ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்!

Go down

 மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்! Empty மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்!

Post by ayyasamy ram Sun Sep 15, 2019 6:59 am

 மது அருந்தும் இந்தியப் பெண்கள் அதிகரிப்பு: குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் குடிமகள்கள்! Women_drink
-
By C.P.சரவணன், வழக்குரைஞர் | தினமணி
-----------------------------------

இந்தியர்களின் குடிப்பழக்கம் 38% அதிகரித்துள்ளதாகவும்
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 18 முதல் 70 வயது வரையிலான 5 ஆயிரம்
பெண்களிடம் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த
ஆய்வை 'குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கு எதிரான
சமூகம்' (Community Against Drunken Driving /CADD)
என்ற அமைப்பு நடத்தியது.

இதன்படி, ''உலக அளவில் அதிக அளவில் குடிப்பழக்கத்தைக்
கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில், குடிப்பவர்களின்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி இந்தியர்களின்
குடிப்பழக்கம் 38% அதிகரித்திருக்கிறது. 2005-ல் ஓராண்டுக்கு
2.4 லிட்டர் மது அருந்திய நபர் தற்போது 5.7 லிட்டர் மதுவை
உட்கொள்கிறார்.

இதற்கான காரணத்தைத் தேடும்போது, குடிப்பழக்கத்தில்
அமைதியான பங்கேற்பாளர்களாக பெண்கள் இருந்தது தெரிய
வந்தது. அதிக எண்ணிக்கையிலான பெண்கள் குடிக்கின்றனர்.
அதேபோல பெண்கள் குடிக்கும் மதுவின் அளவும் அதிகரித்திருக்கிறது.

சில நூறு ஆண்டுகளாகப் பழக்கவழக்கத்தின் அடிப்படையில்,
பெரும்பாலான பெண்கள் குடிக்காமல் இருந்தனர். ஆனால்,
தற்போது பெண்களின் மது சந்தை விரிந்துவிட்டது. அடுத்த
5 ஆண்டுகளில் இது 25% அதிகரிக்கும்.

என்ன காரணம்?


இந்த மாற்றத்துக்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன.

* அமைதியடையவும் மகிழ்ச்சி பெறவும் மதுவே சிறந்த
மருந்து எனத் தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும்
தொடர்ந்து போதிக்கப்படுகிறது.

* பெரும்பாலான அனைத்து சமூக நிகழ்வுளும் மதுவைச்
சுற்றியே அமைந்திருக்கின்றன.

* மது எளிமையான, வேகமான சமூக இளக்கியாக
அமைந்துவிடுகிறது.

* இப்போது மதுப் பழக்கத்தை யாரும் பிரச்சினையாகவோ,
தவறாகவோ பார்ப்பதில்லை. அது ஒரு நடைமுறை அவ்வளவே
என்ற எண்ணத்துக்கு நகர்ந்து விட்டோம்.

* செலவழிக்கும் திறன், செழிப்பான குடும்பப் பின்னணி,
ஆண்களுடனான சம வாய்ப்பு என இருக்கும் பெண்கள் எரிச்சல்,
மன அழுத்தம், தனிமை, கோபம், வலி, உடல் மற்றும் மன ரீதியான
பிரச்சினைகளுக்கு வடிகாலாக குடிப்பழக்கத்தையே நாடுகின்றனர்.

உதாரணத்துக்கு டெல்லியில் 40 சதவீத ஆண்களும் 20 சதவீதப்
பெண்களும் மது நுகர்வோர்கள். 18-30 வயதுப் பெண்களில்
43.7% பேர் குடி எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளும்
ஆர்வத்தில் குடிக்கின்றனர்.

31 - 45 வயதுப் பெண்களில் 41.7% பேர் தொழில் தேவைகளுக்காகவும்
சமூகப் பழக்கத்துக்காகவும் குடிக்கின்றனர். 46- 60 வயதுப் பெண்களில்
39.1% பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 53% பேரும் உளவியல்
காரணங்களுக்காகக் குடிக்கின்றனர்.

அதேபோல பெரும்பாலான பெண்கள் குடிக்கும்போது,
ஒரு முறைக்கு 4 அல்லது அதற்கும் மேற்பட்ட 'பெக்' என்ற அளவில்
எடுத்துக்கொள்கின்றனர்''. இவ்வாறு அந்த ஆய்வு முடிவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லி வந்தார்கள்.
ஆண்கள் குடித்தாலே அது அந்த குடும்பத்தையே கெடுத்துவிடும்
என்று சொல்லிவந்த நிலையில், இப்போது அந்த குடும்பத்தின்
குத்துவிளக்குகளே அதாவது பெண்களே குடிக்கிறார்கள் என்றால்,
குடி எந்த அளவுக்குக் குடியைக் கெடுத்திருக்கிறது என்பது
நன்றாகவேத் தெரிகிறது.
-
------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மது அருந்தும் இந்தியர்களில் 7.5 சதவீதம் பேர் பெண்கள்
» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
» சிங்கப்பூரில் சிறைவாசம் புரியும் மலேசிய இந்தியப் பெண்கள்
» லேக்டோஜென் குழந்தைக்கு கொடுக்கும் பால்பவுடரில் புழுக்கள்; அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார்
» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum