ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 
Dr.S.Soundarapandian
 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_m10 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்

Go down

 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Empty ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்

Post by ayyasamy ram Sun Sep 15, 2019 7:45 am

 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Shri-chidambaram-temple
-


கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால்
மண்டபத்தில் தனியார் திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி
அளித்ததாக, கோயில் தீட்சிதர் ஒருவர் பணியிடை நீக்கம்
செய்யப்பட்டார்.

பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ராஜ்யசபை
எனப்படும் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில்
ஆனி, மார்கழி தரிசன விழாக்களின்போது ஸ்ரீசிவகாமசுந்தரி
சமேத ஸ்ரீமந்நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகமும், திருவாபரண
அலங்காரக் காட்சியும் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில்
சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபரின் குடும்ப திருமண
நிகழ்ச்சி கடந்த 12-ஆம் தேதி வெகு விமரிசையாக
நடைபெற்றது.

ஆனால், கோயில் மரபை மீறி, ஆயிரங்கால் மண்டபத்தில்
தனியார் திருமணத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பாக
சர்ச்சை எழுந்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும்
கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கோயில் பொது தீட்சிதர்களின் செயலர்
பாலகணேச தீட்சிதர் சனிக்கிழமை கூறியதாவது:

ஆயிரங்கால் மண்டபத்தில் தனியார் திருமணத்துக்கு அனுமதி
அளித்த பட்டு தீட்சிதருக்கு ரூ.1,001 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், அவர் மூன்று சுற்று முறை (2 மாதங்கள்) சித் சபையில்
ஏறி பூஜை செய்வதிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம்
செய்யப்பட்டுள்ளார் என்றார்.
-
-----------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Empty Re: ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்

Post by ayyasamy ram Sun Sep 15, 2019 7:46 am

 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் JVcNO2zlSvqLC4yB1tZG+348a6999-79a4-4b11-b35f-2d124ae78e88
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Empty Re: ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்

Post by ayyasamy ram Sun Sep 15, 2019 2:06 pm

வாட்ஸ்அப் பகிர்வு
------------------
சிதம்பரம் கோயிலில் நடந்த திருமணம் பற்றி பல சர்ச்சைகள் வருகின்றன. இவை இக்காலத்தில் தவிர்க்கமுடியாதவை.

இன்றைய நிலையில் Social mediya பலம் அதிகம். இதற்க்கு அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகளே பயந்து சற்று கவனமாக நடந்துவரும் நிலையில்,

திராவிட அரசியலும், ஆட்சியும், பிராமணவெறுப்பும் அதிகம் உள்ள தமிழகத்தில், கோயில் நிர்வாகமும் அர்ச்சகர்களும் இனியேனும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

உண்மையில் தில்லை கோயில் நிகழ்வு வறுந்தத்தக்கதே. மனம் பதப்பதைக்கவைக்கும் செயல்.
ஆனால் இதை காரணமாக வைத்து தில்லை தீக்ஷிதர்கள் மீதான வன்மத்தை வெளிகாட்டுவது உள்நோக்கமானது. வெறுப்பு அரசியலே.

உண்மையில் தில்லை கோயிலின் மீது பக்தி உள்ளவர்கள் கண்டிப்பதோடு நிறுத்திக்கொண்டு, இனி இதுபோல் நடவாதவாறு அறிவுறுத்தவேண்டுமே ஒழிய, இப்பொழுது உள்ள அமைப்பை சீர்குலைக்க முயற்ச்சித்தல் கூடாது.நாத்திக திராவிடவாதிகளுக்கு நாம் வழிவகுத்தும் தரக்கூடாது.

ஒரு பெரிய நிர்வாகத்தில் இப்படியான சறுக்கல்கள் வரவே செய்யும். இதனை நிர்வாகம் செய்தவர்கள் அனுபபூர்வமாக உணர்வார்கள்.

ஆனால் சிலர் இதனை எடுத்தோம் கவிழ்தோம் என பேசுவது வெறுப்பின் வெளிப்பாடே ஒழிய, தில்லை கோயில் மீது உள்ள அக்கரை இல்லை.

எனவே இப்படியான தவறுகளை சரிசெய்து, இனி இதுபோல் தவறு நடக்காதவாறு நிர்வாகம் தன்னை சரிசெய்துகொள்ளவேண்டும் என்பதே ஆன்மீக பக்தர்கள் கோரிக்கையாக இருக்கவேண்டும்.

அடுத்து பணத்திற்க்காக இப்படியாக நடந்துகொண்டார்கள் என்று கூற இங்கு எவருக்கும் யோக்யதை இல்லை.

காரணம் பணம் ஆசையால் இவ்வாறு செய்திருந்தால் தண்டிக்கப்படவேண்டும் என்பது சரியே.

ஆனால் பத்திரிக்கை முதல் அனைவரும் யோக்யன் மாதிரி பேசுவது அசல் போலித்தனம். அவரவர் துறையில் பணம் கொடுத்தால் என்னவெல்லாம் செய்வார்கள் எந்தளவு கீழ்தரமாக இறங்குவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

என்ன இங்கு இடம் கோயில் என்பதால் மற்ற தொழிலோடு சமப்படுத்தமுடியாது என்பதை அனுபவப்படமாக கோயில் நிர்வாகம் கொள்ளவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில், நிர்வாக நெருக்கடி காரணமாகவோ, அல்லது ஆதிக்கம் காரணமாகவோ அல்லது வேறு எந்த காரணத்தினாலோ கோயில்களில் அர்ச்சகர்கள் நெகிழ்ந்து செல்லவேண்டிய தர்மசங்கடம் ஏற்படுகின்றது.

ஆனால் அந்த நெகிழ்வின் எல்லை limits எது என்பதில் அர்ச்சகர்கள் கவனமாக இருக்கவேண்டும். இதை இனி சரியாக கவனித்து எல்லை மீறாமல் இருக்க அறிவுறுத்தவேண்டும். அவ்வாறு செய்ய அர்ச்சகர்கள் முனையவில்லை என்றால், எதிர்காலத்தில் இனி அர்ச்சகர்கள் சமூகத்தில் #அசிங்கப்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடும்.

தில்லையை பொருத்தவரை தீக்ஷிதர்கள் #தியாகம் அளவிடற்கரியது. மற்ற சைவர்கள் எவரும் செய்யாத தியாகத்தை தீக்ஷிதர்கள் மரபு அக்கோயிலுக்கு செய்துள்ளார்கள்.

1)தில்லை கோயில் நடராஜர் அருகே பெருமாள் பிரதிஷ்டை செய்ய நாயக்கமன்னன் முரட்டு பிடிவாதம் செய்தபொழுது, அதனை எதிர்த்து #இருபது தீக்ஷிதர்கள் கோயில் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்டார்கள்.அவ்வாறு கோபுரத்தில் ஏற முனைந்த இருவரை சுட்டுக்கொன்றார்கள். இதனை சகிக்கமுடியாத தீக்ஷிதர் இல்ல பெண் ஒருவர் தன் கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.(ஆதாரம் -கீழே படம்)

2)ஹைதர்அலி காலத்தில் சிதம்பரம் கோயில் படைகள் நிற்க்கும் களமாக்கப்பட்டது.அந்நிலையில் நடராசமூர்த்தி க்கு எவ்வித ஆபத்தும் நிகழாவண்ணம் சுமார் 20 ஆண்டுகள் ஒரு பேழையில் வைத்து ஊர் ஊராக சென்று பாதுகாத்தவர்கள் தீக்ஷிதர்களே.அவ்வாறு பாதுகாத்த இடம் அம்புலப்புளி வரலாறு அனைவரும் அறிந்ததே.

3)மாராட்டியர் செப்பேடுகள் மூலம் 24-12-1648 முதல் 14- 11-1686 வரை 37 ஆண்டுகள் பத்துமாதம் 20 நாள் நடராஜர் சிதம்பரத்தில் இல்லை. இந்த காலகட்டத்தில் நடராஜர் திருவுருவத்தை பாதுகாத்தவர்கள் தில்லை தீக்ஷிதர்களே.

37 ஆண்டுகள் என்பது சாதாரணம் அல்ல. ஒரு தலைமுறை. இக்காலகட்டத்தில் அவர்கள் எப்படிபட்ட துன்பங்களை அனுபவித்திருப்பார்கள் என யூகித்தால் தான்தோன்றித்தனமான பேச்சு எழாது.

4) அடுத்து 1686 முதல் 1696 வரை தில்லை நடராசமூர்த்தி வெளியே சென்றதாக ஆயிரங்கால் மண்டபம் கல்வெட்டு கூறுகின்றது. இதற்க்கு காரணம் ஔரங்கசீப் படையெடுப்பே ஆகும்.இக்காலகட்டத்தில் நடராஜர் திருமேனியை பாதுகாத்தவர்கள் தில்லை தீக்ஷிதர்களே .

மேலும் பல விபரங்கள் தெரிய ,க.வெள்ளைவாரணர் எழுதிய தில்லை பெருங்கோயில் வரலாறு நூலை படியுங்கள்.

எனவே தீக்ஷிதர்கள் தியாகம் தில்லையை பொறுத்தவரை அளவிடற்கரியது. எனவே பக்தர்கள் தவறுகளை கண்டியுங்கள் .அதே நேரத்தில் ஒரு அமைப்பை, மரபை சீர்குலைக்க ,அழிக்க வழிவகுத்து தராதீர்கள் .
சிவார்ப்பணம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Empty Re: ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்

Post by ayyasamy ram Sun Sep 15, 2019 2:28 pm

 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Wj4vOZeTzekXZzrWd8Br+4128b7b9-92ca-4fba-9a4c-5a210f436f9a
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Empty Re: ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்

Post by Guest Sun Sep 15, 2019 5:59 pm

 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் 1571444738
தீக்ஷிதர்கள் தியாகம் என்ன தியாகம் செய்தார்கள்?
ஆனா அத்திவரதர் போய் நடராஜர் வந்தார்.ஒரு பிரச்னையை மறைக்க இன்னொன்று வரும்.
avatar
Guest
Guest


Back to top Go down

 ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம் Empty Re: ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம்: நடராஜர் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்
» கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்
» புகார் அளிக்க வந்த நபரை மசாஜ் செய்ய வைத்த துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம்
» வாட்ஸ்-அப்பில் வெளியான தபால் ஓட்டால் பரபரப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு
» ஹவாலா பணம் ரூ.4 கோடியை கொள்ளையடித்த போலீஸார் சிக்கினர்: காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum