ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலிகை மருத்துவம்

Go down

மூலிகை மருத்துவம் Empty மூலிகை மருத்துவம்

Post by தண்டாயுதபாணி Wed Dec 30, 2009 10:50 am

ஆடாதொடை








மூலிகை மருத்துவம் Ht241


நீண்ட முழுமையான ஈட்டிவடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய
குறுஞ்செடி. சிற்றூர்களில் வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பூ, வேர் ஆகியவை
மருத்துவப் பயனுடையவை.

சளி நீக்கி இருமல் தணிப்பானாகவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், இசிவு நோய் நீக்கியாகவும் செயற்படும்.

1.
இலைச் சாறும் தேனும் சமஅளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை
கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல்,
இரத்தம் கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும்.

குழந்தைகளுக்கு 5 + 5 துளி
சிறுவர் 10 + 10 துளி
பெரியவர் 15 + 15 துளி

2. இலைச் சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை, மாலை கொடுத்து வரச் சீதபேதி, இரத்தப்பேதி குணமாகும்.

3.
10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சித் தேன்
கலந்து காலை, மாலை 40 நாள்கள் பருகி வர என்புருக்கிக் காசம், இரத்தக்
காசம், சளிச்சுரம், சீதளவலி, விலாவலி ஆகியவைத் தீரும்.

4. ஆடாதொடை
வேருடன் கண்டங்கத்திரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல்
1 கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சுவாச காசம், சன்னி,
ஈளை, இருமல், சளிச்சுரம், என்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை குணப்படும்.

5.
ஆடாதொடை இலையையும், சங்கன் இலையையும் வகைக்கு ஒரு பிடி அரை லிட்டர் நீரில்
போட்டுப் பாதியாகக் காய்ச்சிக் காலை, மாலை பருகி வரக் குட்டம், கரப்பான்,
கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றவலி தீரும்.

6. உலர்ந்த ஆடாதொடை இலைத் தூளை ஊமத்தை இலையில் சுருட்டிப் புகைப்பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும்.

7.
700 கிராம் தூய இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கியதில் அக்கரகாரம்,
சித்தரத்தை வகைக்கு 10 கிராம், ஏலம் 4 ஆகியவற்றைத் தூள் செய்து போட்டுப்
பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர்விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி
வடிகட்டியதில் 1 கிலோ சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி(ஆடாதொடை
மணப்பாகு) வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வர நீர்க்கோவை
தீரும். ஒரு நாளைக்கு 3 வேளையாக நீண்ட நாள்கள் கொடுத்து வரக் காசம்,
என்புருக்கி, மார்புச்சளி, கப இருமல், புளூரசி, நீடித்த ஆஸ்துமா, நிமோனியா
ஆகியவை குணமாகும். குரல் இனிமை உண்டாகும்.

8. ஆடாதொடை,
கோரைக்கிழங்கு, பற்பாடகம், விஷ்ணுகாந்தி, துளசி, பேய்ப்புடல்,
கஞ்சாங்கோரை, சீந்தில் வகைக்கு ஒரு பிடி 1 லிட்டர் நீரில் போட்டு அரை
விட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மி.லி. அளவாகப் பருகி வர (அஷ்ட மூலக்
கஷாயம்) எவ்விதச் சுரமும் நீங்கும்.

9. வேர்க்கஷாயத்தைக் கடைசி மாதத்தில் காலை, மாலை கொடுத்து வரச் சுகப்பிரசவம் ஆகும்.
ஆகாயத்தாமரை








மூலிகை மருத்துவம் Ht235


நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள். காம்பற்ற
இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. அந்தரத் தாமரை என்றும்
குறிப்பிடுவதுண்டு. தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்வது. இலைகளே
மருத்துவப் பயனுடையவை.

வெப்பு
தணித்து தாகங் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து
அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

1. இலையை
அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டிவர
விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டிவர வெளிமூலம், ஆசனகுத்தல் ஆகியவை
தீரும்.

2. 25 மி.லி. இலைச்சாற்றைச் சிறிது தேனுடன் காலை, மாலை 5
நாள்கள் கொடுக்க மார்பினுள் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும்
நீர்ச்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.

3. இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசனவாயில் பிடித்து வர மூல முளை அகலும்.

4.
இலைச் சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு
தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு,
சந்தனத் தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம்
பொடித்துப் போட்டு இறக்கி வடித்து (ஆகாயத் தாமரைத் தைலம்) வாரம் 1 முறை
தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்.

ஆகாச கருடன்








மூலிகை மருத்துவம் Ht227


கோவையினத்தைச் சேர்ந்த பெருங்கிழங்குடைய ஏறு கொடி. தமிழகமெங்கும்
தன்னிச்சையாய் வளர்கிறது. கசப்புச் சுவையுடைய கிழங்கே மிகவும் மருத்துவப்
பயனுடையது. உடல் தேற்றவும் உடல் பலம் மிகுக்கவும் மருந்தாகும்.

1.
கொட்டைப்பாக்களவு கிழங்கை மென்மையாய் அரைத்து 50 மி.லி. நீரில் கலக்கி
மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து மேற்பூச்சாகவும் பூசிவர நாய் நரி
குரங்கு பூனை முதலிய விலங்குகளின் கடி நஞ்சு தீரும்.

2. புளியங்கொட்டை அளவு கிழங்கை வெற்றிலையில் வைத்து மென்று தின்ன தேள் நஞ்சும் அதனால் ஏற்பட்ட நெரிகட்டுதலும் தீரும்.

3.
கிழங்கைத் தோல் நீக்கி உலர்த்திப் பொடித்து ஒரு தேக்கரண்டிப் பொடியை
சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு உப்பு புளி நீக்கி உணவு உண்டு வரப்
பாம்பு நஞ்சு, கீல் பிடிப்பு, மேக நோய்கள் தீரும்.

4. 5 கிராம் கிழங்குப் பொடியை 100 மி.லி. நீரில் கலந்து காய்ச்சிக் காலை மாலை சாப்பிட்டு வரச் சீதப்பேதி தீரும்.

5.
100 கிராம் கிழங்குடன் 50 கிராம் வெங்காயம் 20 கிராம் சீரகம்
சேர்த்தரைத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கீல்
வாதத்துக்குப் பற்றிட குணமாகும்.

அன்னாசி








மூலிகை மருத்துவம் Ht220


தாழை இலை போன்ற நீண்ட அடுக்கான மடல்களை உடைய செடி. கொல்லிமலை போன்ற
இடங்களில் பேரளவில் பயிரிடப் பெற்றுப் பழமாக விலைக்குக் கிடைக்கும்.
இப்பழம் பூந்தாழம் பழம் எனவும் வழங்கப்பெறும். இலை பழம் ஆகியவை மருத்துவப்
பயனுடையவை.

நுண்புழுக்
கொல்லுதல், வியர்வை சிறுநீர் பெருக்குதல், மலமிளக்குதல்,
குருதிப்பெருக்கைத் தணித்தல், மாதவிலக்கைத் தூண்டுதல் ஆகிய மருத்துவப்
பண்புகளை உடையது.

இப்பழம் மாதவிலக்கைத் தூண்டும் ஆகையால் கருவுற்றவர் உண்ணாதிருத்தல் நலம். அதிக அளவில் உண்டால் தொண்டைக் கட்டும்.

1. இலைச்சாறு 10 மி.லி. யில் சிறிது சர்க்கரைக் கலந்து கொடுக்க விக்கல் நிற்கும்.

2. பழச்சாற்றைச் சற்று சூடுசெய்து குடித்து வர வாந்தி, வயிற்றுக் கடுப்பு காமாலை ஆகியவை தீரும்.

3.
பழச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி நாள்தோறும்
இருவேளை 10&15 மி.லி. உண்டு வரத் தாகம், வாந்தி, வெள்ளை, வெட்டை,
சுவையின்மை ஆகியவை தீரும்.






அறுவதா








மூலிகை மருத்துவம் Ht213


மலைப்பாங்கான இடங்களில் வளரும் மணமுடைய பசுமையான குறுஞ்செடி. சதாப்பு இலை என்றும் வழங்கப் பெறும். இதன் இலை மருத்துவப் பயனுடையது.

வலி போக்குதல், வெப்பமுண்டாக்கல், கோழையகற்றுதல், மாதவிலக்கு உண்டாக்குதல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது.

1.
இலைச் சாற்றில் 10 துளியைத் தாய்ப்பாலுடன் கலந்து சிறுகுழந்தைகளுக்குக்
கொடுக்க சளியை வெளியேற்றி காய்ச்சல் இசிவு ஆகியவற்றைப் போக்கும்.

2.
இலையுடன் கால் பங்கு மஞ்சள் சேர்த்து அரைத்துக் குழந்தைகள் உடலில் பூசிக்
குளிப்பாட்டி வர சளி, நீர்க்கோவை முதலிய குளிர்ச்சி நோய்கள் வராமல்
தடுக்கும்.

3. இலையைப் பொடித்து வைத்துக் கொண்டு வயதிற்கு ஏற்ப 1/4
முதல் 1 தேக்கரண்டி வரை தேனில் குழைத்துக் கொடுத்து வர வயிற்றுப் பொருமல்,
வயிற்றுவலி, செரியாமை, நாட்பட்ட மார்புச்சளி, பால்மாந்தம், மாந்த சுரம்,
கணை, வயிற்றுப் போக்கு ஆகியவை தீரும்.

4. உலர்ந்த இலையை நெருப்பிலிட்டு வரும் புகையை மென்மையாகச் சுவாசிக்க இருமல் தணியும்.
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum