ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள்

3 posters

Go down

பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் Empty பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள்

Post by சிவா Fri Sep 26, 2008 2:18 am

1. ஆணைப் போன்றே பெண்ணும் தன் பார்வையைத் தாழ்த்தி கற்ப்பைப் பாதுகாக்குமாறு கட்டளையிடப் பட்டிருக்கிறாள்.

''இறைநம்பிக்கையுள்ள ஆண்களுக்கு நீர் கூறும், அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிப்பாதுகாத் துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்த மானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.''

''அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள் ளட்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ளட்டும் என்று இறைநம்பிக்கையுள்ள பெண்களுக் கும் நீர் கூறும்!'' (அல்குர்ஆன் 24:30, 31)

ஷேக் முஹம்மத் அல்அமின் »ன்கீதீ தம் அள்வாவுல் பயான் என்ற தப்ªரில் குறிப்பிடுகிறார்.

தன்னுடைய பார்வையைத் தாழ்த்தி, கற்ப்பைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு இறைநம்பிக்கையுள்ள ஆண்களுக்கும், இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். கற்பபைப் பாதுகாப்பது என்பதில் விபச்சாரம், ஆண் ஓரினச் சேர்க்கை (ஹோமோ செக்ஸ்), பெண் ஓரினச் சேர்க்கை (லெஸ்பியன்), மனிதர்களிடத்தில் அருவெறுப்பாக நடப்பது, மர்மஸ் தலத்தை அவர்களிடத்தில் காட்டுவது ஆகியவை அடங்கும். இந்த வசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடிய ஆணுக்கும், பெண்ணுக்கும் பாவமன்னிப் பையும், மகத்தான கூலியையும் கொடுப்பதாக அல்லாஹ் வாக்களித் துள்ளான். இதோடு அல் அஹ்ஸாப் என்ற அத்தியாயத்தில் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் பண்பு களையும் மனித இனம் செயல் படுத்துமாயின் மகத்தான நற்கூலி உண்டு.

''நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும் பெண்களும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் இறை வழிபாடுள்ள ஆண்களும், பெண்களும் உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும் பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்விடம் உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும் நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும் தங்கள் வெட்கத்தலங்களை காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வை அதிகம் தியானம் செய்யும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் தயார் படுத்தி யிருக்கிறான்.'' (அல்குர்ஆன் 33:35)

அள்வாவுல் பயான் 6ழூ ழூ186,187

முக்னி என்ற நூலில் 8ழூ ழூ198 ல் குறிப்பிடப்படுகிறது. ''இரண்டு பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவார் களானால் இருவரும் விபச்சாரிகளாவர். சபிக்கப்பட்ட வர்களாவர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டால் இருவரும் விபச்சாரிகளாவர். இருவரும் எச்சரிக்கை செய்யப்படவேண்டியவர்கள் ஏனெனில், அச்செயல் தண்டனை வரையறுக்கப்படாத விபச்சார மாகும்.''

இஸ்லாமியப் பெண் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக குமரிப் பெண்கள் இதுபோன்ற தீய செயல்களை விட்டும் எச்சரிக்கையோடும், பாதுகாப் போடும் இருப்பது அவசியம்.

பார்வையைத் தாழ்த்திக் கொள்வது பற்றி இப்னுல் கையிம் அல்ஜவாபுல் காபி என்ற நூலில் 129,130-ம் பக்கத்தில் குறிப்பிடுகிறார்.

பார்வைதான் இச்சையின் வழிகாட்டியாகவும், அதன் தூதாகவும் இருக்கிறது. பார்வையைப் பாதுகாப் பதுதான் கற்பைப் பாதுகாப்பதற்கு அடிப்படையாகும். யார் பார்வையைத் திறந்து விடுகிறாரோ அவர் தன்னை நாசத்தில் ஆழ்த்திவிடுகிறார்.

''அலீயே ஒரு பார்வையைத் தொடர்ந்து இன்னொரு முறை பார்க்காதே! உனக்கு முதல் பார்வை மட்டும் தான். (குற்றமற்றதாக இருக்கும்)'' என்று நபி(ஸல்) அவர்கள் தம் மருமகன் அலீ(ரழி) அவர்களிடம் கூறினார்கள்.

அதாவது திடீரென விழும் பார்வையினால் குற்ற மில்லை, மேலும் அவர்களைத் தொட்டும் அறிவிக்கப் படுகிறது. பார்வை என்பது இப்லீஸின் அம்புகளில் விஷ மூட்டப்பட்ட அம்பாகும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

மனிதனை வந்து சேருகின்ற எல்லாவிதமான பொதுவான சம்பவங்களும் பார்வையினால் தான்.

பார்வை உணர்வைத் தூண்டுகிறது. உணர்வு சிந்த னையைத் தூண்டுகிறது. சிந்தனை ஆசையைத் தூண்டு கிறது. ஆசை நாட்டத்தைத் தூண்டுகிறது. பின்னர் அது வலுவாகி உறுதியான எண்ணமாம் செயல் அளவில் நிகழக் கூடியதாக மாறி விடுகிறது. எனவே, பார்வையைத் தாழ்த்திக் கொள்வதின் மீது பெறுமை செய்வது, பார்ப்பதினால் ஏற்படும் தீய விளைவுகளின் மீது பொறுமை செய்வதை விட இலேசானதாகும் என்று சொல்லப்படுகிறது.

இஸ்லாமியப் பெண்ணே! அன்னிய ஆண்களைப் பார்ப்பதை விட்டும் உன் பார்வையைத் தாழ்த்திக் கொள்! தொலைக் காட்சியிலும், பத்திரிக்கைகளிலும் காட்டப் படும் மோசமான படங்களைப் பார்க்காதே! மோசமான முடிவை விட்டும் உன்னை நீ பாதுகாத்துக் கொள்! பார் வைகள் பல மனிதர்களை கைசேதத்தில் தள்ளியுள்ளது. ஏனெனில் பெரிய தீ சிறிய தீப்பொறியிலிருந்து ஏற்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் Empty 2. கற்பைக் காத்துக் கொள்வதில் ஒன்று இசையுடனான பாடல்களை வெறுப்பதாகும்.

Post by சிவா Fri Sep 26, 2008 2:19 am

இகாததுல்லஹ்பான் என்ற நூலின் 1ழூ ழூ248 ல் இப்னுல் கையிம் குறிப்படுகிறார். அறிவும் புத்தியும் குறைந்தவர் களை தன்வசம் இழுப்பதில் ஷைத்தானின் சூழ்ச்சியில் நின்றும் உள்ளதுதான் கைதட்டுதலும், சீட்டி அடித்தலு மாகும். குர்ஆனை விட்டும் திசை திருப்பும் இசைக் கருவிகள் மூலம் இசைக்கப்படும் பாடல்கள் இவை பாவத்தின் மீதும் தவறின் மீதும் படிய வைத்து விடுகிறது. இவை ஷைத்தானின் வாக்குகளாகவும் அல்லாஹ்வை விட்டும் தடுக்கக் கூடியதாகவும் உள்ளன. அவை ஓரினச் சேர்க்கை மற்றும் விபச்சாரத்திற்குரிய மந்திரமாகவும் உள்ளன. இதன் மூலம் கெட்ட காதலன் தன் காதலியிடம் தன் தேவையைப் ப+ர்த்தி செய்யும் நிலை ஏற்படுகிறது.

அதே நேரத்தில் இசை கருவிகளுடன் பாடல்களை பெண்களிடமிருந்தும், முடி முளைக்காத இளைஞர் களிடமிருந்தும் செவியுறுவது மிகப்பெரிய தவறானதா கவும் விலக்கப்பட்டதாகவும் இருக்கிறது. மார்க்கத்தைக் கெடுப்பதாகவும் உள்ளது. மார்க்கத்தின் மீது பற்றுள்ள வன் இசைக்கருவிகளைக் கேட்பதை விட்டும் தம் குடும்பத்தை தடுத்து நிறுத்தட்டும். அதற்குக் காரணமான வற்றை விட்டும் தடுக்கவேண்டும். சந்தேகத்திற்குரிய காரியங்களை விட்டும் அவர்களைத் தடுப்பது மார்க் கத்தின் மீது ரோஷம் கொண்ட ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்..

ஒரு பெண்ணைத் தன் வசப்படுத்துவது ஆண் மீது சிரமமாகும்போது அந்தப் பெண்ணுக்கு இசைப்பாடல் களை கேட்கச் செய்யமுயற்சிப்பான். அப்போது அவளு டைய மனம் இளகும். ஏனெனில் பெண்களைப் பொறுத் தவரை இராகங்களுக்கு விரைவாக வசப்பட்டு விடுவார்கள். ராகம் இசையோடு இருக்கும்போது அவளுடைய உணர்வுகள் இரண்டு விதத்தில் அதிகரிக்கிறது. ஒன்று இசை சப்தத்தின் மூலமும், மற்றொன்று அதில் நிறைந் திருக்கும் பொருள் மூலமும், இதோடு கூட ஆடலும் பாடலும் சேரும்போது இன்னும் அதிகமான விபரீதங்கள் ஏற்படுகின்றன. பாடல் மூலம் ஒரு பெண் கற்பம் தரிப்பதாக இருந்தால் இதுபோன்ற பாடல்களால் கற்பம் தரித்துவிடுவாள் அந்த அளவிற்கு மோசமாக இன்றைய பாடல்கள் உள்ளன. அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். எத்தனையோ சுதந்திரமான பெண்கள் பாடல்களால் விபச்சாரிகளாக மாறியுள்ளார்கள்.

இஸ்லாமியப் பெண்ணே! நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! மிகவும் விபரீதமான இந்த கெட்ட குண நோயி லிருந்து எச்சரிக்கையாக இருந்து கொள்! இது பல விதத்தில் முஸ்லிகளுக்கிடையில் பரப்பி விடப்பட்டுள் ளது. இஸ்லாத்தைப் பற்றிய அறிவு ஞானம் இல்லாத எத்தனையோ இளம் பெண்கள் அந்த பாடல்களை அது தயாரிக்கப்படும் இடங்களிலிருந்தே பெற்று அதை ஒருவருக்கொருவர் அன்பளிப்பும் செய்கின்றனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் Empty 3. கற்பைப் பாதுகாக்கும் காரணங்களில் ஒன்று பெண்கள் திருமணம் செய்வது தடை செய்யப்படாத ஆண் களுடன் பயணம் செய்வதைத் தடுப்பது அவளைக் கெட்டவர்களின் தவறான எண்ணங்களை விட்டும் பாதுகாக்கும்.

Post by சிவா Fri Sep 26, 2008 2:19 am

திருமணம் தடை செய்யப்பட்டவர்கள் அல்லாது மற்றவர்களுடன்பயணம் செய்வதைத் தடைசெய்து சரியான ஹதீஸ்கள் வந்துள்ளன.

''ஒரு பெண் திருமணம் செய்வது தடை செய்யப் பட்டவர்களுடனின்றி மூன்று நாட்கள் பயணம் செய்வது கூடாது' என்று நபி(ஸல் அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

''தன்னுடன் கணவனோ, திருமண உறவு தடை செய்யப்பட்டவனோ இல்லாமல் இரண்டு நாள் பயணத்தை ஒருபெண் மேற்கொள்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.'' (நூற்கள்:புகாரி, முஸ்லிம்)

''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிற ஒருபெண் தனக்குத் திருமணம் தடை செய்யப்பட்டவரின் துணையின்றி ஓர் இரவு ஒரு பகல் பயணம் செய்வது கூடாது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப+ஹ{ரைரா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

ஹதீஸ்களில் ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் என்று வந்திருப்பதன் பொருள் அந்த காலத்தில் உள்ள பயணத்திற்கான வாகனங்களை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்டதாகும். பயணம் என்று சொல்லப்படு கின்ற எதுவாக இருந்தாலும் அது தடை செய்யப்பட்டது தான் என மார்க்க அறிஞர்கள் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.

இமாம் நவவீ ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பின் விளக்கவுரையில் 9ழூ ழூ103 ல் குறிப்பிடுகிறார்.

பயணம் என்று சொல்லக்கூடியது எதுவாக இருந் தாலும் அதில் ஒருபெண் தன் கணவனுடைய துணை அல்லது திருமண உறவு தடை செய்யப்பட்ட நபரின் துணையின்றி பயணம் செய்வது கூடாது என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. காரணம் முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பில் இது தொடர்பான ஒரு ஹதீஸ் பொதுவாகவே உள்ளது. திருமணம் செய்வது தடுக்கப்பட்ட நபருடனேயே அன்றி ஒரு பெண் பிரயாணம் செய்ய மாட்டாள் என ஹதீஸில் வந்துள்ளது. அதையே இறுதியான அறிவிப்பாகக் கொள்ளவேண்டும்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்.)

கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக பெண்கள் கூட்டத்துடன் பிரயாணம் செய்யலாம் என சிலர் கூறியுள்ளனர்.ஆனால் இது நபிவழிக்கு மாற்றமானதாகும்.

இமாம் கத்தாபி மஆலிமுஸ்ªனன் என்ற நூலில் 2ழூ ழூ276ல் இவ்வாறு குறிப்பிடுகிறார். திருமண உறவு தடைசெய்யப்பட்ட ஆணுடைய துணையின்றி பெண் பயணம் செல்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள் ளார்கள். எனவே நபி(ஸல்) அவர்கள் நிபந்தனையாக்கியது தவிர ஒரு பெண்ணுக்கு ஹஜ்ஜுக்காக பயனம் செய்வதை அனுமதிப்பது நபி வழிக்கு மாற்றமானதாகும்.

திருமணம் செய்வதற்கான அனுமதியுள்ள ஆண் களுடன் பயணம் செய்வது பாவமானதாகும். அந்த நேரத்தில் அவள் மீது ஹஜ் கடமையாகாது. பாவத்தின் பால் கொண்டு சேர்க்கும் வழியாக அது ஆம்விடும்.

பெண்கள் மற்றவர்களுடன் பயணம் செய்வதை பொதுவாகவே சில அறிஞர்கள் அனுமதிக்கவில்லை கடமையான ஹஜ் பிரயாணத்திற்கு மட்டும்தான் இந்த அனுமதி என்பதைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.

இமாம் நவவீ அவர்கள் மஜ்மூவு என்ற நூலில் 8ழூ ழூ249 குறிப்பிடுகிறார்கள்.

கடமையல்லாத பயணம், வியாபாரம் தொடர்பான பயணம் சந்திப்பிற்காக மேற்கொள்ளும் பயணம் போன்றவற்றில் திருமண உறவு தடை செய்யப்பட்டுள்ள நபர்களுடன்தான் ஒருபெண் பயணம் செல்ல வேண்டும்.

பெண்கள் எந்த பயணத்திலும் யாருடனும் செல்ல லாம் என இக்காலத்தில் சொல்லக் கூடியவர்களின் கூற்றை மார்க்க அறிஞர்களில் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

பெண்களைப் பொறுத்தவரை விமானத்தில் தனிமை யில் பயணம் செய்யும்போது அவளைத் திருமண உறவு தடைசெய்யப்பட்ட ஒருவர் விமானத்தில் அவளை ஏற்றிவிடுகிறார்; மற்றொருவர் விமானத்தைவிட்டு இறங்கும்போது வரவேற்கிறார்; விமானத்திலோ அதிக மான ஆண்களும் பெண்களும் இருப்பதால் அது பாதுகாப்பானதாக அமையும் என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால் அவர்களின் இந்தக் கருத்து சரியில்லை. ஏனெனில் விமானம்தான் மற்ற வாகனங்களை விட அதிக ஆபத்தானதாக உள்ளது. அதில் பயணிகள் ஆண் - பெண் என்ற எவ்வித வித்தியாசமும் இன்றி இரண்டறக் கலந்திருக்கிறார்கள். சிலவேளை அன்னிய ஆண்களின் அருகாமையில் உட்காரவேண்டிய நிலையும் ஏற்பட்டு விடுகிறது. சில சமயங்களில் விமானத்தை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடுகின்றனர். அப்போது அவளை வரவேற்க அங்கு யாரும் இல்லாது போய் விடுகிறார்கள். இதுபோன்ற சூழலில் அவள் ஆபத்து களைச் சந்திக்கின்றாள். எதுவும் தெரியாத யாரும் இல்லாத அந்நாட்டில் அவளால் என்ன செய்ய முடியும் என்பதை இவர்கள் சற்று யோசிக்கத் தவறிவிட்டார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் Empty 4. கற்பிற்கு ஆபத்து ஏற்படும் காரணங்களில் ஒன்று அன்னிய ஆணும் அன்னிய பெண்ணும் தனிமையில் இருப்பதாகும்.

Post by சிவா Fri Sep 26, 2008 2:20 am

''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பும் ஒருவர் அவளிடம் திருமணம் தடைசெய்யப்பட்ட நபர் இல்லாத நிலையில் எந்தப் பெண்ணுடனும் தனிமையில் இருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் ஓர் ஆணுடன் தக்க துணையின்றி தனிமையில் இருக்கவேண்டாம். ஏனெனில் அங்கு மூன்றாவது நபராக ஷைத்தான் புகுந்துவிடுவான்.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' (நூல்: அஹ்மத்)

''எந்த ஓர் ஆணும் எந்த ஒரு அன்னியப் பெண்ணு டனும் தனிமையில் இருக்கவேண்டாம். ஏனெனில் ஷைத்தான் மூன்றாவது நபராக வந்து விடுகின்றான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஆமிர் இப்னு ரபீஆ(ரழி) அறிவிக்கிறார். (நூல்: அஹ்மத்)

இமாம் ஷவ்கானி நைலுல் அவ்தார் 61ழூ ழூ20 என்ற நூலில் குறிப்பிடுகிறார். அன்னியப் பெண்ணுடன் தனி மையில் இருப்பது தடுக்கப்பட்டுள்ளது என அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். தடுக்கப்படுவதற்குக் காரணம் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தனிமையில் இருக்கும்போது ஷைத்தான் மூன்றாமவனாக இருக்கிறான் என்ற ஹதீஸாகும். ஷைத்தான் வந்துவிட்டால் அவன் பாவத் திலே அவ்விருவரையும் வீழ்த்தி விடுகிறாள். ஆனால் திருமணம் செய்ய தடைசெய்யப்பட்ட ஆணுடன் இருக் கும்போது அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பது அணு மதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இங்கு பாவம் நடப்பதற் குண்டான சாத்தியம் மிகமிகக்குறைவாக உள்ளது.

சில பெண்களும், அவர்களுடைய பொறுப்புதாரிகளும் அன்னிய ஆணும் அன்னிய பெண்ணும் பலவகைகளில் தனிமையில் இருப்பதைப் பற்றி பொருட்படுத்தாது இருக்கின்றனர்.

ஒரு பெண் தன் கணவனின் ஆண் உறவினருடன் இருப்பது. அவர் முன் முகத்தைத் திறந்து நிற்பது இது எல்லா நிலையையும் விட மிக ஆபத்தானது.

''அன்னியப் பெண்கள் தனியாக இருக்கும் இடத்திற்குள் நுழையாதீர்கள்.' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, அன்சாரித் தோழர்களில் ஒருவர், 'கணவனின் சகோதரனும் செல்லக்கூடாதா?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், வெறுப்பாக அதை மரணத்துடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்கள்''

இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) பத்ஹ{ல்பாரி என்ற நூலின் 9ழூ ழூ331 ல் குறிப்பிடுகிறார்.

இமாம் நவவீ கூறுகிறார். கணவனின் உறவினர்கள் என்பது அவனுடைய தந்தை, அவனுடைய தந்தையின் உடன் பிறந்தோர், சகோதரர்கள் சகோதரரின் மகன், தந்தையின் உடன் பிறந்தோரின் மகன் போன்ற வர்களாவார்கள்.

என்றாலும் மேலுள்ள ஹதீஸில் கணவனின் தந்தை கணவனின் மகன்கள் சேரமாட்டார்கள். ஏனெனில், இவர்களைத் திருமணம் செய்வது அவளுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இவர்கள் அவளுடன் தனிமையில் இருப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தில் சகோதரன் தன் சகோதரன் மனைவியுடன் தனிமையில் இருப்பதை பார்க்கமுடிகிறது. இதை இலேசாகவும் நினைக்கின்றனர். இது மிகப்பெரிய தவறாகும். இதுதான் மரணத்திற்கு ஒப்பானது, இது தடுக்கப்பட வேண்டியதாகும்.

இமாம் ஷவ்கானி நைனுல் அவ்தார் 9ழூ ழூ331 ல் குறிப்பிடுகிறார். கணவனின் உறவினர்(சகோதரருடன்) ஒருபெண் தனிமையில் இருப்பதை மரணத்திற்கு ஒப்பிட்டு நபி(ஸல்) அவர்கள் கூறியதன் நோக்கம் அதனால் ஏற்படுகின்ற விபரீதத்தின் அச்சத்தின் காரணத்தினால் தான். மரணத்தினால் ஏற்படுகின்ற விபரீதத்தின் அச்சம் மற்றவைகளினால் ஏற்படுகின்ற அச்சத்தை விட எவ்வாறு அதிகமானதாக உள்ளதோ அதைப் போன்றே இதுவும் இருக்கிறது.

இஸ்லாமியப் பெண்ணே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! இந்த விஷயத்தில் பொடுபோக்காக இருக்காதே! மக்கள் பொடுபோக்காக இருந்தாலும் சரியே நீ அப்படி இருக்காதே! ஏனெனில் ஷரீஅத்தின் சட்டம்தான் கவனிக்கப்பட வேண்டுமே தவிர மக்களின் பழக்க வழக்கங்கள் அல்ல.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் Empty 4. கற்பிற்கு ஆபத்து ஏற்படும் காரணங்களில் ஒன்று அன்னிய ஆணும் அன்னிய பெண்ணும் தனிமையில் இருப்பதாகும்.

Post by சிவா Fri Sep 26, 2008 2:21 am

2. திருமண உறவு விலக்கப்படாத ஆண் டிரைவர்களுடன் பெண்கள் தனியாகப் பயணம் செய்கின்றனர். இதில் சில பெண்களும், அவர்களின் பொறுப்பாளர்களும் மெத்தனமாக இருக்கின்றனர். இவ்வாறு ஆணுடன் தனிமையில் இருப்பது தடுக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஷேக் முஹம்மத் இப்னு இப்ராஹீம் ஆலு ஷேக் சவூதி அரோபியாவில் மார்க்க தீர்ப்பு வழங்குபவராக இருந்தவர். மார்க்க தீர்ப்பு தொகுப்பு 10ழூ ழூ52 ல் குறிப்பிடு கிறார். ''எவ்வித சந்தேகமுமின்றி, ஒரு பெண் அன்னிய ஆணுடன் தனிமையில் பயணம் செய்வது பம்ரங்கமாக வெறுக்கப் பட்டுள்ளது. இதனால் பலவிதமான குழப்பங்கள் உள்ளன. இதை யாரும் இலேசாகக் கருதிவிடமுடியாது. இதில் எவ்வளவுதான் பத்தினிப் பெண்ணாக இருந்தாலும் கண்ணியமான பெண்ணாக இருந்தாலும் சரிதான்.''

இப்படி செல்வதை தனது பெண்ணுக்கு அனுமதிப்பவன் மார்க்கப்பற்றும் தன் பெண்கள் விஷயத்தில் ரோஷம் குறைந்தவனாகவும் இருப்பான்.

''ஓர் ஆண் ஒரு அன்னிய பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு பெண் ஓர் ஆணுடன் வாகனத்தில் தனிமையில் பயணம் செய்வது வீட்டில் தனிமையில் இருப்பதை விட மிக மோசமானதாகும். ஏனெனில் வாகனத்தின் மூலம் அவளை ஊருக்கு உள்ளேயோ, ஊருக்கு வெளியேயோ, அவள் விரும்பியோ, விரும்பாத நிலையிலோ எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். இதன் மூலம் பயங்கரமான குழப்பங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பெண்ணுடன் துணைக்குச் செல்லுகின்றவர்கள் பெரிய வயதுடையவர்களாக இருக்கவேண்டும். சிறிய குழந்தைகள் மட்டும் இருப்பது போதாது. குழந்தையை உடன் எடுத்துச் சென்றால், அதைத் தனிமையாகக் கருத முடியாது என சில பெண்கள் நினைக்கின்றனர். இது தவறாகும்.

இமாம் நவவி தம்முடைய மஜ்மூவு 9ழூ ழூ109 ல் குறிப்பிடுகிறார்.

ஓர் ஆண் அன்னியப் பெண்ணுடன் தனிமையில் மூன்றாவது நபர் இல்லாது தனித்திருப்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி தவறாகும். இவ்வாறே அவளு டன் வெட்கத்தலங்களைப் பற்றி நன்கு அறியாத சிறிய குழந்தைகள் இருப்பதால் அவள் தனிமையில் இருக்க வில்லை என்று வாதிட முடியாது.

3. சில பெண்கள் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுகிறோம் என்ற பெயரில் தனிமையில் மருத்துவரிடம் செல்லும் விஷயத்திலும் பொடுபோக்காக இருக்கிறார்கள். இது பெரும் தவறாகும். இது ஆபத்தையும் விளைவிக்கும். இறையச்சமுள்ள யாராலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

முஹம்மத் இப்னு இப்ராஹீம் அவர்கள் ஃபத்வா தொகுப்பு 10ழூ ழூ13 ல் குறிப்பிடுகிறார்கள்.

எப்படி இருந்தாலும், ஒருபெண் அன்னிய ஆண் களுடன் தனிமையில் இருப்பது மார்க்க அடிப்படையில் தடுக்கப்பட்டுள்ளது. அது சிம்க்சை செய்யும் மருத்து வருடனாக இருந்தாலும் சரியே. ஏனெனில்,

''ஒருபெண் ஓர் ஆணுடன் தனிமையில் இருக்கும்போது மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அவளுடன் அவளுடைய கணவன் அல்லது வேறு யாராவது ஒருவர் இருக்கவேண்டும். இல்லையென்றால் சொந்தத்தில் உள்ள குடும்பப் பெண்கள் அவளுடன் இருக்கவேண்டும். அதுவும் இல்லையென்றால் ஆபத் தான நிலையில் குறைந்தது ஒரு நர்ஸாவது அவளுடன் இருந்தாகவேண்டும்.

அவ்வாறே நெருங்கிய நண்பர்களாயினும், பணியா ளாயினும் ஒரு மருத்துவர் அன்னியப் பெண்ணுடன் தனித்திருப்பதும் கூடாது. கண்பார்வையற்ற ஆசிரியர் மாணவியுடன் தனிமையில் இருப்பதும், விமானப் பணிப் பெண் அன்னிய ஆணுடன் தனிமையில் இருப்பதும் கூடாது. நவநாகரீகம் என்ற பெயரில் இறைமறுப்பாளர் களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாலும், மார்க்க விஷயங்களைப் பொருட்படுத்தாமலும் இலேசாகக் கருதுகின்றனர்.

''லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்''

தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் ணுடன் ஓர் ஆண் தனிமையில் இருப்பதோ, அவ்வாறே ஒருபெண் தன் வீட்டில் பணிபுரியும் ஆணுடனும் தனிமையாக இருப்பதோ கூடாது. வீட்டுப் பணியாளர் களால், பலர் பெரும் சோதனைக்குள்ளாகிறார்கள். இதுவும் பெரும் பாதிப்பை உண்டாக்குவதாகும். பெண்கள் கட்டுப்பாடின்றி தங்கள் வீட்டிற்கு வெளியில் வேலைக்குச் செல்வதால் இவ்வாறான நிலைகள் ஏற்படுகின்றன. இறைநம்பிக்கையுள்ள ஆண்களும், பெண்களும் இன்றைய காலச் சூழலில் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். அவசியம் மற்றும் அவசரமான வேலைகளுக்கு மட்டும் வெளியில் செல்ல வேண்டும். தீய பண்புகளைத் தூர்வாறவேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் Empty கைலாகுச் செய்தல் (முஸாஃபஹா)

Post by சிவா Fri Sep 26, 2008 2:21 am

ஒருபெண் அன்னிய ஆண்களுடன் கைலாகு (முஸாஃபஹா) செய்தல் தடுக்கப்பட்டுள்ளது.

ஷேக் அப்துல் அªஸ் இப்னு பாஸ் அவர்கள் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ள மார்க்கத்தீர்ப்புகள் தொகுப்பு 1ழூ ழூ185 ல் குறிப்பிடுகிறார்கள்.

ஒருபெண் பிறஆண்களுடன் கைலாகு செய்வது பொதுவாகக் கூடாது. அவர்கள் குமரிப் பெண்களாகவோ, வயோதியர்களாகவோ இருப்பினும் சரியே. கைலாகு செய்பவர் இளைஞராகவோ, வயோதியராகவோ இருப்பினும் சரியே. ஏனெனில் இதனால் இருசாராரும் உணர்ச்சிகளால் உந்தப்படும் அபாயம் இருக்கிறது.

''நான் பெண்களிடத்தில் கை கொடுக்க மாட்டேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

''நபி(ஸல்) அவர்கள் அன்னியப் பெண்களின் கரத்தைத் தொட்டதில்லை. வாய் மூலமாகத்தான் அவர் களிடம் பைஅத் எனும் உறுதிமொழி வாங்குவார்கள்'' என ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார்.

கைலாகுச் செய்யும் போது கை உறை அணிந்திருந் தாலும், அணியாமலிருந்தாலும் இது கூடாது. குழப்பத் தின் வாயில்களை அடைப்பதற்காக சட்டங்கள் இவ்வாறு கடைபிடிக்கப்படுகின்றன.

ஷேக் முஹம்மத் அமீன் »ன்கீதி தம் அள்வாவுல் பயான் என்ற தப்ªரில் 6ழூ ழூ602,603 ல் குறிப்பிடுகிறார். அறிந்து கொள்! ஓர் ஆண் அன்னியப் பெண்ணுடன் கைலாகுச் செய்வது கூடாது. ஓர் ஆண் அன்னியப் பெண்ணுடன் உடலுடன் உடல் உரசுவதும் கூடாது
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் Empty இதற்கான ஆதாரங்கள் பல:

Post by சிவா Fri Sep 26, 2008 2:22 am

1. ''நான் பெண்களுடன் கைலாகுச் செய்யமாட்டேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: ''அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.'' (அல்குர்ஆன் 33:21)

நபி(ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி பெண்களுடன் கைகுலுக்காதிருப்பது ஆண்கள் மீது கடமையாகும்.

இந்த ஹதீஸ்பற்றிய விளக்கத்தை 'ஹஜ்' அத்தியாயத்தில் தெளிவாக விளக்கியுள்ளோம். ஹஜ்ஜின்போது இஹ்ராம் அணியும் நேரத்திலும் மற்ற நேரங்களிலும் சாயமிடப்பட்ட ஆடைகளை ஆண்கள் பொதுவாகவே அணிவது கூடாது எனச் சட்டம் கூறும் போது இதைக் கூறியுள்ளோம்.

'அஹ்ஸாப்' அத்தியாயத்தில் பர்தாவைப் பற்றி வந்துள்ள வசனமும், நபி(ஸல்) அவர்கள் பிற பெண்களி டம் உறுதி மொழி பெறும்போதும், கை குலுக்கமாட் டார்கள் என வந்திருப்பதும் ஆண்கள் பெண்களுக்கு கைகொடுக்கக் கூடாது என்பதற்கு தெளிவான ஆதாரங் களாகும். மேலும் பெண்ணின் உடம்பில் எந்தப் பாகத்தை யும் தொடக்கூடாது. ஏனெனில் தொடுதல் என்பதன் இறுதி நிலைதான் கைகொடுத்தல் எனப்படுகிறது.

கை கொடுப்பது முக்கிய நேரமான உடன்படிக்கை யின் போதே நபி(ஸல்) அவர்கள் பெண்களிடம் கை கொடுக்கவில்லை என்றால் எந்த நேரத்திலும் அது கூடாது என்பதற்கு இது ஆதாரமாகும். நபி(ஸல்) அவர் களுக்கு மாறு செய்யும் துணிச்சல் யாருக்கும் இல்லை. ஏனெனில் அவர்கள் தம் உம்மத்தினருக்குச் சொல் செயல் மற்றும் அங்கீகாரம் மூலம் சட்டம் கொடுத்த வல்லுனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் Empty இதற்கான ஆதாரங்கள் பல:

Post by சிவா Fri Sep 26, 2008 2:22 am

2. நாம் முன்னர் கூறியது போன்று ஒருபெண் தன்னை முழுவதுமாக மறைக்கப்பட வேண்டியவளாக இருக்கிறாள். எனவே அவள் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டியது அவள் மீது கடமையாகிறது. பார்வையைத் தாழ்த்துமாறு கட்டளையிடப்பட்டதன் நோக்கம் மனித குலம் தவறுகளில் விழாமலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சந்தேகமின்றி உடலும் உடலும் உரசுவது உணர்வுகளைத் தூண்ட வலுவானதாக அமைகிறது. கண்ணால் பார்ப்பதால் ஏற்படும் தீங்கை விட இது மிகப் பெரிய தீங்காகும். இதை நடுநிலையான எல்லோரும் நன்கு அறிவர்.

3. கை கொடுப்பது அன்னியப் பெண்களுடன் இன்பம் அனுபவிப்பதற்குக் காரணமாகிறது. குறிப்பாக இறையச்சம் குறைந்து, நம்பிக்கை இழந்து, பேனுத லற்றுப்போன இக்காலத்தில் தவறுகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கணவன்மார்களில் சிலர் மனைவியின் சகோதரியின் வாயில் வாய் வைத்து முத்தமிட்டு ஸலாம் கொடுக்கும் பழக்க முடை யவர்களாக இருக்கின்றனர். இதை ஸலாம் சொல்லும் முத்தம் என்று கூறுகின்றனர். இது அறிஞர்களின் ஏகோபித்தக் கருத்துப்படி தடுக்கப்பட்டதாகும். அவளுக்கு ஸலாம் சொல்லுதல் என்றால் அவளுக்கு முத்தமிடுதல் என்று பொருள் கொள்கின்றனர்.

சந்தேகத்திற்கு இடமின்றி உண்மை எதுவென்றால், இதுபோன்ற எல்லாத் தவறுகளை விட்டும் அதற்குக் காரணமாக இருப்பவைகளை விட்டும் தூரமாக இருப்பதுதான்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் Empty Re: பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள்

Post by சபீர் Wed May 12, 2010 9:37 pm

நல்ல பல விடயம்களை தெரிய படுதியுலீர்கள் தல நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் Empty Re: பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள்

Post by மஞ்சுபாஷிணி Wed May 12, 2010 11:15 pm

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் Empty Re: பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum