ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரஸ்வதி பூஜை

2 posters

Go down

சரஸ்வதி பூஜை Empty சரஸ்வதி பூஜை

Post by ayyasamy ram Mon Oct 07, 2019 3:45 am


நவராத்திரியில் சரஸ்வதியை வழிபடும் கடைசி மூன்று
நாட்களும், கோயில், வீடுகளில் வீணை வழிபாடு செய்வர்.
இதற்கு காரணம் தெரியுமா? ‘நவரத்னமாலா’ என்ற
ஸ்தோத்திரத்தில், காளிதாசர், பராசக்தியின் கையில்
வீணை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அவள் எப்போதும் சங்கீத இனிமையில் லயித்து இருப்பதாகவும்,
மிருதுவான மனதுடன் பக்தர்களுக்கு அருள்புரிவதாகவும்
கூறியுள்ளார். வீணை ஏந்திய அம்பிகையை ‘சியாமளா’
என அழைப்பர்.

இன்னிசையால் வழிபட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்
என்னும் அடிப்படையில் நவராத்திரியின் போது, வீணை இசை
வழிபாடு நடத்துகின்றனர்.
-
----------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சரஸ்வதி பூஜை Empty Re: சரஸ்வதி பூஜை

Post by ayyasamy ram Mon Oct 07, 2019 3:47 am

வீட்டில் சரஸ்வதி பூஜை
--
சரஸ்வதி பூஜையின் போது பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும்.
மேஜை வைத்து அதன் மேல் வெள்ளைத்துணியை விரித்து சரஸ்வதி
படம் அல்லது மஞ்சளில் பிடித்த சரஸ்வதி முகத்தை வைக்க வேண்டும்.
வெண்தாமரை அல்லது வெண்ணிற மலர்களைச் சூட்டி அலங்கரிக்க வேண்டும்.

மேஜையின் ஒருபுறத்தில் குழந்தைகளின் பாடப்புத்தகங்களை அடுக்க
வேண்டும். மறுபுறத்தில் வாழை இலையில் சுண்டல், சர்க்கரைப் பொங்கல்,
புளியோதரை, எலுமிச்சை சாதம், அவல், பொரி, கடலை, நாட்டுச் சர்க்கரை,
தேங்காய், வாழைப்பழங்களை படைக்க வேண்டும்.

இலையின் அருகில் சாணப்பிள்ளையாரும், செம்மண்ணில் பிடித்த
அம்மனையும் வைக்க வேண்டும்.

முதலில் விநாயகருக்கும், அடுத்து செம்மண் அம்மனுக்கும் தீபாராதனை
காட்ட வேண்டும். பிறகு சரஸ்வதியை பூஜிக்க வேண்டும். பூஜையின் முடிவில்
சரஸ்வதி போற்றி, சரஸ்வதி அந்தாதி, சகலகலாவல்லி மாலை போன்ற
பாடல்களைப் பாட வேண்டும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சரஸ்வதி பூஜை Empty Re: சரஸ்வதி பூஜை

Post by ayyasamy ram Mon Oct 07, 2019 3:48 am

மாலையிட்ட மங்கை

சுயம்வரத்தின் போது நிடதநாட்டு மன்னன் நளனுக்கு
மாலையிட விரும்பினாள் தமயந்தி.

ஆனால் பேரழகியான அவளை அடைய விரும்பிய
இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், நளன் போல உருமாறி
சுயம்வரத்தில் பங்கேற்றனர். மண்டபம் எங்கும் நளனாக
இருப்பது கண்ட தமயந்தி திகைத்தாள். உண்மையான
நளனை அறிய முடியாமல் தவித்த போது சரஸ்வதி தேவி
புத்தியில் புகுந்தாள்.

வானுலக தேவர்களின் கால்கள் தரையில் படாது’
என்ற உண்மையை உணர்த்தி வழிகாட்டினாள். நளனின்
கால்கள் தரையில் படுவதைக் கண்ட தமயந்தி,
மணமாலையைச் சூட்டி மகிழ்ந்தாள்.
-
---------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சரஸ்வதி பூஜை Empty Re: சரஸ்வதி பூஜை

Post by ayyasamy ram Mon Oct 07, 2019 3:51 am

வீணை இல்லாமல் காட்சி தரும் சரஸ்வதி
-
வேதாரண்யம் சிவன் கோயிலில் சரஸ்வதி வீணை
இல்லாமல் காட்சி தருகிறாள். இங்கு உள்ள அம்பிகையின்
குரல் இனிமை கேட்ட சரஸ்வதி வீணை இல்லாமல்
இருப்பதாக ஐதீகம்.

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் வீணை இல்லாத
சரஸ்வதிக்கு சன்னதி உள்ளது.
சரஸ்வதியின் பிறந்த நட்சத்திரம் மூலம்.

சொல்லின் செல்வன் என போற்றப்படும் அனுமனும்
இதே நட்சத்திரம் தான். அன்ன வாகனத்தில் வீற்றிருக்கும்
சரஸ்வதியை வடமொழியில் ‘ஹம்ச வாகினி’ என்பர்.
தமிழில் ‘அம்சவல்லி’ என குறிப்பிடுவர். மயிலில்
இருக்கும் சரஸ்வதிக்கு ‘மயூர வாகினி’ என பெயர்.

பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி குடியிருக்கிறாள்.
இதனால் ‘நாமகள், வாக்தேவி’ என்றும் பெயருண்டு.
சீவக சிந்தாமணி காப்பியத்தில் ‘நாமகள் இலம்பகம்’
என்ற பகுதி உள்ளது.
-
---------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சரஸ்வதி பூஜை Empty Re: சரஸ்வதி பூஜை

Post by ayyasamy ram Mon Oct 07, 2019 3:53 am

ஞானம் அருளும் சரஸ்வதி

தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி ஞானம் அருள்பவர்கள்.
இதன் அடையாளமாக இருவரின் கையிலும் வெண்ணிற
ஸ்படிகமாலை தாங்கியிருப்பர்.

சரஸ்வதி அந்தாதியைப் பாடியவர் கம்பர்.
இவருக்காக சரஸ்வதி கிழங்கு விற்கும் பெண்ணாக
மனிதவடிவில் வந்தாள்.

அரியலுார் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில்
இருக்கும் சரஸ்வதி, ஞானம் தருபவளாக விளங்குகிறாள்.
அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தரும்
இவளின் வலதுகையில் ஆள்காட்டி விரல் மேல்நோக்கி
நீட்டியபடி ‘சூசி’ முத்திரையுடன் உள்ளது.

‘கடவுளைப் பற்றி அறிவதே மேலானது’ என்பது இதன்
பொருள். சாந்த முகத்துடன் மார்பில் பூணுால், கைகளில்
ஜபமாலை, கமண்டலம், சுவடி, வளையல்கள் என
கலைநயத்துடன் யோகநிலையில் ஆழ்ந்திருக்கும் இவளை
வழிபட்டால் நல்லபுத்தி, ஆன்மிக ஞானம் உண்டாகும்.

நன்றி- தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சரஸ்வதி பூஜை Empty Re: சரஸ்வதி பூஜை

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 07, 2019 10:40 am

Code:

சுயம்வரத்தின் போது நிடதநாட்டு மன்னன் நளனுக்கு
மாலையிட விரும்பினாள் தமயந்தி.

ஆனால் பேரழகியான அவளை அடைய விரும்பிய
இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், நளன் போல உருமாறி
சுயம்வரத்தில் பங்கேற்றனர். மண்டபம் எங்கும் நளனாக
இருப்பது கண்ட தமயந்தி திகைத்தாள். உண்மையான
நளனை அறிய முடியாமல் தவித்த போது சரஸ்வதி தேவி
புத்தியில் புகுந்தாள்.

வானுலக தேவர்களின் கால்கள் தரையில் படாது’
என்ற உண்மையை உணர்த்தி வழிகாட்டினாள். நளனின்
கால்கள் தரையில் படுவதைக் கண்ட தமயந்தி,
மணமாலையைச் சூட்டி மகிழ்ந்தாள்.
-
தேவர்களும் இந்த மாதிரி தப்பை செய்து இருக்கும் போது மானிடர்கள் எம்மாத்திரம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சரஸ்வதி பூஜை Empty Re: சரஸ்வதி பூஜை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum