ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள்,

4 posters

Go down

தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள், Empty தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள்,

Post by aarul Mon Dec 28, 2009 8:35 am


தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள்,





தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள், 19350_1208412849255_1196701119_30527016_1382401_n

தலைவர் பிரபாகரன்

விகடன்
இந்த வாரம் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள், நிச்சயம்
படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே,
தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான்.

ஆனாலும்,
மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய
உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.

தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா…


தம்பி
எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக்
கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை
மாற்றிக்காட்டிய மனிதர்!

அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை
முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த
கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு
என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார்
அப்பா!

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி,
சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர்
சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர்
வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி’
என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

பிரபாகரனுக்கு
அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ”போலீஸ் நிலையங்களைத்
தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்” என்று இவரைப் பார்த்து பிரபாகரன்
கேட்க, ”எடுத்தால் எங்கே வைப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க…
அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

பிரபாகரன்
அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில்
‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும்
எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

மிக
மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது
சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம்.
அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

”ஏன்
எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?” என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர்
கேட்டபோது பிரபாகரன் சொன்னது, ”யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான்.
அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.”

”பிரபாகரன் ஒருபோதும்
புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும்
இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில்
புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால்,
அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி
பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும்
சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

அக்காவின்
திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான்
அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன்
பிறகு அவர், நகை அணிவதில்லை!

எந்த ஆயுதத்தையும் கழற்றி
மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின்
மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன்
முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை!

ஒவ்வொரு
நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம்
இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும்
தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

‘இயற்கை
எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி’ என்ற
வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

போரில்
யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய
பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம்
கொடுப்பாராம் பிரபாகரன்!

ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய்
பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த
துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

பிரபாகரனுக்குப்
பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ”தன்னிழப்புக்கும் உயிர்த்
தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை
எப்போதும் நினைப்பேன்” என்பார்!

தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி
காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம்
பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக
அறிவித்திருந்தார்!

பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை
வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர்
அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல்
திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து
பிரபாகரனுடன் மோதியவர்கள்!

அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை
இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன்.
அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை
ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள்
வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்!

பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

பிரபாகரனிடம்
நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி,
பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்:
பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி
கொடுத்தவர்கள்!

தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை
சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், ”நான் தூய்மையாக
இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள்
குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!”

”ஒன்று நான்
லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க
வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?”
என்றுஅடக்க மாகச் சொல்வார்!

மிக நெருக்கடியான போர்ச் சூழல்
நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம்.
அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார்.
எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக
இருந்திருக்கிறார்!

‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான்
பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்’ என்று
பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள், Empty Re: தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள்,

Post by ராஜா Mon Dec 28, 2009 2:30 pm

தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள், 677196 தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள், 677196 தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள், 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள், Empty Re: தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள்,

Post by செரின் Mon Dec 28, 2009 3:24 pm

அருமை நன்றி அருள்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள், Empty Re: தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள்,

Post by shanmughamraja Mon Dec 28, 2009 6:24 pm

very good article
avatar
shanmughamraja
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 30/03/2009

Back to top Go down

தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள், Empty Re: தலைவர் பிரபாகரன் - 25 குறிப்புகள்,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum