Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொன்மனம் முத்துக்காளை
Page 1 of 1
பொன்மனம் முத்துக்காளை
-
பொன்மனம் படைத்தவர்கள் இல்லை என்றால் இந்த
முத்துக்காளை இல்லை. சொந்த ஊர் ராஜபாளையம்
அருகில் உள்ள சங்கம்பட்டி என்கிற திருகோதையாபுரம்.
ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போது முதன்முதலாக
ஒரு பொன்மனசுக்காரரை சந்தித்தேன்.
அப்போது சத்துணவுக்கு என்று தனியாக ஆயாமார்கள்
கிடையாது. ஆயாக்களுக்கு பதிலாக சில சமயம் நான்
சமையல் பணிக்கு உதவியாக இருப்பேன். அதற்கு
பிரதிபலனாக எனக்கு பாஸ்மார்க் கிடைத்தது.
என்னை பாஸாக்கிவிட்ட அந்த பொன்மனசுக்காரர்
வீராச்சாமி என்ற ஆசிரியர்.
இளம் வயதிலேயே எனக்குள் சினிமா மோகம் ஆக்கிரமித்தது.
சினிமாவில் ஸ்டண்ட்மேனாக சேரவேண்டும் என்பதுதான்
அப்போதைய லட்சியமாக இருந்தது. அதற்காகவே கராத்தே
போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்ள
ஆரம்பித்தேன்.
கராத்தே மாஸ்டர்ஸ் எம்.ஆர்.கணபதி, மோகன், ரவி ஆகிய
மூன்று பொன்மனசுக்கார்கள்தான் என்னுடைய சினிமா
கனவுக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்கள்.
பிளாக் பெல்ட் வாங்கியபிறகு நானே மாணவர்களுக்கு
கராத்தே சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். என் மாணவர்கள்
என்னைவிட கெட்டிக்காரர்கள். அவர்களை வைத்து
சினிமாவுக்கான சண்டைக் காட்சிகளை நானே கம்போஸ்
பண்ணிப் பார்ப்பேன்.
அப்போது நான் எங்க ஊர்ல உள்ள ஆறுமுகா குரூப் என்ற
பஞ்சு மில் நிறுவனத்தில் சில காலம் மிஷின் தறி ஓட்டுபவனாக
வேலை செய்தேன்.
காலையில் வேலை மாலையில் வகுப்பு என்ற நிலையில்
சில சமயம் நிர்வாகம் எனக்கு சிறப்பு அனுமதி கொடுத்து
கராத்தே பயிற்சி வகுப்புக்கு அனுப்பியதுண்டு.
அந்தவகையில் எனக்கு வேலையும் கொடுத்து என்னுடைய
ஆர்வத்தையும் உற்சாகப்படுத்திய ஆறுமுகா நிறுவனத்தினரும்
பொன்மனம் படைத்தவர்கள்தான்.
ஒரு கட்டத்தில் சொந்தமா டைலர் ஷாப் நடத்தினேன்.
இங்குதான் வாழ்க்கையில் மறக்கமுடியாத இரண்டு
பொன்மனதுக்காரர்களைச் சந்தித்தேன். ஏன்னா, அவர்கள்
இப்போதும் என்னுடைய நலனில் அக்கறை காட்டுகிறார்கள்.
டைலர் ஷாப்பில் கட்டிங், ஸ்டிச்சிங் மட்டும்தான் என்னுடைய
வேலை. கோமதிசங்கர், கடற்கரை என்ற அந்த இரண்டு
நண்பர்கள் மீதமுள்ள வேலையைச் செய்வார்கள். தீபாவளி,
பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் வீட்டுக்குப்
போகாமல்கூட எனக்கு உதவி செய்திருக்கிறார்கள்.
-
------------------
Re: பொன்மனம் முத்துக்காளை
-
தொண்ணூறுகளில் சினிமா கனவுகளுடன் சென்னைக்கு
வந்தேன். சினிமாவுக்கு வந்த பிறகு வழக்கம்போல்
பல போராட்டங்கள். அதைச் சொல்லி பக்கத்தை வீணாக்க
விருப்பமில்லை.சென்னை வாழ்க்கையில் நான் சந்தித்த
முதல் பொன்மனசுக்காரர் விஸ்வநாதன். அவர் மாருதி
டெய்லர், மாருதி டெலிகம்யூனிகேஷன்ஸ் என்ற இரண்டு
நிறுவனங்களை நடத்திவந்தார்.
சினிமாவில் வாய்ப்பு தேடும் பலருக்கு அவருடைய கடைதான்
சரணாலயம்.
இயக்குநர் வசந்தபாலன், சூரி போன்ற இப்போதைய
பிரபலங்கள் அவருடைய கடையின் தொலைபேசி
எண்ணைத்தான் பி.பி. நம்பராகக் கொடுத்திருப்பார்கள்.
அந்தக் கடையில் சில சமயம் மறைந்த இயக்குநர்
பாலுமகேந்திரா சாரை அடிக்கடி பார்க்கலாம்.
ஒருசில நாளில் மணிக்கணக்கில் அங்கு பொழுதைக்
கழித்ததும் உண்டு. ஸ்டண்ட்மேனாக வரவேண்டும் என்ற
கனவை நிஜமாக்கியதில் விஸ்வநாதன் அண்ணனுக்கு
பங்கு உண்டு.
ஸ்டண்ட் யூனியனில் என்னைச் சேர்த்துக்கொள்ள அனுமதி
கிடைத்தபோது என்னிடம் பணம் இல்லை. அப்போது
விஸ்வநாதன் அண்ணன்தான் எனக்கு பணம் ஏற்பாடு செய்து
கொடுத்தார். மெம்பராக சேர்ந்தபிறகு நான் வேலை பார்த்த
படம் ‘காதலுக்கு மரியாதை’.
சினிமாவில் நான் மறக்கவே முடியாத மூன்று பேர்
இருக்கிறார்கள். ‘பொன்மனம்’ பட இயக்குநர்
எஸ்.பி.ராஜ்குமார், நடிகர் பிரபு, ஸ்டண்ட் மாஸ்டர் சிவா.
இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் பார்வையில் நான் படாமல்
இருந்திருந்தால் சினிமாவில் நடிகனாக என்னைப் பார்த்திருக்க
முடியாது. ஒருவேளை ஸ்டண்ட்மேனாக இருந்திருப்பேன்.
எஸ்.பி.ராஜ்குமாரின் தேர்வுக்கு அங்கீகாரம் கொடுத்தது
பிரபு சார்.
ஏன்னா, நான் பண்ணிய ரோல் கனல் கண்ணன் மாஸ்டர்
பண்ணவேண்டிய ரோல். அவர் வரமுடியாத சூழல் ஏற்பட்ட
போது அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதில் ஸ்டண்ட்
சிவா மாஸ்டர் முக்கியமானவர். இந்த மூன்று நல்ல
உள்ளங்கள்தான் ‘பொன்மனம்’ என்ற டைட்டிலுக்கு
சொந்தக்காரர்கள்.
சினிமாவில் சண்டைக்காரனாக இருந்த என்னை
காமெடியனாக மாற்றிய வகையில் கவுண்டமனி
அண்ணனும் பொன்மனசுக்காரர்தான். ‘என் உயிர் நீதானே’
என்ற படத்தில் நடித்தபோது எனக்கு காமெடி வரும் என்று
அடையாளப்படுத்தியது கவுண்டர் அண்ணன்தான்.
அவருடன் ஏழு சீன்கள் நடித்தது பெரிய அனுபவம். நான்
டைமிங் காமெடி பண்ணுவதை அவர் வெகுவாகப் பாராட்டியதை
மறக்க முடியாது.
எனக்கு இன்றளவும் புகழைக் கொடுத்து வருவது
‘என் புருஷன் குழந்த மாதிரி’ படத்துல வரும் ‘செத்து செத்து
விளையாடுவோமா’ என்ற காமெடி. இந்த காமெடி வரவில்லை
என்றால் 200க்கும் மேற்பட்ட படங்கள் பண்ணியிருக்க முடியாது.
அந்தப் படத்தில் வடிவேல் சாரை புரட்டி எடுத்திருப்பேன்.
அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுக்கவிலை என்றால்
என்னுடைய நடிப்புக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்காது.
அந்தப் படத்துக்குப் பிறகுதான் நான் காமெடி நடிகனாக
அங்கீகரிக்கப்பட்டேன்.
அந்தப் படத்தில் நடிக்க காரணமாக இருந்த படம்
‘வாட்டாக்குடி இரணியன்’. இயக்குநர்
வின்சென்ட் செல்வாவின் பொன்மனதால்தான் எனக்கு அந்த
வாய்ப்பு கிடைத்தது. அவர் மட்டும் நான் புதுமுகம் என்று
அவாய்ட் பண்ணியிருந்தால் வடிவேல் எனும் மகா நடிகனுடன்
இணைந்து நடித்திருக்க முடியாது.
நான் கிராமத்திலிருந்து வந்தவன். என்னுடைய திருமணம்
ஊரில் நடந்தது. சென்னையில் நடந்த ரிசப்ஷனுக்கு சினிமாவின்
அத்தனை ஜாம்பவான்களும் வந்தார்கள். வாழ்த்த வந்த
அனைவருமே பொன்மனம் படைத்தவர்கள்.
நான் சென்னைக்கு வந்த புதுசுல ஏவி.எம்.நிறுவனத்தில்
கார்ப்பெண்டராக வேலை செய்திருக்கிறேன்.
அப்போது சம்பளம் கொடுத்த முதலாளி ஏவி.எம். சரவணன்.
அவர் என் ரிசப்ஷனுக்கு வந்தது அவர் பொன்மனதைக்
காண்பித்தது. விஜயகாந்த், சரத்குமார், வடிவேல், விவேக்
என்று ஏராளமான சினிமா பிரபலங்கள் தங்கள் வருகையால்
என்னை மகிழவைத்ததை வாழ்நாளில் மறக்க முடியாது.
‘சிவாஜி’ படத்தில் நடித்தபோது ரஜினி சாரின்
பொன்மனதைப் பார்க்க முடிந்தது. படப்பிடிப்பு சமயத்தில்
என்னை பக்கத்தில் உட்கார வைத்து என்னுடைய முதல்
படத்திலிருந்து சமீபத்திய படம் வரை என்னுடைய நடிப்பை
சுட்டிக்காட்டி பாராட்டிப் பேசியபோது நெகிழ்ந்து போனேன்.
எனக்கு நான்கு தங்கைகள். ஒரு அண்ணன். வீட்டுக்கு என்று
எதுவும் செய்ததில்லை. அண்ணன்தான் எல்லா பொறுப்பையும்
ஏற்றுக் கொண்டார். அவரும் பொன்மனசுக்கார்தான்.
சென்னையில் நான் சந்தித்த பொன்மனசுக்கார்கள்
பட்டியலில் மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜ், உதவி
இயக்குநர் பாவை ஆகியோருக்கு பங்கு உண்டு. இதில்
நண்பர் கோவிந்தராஜ் என்னுடைய ஆல்பத்தை வைத்துக்
கொண்டு எனக்காக பல கம்பெனிகளில் வாய்ப்புக்காக
படி ஏறியிருக்கிறார்.
இப்போது எனக்கு வரும் படங்களில் நல்ல பெயர்
வாங்குமளவுக்கு உழைத்து வருகிறேன்.
என்னுடைய தகுதிக்கு ஏற்றமாதிரி என்னால் முடிந்த
உதவிகளைச் செய்து வருகிறேன். முத்தாய்ப்பாக, எனது
நடிப்பை ரசித்து பாராட்டிவரும் அனைத்து ரசிகப்
பெருமக்களும் பொன்மனதுக்குச் சொந்தக்காரர்கள்தான்.
=======================
தொகுப்பு: சுரேஷ்ராஜா
வண்ணத்திரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum