ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனம் - கென்னடி கிளப்

Go down

திரை விமர்சனம் - கென்னடி கிளப் Empty திரை விமர்சனம் - கென்னடி கிளப்

Post by ayyasamy ram Sat Aug 24, 2019 11:56 am

திரை விமர்சனம் - கென்னடி கிளப் 512672
-
தென் தமிழக கிராமம் ஒன்றில் பயிற்சி பெறும் ஏழைக்
குடும்பத்துப் பெண் கள், தேசிய அளவிலான கபடிப்
போட்டியில் ஜெயிக்கப் போராடும் கதை.

‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘ஜீவா’ தொடங்கி,
விளையாட்டைக் களமாகக் கொண்ட கதைகளை,
வாழ்க்கைக்கு நெருக்கமானப் படங்களாகக் கொடுத்து
வரும் சுசீந்திரன், இதில் பெண்கள் கபடிக் குழுவுடன்
களமிறங்கியிருக்கிறார்.

ஓய்வுபெற்ற ராணுவ வீரரான பாரதிராஜா, கென்னடி கிளப்
என்ற கபடிக் குழுவை வழிநடத்தும் பயிற்சியாளர்.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த
திறமையான பெண்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறார்.

மாநில அளவி லான போட்டி நெருங்கும் நேரத்தில் அவருக்கு
திடீர் உடல்நலக் குறைவு ஏற்படு கிறது. அப்போது அணியை
தன் தோள் களில் தாங்கி வழிநடத்த வருகிறார், பாரதிராஜாவின்
மூத்த கபடி மாணவரான சசிகுமார்.

கென்னடி கிளப் பெண்கள் அணியைச் சேர்ந்த ஒரு திறமையான
வீராங்கனைக்குத் தேசியக் கபடி அணியில் இடம்பெறும் வாய்ப்பு
உருவாகிறது. ஆனால் அவர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற,
ஊழ லும் தனிப்பட்ட பழிவாங்கும் உணர்வும் முட்டுக்கட்டைகளாக
வருகின்றன.

கனவுகளை வரித்துக்கொண்ட அந்த வீராங்கனை, தாம் தேர்வு
பெறாமல் போன ஏமாற்றத்தைத் தாங்கிக் கொண்டாரா?
தேசிய விளையாட்டு முகமையில் புரையோடிய ஊழலை, தனது
அணியின் திறமையைக் கொண்டு சசிகுமாரால் வேரறுக்க
முடிந்ததா என்பது மீதிக் கதை.

அழுத்தமான மண்வாசனைப் பின்னணி, அளவான கதாபாத்திர
அறிமுகம் ஆகிய வற்றுடன் தொடங்கும் படத்தின் திரைக்
கதையில் போதுமான அளவுக்குத் திருப்பங்கள் இருக்கின்றன.

அவற்றைச் சரியான கால இடைவெளியில் விடுவிக்கவும்
தவற வில்லை. ஆனால் திரைக்கதையை சுவாரஸ் யமான
புள்ளியில் இருந்து தொடங்காததும், முதன்மைக் கதா
பாத்திரங்களை நட்சத்திரப் பிம்பங்களுடன் சித்தரித்திருப்பதும்,
கென் னடி கிளப், ஒரு விளையாட்டுத் திரைப் படமாக
உருப்பெறுவதைத் தடுத்து, கதாநாயகனுக்கான சினிமாவாகத்
தேங்கச் செய்துவிடுகிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரை விமர்சனம் - கென்னடி கிளப் Empty Re: திரை விமர்சனம் - கென்னடி கிளப்

Post by ayyasamy ram Sat Aug 24, 2019 11:56 am


திரை விமர்சனம் - கென்னடி கிளப் 17023193701
மற்ற விளையாட்டுகளில் இருந்து கபடி முற்றிலும் மாறுபட்ட
தன்மை கொண்டது. அடிகளை, வலிகளை அதிகம் தாங்க
வேண்டியிருக்கும். அதற்கு அதிக உடல் வலிமை தேவை.

ஆனால் தமிழகத்தில் இதை நேசித்து விளையாட வரும்
வீரர்களும் வீராங்கனைகளும் பெரும்பாலும் ஏழ்மையான
பின்னணியில் இருந்தே வரு கிறார்கள், ஏமாற்றம் அவர்களை
எந்த எல்லைக்கும் விரட்டியடிக்கும் என்ற உண்மையை உரக்கச்
சொன்னதற்காக இயக்குநர் சுசீந்திரனுக்கு பிரத்யேகப் பாராட்டு.

கென்னடி கிளப் குழுவின் தரமான தயா ரிப்பாக, குருவைத்
தேவையான இடங்களில் ‘ஷார்ட் கட்’ செய்யும் பயிற்சியாளராக
வரும் சசிகுமார், முடியை ஒட்ட வெட்டி தோற்றத்தில்
பொருந்துகிறார். வில்லனோடு உரக்கக் கத்தி சண்டைபோடாமல்,
தனது அணியின் திறமையைப் பயன்படுத்தி வெல்ல முயலும்
‘கெட்டிக்கார கோச்’ கதா பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

இவர் கதாபாத்திரமாக வந்தாலும் ‘நாடோடி கள்’ சசிகுமாராக
மாறிவிடும் காட்சிகளை இவருக்காக உள் நுழைத்திருப்பது
இயக்கு நரின் அப்பட்டமான வணிக சமசரம்.

கனிவான பார்வை, கரகரப்பான குரல் என அனுபவம் மிக்க மூத்த
கபடிப் பயிற்சி யாளராக வந்து வீராங்கனைகளுக்குத் தெம்பூட்டும்
‘அப்பா’வாக மனதை அள்ளிக் கொள்கிறார் பாரதிராஜா.

தேர்வுக்குழு தலைவர் முரளி சர்மாவை முகத்துக்கு நேராகப்
பார்த்து, ‘நீங்கள் எந்தப் புள்ளியில் ஊழல்வாதியாக மாறினீர்கள்?’
என்று அசராமல், அலுங்காமல் கேள்வி எழுப்பும் இடத்தில் நடிப்பில்
அசுரன்.

பாரதிராஜா, சசிகுமார் இருவருக்குமான குரு-சிஷ்ய உறவின்
நுட்பங்கள், சசிகுமாரின் கபடி விளையாடும் திறமை ஆகியவற்றை
மேலோட்டமாக சித்தரித்திருப்பது உறுத்தல்.

வில்லன் முரளி சர்மா கதாபாத்திரத்தின் குணமும் இலக்கும்
சராசரி ‘நாயகன் வில்லன்’ படங்களின் சட்டகமாக இருப்பது
பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. இந்த விஷயங்களில்
இயக்குநரின் கவனம் இலக்கு நோக்கிச் செல்லத் தவறிவிட்டது.

கதையின் ஜீவனை உணர்ந்து நிஜ கபடி வீராங்கனைகளையே
நடிக்க வைத் திருக்கும் இயக்குநரின் ஆளுமைக்கு சல்யூட்.
வறுமையில் வாடிய மெலிந்த தேகமும், களத்தில் கபடிக்..
கபடிக்.. என்று கூறும் தோரணையும் யதார்த்தம். எதிரணி
வீரர்களின் திறமையைத் தாண்டி, ஆட்டிவைப்பவர்களின்
சூழ்ச்சியால் வீழ்த் தப்படும்போது ஏற்படுத்தும் வேதனையை
திறம்பட வெளிப்படுத்திக் காட்டியிருக்கும் இந்த நிஜ
வீராங்கனைகளின் பங்களிப்பு படத்தின் முதுகெலும்பு.

கபடி போட்டிகளை நேரடியாக ஆடு களத்தில் காணும்
அனுபவத்தைத் தனது ஒளிப்பதிவு மூலம் தந்திருக்கிறார்
ஆர்.பி. குருதேவ். டி.இமானின் பின்னணி இசை மட்டும்
ஈர்க்கிறது.

வலுவான கதைக் கருவும் களமும் இருந்தும் நடிகர்கள் மீதே
அதிக கவனத்தைக் குவித்திருக்கும் இயக்குநர், பெண்கள்
கபடியில் மலிந்திருக்கும் வறுமையை, வலிகளை உண்மைக்கு
நெருக்கமாகச் சித்தரித்திருக்கிறார். அதேநேரம், தேசிய
அளவிலான போட்டிகள் என்று வரும்போது அதிகாரமும்
பணமும் எப்படி ஆட்டம் போடு கின்றன என்பதைக் காட்ட,
எதார்த்தமான சித்தரிப்பு முறையைக் கையாண்டிருந்தால்
இன்னும் ‘தம்' பிடித்து கர்வத்துடன் களமாடியிருக்கும்
‘கென்னடி கிளப்’

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum