புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
2 Posts - 2%
prajai
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
401 Posts - 48%
heezulia
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
28 Posts - 3%
prajai
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தூறல் சிறுகதை!! Poll_c10தூறல் சிறுகதை!! Poll_m10தூறல் சிறுகதை!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூறல் சிறுகதை!!


   
   
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Mon Dec 28, 2009 1:40 pm

டிசம்பர் மாத குளிரோடு லேசான தூறலும் சேர்ந்து பெங்களூர் மாநகரை ஊட்டி போலாக்கிக் கொண்டிருந்தது...

வழக்கம் போல் 7 மணி பஸ்ஸிற்காக கோரமங்களா பார்க்கிங் லாட் அருகே நின்று கொண்டிருந்தேன். எலக்ட்ரானிக் சிட்டி போய் சேர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும்.
நல்ல வேளை இந்த I-Pod இருப்பதால் ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது.இந்த மழை ஏன் இங்க பெஞ்சி உயிர வாங்குதுனு தெரியல... மழை வரலைனு யாகமெல்லாம் நடத்தறானுங்க...


அங்க வராம இங்க வந்து நம்ம உயிர வாங்குது.

அதுவும் ஆபிஸ் போற நேரத்துல.அருகே கம்பெனி ஐடி கார்டை மாட்டிக் கொண்டு நான்கு, ஐந்து பேர் நின்று கொண்டிருந்தனர்.

இவனுங்களுக்கு எல்லாம் பெரிய சாப்ட்வேர் இஞ்சினியர்னு பெருமை. இந்த ஐடி கார்டை கம்பெனிக்குள்ள மாட்டினா போதாதா? லைசன்ஸ் வாங்குன நாய் மாதிரி எப்பவும் கழுத்துல மாட்டிக்கிட்டு திரியறானுங்க.
கடைசியாக சுரிதார் அணிந்து கொண்டு புதிதாக ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். நான் பார்ப்பதை பார்த்து சிரித்தாள்.

ச்சீ என்ன பொண்ணு இவ... யாராவது பார்த்தா... உடனே சிரிக்கணுமா???பஸ் வந்தவுடன் வேகமாக சென்று ஒரு நல்ல இடம் பார்த்து ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்தேன்...
I-Pod நேற்று டவுன்லோட் செய்த பெயர் தெரியாத படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.சரியாக எட்டு மணிக்கு என் சீட்டிலிருந்தேன்...

வழக்கம் போல் யாரும் இன்னும் வரவில்லை. இன்று அப்ரைசல் வேறு இருக்கிறது. இந்த முறை ஆன் சைட்டிலிருந்து அப்ரிஸியேஷன் மெயில் வந்திருக்கிறது. அதனால் எப்படியும் இந்த முறை நல்ல ரேட்டிங் கிடைக்கும்.மேனேஜர் சரியாக பத்து மணிக்கு வந்தார்.

மற்றவர்கள் அவர் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன் வந்தனர். அவரை பொருத்த வரை அனைவரும் ஒரே நேரத்தில் வந்ததாகத்தான் கணக்கு. மற்றவர்களை கேட்டால் டிராபிக் ஜாம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி தப்பிவிடுவார்கள்.

7 மணிக்கு புறப்பட்டால் எப்படியும் 8 மணிக்குள் வர முடியும். 8 மணிக்கு புறப்பட்டு 2 மணி நேரம் டிராபிக்கில் சிக்கி வரவே அனைவரும் விரும்புகின்றனர். தலை சரியில்லாத இடத்தில் மற்றவர்களை சொல்லி பயனில்லை.சரியாக 11 மணிக்கு அப்ரைசல் மீட்டிங்.

தேவையானவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு மீட்டிங்கிற்கு சென்றேன். உள்ளே மேனஜர் தயாராக இருந்தார். இந்த முறையும் அப்ரைசலில் எல்லா டாஸ்கிற்கும் "C" போட்டிருந்தார்கள். அதற்கு அவர் சொன்ன காரணம் டீம் மக்களோடு சரியாக கலக்காமலிருக்கிறேனாம்.

சரியாக வேலை செய்யவில்லை என்றால் சரி. ஆனால் மக்களோடு பழகவில்லை என்று அவர் சொல்வது சும்மா ஒரு சப்பைக்கட்டு!!!

இவர்கள் வேலை செய்வது போல் நடிப்பவர்களைத்தான் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் உண்மையாக வேலை செய்பவர்களை என்றும் மதிக்கமாட்டார்கள்.மதியம் சரியாக பனிரெண்டு மணிக்கு சாப்பிட கிளம்பினேன்."கிருஷ்ணன்... இன்னைக்கு பிராஜக்ட் பார்ட்டி.
பஸ் 12:30க்கு வரும். இப்ப எங்க போற?" அக்கரையாக விசாரித்தாள் ஹாசினி."சாரி... நான் வரலை. நான் தான் மெயில்லையே சொல்லிட்டனே... எனக்கு இந்த பார்ட்டி எல்லாம் பிடிக்காதுனு" சொல்லிவிட்டு வேகமாக சாப்பிட சென்றேன்.

சாப்பிட்டுவிட்டு என் சீட்டிற்கு வந்த போழுது என் ப்ளோர் முழுதும் விரிச்சோடி கிடந்தது. 2 மணிக்கு வீட்டிற்கு கிளம்பினேன். வீட்டில் தனியாக என்ன செய்வதென்று தெரியாமல் கிடைத்த ஒரு ஆங்கில நாவல் படிக்க ஆரம்பித்தேன். எப்போழுது தூங்கினேனென்றே தெரியவில்லை.

தூங்கி எழுந்திரிக்கும் பொழுது மணி 8 ஆகியிருந்தது.அருகே இருக்கும் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்தேன். டிவியை ஆன் செய்து ஒரு மணி நேரத்தில் 120 சேனல்களையும் 40 முறை மாற்றி மாற்றி பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன். 6 மணிக்கு அலாரம் அதன் வேலையை சரியாக செய்ய 7 மணிக்கு பஸ் ஸ்டாப்பில் இருந்தேன்.

வழக்கம் போல் பஸ்ஸிற்காக காத்திருப்பவர்கள் இருந்தார்கள். நேற்று புதிதாக வந்திருந்தவளும் அங்கே நின்று கொண்டிருந்தாள். நேற்றை போலவே இன்றும் பார்த்து சிரித்தாள்.பஸ் வந்ததும் வழக்கம் போல் ஜன்னலோர சீட்டருகே சென்று அமர்ந்தேன்."ஹாய்...

நான் இங்க உக்காரலாமா?" ஒரு பெண்ணின் குரல்.திரும்பி பார்த்தேன். அவள் என் பதிலை எதிர்பார்க்காமல் அருகில் அமர்ந்தாள்.வழக்கத்தைவிட I-Pod-ல சத்தத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினேன்.
அதை புரிந்து கொண்டு எதுவும் பேசாமல் ஒரு ஆங்கில நாவலை கையில் வைத்து படிக்க ஆரம்பித்தாள். வண்டி வழக்கத்தைவிட சீக்கிரம் சென்றாலும் ஏதோ ஒரு யுகம் போனது போலிருந்தது.

தினம் செய்யும் வேலையையே செக்குமாடு போல் செய்துவிட்டு 8 மணிக்கு ஆபிஸிலிருந்து வீட்டிற்கு கிளம்பினேன். அடுத்த நாளும் அதை போலவே என் அருகில் அமர்ந்து பயணம் செய்தாள்.

இதுவே ஒரு வாரம் தொடர்ந்தது.அன்றும் லேசான தூறல் போட்டுக்கொண்டிருந்தது. நடைபாதையிலிருந்து கீழிறங்கி பஸ்ஸிற்காக காத்துக்கொண்டிருந்தேன். வலதுபக்கம் நின்றிருந்த ஒரு ஜோடி ரோட்டில் நிற்கிறோம் என்ற எண்ணமில்லாமல் ஒருவர் கையை ஒருவர் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

என் கோபம் வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே வந்தது.இதுங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா? சாப்ட்வேர் இஞ்சினியர்னா பெருசா அமெரிக்கால இருக்கற நினைப்பு. இதுங்களாலதான் எல்லாருக்கும் கெட்டப்பேரு!!! திடிரென்று யாரோ என் கையை பிடித்து பின்னால் இழுத்தார்கள்.

திரும்பி பார்ப்பதற்குள் நான் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. கொஞ்சமிருந்தால் மேலே ஏத்தியிருப்பான். இந்த பெங்களூர்ல ஆட்டோக்காரங்களுக்கு அறிவே இருக்காது.
சரி, பின்னால் இழுத்தது யாரென்று பார்த்தால் அவள் நின்று கொண்டிருந்தாள். சைட்ல இருந்த அந்த ஜோடியப் பாத்துட்டிருந்த நேரத்துல இந்த மாதிரி ஆயிடுச்சு. அவளுக்கு நன்றி சொல்லலாமா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே பஸ் வந்து சேர்ந்தது.எப்போழுதும் அமரும் இடத்தில் சென்று அமர்ந்தேன். அவளும் வந்து அமர்ந்து கையில் நாவலை எடுத்தாள்."ரொம்ப தேங்கஸ்ங்க..." தயங்கியவாறே சொன்னேன்.

"ஓ!!! உங்களுக்கு பேச வருமா??? நீங்க ஊமைனு இல்ல நினைச்சேன்" புத்தகத்தை பையில் வைத்து கொண்டே சொன்னாள்."இல்லைங்க...சாரி. நான் உங்களை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டேனு நினைக்கிறேன்""ஐயய்யோ அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க...

பை த வே, ஐ அம் ஆர்த்தி""ஐ அம் கிருஷ்ணன்"இன்று பஸ் பயணத்தின் 60 நிமிடங்களும் 60 நொடிகளைவிட குறைவாக தெரிந்தது. 60 நிமிடத்தில் வாழ்க்கை வரலாறையே சொல்ல முடியும் என்று இன்று தான் உணர்ந்தேன்.பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன்...

"கிருஷ்ணன்... உன் கூட நான் சாப்பிட வரலாமா? தனியா சாப்பிட போர் அடிக்குது. என் டீமெட்ஸ் எல்லாம் பத்து மணிக்குதான் வருவாங்க""உங்களுக்கு எதுவும் பிராபளம் இல்லைனா வாங்க""ஏன் ரொம்ப ஃபார்மலா பேசறீங்க??? நீ, வா, போனே பேசலாம்""சரிங்க""பாத்திங்களா??? திரும்பவும் வாங்க போங்கனு சொல்றீங்க""சரி...

போலாமா?"சாப்பிட்டு விட்டு சீட்டிற்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். இன்று நாள் போனதே தெரியவில்லை.அடுத்த நாள் மீண்டும் பஸ் பயணம்..."ஏய்!!! நேத்து மதியம் உன்ன கேண்டின்ல பாத்தேன்...
தனியா சாப்பிட்டு இருந்த... உன் பிராஜக்ட் மேட்ஸ் யாரும் வரலையா?""நான் எப்பவும் தனியாதான் சாப்பிடுவேன்""ஏன்?""யாருக்கும் தொந்தரவு வேண்டாம்னுதான். எனக்கு உங்களை மாதிரி எல்லாம் பேச வராது""யார் சொன்னா அப்படியெல்லாம். என் கூட வேணா வரியா?""வேணாம்.

உங்கூட உன் பிரண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்க. எனக்கு அன்கம்ஃபர்டபுலா இருக்கும்""இல்ல... யாரும் வர மாட்டாங்க. உன் செல் நம்பர் தா. நான் மதியம் கூப்பிடறேன்""ஏன்கிட்ட செல் போன் இல்ல""என்னது செல் போன் இல்லையா??? எத்தனை வருஷம் சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க?""3 வருஷம். ஏன் செல் போன் இல்லனா வாழ முடியாதா? எனக்கு தான் எக்ஸ்டென்ஷன் இருக்கு இல்ல.

அதுக்கே எவனும் கூப்பிட மாட்டான். எனக்கு எதுக்கு செல் போன்? எப்பவாவது ஊர்ல இருந்து கூப்பிடுவாங்க. அவ்வளவுதான்""சரி உன் எக்ஸ்டென்ஷன் சொல்லு... " குறித்து கொண்டாள்காலையும், மதியமும் அவளுடன் சாப்பிட்டேன்...

இன்றும் நாள் பொனதே தெரியவில்லை.அடுத்த நாள்..."ஏன் இப்படி வயசானவன் மாதிரி டல் கலர்ல சட்டை போடற??? ஒழுங்கா ப்ரைட்டா சட்டை போட்டா என்ன?""ஏன் இந்த கலர்க்கு என்ன குறைச்சல். நான் பொதுவா கலரே பாக்க மாட்டேன்.

போய் எது பிடிச்சியிருந்தாலும் எடுத்துக்குவேன்""சரி... இந்த வாரம் நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் போகலாம். உனக்கு செல் போன் வாங்கனும்.. அப்பறம் நல்லதா ஒரு நாலு அஞ்சு சட்டை வாங்கனும்""எனக்கு எதுக்கு செல் போனெல்லாம்?""நேத்து நைட் உங்கிட்ட பேசலாம்னு பாத்தேன்...
ஆனால் உங்கிட்ட போன் இல்லாததால பேச முடியல""நிஜமாவா?""ஆமாம்... சத்தியமா!!! இந்த வாரம் கண்டிப்பா போய் வாங்கறோம்""சரி..."வார இறுதியன்று கடைக்கு சென்றோம்..."லேட்டஸ்ட் மாடலா பாத்து வாங்கிக்கோ... இல்லைனா பின்னாடி மாத்த வெண்டியிருக்கும்""எனக்கு சாதரண மாடலே போதும்... காஸ்ட்லியா எல்லாம் வேண்டாம்""நீ சும்மா இரு...நான் செலக்ட் பண்றேன்...

உனக்கு ஒன்னும் தெரியாது""சரிங்க... நீங்களே எடுங்க"கடைசியாக பத்தாயிரத்தி சொச்சத்திற்கு ஒரு செல் பொன் வாங்கி ஏர்டெல் கனெக்ஷனும் வாங்கினேன். அதிலிருந்து அவள் நம்பருக்கு போன் செய்து அவள் போனை என்னிடம் குடுத்து பேச சொன்னாள். பக்கத்து பக்கத்துல இருந்து செல் பொனில் பேசுவது அசிங்கமாக இருந்தது... ஆனாலும் அவள் அதை பற்றி கவலைப்படவில்லை."பாத்தியா... உன் போன்ல ஃபர்ஸ்ட் பேசனது நான் தான், ஃப்ர்ஸ்ட் பண்ணது என் நம்பருக்குத்தான்""சரி சரி...

எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்க... வா போகலாம்"அன்றே 5 புது சட்டைகள் வாங்கினோம். ஒவ்வொன்றும் 1500க்கு மேல்.வீட்டிற்கு சென்றவுடன் போன் செய்து பேசினாள்...திங்கள் காலை அலுவலகத்தில்"கிருஷ்ணன்... புது சட்டையெல்லாம் சூப்பரா இருக்கு...

கைல ஏதோ செல் போன் மாதிரி இருக்கு" ஹாசினி"ஆமாம்... நேத்துதான் வாங்கினேன்""எங்களுக்கு எல்லாம் நம்பர் தர மாட்டீங்களா?" ராஜிவ்"உங்களுக்கு இல்லாமலா... இந்தாங்க நோட் பண்ணிக்கோங்க..."அனைவரும் அவர்கள் நம்பரிலிருந்து மிஸ்ஸிடு கால் குடுக்க அனைவரின் நம்பரையும் சேவ் செய்தேன்.ஆர்த்தியிடமிருந்து 11 மணிக்கு போன் வந்தது."கிருஷ்ணன்...

இன்னைக்கு எனக்கு பிராஜக்ட் பார்ட்டி...நான் மதியம் உங்கூட லஞ்ச்க்கு வர முடியாது. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ""ஓகே... நான் பாத்துக்கறேன்""கிருஷ்ணன்... புது போனெல்லாம் வாங்கியிருக்கீங்க... ஏதாவது விசேஷமா?" மேனஜர் குரல் பின்னாலிருந்து வந்தது."அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க... சும்மா வாங்கனும்னு தோனுச்சு... வாங்கிட்டேன்""சரி... இன்னைக்கு டீம் லஞ்ச்...

எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்னு பிளான். நீயும் கண்டிப்பா வரணும்""ஷுர்... கண்டிப்பா வரேன்"மதியம் அனைவரிடமும் நன்றாக பேசினேன்... எல்லாரும் எவ்வளவு ஜாலியா பேசறாங்க... நான் ஏன் இத்தனை நாள் இப்படி பேசாம போனேன். ரொம்ப தப்பு பண்ணிட்டு இருந்தனோனு தோனுச்சு...வாழ்க்கையில் ஏதோ பெரிய மாற்றம் நடந்த மாதிரி இருந்தது.

ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை. டீமில் அனைவரும் இப்போது நல்ல நண்பர்களாகி விட்டனர். 5 நிமிடம்கூட பேசாமல் இருக்க முடியாது போல் தோன்றியது. அனைத்து மாற்றத்திற்கும் காரணம் ஆர்த்திதான்."கிருஷ்ணன் நான் இந்த வீக் எண்ட் சென்னை போறேன்... எப்ப வருவேன்னு தெரியாது. கொஞ்சம் லேட்டானாலும் ஆகலாம்.

நீ இதே மாதிரி இருக்கணும். ஓகேவா?""ஏன் இப்படி சொல்ற? ஏதாவது பிரச்சனையா?""அதெல்லாம் ஒன்னும் இல்ல... எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல... அதனால சொன்னேன்""சரி... அப்ப அப்ப போன் பண்ணு""கண்டிப்பா பண்றேன்"அவள் சென்றதிலிருந்து முதல் இரண்டு, மூன்று நாட்கள் வேலை செய்யவே முடியவில்லை. பிறகு ஓரளவு சமாளித்தேன். ஒரு வாரம் ஓடியது.அவளிடமிருந்து போனும் வரவில்லை. அவளும் வரவில்லை.

ஒரு மாதமாகிய நிலையில் போன் வந்தது."ஹலோ கிருஷ்ணன்கா???""ஆமாம்.
நீங்க யார் பேசறது?""நான் ஆர்த்தியோட அண்ணன் பேசறேன்... நீங்க சென்னை அப்போலோ வர முடியுமா? ஆர்த்தி கடைசியா உங்ககிட்ட ஏதோ பேசனுமாம்" அவர் குரலில் நடுக்கம் தெரிந்தது"கடைசியா???" இந்த வார்த்தையை கேட்டவுடன் இதயம் நின்றுவிடும் போலிருந்தது."ஆர்த்திக்கு என்னாச்சு???""நீங்க இங்க வாங்க... அத சொல்ற நிலைமைல நாங்க இல்ல... சென்னை வந்தவுடனே இந்த நம்பருக்கு கூப்பிடுங்க...
நான் வந்து உங்களை பிக்-அப் பண்ணிக்கிறேன்"அந்த நம்பர் மனதில் பதிந்தது...சென்னைக்கு அப்போழுதே நேராக புறப்பட்டேன்...ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றார் ஆர்த்தியின் அண்ணன். அவளுக்கு ஸ்பைனல் கார்டில் ஏதோ பிரச்சனையாம். ஒரு வருடமாக ட்ரீட்மெண்ட் செய்து வந்தார்களாம். சரியாகிவிடும் என்று அனைத்து டாக்டர்களும் நம்பிக்கையூட்டிய நிலையில் திடீரென்று அவள் மூளையை பாதித்துவிட்டதாம்.
எனக்கு எதுவும் விளங்கவில்லை. புதுப்புது வார்த்தைகள். புது உலகம்.ஹாஸ்பிட்டலில் காய்ந்து போனா பூச்சரமாக இருந்தாள் ஆர்த்தி. ஆனாலும் வாசம் மறையவில்லை. ஓரளவு பேசும் நிலைதான்...
என்னை விட்டுவிட்டு அவள் அண்ணன் டாக்டரை பார்க்க சென்றார்.எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.

கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது."கிருஷ்ணன்... அழுவாத!!! எனக்கு கஷ்டமா இருக்கு""ஏன் ஆர்த்தி? ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல""நான் எப்படியும் பொழைக்க மாட்டேனு தெரியும். ஆனா எங்க வீட்லதான் ரொம்ப நம்பிட்டு இருந்தாங்க. இங்க எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்கனுதான் நான் பெங்களுருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தேன்"ஒரு நிமிட அமைதிக்கு பிறகு தொடர்ந்தாள்"அன்னைக்கு உன்ன முதல் தடவை பார்க்கும் போதே...

உன் கண்ல ஒரு விரக்தி தெரிஞ்சிது. வாழ்க்கையோட அருமை உனக்கு தெரியலனு என் மனசுல பட்டுச்சு. சரி நான் சாவறத்துக்குள்ள உனக்கு ஏதாவது உதவி செய்யனும்னுதான் உன்கூட பேச ஆரம்பிச்சேன். போக போக உன்கூட பேசறதே எனக்கு ரொம்ப சந்தோஷத்த குடுக்க ஆரம்பிச்சிடுச்சு. உங்கிட்ட சொல்லி உன்ன கஷ்டப்படுத்த வேண்டாம்னுதான் சொல்லல.""

ஆர்த்தி... உனக்கு ஒன்னும் ஆகாது. நீ என்ன விட்டுட்டு எங்கயும் போக மாட்ட""ஆமாம். நான் எங்கயும் போக மாட்டேன் கிருஷ்ணன்...நீ பாக்கற ஒவ்வொரு புது மனிதர்களிளும் நான் இருப்பேன். நீ அவுங்ககிட்ட பேசும் போது அது என்கிட்ட பேசற மாதிரி... என்ன சரியா???"ஒரு வாரம் சென்னையில் தங்கிவிட்டு வந்தேன்...
காலை 7 மணி...வழக்கம் போல் லேசாக தூறல் போட்டு கொண்டிருந்தது. பஸ் வந்தவுடன் ஏறினேன்."ஹாய்... நான் இங்க உக்காரலாமா?""தாராளமா""என் பேர் கிருஷ்ணன்...""நான் ரமேஷ்..."(ஆர்த்தியுடன் பேசி கொண்டிருந்தேன்...).... ...

எங்கிருந்தோ ஒரு குரல் (அக்கா ) டேய் எந்திரிடா என்று!!!!!!!

அங்க இங்க‌ சுத்தவேன்டியது காலையில் 8 மணிவரைக்கும் தூக்கற‌து....
இன்னக்கு ஊருக்கு போரேன்னு 9 மணி ரயிலுக்கு புக் பன்னிட்டு தூக்கத்த பாரு.....

அட கனவா....தூறல் சிறுகதை!! 67637தூறல் சிறுகதை!! 67637

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Fri Feb 05, 2010 7:37 pm

தூறல் சிறுகதை!! 838572 தூறல் சிறுகதை!! 838572

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக