ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சாபி இலக்கியத்தின் ராணி

Go down

பஞ்சாபி இலக்கியத்தின் ராணி Empty பஞ்சாபி இலக்கியத்தின் ராணி

Post by ayyasamy ram Tue Sep 24, 2019 9:00 pm


தொன்மையான பஞ்சாபி இலக்கியத்தின் ராணியாகவும்
கருப்பு ரோஜாவாகவும் இருந்தவர் அம்ரிதா ப்ரிதம்.

சோதனைகளே நிறைந்திருந்த அம்ரிதா ப்ரிதம்
வாழ்க்கையில் பல விநோதமான, சோக சம்பவங்களும்,
துணிச்சலான முடிவுகளும் பரந்து கிடக்கின்றன.

பஞ்சாபி இலக்கிய உலகிற்குத் தனது அதிகபட்ச பங்களிப்பை
கொடுத்து வந்து புகழாலும் விருதுகளாலும் , இறுதிவரை
தளும்பாமல் இருந்தார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்
பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள்,
ஆனால் அம்ரிதா ப்ரிதம் வாழ்க்கையில் ஒவ்வொரு
வெற்றிக்குப் பின்னால் ஒரு மெல்லிய சோகம் இழையோடிக்
கொண்டே இருக்கும்.

1919-ஆம் ஆண்டு பிரிக்கப்படாத இந்தியாவின் மேற்கு
பஞ்சாபின் குஜ்ரன்வாலா என்ற இடத்தில் கர்தார் சிங் -
ராஜ் கெüர் என்ற சீக்கிய தம்பதியின் மகளாகப் பிறந்தார்.
தந்தை பள்ளிக்கூட வாத்தியார்.

அதிகம் படிக்காத அம்ரிதம் 1935-இல் "தண்டியன் கிரனன்"
.என்ற தலைப்பில் தன்னுடைய புத்தகத்தை வெளியிட்டார்.
அந்தச் சிறிய வயதில் அவருடைய எழுத்துக்களில் தெளிவு,
கற்பனைகள், பயமின்மை இருந்தது.

இவருக்கு முன் பஞ்சாபி இலக்கியத்தில் மதங்களைப் பற்றி
எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.
முதல் புத்தகத்தை வெளியிட்ட ஒரு சில வருடங்களில்
அவரது தாயார் காலமானார்.

ஆரம்பத்தில் சீக்கிய குருமார்களைப் பற்றியும், அவர்கள்
எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தார்களோ அதைப்பற்றியும்
கவிதைகள் எழுதியதற்காகப் பலரிடமிருந்து பாராட்டுகள்
குவிந்தன.

பாராட்டியவர்களுள் அனார்கலி பஜாரில் ரெடிமேட் ஆடை
கடை வைத்திருந்த ஜகத் சிங் க்வத்ராவும் ஒருவர். அவர் தன்
மகன் ப்ரிதம் சிங்கை திருமணம் செய்து கொள்ளுமாறு
கேட்டார், எவ்வித மறுப்பும் சொல்லாமல், ப்ரிதம் சிங்கை
திருமணம் செய்து கொண்ட பிறகு தன் பெயருக்குப் பின்னால்
ப்ரிதம் என்ற கணவர் பெயரை இணைத்துக்கொண்டு
அம்ரிதா கெüர் அம்ரிதா ப்ரிதம் ஆனார்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு லாகூரில் இதர
பஞ்சாபி எழுத்தாளர்கள் அம்ரிதா ப்ரிதம் மீது அதிக மோகம்
கொண்டிருந்ததால், பஞ்சாபி எழுத்தாளர்கள் அனைவரும்
அம்ரிதா ப்ரிதமைச் சுற்றியே வலம் வருவார்கள்.

அவர்களுள் அந்தக்காலக் கட்டத்தில் சிறந்த இளம் கவிஞராகப்
போற்றப்பட்ட கவிஞர் மோகன் சிங் மகிர். இவர் அம்ரிதா ப்ரிதம்
மீது மோகம் மட்டும் கொள்ளாமல் காதல் கொண்டார்.
ஆனால் அம்ரிதா அதை ஏற்கவில்லை.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு டெல்லி வந்த
ப்ரிதம் அகில இந்திய வானொலியின் பஞ்சாபி சேவையில்
தினப்படி ரூ.5 }க்கு பணியில் சேருகிறார். "இரண்டு குழந்தைகளை
நானே வளர்க்கிறேன்', என்றும் தன்னை விவாகரத்துச்
செய்யுமாறு தன்னுடைய கணவரை வற்புறுத்துகிறார்.

விவாகரத்தும் கிடைக்கிறது. தொலைக்காட்சியிலும்
நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கினார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பஞ்சாபி இலக்கியத்தின் ராணி Empty Re: பஞ்சாபி இலக்கியத்தின் ராணி

Post by ayyasamy ram Tue Sep 24, 2019 9:03 pm



பஞ்சாபி இலக்கியத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற
நோக்கத்தில் 1966-ஆம் ஆண்டு ஆரம்பித்த "நாக்மணி"
எனும் பஞ்சாபி இலக்கியப் பத்திரிகையை மிகவும் நேசித்தார்.

வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த பஞ்சாபி இலக்கிய
எழுத்தாளர்களுக்கு "நாக்மணி' பத்திரிகையில் எழுத
வாய்ப்புக் கொடுத்தார். இதனால் பஞ்சாபி இலக்கியம்
வேகமாக வளரத் தொடங்கியது. இதனால் காலச்சக்கரம்
சுழலச் சுழல டில்லி வீட்டில் தினமும் பஞ்சாபி எழுத்தாளர்கள்
அம்ரிதம் ப்ரிதாவைப் பார்க்க படையெடுத்தார்கள்.

பெரிய எழுத்தாளராகவும் கவிஞராக இருந்த போதும்
ஒரு நாளும் அரசியலைப் பற்றி கவலை கொண்டது
கிடையாது. சீக்கிய மதத்தில் பிறந்த அம்ரிதா சீக்கிய
மதத்திற்கு எதிராக எழுதியதால், நேரில் ஆஜராகி விளக்கம்
தருமாறு அமிர்தசரஸ் நீதிமன்றம் வாரண்ட் அனுப்பியது.

எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கை தன்னோடு அழைத்துக்
கொண்டு அமிர்தசரஸ் நீதிமன்றம் சென்றார். இப்படிப்
பலவிதமான வழக்குகளை அம்ரிதா சந்திக்க நேரிட்டது.

அம்ரிதாவின் இலக்கியப் பயணத்தில் மண்ணெண்ணெயின்
துர்நாற்றம் (Stench of Kerosene) என்ற சிறுகதை
அதிகம் பேசப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையில் ஏற்பட்ட
வன்முறையில் ஏராளமான இந்து, முஸ்லிம் மற்றும்
சீக்கியர்கள் இறந்தனர். பலர் காயமுற்றனர், இதை நேரில்
பார்த்து அனுபவித்த அம்ரிதா "பிஞ்ச்ர்" (Pinjar) என்ற
தலைப்பில் நாவலாக எழுதினார். இது பிற்பாடு இந்தியில்
திரைப்படமாகவும் வந்தது.

பிரிவினைக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட அம்ரிதா, 2002-ஆம்
ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தைப் பற்றி
மனிதர்களாகிய நாம் ஏன் சண்டையிட்டுக் கொள்கிறோம்
பல்வேறு வண்ணங்களில் அழகாகப் பூக்கும் மலர்களிடையே
பொறாமை ஏற்படுவதில்லை, இதை நாம் மலர்களிடமிருந்து
கற்றுக்கொள்ளலாமே என்று அறிவுறுத்தினார்.

அம்ரிதாவைப் போல் லாகூரிலிருந்து இந்தியா வந்த
மற்றுமொரு சீக்கிய எழுத்தாளர் குஷ்வந்த் சிங், பிஞ்சர் நாவலை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர், அம்ரிதாவின் வாழ்க்கை
வரலாற்றை எழுதுவதற்காக இருவரும் பல முறை
விவாதித்துள்ளனர்.

இறுதியில் அம்ரிதாவிடம், உன்னுடைய வாழ்க்கை வரலாற்றை
ரெவின்யூ ஸ்டாம்ப் பின்புறம் எழுதிவிடலாம் என்று
குஷ்வ்ந்த் சிங் சொல்ல "ரெவின்யூ ஸ்டாம்ப்' என்ற கிண்டலாகச்
சொன்ன தலைப்பையே வைத்து தன் சுயசரிதையை எழுதினார்.

1956- ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது, 1969-ஆம்
ஆண்டு பத்மஸ்ரீ, 2004-ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதுகளைப்
பெற்றார் அம்ரிதம் ப்ரிதா.

அம்ரிதாவின் இலக்கிய எழுத்தில் மயங்கி மனதை பறிகொடுத்த
அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி, அம்ரிதாவை
மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்தார்.

இந்திரா காந்திக்கு பிடித்த எழுத்தாளர் என்பதால் என்னவோ
இந்திரா காந்தி மறைந்த அதே அக்டோபர் 31- ஆம் தேதி,
2005-ஆம் ஆண்டு தன்னுடைய 86-ஆவது வயதில் மறைந்தார்.
-
---------------------------
- ரா. சுந்தர்ராமன்
நன்றி- தினமணி கொண்டாட்டம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum