புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_lcap இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_voting_bar இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_lcap இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_voting_bar இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_lcap இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_voting_bar இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_lcap இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_voting_bar இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_lcap இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_voting_bar இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_lcap இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_voting_bar இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_lcap இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_voting_bar இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_lcap இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_voting_bar இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_lcap இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_voting_bar இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_lcap இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_voting_bar இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_lcap இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_voting_bar இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_lcap இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_voting_bar இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_lcap இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_voting_bar இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_lcap இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_voting_bar இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_lcap இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_voting_bar இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_lcap இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_voting_bar இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று அன்னி பெசண்ட் நினைவு தினம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Sep 20, 2019 2:28 pm


பெண் விடுதலைக்காகப் போராடிய எழுத்தாளர் அன்னி வூட் பெசண்ட் நினைவு தினம் இன்று.

1847 ஆம் ஆண்டு அக்டோபர் 1 –ந் தேதி லண்டனில் ஒரு சாதாரண ஐரியக் குடும்பத்தில் பிறந்தார் அன்னி. இவர் 1867 இல் தனது 19 வது வயதில் பிராங்க் பெசண்ட் என்ற 29 வயது மத குருவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. சுதந்திர மனப்போக்கு கொண்ட அன்னி-யை அவரது கணவர் பெசண்ட் கிருஸ்துவ மதக் கொள்கைக்கு ஏற்ப நடக்கும் படி வற்புறுத்தி உள்ளார். இதையடுத்து 1873 ஆம் ஆண்டு அன்னி கணவரிடம் இருந்து பிரிந்து
வாழ முடிவெடுத்தார். அதன் பின்னர் பல கட்டுரைகள் எழுதினார். பண்ணை விவசாயிகள் உரிமைக்காகவும் போராடினார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர படிப்பைத் தொடர்ந்த அன்னி பெசண்ட் மூடப் பழக்கவழக்கங்களுக்கு எதிராக பரப்புரை செய்தார். ‘நியூமால் தூசியன் அமைப்பு’ என்ற சீர்திருத்தச் சங்கத்துக்கு தலைவியானார். தொடர்ந்து ‘லிங்க்’ என்ற பத்திரிகை தொடங்கி இந்தியா, அயர்லாந் நாடுகளில் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார். தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்தார்.

‘ரகசிய மதக்கோட்பாடு’ என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி அம்மையாரை 1889 இல் அன்னி பெசண்ட் சந்தித்தார். அது அன்னி-யின் வாழ்க்கையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. அதாவது இந்த சந்திப்புக்கு பிறகு அன்னி பெசண்ட் தன்னுடைய நாத்திக வாதத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரம்மஞான சங்கத்தில் உறுப்பினரானார். 1893 ஆம் ஆண்டு பிரம்மஞான சபையின் உறுப்பினராக முதற் தடவையாக இந்தியா வந்தார். அதையடுத்து சென்னையில் அடையாறில் பிரம்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். இந்து சாத்திரங்களை ஆழ்ந்து படித்து பல நூல்களை எழுதினார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

அன்னி பெசண்ட் இந்திய விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக ‘காமன் வீல்’ என்ற வாரப் பத்திரிகையை 1913 இல் துவங்கினார். அதையடுத்து 1914 ஆம் ஆண்டு சென்னையில் ‘நியூ இந்தியா’ என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்தார். 1907 இல் சூரத் நகரில் நடந்த இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். அதையடுத்து 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்கு தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய விடுதலைக்காக பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்ற அன்னி பெசண்ட் தனது 81 வது வயதில் அரசியலில் இருந்து விலகினார். தனது இறுதி காலத்தில் இந்திய மெய்யியலாளரான ஜிட்டு கிருஷ்ண மூர்த்தியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணினார். பிரம்மஞான சபையின் முன்னேற்றத்தில் முனைப்பாக ஈடுபட்ட அன்னி பெசண்ட் 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னையில் உள்ள அடையாற்றில் காலமானார்.
(ராம் பிரசாத் -புதியதலைமுறை)

இவரைப் போலவே இன்னொருவர்.இருவருக்கும் உள்ள ஒற்றுமையை பார்த்து விடலாமா?

avatar
Guest
Guest

PostGuest Fri Sep 20, 2019 2:30 pm

ஒருவர் அன்னிபெசண்ட்,இன்னொருவர் நிவேதிதா.

* இருவரின் தாய்நாடும் அயர்லாந்து. ஐரிஷ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அக்டோபர் மாதம் பிறந்தவர்கள். மார்கரெட் எலிசபெத் நோபல் (Margaret Elizabeth Noble) என்கிற இயற்பெயர் கொண்ட சகோதரி நிவேதிதா, அக்டோபர் 28, 1867-ல் அயர்லாந்து நாட்டின் வடபகுதி மாகாணமான, டைரோனில் உள்ள டங்கனன் எனும் ஊரில் பிறந்தார்.
 
அன்னி வூட் பெசன்ட் (Annie Wood Besant), அக்டோபர் 1, 1847-ல் லண்டனில் பிறந்தவர். எனினும், இவரின் தந்தை வில்லியம் பைஜ்வூட் அயர்லாந்தில் பிறந்து லண்டனில் குடியேறியவர்.

* இருவரும் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர்கள். மார்கரெட் எலிசபெத் நோபலின் தந்தை சாமுவேல் ரிச்மண்ட், மத போதகராகப் புகழ்பெற்றவர். ஏழைகளுக்குச் சேவை புரிந்து வந்தவர். கடின உழைப்பு காரணமாக, முப்பத்து நான்காம் வயதிலேயே மறைந்தார். அன்னி பெசன்ட், தனது ஐந்தாவது வயதிலேயே தந்தையை இழந்தவர். 

* சிறு வயதிலேயே ஏசு கிறிஸ்து மீது ஈடுபாடு மிக்கவராக இருந்தாலும், மதம் என்பது கோட்பாடுகளை நம்புவதல்ல; உண்மைப் பொருளுக்கான தேடல் என்ற தமது கருத்தால், சர்ச்சுக்கு செல்வதை நிறுத்தியவர் மார்கரெட் எலிசபெத். பிறகு, மாற்று மதத்தில் உள்ள கோட்பாடுகளை அறியும் பொருட்டு, புத்த மதம் பற்றி பயின்று, அந்தப் போதனைகளில் ஈடுபாடுகொண்டார்.

பிராங்க் பெசன்ட் என்ற மத குருவை மணந்த அன்னி பெசன்ட், இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட நோயினால் மனமுடைந்து நாத்திகரானவர், சீர்திருத்தக் கருத்துகளைப் பிரசாரம் செய்ததால், மத குருமார்களின் எதிர்ப்புக்கு ஆளானார்.

* ஆசிரியையாக தமது பணியைத் தொடங்கிய மார்கரெட் எலிசபெத், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெஸ்டலாஜி எனும் ஆசிரியர் கண்டுபிடித்திருந்த புதிய கல்விமுறையின் மீது ஈடுபாடு ஏற்பட்டு, அதனை அனைவருக்குமான கல்வியாக நடைமுறைக்குக் கொண்டுவர, 1890-ம் ஆண்டு லண்டனுக்குச் சென்றார். சமூகப் பிரச்னைகளுக்கான கருத்துகளைத் தனது எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தினார்.
 
பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்த அன்னி பெசன்ட், கணவன் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து லண்டனுக்குத் திரும்பினார். 'நியூமால் தூசியன் அமைப்பு' என்ற சீர்திருத்தச் சங்கத்துக்குத் தலைவியானார். 'லிங்க்' என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி... பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தார். 

* 1895-ம் ஆண்டில் லண்டனில் விவேகானந்தரைச் சந்தித்து அவருடைய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார் மார்கரெட் எலிசபெத். எனினும், விவேகானந்தருடன் பல்வேறு விஷயங்களில் கடுமையான விவாதங்களை நடத்தினார். '’என் நாட்டுப் பெண்களின் கல்வி குறித்த திட்டங்களில் நீ பெரிதும் உதவ முடியும்'' என்ற விவேகானந்தரின் அழைப்பை ஏற்று, 1898-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார்.
 
1889-ம் ஆண்டில் பாசிரில் 'The Secret Doctrine' என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி அம்மையாரைச் சந்தித்தது, அன்னி பெசன்ட் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. நாத்திகத்தைக் கைவிட்டு ஆத்திகரானார். பிளேவட்ஸ்கியின் பிரும்மஞான சங்கத்தில் உறுப்பினரானார். 1891-ம் ஆண்டு பிளேவட்ஸ்கி இறந்ததை அடுத்து, 1893-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார். 

* சுவாமி விவேகானந்தரிடம் பிரம்மச்சரிய தீட்சை பெற்று நிவேதிதா ('தெய்வத்துக்கு அர்ப்பணிப்பு' என்று பொருள்) என்ற பெயரைப் பெற்றார் மார்கரெட் எலிசபெத். அன்னை சாரதா தேவி நடத்திய பள்ளியில் கல்விப் பணி, பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி எனப் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டார். 1902 டிசம்பர் 19-ம் தேதி சென்னைக்கு வந்தவர், சொற்பொழிவுகளில் பங்கேற்றார்.
 
சென்னைக்கு வந்து அடையாற்றில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார் அன்னி பெசன்ட். இந்து சாத்திரங்களை ஆழ்ந்து படித்து, பல நூல்களை எழுதினார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 'காமன் வீல்' என்ற வார இதழையும், 'நியூ இந்தியா' என்ற நாளேட்டையும் ஆரம்பித்து, சுதந்திரப் போராட்டம் மற்றும் சமூகப் பிரச்னைகளை எழுதினார்.

* சகோதரி நிவேதிதாவை, மகாகவி பாரதியார் தமது குருவாகக் குறிப்பிடுவார். ஒருமுறை, ''உங்கள் மனைவியை அழைத்து வரவில்லையா?'' என பாரதியாரிடம் கேட்டார் சகோதரி நிவேதிதா. அதற்கு பாரதியார், ''சமுதாய வழக்கப்படி அவரை வெளியில் எங்கும் அழைத்துச் செல்வதில்லை'' என்றார். ''உங்கள் மனைவிக்கே நீங்கள் சம உரிமையும் விடுதலையும் கொடுப்பதில்லை. நாட்டுக்கு எவ்வாறு விடுதலை பெற்றுத்தரப் போகிறீர்கள்?'' எனக் கேட்டு, பாரதியாருக்குப் பெண்களின் முன்னேற்றத்துக்கான சிந்தனையைத் தூண்டியவர். இந்தியர்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து உழைத்த நிவேதிதா, அக்டோபர் 13, 1911 அன்று டார்ஜிலிங்கில் மறைந்தார்.
 
சுதந்திரப் போராட்டத்துக்காக இந்திய அரசியலிலும் ஈடுபட்டு, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் ஓராண்டுக்கு இருந்த அன்னி பெசன்ட் அம்மையார், பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகினார். இந்திய மெய்யியலாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி உதவியுடன், பிரும்மஞான சபையின் முன்னேற்றத்தில் முனைப்பாக ஈடுபட்டார். 1933-ம் ஆண்டு செப்டம்பர் 20-ல் சென்னையில் காலமானார். (கே.யுவராஜன் ,விகடன்)


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 20, 2019 3:39 pm

 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் Fo0KvHKT2expQP4TFgwb+e73b54e5-d2f4-4e34-80ea-32d3dac5ace1
-
 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் 103459460  இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 20, 2019 5:28 pm

அன்னி பெசன்ட் வாழ்க்கை வரலாறை ஆங்கிலத்தில்
தமிழக அன்றைய ஆளுநர் ஸ்ரீ ஸ்ரீப்ரகாசா அவர்கள்
எழுதியதை பலமுறை படித்து ரசித்த அனுபவம் உண்டு.
அன்னிபெசன்ட் என்பவரை நினைக்கும்போது GK ஐ நினைக்காமல்
இருக்கமுடியாது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Oct 01, 2019 10:43 am

 இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் 1571444738 ஐயா.
அவர் பாகிஸ்தானைப் பற்றியும் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். சரிதானா?

avatar
Guest
Guest

PostGuest Tue Oct 01, 2019 10:44 am

இன்று அன்னி பெசன்ட் பிறந்த தினமாகும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 01, 2019 3:28 pm

சக்தி18 wrote: இன்று அன்னி  பெசண்ட் நினைவு தினம் 1571444738 ஐயா.
அவர் பாகிஸ்தானைப் பற்றியும் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். சரிதானா?
மேற்கோள் செய்த பதிவு: 1304868

மன்னிக்கவும். எனக்கு தெரியாது.
ஸ்ரீ ஸ்ரீ ப்ரகாசா அவர்கள் அன்னி பெசன்ட் அவர்கள் வாழ்க்கை வரலாறை எழுதிய புத்தகம் எனது தந்தையிடம் இருந்தது. அதனால் நான் அறிவேன்.
பாகிஸ்தானை பற்றி எழுதியது தெரியாது.
எனது பதிவில் (#4 ) GK என்று எழுதி இருந்தேன். இன்று பார்க்கும் போது தவறு கண்ணில் பட்டது. அவர் JK , ஜிட்டு க்ரிஷ்ணமுர்த்தி ....தத்துவ ஞானி.

இன்று அன்னி பெசன்ட் பிறந்த தினம் இல்லையே!

ரமணியன்

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Oct 01, 2019 3:35 pm

அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant; அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933)

(விக்கிபீடியா)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 01, 2019 5:55 pm

சக்தி18 wrote:அன்னி வூட் பெசண்ட் (Annie Wood Besant; அக்டோபர் 1, 1847 – செப்டம்பர் 20, 1933)

(விக்கிபீடியா)
மேற்கோள் செய்த பதிவு: 1304872

உங்கள் பதிவு சரியானதே சக்தி.

நினைவு தினத்திற்கு
பிறந்த தினத்திற்கும் குழப்பிக்கொண்டுள்ளேன்.

இன்று முதியோர் தினமும் கூட......
அதுதான் ...நான்....
ஹி ஹி ஹி ஹி ஹி

ரமணியன்

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 01, 2019 7:47 pm


விடுதலை பெற்ற இந்தியாவில் குதிரை பேரத்தை ஊக்குவித்த
ஸ்ரீ பிரகாசா


1952 ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும்
பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவான சமயத்தில் சர்ச்சைக்குரிய
முதல் ஆளுநர் பொறுப்பு வகித்தார். அவர் பெயர் ஸ்ரீபிரகாசா.

அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் 62 இடங்களுக்கு மேல்
பெற்றிருந்தனர். பிரகாசம் தலைமையில் சிறிய கட்சிகளைக்
கொண்ட கூட்டணி அரசு அமைக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால்,
ஆளுநர் பிரகாசா, கம்யூனிஸ்ட் பங்களிப்புடன் ஒரு அரசு அமைவதை
ஏற்கவில்லை.

அதைத் தடுக்கும் வகையில் ஆட்சி அமைக்க யாரையும் அழைக்காமல்
மூன்று மாதங்கள் வரை இழுத்தடித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்குள் நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்து
ராஜாஜியை முதல்வராக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து,
சட்டமன்றத்திலோ, மேலவையிலோ உறுப்பினராக இல்லாத ராஜாஜியை
முதல்வராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் பிரகாசா.

முதல்வரான பிறகு ராஜாஜி எதிர்க்கட்சிகளுடன் பேரம் நடத்தி தனக்கு
போதுமான பெரும்பான்மை உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டார்
என்பது வரலாறு.
-
நன்றி-நக்கீரன்



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக