ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை

Go down

  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Empty ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை

Post by ayyasamy ram Mon Aug 26, 2019 7:59 am

  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை TRIWAY
-

பழங்காலத் தமிழ்நூல்களின் வழிகாட்டுதலின் படி ஏரி,
குளங்களில் குட்டைகளை அமைத்து நிலத்தடி நீரை
செறிவூட்டும் பணியில் சென்னையைச் சேர்ந்த தனியார்
நிறுவனம் சேவை மனப்பான்மையுடன் மேற்கொண்டு
வருகிறது.

சென்னை, பாரிமுனை பகுதியில் சரக்குப் பெட்டக நிலையம்,
சுங்கத்துறை ஏஜென்சி, கன்டெய்னர் லாரி போக்குவரத்து
உள்ளிட்ட ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு
வரும் தனியார் குழுமம் டிரைவே.

இந்நிறுவனம் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை
தாலுகாவில் உள்ள மெய்யூர் கிராமத்தில் உள்ள அய்யன்குளம்,
தர்மராஜா குளம், இருளர் காலனி குளம், மேட்டுக்காலனி குளம்
ஆகிய நான்கு குளங்கள்,நாக ஏரி, வெம்பேடு ஓட்டேரி ஆகிய
ஏரிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டும் குட்டைகளை அமைத்துள்ளது.

இக்குட்டைகள் அனைத்தும் சுமார் 60 முதல் 100 ஆடி நீளமும்,
10 அடி நீளமும் கொண்டவையாகும். இக்குட்டைகள் மூலம் நிலத்தடி
நீர்மட்டம் உயர்ந்து வருவது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் மேலும்
சில குளங்கள், ஏரிகளில் இத்தகைய குட்டைகளை அமைக்க
இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

செறிவூட்டும் குட்டைகள் அமைக்கப்படும் விதம்:


இது குறித்து இக்குழுமத்தின் தலைவர் ந.ரவிசங்கர் கூறியதாவது:


இயற்கை வேளாண்மை விஞ்ஞானி மறைந்த நம்மாழ்வாரின்
பல்வேறு வழிமுறைகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.
மேலும் பழங்காலத் தமிழ்நூல்கள் சிலவற்றில் குளம், ஏரி,
குட்டைகளில் மழை நீரினைச் சேகரிப்பது, நீரை முறையாகப்
பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு குறிப்புகள் உள்ளன.

இதன்படி மண்ணில் உள்ள கோடிக்கணக்கான நுண்துளைகள்
மூலம்தான் மழைநீர் பூமியின் உள்ளே சென்று நிலத்தடி நீராக
சேமிக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகள் தூர்வாரப்படாமல்
இருக்கும் நிலையில் இத்தகைய நுண்துளைகள் தூர்ந்து போய்
ஏரி, குளங்களில் தேங்கி இருக்கும் நீரானது பூமிக்கு உள்ளே
செல்லாமல் சூரிய ஒளியில் ஆவியாகிச் சென்று விடுகிறது.

இதனைத் தடுக்கும் வகையில் குளம், ஏரிகளில் மேலோட்டமாகத்
தூர்வாரி கரையை மட்டும் பலப்படுத்துவது போதுமானதாக
இல்லை.

மேலும், நுண் துளை அடைப்புகள் முற்றிலுமாக நீக்கப்படுவதில்லை.
ஆனால், இது போன்ற ஆழமான குட்டைகளை வெட்டுவதன் மூலம்
நுண்துளைகள் மூலம் நிலத்தடி செறிவூட்டல் என்பது வேகமாக
நடைபெறுகிறது. இவற்றையெல்லாம் படித்து தெரிந்து கொண்ட
நாங்கள் கடந்த ஆண்டு ஒரு குளத்தில் மட்டும் நிலத்தடி நீர்
செறிவூட்டும் குட்டையை அமைத்தோம்.

சோதனை முறையில் அமைத்த இக்குட்டையால் அருகில் உள்ள
கிணறுகளில் வறட்சி காலத்திலும் தேவையான அளவு நீர்மட்டம்
இருந்தது. மேலும், அருகில் உள்ள ஏரிகள் அனைத்தும் வறண்டு
போய்விட்ட நிலையில் நாங்கள் அமைத்த குளத்தில் இன்னும்
தண்ணீர் இருந்து வருகிறது. இதற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன
என்றார் ரவிசங்கர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84600
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Empty Re: ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை

Post by ayyasamy ram Mon Aug 26, 2019 7:59 am


பயனுள்ள திட்டம்... கிராம மக்கள் பாராட்டு:
இது குறித்து, மெய்யூரைச் சேர்ந்த சக்கரவர்த்தி கூறியது:


எங்கள் ஊரில் உள்ள குளங்களில் இது போன்ற நிலத்தடி நீர்
செறிவூட்டும் குட்டைகளை அமைக்க தனியார் நிறுவனத்தினர்
அணுகினர். முதலில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து
குழப்பமாக இருந்தது. குளத்தில் ஓரிடத்தில் மட்டும் குட்டையை
அமைத்தால் குளத்தின் தன்மை மாறிவிடுமோ என அச்சம்
இருந்தது.

மேலும் குட்டைகள் வெட்டப்படும்போது வெளியேற்றப்படும்
மண் குறித்து பல்வேறு நெருக்கடிகள் இருந்தன. ஆனால் அரசு
அதிகாரிகள் அனுமதியுடன் குட்டைகள் அமைக்கப்பட்டன.

தோண்டப்பட்ட மண் அனைத்தும் சேதாரமின்றி கரைகளில்
கொட்டப்பட்டு பலப்படுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த
ஆண்டு அமைக்கப்பட்ட ஒரு குட்டை மூலம் நிலத்தடி நீர் மட்டம்
உயர்ந்ததால் எங்கள் ஊரில் உள்ள அனைத்து குளங்களிலும்
இக்குட்டைகளை அமைத்துத் தரும்படி விடுத்த வேண்டுகோளை
ஏற்று டிரைவே குழுமம் உதவியது.

எதிர்காலத்தில் மெய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர்
பஞ்சமே இருக்காது என உறுதியாக நம்புகிறோம் என்றார்
சக்கரவர்த்தி:

7 குளங்கள், ஏரிகளில் குட்டைகளை அமைக்கத் திட்டம்:
எதிர்காலத்திட்டம் குறித்து ரவிசங்கர் கூறியது:


மெய்யூரில் உள்ள குளங்களில் குட்டைகளை அமைத்ததன்
மூலம் இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது. இதுவரை
ரூ 10 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். இந்நிலையில்,
செங்குன்றம் அருகே பெருங்காவூரில் உள்ள 5 குளங்கள்,
2 ஏரிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டும் குட்டைகளை அமைக்க
மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கோரியுள்ளோம்.

இந்த அனுமதி கிடைத்தவுடன் பணிகளைத் தொடங்கிவிடுவோம்.
சோதனை அடிப்படையில் தொடங்கிய இத்திட்டம் தற்போது
வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

பல நிறுவனங்களும் அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல் இதில்
ஈடுபாடு கொண்டு முடிந்தவரை செறிவூட்டும் குட்டைகளை அமைக்க
முன்வந்தால் அதுவே எங்களுக்குக் கிடைத்த மனநிறைவாக இருக்கும்
என்பதே உண்மை.

இத்திட்டத்தைச் செயல்படுத்த தன்னார்வலர்கள், நிறுவனங்கள்
முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சமே
வராது என்ற நிலையை ஏற்படுத்திவிட முடியும். இத்திட்டத்தின்
செயல்பாடுகள் குறித்து விளக்கம் அறிய 9840766619 என்ற செல்லிடப்
பேசிக்கு யார் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்
அவர்.
----------------------------------
நமது நிருபர்- தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84600
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Empty Re: ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை

Post by Guest Mon Aug 26, 2019 11:06 am

  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை 1571444738
திரும்பவுமா? அரசு உருவுமா உருவாக்குமா?
avatar
Guest
Guest


Back to top Go down

  ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை Empty Re: ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum