ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீன தேசிய தினத்தில் ஹாங்காங்கில் பெரும் வன்முறை

Go down

சீன தேசிய தினத்தில் ஹாங்காங்கில் பெரும் வன்முறை Empty சீன தேசிய தினத்தில் ஹாங்காங்கில் பெரும் வன்முறை

Post by ayyasamy ram Wed Oct 02, 2019 5:52 am



பீஜிங்,

சீனாவில் மா சேதுங் தலைமையில் நடந்த கம்யூனிஸ்டு
புரட்சியின் முடிவில் “சீன மக் கள் குடியரசு” தோற்றுவிக்கப்பட்டதன்
70-ம் ஆண்டு விழா, அதாவது சீனாவின் தேசிய தினம் நேற்று அந்நாட்டில்
கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சீன தேசிய தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வந்தாலும்,
இது 70-வது என்பதால் மிகவும் பிரமாண்டமான விழாவாக கொண்டாட
திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு
பெருமளவு கொண்டாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டன.

அதன்படி தலைநகர் பீஜிங்கில் உள்ள தியான்மென் சதுக்கத்தில்
தேசிய தின கொண்டாட்டங்கள் விமரிசையாக நடந்தன. இதனை
நேரில் காண, சுமார் ஒரு லட்சம் மக்கள் சீனக்கொடிகளுடன்
திரண்டிருந்தனர். விழாவில் சீன புரட்சியின் போது, உயிர் நீத்த
வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த நிலையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்
ஹாங்காங்கிலும் சீன தேசிய தினம் கொண்டாடப்பட்டது. ஹாங்காங்கை
பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் சீன தேசிய தினத்தின் போது
சீனாவுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் ஹாங்காங்கில் ஏற்கனவே கடந்த 4 மாதங்களாக சீனாவுக்கு எ
திராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சீன தேசிய தினத்தை
துக்க நாளாக கடைபிடித்து எதிர்ப்பு பேரணியை நடத்த ஜனநாயக
ஆர்வலர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்க ஹாங்காங் முழுவதும் ஆயிரக்கணக்கான
போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன.

எனினும் திட்டமிட்டப்படி ஹாங்காங்கின் மத்திய நகரம் மற்றும்
6 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கருப்பு உடைகளை அணிந்து,
வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஒருசில இடங்களில்
போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும்
இடையே மோதல் வெடித்தது.

போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை
வீசியதோடு, ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தி சுட்டனர். இதனால் ஆத்திரம்
அடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி
எறிந்தனர். மேலும் அவர்கள் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து போலீசார்
தடுப்புகளுக்கு தீவைத்தனர்.

இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்
ஒருவரின் நெஞ்சில் துப்பாக்கி குண்டு துளைத்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத
தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இது குறித்த தகவல் ஹாங்காங்
முழுவதும் பரவியதையடுத்து, போராட்டக்காரர்கள் போலீசாருக்கு எதிராக
பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

போலீசார் மீது கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசி எறிந்த
போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீவைத்தனர். இதனால்
ஹாங்காங் முழுவதும் கலவர பூமியாக காட்சி அளித்தது. போலீசார் மற்றும்
போராட்டக்காரர்கள் இடையிலான வன்முறை சம்பவங்களில் 15 பேர் படுகாயம்
அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று
வருகின்றனர். அவர்களில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இதற்கிடையே சீன தேசிய தினத்தையொட்டி மக்களிடம் உரையாற்றிய
அந்நாட்டின் அதிபர் ஜின்பிங், “ஹாங்காங்கில் ஒரு நாடு இரு அமைப்பு தொடரும்”
என கூறினார். இது பற்றி அவர் பேசுகையில், “இந்த மாபெரும் தேசத்தின்
அஸ்திவாரத்தை அசைக்கக்கூடிய எந்த சக்தியும் இல்லை. எந்தவொரு சக்தியும்
சீன மக்களையும், சீன தேசத்தையும் முன்னேறுவதைத் தடுக்க முடியாது.

ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கோட்பாட்டை சீனா கடைப்பிடித்து,
ஹாங்காங் மற்றும் மகாவ்வின் நீண்டகால செழுமை மற்றும் அமைதியை நிலைநிறுத்தி
நிலையான வளர்ச்சியை அடையும்” என கூறினார்.
-
-----------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum