ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டிலேயே பிரம்மாண்ட திரையுடன் சூலூர்பேட்டையில் எபிக் திரையரங்கம்- கியூப் நிறுவனம் அறிமுகம்

Go down

நாட்டிலேயே பிரம்மாண்ட திரையுடன் சூலூர்பேட்டையில் எபிக் திரையரங்கம்- கியூப் நிறுவனம் அறிமுகம் Empty நாட்டிலேயே பிரம்மாண்ட திரையுடன் சூலூர்பேட்டையில் எபிக் திரையரங்கம்- கியூப் நிறுவனம் அறிமுகம்

Post by ayyasamy ram Sat Aug 31, 2019 1:06 pm

நாட்டிலேயே பிரம்மாண்ட திரையுடன் சூலூர்பேட்டையில் எபிக் திரையரங்கம்- கியூப் நிறுவனம் அறிமுகம் 513624
-
மகராசன் மோகன்

நாட்டிலேயே முதலாவதாக பெரிய அளவிலான எபிக் திரை
கொண்ட திரையரங்கை ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில்
கியூப் சினிமா நிறுவனம் நிறுவியுள்ளது.


நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் படங்களை பல மடங்கு
துல்லியமாக, தெளிவாக காட்டக்கூடியது எபிக் திரை.

நாட்டிலேயே முதல்முறையாக ஆந்திர மாநிலம்
சூலூர்பேட்டையில் எபிக் திரையுடன் கூடிய திரையரங்கம்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட எபிக் திரை
100 அடி நீளம், 54 அடி உயரம் கொண்டது. தெற்காசியாவின்
மிகப்பெரிய எபிக் திரை என்ற சிறப்பம்சமும் இதற்கு உண்டு.

இந்த திரையரங்கை ‘வி செல்லுலாயிட்’ நிறுவனம்
நடத்துகிறது.

இந்த அரங்கின் முதல் திரைப்படமாக, பிரபாஸ் நடித்துள்ள
‘சாஹோ’ திரையிடப்பட்டுள்ளது. இதையொட்டி 29-ம் தேதி
அங்கு நடந்த நிகழ்ச்சியில் ‘சாஹோ’ திரைப்படத்தின்
முக்கிய கலைஞர்களுடன், தெலுங்கு நடிகர்
ராம் சரண் தேஜாவும் சிறப்பு விருந்தினராக கலந்து
கொண்டார்.

விழாவில் அவர் பேசும்போது, ‘‘நாட்டின் முதல் பெரிய திரை
கொண்ட அரங்கு என கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதில் முதல் படமாக ‘சாஹோ’ வெளிவருகிறது.

அப்பா சிரஞ்சீவி நடித்த ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படமும்
இங்கு விரைவில் வெளியாக உள்ளது. அந்த படத்தையும் இங்கு
வந்து நிச்சயம் பார்ப்பேன். இதுபோன்ற பிரம்மாண்ட
திரையரங்குகள் அதிகம் திறக்கப்பட்டால், திரைத் தொழில்
இன்னும் சிறக்கும்’’ என்றார்.

நாட்டிலேயே சிறந்த தொழில்நுட்ப வசதிகள்அனைத்தும்
இந்த எபிக் திரையரங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர, 2 மல்டிபிளக்ஸ் அரங்கங்களும் இந்த வளாகத்தில்
உள்ளன. திரைப்படம் பார்க்கும்போது சிறு இடையூறும்
ஏற்படாத வகையில், சினிமா பார்ப்பதை ஒரு சுகமான
அனுபவமாக மாற்றுவதற்கேற்ப வசதியான இருக்கைகள்
அமைக்கப்பட்டுள்ளன.

அரங்கு கட்டமைப்பு குறித்து கியூப் சினிமாஸ் நிறுவனத்தின்
தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் ரோஹத்கி பேசும்போது,
‘‘நம்பமுடியாத ஆச்சரியங்களுடன், முதல்தரமான
அம்சங்களுடன், வீட்டில் தொலைக்காட்சியில் பார்த்தால்
ஒருபோதும் கிடைக்காத அனுபவத்தை தரக்கூடிய வகையில்
இந்த எபிக் திரையரங்கு இருக்கும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல இடங்களில் இதுபோன்ற
எபிக் திரைகள் வந்துவிடும்’’ என்றார்.

திரையரங்கை பராமரிக்கும் ‘வி செல்லுலாயிட்’ நிறுவன
உரிமையாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான
வம்சி கிருஷ்ணா பேசும்போது, ‘‘இந்திய பெருநகரங்களில்கூட
கிடைக்காத வாய்ப்பை சூலூர்பேட்டையில் கொண்டுவந்து
சினிமா பார்ப்பதில் ஒரு புரட்சியை உண்டாக்கி உள்ளோம்.

சென்னைக்கு அருகே இருப்பதால் நிறைய தமிழ் மக்களும்
இங்கு வருவார்கள். தெற்காசியாவிலேயே மிகப்பெரிய
திரையை அறிமுகப்படுத்தி இருப்பது மகிழ்ச்சி’’ என்றார்.
-
---------------------------------
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum