ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு அதிரடி அமெரிக்காவை அதிர்ச்சியில் உறையவைத்த ரஷ்யா

2 posters

Go down

ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு அதிரடி அமெரிக்காவை அதிர்ச்சியில் உறையவைத்த ரஷ்யா Empty ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு அதிரடி அமெரிக்காவை அதிர்ச்சியில் உறையவைத்த ரஷ்யா

Post by ayyasamy ram Sun Aug 11, 2019 9:19 am

ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு அதிரடி அமெரிக்காவை அதிர்ச்சியில் உறையவைத்த ரஷ்யா Dkn_Tamil_News_2019_Aug__398845851421357
-
மாஸ்கோ:
உலகில் ராணுவ பலத்தில் 2வது வலிமையான நாடாக
ரஷ்யா கருதப்படுகிறது. ரஷ்யாவின் விமானப் படை
பலத்தை மேம்படுத்த, அதிபர் புடின் தீவிர கவனம் செலுத்தி
வருகிறார்.

இதில், எதிரிகளால் வெற்றி கொள்ள முடியாத திறன்படைத்த
அணு ஆயுதங்கள், ஒலியைவிட 5 மடங்கு வேகம் கொண்டு
எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் சக்திபடைத்த
‘ஹைபர்சோனிக்’ ஏவுகணைகள் ஆகியவற்றை ராணுவத்தில்
சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் நவீன தொழில்நுட்பத்துடன் உளவு விமானம்
ஒன்றை ரஷ்யா தயாரித்துள்ளது. ‘ஓகோட்னிக்’ (Okhotnik)
என்று இந்த ஆளில்லா விமானத்திற்கு பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த விமானத்தை பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனம்
சுகோய் தயாரித்துள்ளது. 20 டன் வெடிபொருளைச் சுமந்து
கொண்டு, 5 ஆயிரம் கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன்
கொண்டது.

இந்த விமானத்தின் இறக்கைகள் 50 அடி நீளம் கொண்டது.
இந்த விமானம் ஒற்றை ஜெட் இன்ஜின் பொறுத்தப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு 620 மைல் தூரம் செல்லக் கூடியது.
இந்த விமானத்தை சில தினங்களுக்கு முன்பு ரஷ்யா பறக்க
விட்டு சோதனை செய்தது.

இந்த சோதனை வெற்றிகரமாக நடந்ததாக ரஷ்ய செய்தி
நிறுவனம் டாஸ் தெரிவித்துள்ளது. இந்த விமானத்தை
ராணுவத்தில் சேர்ப்பதன் மூலம் ரஷ்யாவின் வலிமையை
உலகிற்கு தெரியப்படுத்த புடின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன் வெளிப்பாடே இந்த விமானத்தின் புறப்பாடு, நடுவானில்
பயணம், தரையிறங்கும் காட்சிகள் அடங்கிய ஒரு நிமிட வீடியோ
காட்சிகளை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆளில்லா விமானம், அமெரிக்காவின் பி-2 போர்
விமானத்தைப் போன்று வலிமை படைத்தது. அமெரிக்க
விமானம் 3,100 மைல் சுற்றளவிற்கு பறந்து சென்று தாக்கும்
வல்லமை படைத்தது.

எரிபொருள் ஒரு முறை நிரப்பியவுடன், நியூயார்க் நகரில்
இருந்து போர்ச்சுக்கல் வரையில் சென்று திரும்பும் திறன்
படைத்தது. ரஷ்யாவின் புதிய கண்டுபிடிப்பான எஸ்-70
‘ஒகோட்னிக்’ அல்லது ‘ஹன்டர்’ என்று அழைக்கப்படும்
இந்த ஆளில்லா விமானம் தன்னுடைய 20 நிமிடங்கள்
சோதனையை எந்தவித சிக்கலும் இல்லாமல் நடத்தி
முடித்துள்ளது என்று ரஷ்ய ராணுவ அதிகாரிகள் பெருமையுடன்
கூறியுள்ளனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு அதிரடி அமெரிக்காவை அதிர்ச்சியில் உறையவைத்த ரஷ்யா Empty Re: ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு அதிரடி அமெரிக்காவை அதிர்ச்சியில் உறையவைத்த ரஷ்யா

Post by ayyasamy ram Sun Aug 11, 2019 9:19 am



டாப் 10 நாடுகள்
---------------------
உலகில் ராணுவ பலத்தில் டாப் - 10 நாடுகள் பட்டியலில்
இந்தியா 4வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. பகை
நாடுகளில் இருந்து தனது வளங்களையும், மக்களையும்
பாதுகாப்பதற்காக, ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பலம்
மிக முக்கியமானதாக இருக்கிறது.

ஏராளமான நாடுகள் பல ஆயிரம் கோடிகளை ராணுவத்திற்கு
ஆண்டுதோறும் ஒதுக்கி வலிமை படுத்தி வருகின்றன.
இந்தநிலையில், ராணுவ பலத்தில் உலகின் மிக வலிமையான
10 நாடுகளை குளோபல் ஃபயர்பவர் அமைப்பும், கிரெடிட் சூசேவும்
இணைந்து கடந்த 2016ம் ஆண்டில் வெளியிட்டன.

இதில், அணு ஆயுத வல்லமை குறித்த தகவல்களில் முரண்பாடுகள்,
வெளிப்படைத்தன்மை இல்லாததால், ஆய்வில் அவை தவிர்க்கப்பட்டன.

பக்கத்து நாடுகளின் அச்சுறுத்தல்கள், உலக நாடுகளின்
அரசியல் மற்றும் ராணுவ தந்திரங்களை எதிர்கொள்ளும்
விதத்தில் இந்தியாவும் இந்த பட்டியலில் மிக முக்கியமான
இடத்தைப் பிடித்துள்ளது.

1. அமெரிக்கா, 2 ரஷ்யா, 3. சீனா, 4. இந்தியா, 5. இங்கிலாந்து,
6.பிரான்ஸ், 7. தென் கொரியா, 8. ஜெர்மனி, 9. ஜப்பான், 10. துருக்கி.
முதலிடத்தில் உள்ள அமெரிக்கா ஆண்டுதோறும் ராணுவத்திற்கு
மட்டும் சுமார் 600 பில்லியன் டாலர்களை கொட்டிக் கொடுக்கிறது.
ஆனால், இந்த நிதி ஒதுக்கீட்டை குறைக்க அந்த நாடு
திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
--------------------------------
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு அதிரடி அமெரிக்காவை அதிர்ச்சியில் உறையவைத்த ரஷ்யா Empty Re: ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு அதிரடி அமெரிக்காவை அதிர்ச்சியில் உறையவைத்த ரஷ்யா

Post by Guest Sun Aug 11, 2019 4:18 pm

ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு அதிரடி அமெரிக்காவை அதிர்ச்சியில் உறையவைத்த ரஷ்யா 1571444738
ரஷ்ய நாடு சென்னையில் ஒரு அணுக்குண்டைப் போட்டால் என்ன நடக்கும்?

ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு அதிரடி அமெரிக்காவை அதிர்ச்சியில் உறையவைத்த ரஷ்யா QAgxQ6NCSs05LVF6SOCe+atom
avatar
Guest
Guest


Back to top Go down

ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு அதிரடி அமெரிக்காவை அதிர்ச்சியில் உறையவைத்த ரஷ்யா Empty Re: ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு அதிரடி அமெரிக்காவை அதிர்ச்சியில் உறையவைத்த ரஷ்யா

Post by T.N.Balasubramanian Sun Aug 11, 2019 5:56 pm

சக்தி18 wrote:ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு அதிரடி அமெரிக்காவை அதிர்ச்சியில் உறையவைத்த ரஷ்யா 1571444738
"ரஷ்ய நாடு சென்னையில் ஒரு அணுக்குண்டைப் போட்டால்  என்ன நடக்கும்?"


என்னை பிடிக்காவிட்டால் நேரிடையாக கூறிவிடுங்கள் சக்தி.
அதற்காக ரஷ்யா  மூலம் என்னை அழிப்பதற்காக  நான் வசிக்கும் சென்னையை  அணுகுண்டால் அழிக்கவேண்டுமா? நல்லவர்கள் பலர் வாழ்கின்ற சென்னை மாநகரம், நல்லவர்கள் பலர் மடிவார்கள்.

ரமணியன்

@சக்தி18


Last edited by T.N.Balasubramanian on Sun Aug 11, 2019 6:06 pm; edited 1 time in total (Reason for editing : editing)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு அதிரடி அமெரிக்காவை அதிர்ச்சியில் உறையவைத்த ரஷ்யா Empty Re: ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு அதிரடி அமெரிக்காவை அதிர்ச்சியில் உறையவைத்த ரஷ்யா

Post by Guest Sun Aug 11, 2019 6:57 pm

ஆஹா!ஓஹோ!

உலகில் உள்ள ஒன்பது நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உண்டு. அவற்றில் ரஷ்யா இந்தியாவுடன் சமாதான பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ள நேச நாடாகும்.அதனால் ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை. அதனால்தான் ரஷ்யா போட்டால்? என சேர்த்தேன்.

இந்தியாவில் அணு ஆயுதங்கள் இருப்பதால் பாகிஸ்தான் உட்பட எந்த நாடும் இந்தியா மீது அணு ஆயுதங்களை பாவிக்க வாய்ப்பில்லை.
அதனால் சென்னையில் உள்ள எந்த நல்லவர்களும் பயம் கொள்ளத் தேவையில்லை.
கெட்டவர்கள்? …………… தங்களை திருத்திக் கொள்ளுவதுதான் ஒரே வழி.

இல்லையேல் ஒரு வழி உண்டு. யாகம் செய்வது.
avatar
Guest
Guest


Back to top Go down

ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு அதிரடி அமெரிக்காவை அதிர்ச்சியில் உறையவைத்த ரஷ்யா Empty Re: ஆளில்லாத விமானத்தை பறக்க விட்டு அதிரடி அமெரிக்காவை அதிர்ச்சியில் உறையவைத்த ரஷ்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum