத்தினர்
கடத்தியதாக தெரியவந்தது. அவர்களில் ஒரு இந்திய என்ஜினீயர்
கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார். சர்வதேச நிறுவனம்
ஒன்றுக்காக பணிபுரிந்து வந்த அந்த என்ஜினீயர்களை
மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன.

ஆப்கானிஸ்தான் சமரசத்துக்கான அமெரிக்க சிறப்பு
பிரதிநிதி ஜால்மாய் கலில்சாத் மற்றும் முல்லா அப்துல்கனி பராடார்
தலைமையிலான தலீபான் இயக்க பிரதிநிதிகள் 2 பேர் பணய
கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கடந்த வார இறுதியில் அங்குள்ள இஸ்லாமாபாத் நகரில் இந்த
பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை
ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள தலீபான் இயக்கத்தின்
11 உயர்மட்ட உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டதாக தலீபான்
பிரதிநிதிகள் அறிவித்தனர்.

அதற்கு பதிலாக பணய கைதிகளாக உள்ள
3 இந்திய என்ஜினீயர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனை
அவர்கள் ரேடியோ மூலம் அறிவித்தனர்.

ஆனாலும் அவர்கள் விடுவிக்கப்பட்டவர்கள் யார்?
எங்கு விடுவிக்கப்பட்டனர் என்ற தகவல்களை தெரிவிக்க
மறுத்துவிட்டனர்.

விடுவிக்கப்பட்ட தலீபான்கள் ஆப்கானிஸ்தான் அரசால்
கைது செய்யப்பட்டவர்களா? அல்லது அமெரிக்க படையினரால்
கைது செய்யப்பட்டவர்களா? என்பதையும் தெரிவிக்கவில்லை.

விடுவிக்கப்பட்ட தலீபான்களுக்கு வரவேற்பு கொடுப்பதுபோல
ஒரு புகைப்படத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.

காபூல் நகரில் பாக்ராம் ராணுவ தளத்தில் உள்ள மிகப்பெரிய
சிறையில் இருந்து தலீபான்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாக
தகவல் வெளியாகி உள்ளது.

அந்த தளத்தை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான்
ராணுவத்திடம் ஒப்படைத்தாலும், இன்னும் அமெரிக்க
படைகள் அங்கு உள்ளன.
இதனால் தலீபான்களை விடுவித்தது யார் என்பது
தெரியவில்லை.

ஆப்கானிஸ்தான் ராணுவ அமைச்சகமோ,
அதிபர் அலுவலகமோ இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்க
மறுத்துவிட்டன.
இந்தியா தரப்பில் இருந்தும் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

விடுவிக்கப்பட்டவர்களில் தலீபான் தலைவர்களான
சேக் அப்துல் ரகிம், மாவ்லாய் அப்துல் ர‌ஷித் ஆகியோரும்
அடங்குவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் இருவரும் தலீபான் ஆட்சியின்போது கிளர்ச்சி
படையின் கவர்னர்களாக செயல்பட்டவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய சிறையில் 20 ஆண்டுகள் இருந்த பாகிஸ்தான் விஞ்ஞானி இன்று விடுதலை
» பயங்கரவாதிகளை அனுப்பி இந்திய வீரர்களை தாக்க பாகிஸ்தான் திட்டம்
» பாகிஸ்தான் ஜெயிலில் இருந்த 24 இந்தியர்கள் விடுதலை
» முதல் இந்திய விடுதலை போரில் பிரிட்டன் பிரதமரின் எள்ளு தாத்தா
»  இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum