ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!

3 posters

Go down

 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Empty புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!

Post by ayyasamy ram Tue Jul 23, 2019 10:24 am

 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! K8

"காலை எழுந்தவுடன் படிப்பு' என்றார் பாரதியார்.
நம்மில் பலருக்கோ காலை எழுந்தவுடன் காபி தேவையாக
இருக்கிறது. காபி குடிக்காவிட்டால் எதையோ இழந்து
விட்டதைப் போல காணப்படுவார்கள்.

சிலர் சாலையில் நடந்து கொண்டு இருக்கும்போது நல்ல
காபியின் வாசனை வந்தால், உடனே பிரேக் போட்டு நிறுத்தி,
அந்த காபி கடையில் மூழ்கி எழுந்து வருவார்கள். காபி ஒரு
போதையைப் போல பலரை ஆட்டிப் படைக்கிறது.

காபி எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது? காபி குடிக்காமல்
இருக்க என்ன செய்ய வேண்டும்? காபி பழக்கத்தால் உடலுக்கு
ஏற்படும் தீமைகள் எவை என்று சென்னை போர்டிஸ் மலர்
மருத்துவமனையின் குடலியல்துறைச் சேர்ந்த
டாக்டர் பி.பாசுமணியிடம் கேட்டோம்:

ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடித்தால் பாதுகாப்பானது?
எவ்வளவு குடித்தால் அதிகமானது?


காபியின் அளவு நாம் குடிக்கும் கப்பிற்கு ஏற்ப மாறுபடும்.
தோராயமாக 100 மில்லி கிராம் காபினை உள்ளடக்கிய
காபியை ஒரு நாளைக்கு 2 முதல் 4 முறை குடிக்கலாம்.
அதையே 6 முறை குடித்தால் அது மிகவும் அதிகமானதாகும்.

காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் எவை?


காபி கொட்டை என்பது ஒரு விதையாகும். எல்லா விதைகளைப்
போல அதுவும் ஒரு விதைதான். இதில் அதிக அளவிலான
ஆன்டியாக்சிடன்ட்கள் உள்ளன. அவை

* மனச்சோர்வு
* மன அழுத்தம்
* நடுக்குவாத நோய்
* கல்லீரல் நோய், ஈரல் மற்றும் கல்லீரல் புற்று நோய்
* இதர புற்ற நோய்

போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்து உடலுக்கு நன்மை
அளிக்கிறது.

அதிக அளவில் காபி குடித்தால் ஏற்படும் ஆபத்துகள் எவை?


காபி கொட்டைகள் மூளையை தூண்டக் கூடியவை.
காபியை அதிக அளவில் குடித்தால் அது நம்மை அடிமையாக்கி
விடும். அவ்வாறு இருக்கும்பட்சத்தில் சிலருக்கு படபடப்பு,
அதிக உற்சாகம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்பட
வாய்ப்பு உள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Empty Re: புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!

Post by ayyasamy ram Tue Jul 23, 2019 10:24 am


அதிக அளவில் காபி குடித்தால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு
உள்ளது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அது குறித்து கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்?


காபி தொடர்பான நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய
ஆய்வுகள் அனைத்தும் கவனிக்கத்தக்கவை. எனவே அவை
சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட காரணத்தையும் அதன்
விளைவையும் நிரூபிக்கவில்லை. சிலருக்கு மரபணு காரணமாக
காபின் மெதுவான வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த நபர்கள் தொடர்ந்து காபி குடித்தால் அவர்களுக்கு இதய
நோய்கள் வர அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. மேலும்
எப்போதாவது மட்டுமே காபி குடிப்பவர்கள் தங்கள் இதயத்தை
உற்சாகப்படுத்தலாம். இருந்தாலும் இதயம் தொடர்பான
பிரச்னைகள் வரக்கூடும்.

வடிகட்டப்படாத காபி கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும்.
காபின் ரத்த அழுத்தத்தை மெதுவாக அதிகரிக்கச் செய்யும்.

ஒருவர் காபிக்கு அடிமை என்பது எப்படித் தெரிய வரும்?
அதில் இருந்து அவர் மீள்வது எப்படி?

நீங்கள் வழக்கமாகக் குடிக்கும் காபியை குடிக்காதபோது
உங்களுக்கு தலைவலி, உடல் சோர்வு, கவனமின்மை ஆகியவை
இருந்தால் நீங்கள் காபிக்கு அடிமை என்று தெரிய வரும்.

நல்ல உணர்வைப் பெற நீங்கள் மேலும் மேலும் காபி குடித்தால்,
அது அடிமைக்கான மற்றொரு அறிகுறியாகும். நீங்கள் ஒரு
நாளைக்கு 4 கப்பிற்கு மேல் காபி குடிக்காதீர்கள். குறிப்பாக
நீங்கள் வேலை செய்யாதபோது அல்லது ஓய்வில் இருக்கும்
போது ஒரு முறை காபியைத் தவிர்த்து பழச்சாறுகள், இளநீர்
அல்லது இதர காய்கறி ஜூஸ்களைக் குடிக்கவும்.

இது உங்கள் உடல் அமைப்பு எப்போதும் எல்லா நேரமும்
காபியைச் சார்ந்து இருக்காது என்பதை உறுதி செய்யும்.
காபின் தற்போது டீ, குளிர் பானங்கள், ஊட்டசத்து பானங்கள்
ஆகியவற்றிலும் வருகிறது.

அதிக அளவில் காபி குடிக்கும் இளம் தலைமுறையினர் அதில்
இருந்து விழித்துக் கொள்ள உங்கள் ஆலோசனை என்ன?


ஒரு கப் காபி என்பது உங்களுக்கு உற்சாகத்தை தருவதோடு
உங்கள் வாசிப்புத் திறனை மேலும் அதிகப்படுத்த உதவுகிறது.
அதிக அளவில் காபி குடித்தால் அது உங்களுக்கு தூக்கமின்மை
மற்றும் பலவீனமான ஆற்றலுக்கு வழி வகுக்கிறது. எனவே பு
த்திசாலித்தனமாக காபியைக் குடியுங்கள்.

அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத்
தவிருங்கள்.
-
--------------------------------------
- ஸ்ரீதேவி
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Empty Re: புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!

Post by Guest Tue Jul 23, 2019 4:50 pm

 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! 1571444738

ஸ்ரீதேவி அக்கா எனக்கு ஒன்னு புரியல. ஒருவர் குடி என்கிறார் இன்னொருவர் குடிக்காதே என்கிறார். நான் என்ன செய்ய? குடிக்கவா இல்லை குடிக்காமல் விடவா?
avatar
Guest
Guest


Back to top Go down

 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Empty Re: புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!

Post by ஜாஹீதாபானு Tue Jul 23, 2019 4:57 pm

சக்தி18 wrote: புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! 1571444738

ஸ்ரீதேவி அக்கா எனக்கு ஒன்னு புரியல. ஒருவர் குடி என்கிறார் இன்னொருவர் குடிக்காதே என்கிறார். நான் என்ன செய்ய? குடிக்கவா இல்லை குடிக்காமல் விடவா?
மேற்கோள் செய்த பதிவு: 1301014
குடிக்காம இருப்பது காப்பிக்கு நல்லது சிரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Empty Re: புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!

Post by T.N.Balasubramanian Tue Jul 23, 2019 6:09 pm

sri devi /ayyasamiram wrote:அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத்
தவிருங்கள்.
-
அதிகாலை என்பது o4 30 என்று வைத்துக்கொள்வோம்.
மாலை என்பது 1600 என்று வைத்துக்கொள்வோம்.
காலை நாலரை மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
மாலை நாலு மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
அப்பிடி என்றால் காலை நாலு மணிக்கு எழுந்து காபி குடிக்கணுமா?
எப்பதான் காபி குடிப்பது?
காபி குடிக்காமல் கட்டுரை எழுதி இருப்பாரோ இவர்?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Empty Re: புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!

Post by ஜாஹீதாபானு Wed Jul 24, 2019 7:33 pm

T.N.Balasubramanian wrote:
sri devi /ayyasamiram wrote:அதிகாலை, மாலை வேளைகளுக்கு பிறகு காபி குடிப்பதைத்
தவிருங்கள்.
-
அதிகாலை என்பது o4 30 என்று வைத்துக்கொள்வோம்.
மாலை என்பது 1600 என்று வைத்துக்கொள்வோம்.
காலை நாலரை மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
மாலை நாலு மணிக்கு மேல் காபி குடிக்கக்கூடாது.
அப்பிடி என்றால் காலை நாலு மணிக்கு எழுந்து காபி குடிக்கணுமா?
எப்பதான் காபி குடிப்பது?
காபி குடிக்காமல் கட்டுரை எழுதி இருப்பாரோ இவர்?

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1301019
இவ்வளவு கேள்வி கேட்பீங்கனு தெரிஞ்சிருந்தா கட்டுரையே போட்டு இருக்க மாட்டாங்க ஐயா  புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Empty Re: புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!

Post by T.N.Balasubramanian Wed Jul 24, 2019 7:39 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
மத்தியான நேர சிறு தூக்கம் போட்டு, மாலை நேர காபி குடித்துக்கொண்டே எழுதிய மறுமொழி அது, பானு.
ரமணியன்

@ஜாஹீதாபானு


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Empty Re: புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!

Post by Guest Thu Jul 25, 2019 1:04 pm

ஈகரையில் மட்டும் காப்பி நல்லது, ஈகரைக்கும் காப்பி நல்லது,காப்பிக்கும் நல்லது. அப்படி ஒரு விதிமுறை ஈகரையில் உள்ளது.காப்பியின் பெயரை போட்டால் காப்பிக்கு நல்லது. பெயர் போடாவிட்டால் காப்பிக்கு நல்லது அல்ல. ஈகரைக்கும் நல்லதல்ல.
நான் அந்தக் காப்பியை (coffee) சொல்லவில்லை,இந்தக் காப்பியை (copy) சொல்கிறேன்.குளம்பி (coffee-காப்பி) னால் நான் பொறுப்பல்ல.
(ஈகரை விதிகளை மீறி பதிவிட்டதற்கு மன்னிக்கவும்)
avatar
Guest
Guest


Back to top Go down

 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Empty Re: புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!

Post by T.N.Balasubramanian Thu Jul 25, 2019 4:26 pm

சக்தி18 wrote:ஈகரையில் மட்டும் காப்பி நல்லது, ஈகரைக்கும் காப்பி நல்லது,காப்பிக்கும் நல்லது. அப்படி ஒரு விதிமுறை ஈகரையில் உள்ளது.காப்பியின் பெயரை போட்டால் காப்பிக்கு நல்லது. பெயர் போடாவிட்டால் காப்பிக்கு நல்லது அல்ல. ஈகரைக்கும் நல்லதல்ல.
நான் அந்தக் காப்பியை (coffee) சொல்லவில்லை,இந்தக் காப்பியை (copy) சொல்கிறேன்.குளம்பி (coffee-காப்பி) னால் நான் பொறுப்பல்ல.
(ஈகரை விதிகளை மீறி பதிவிட்டதற்கு மன்னிக்கவும்)
மேற்கோள் செய்த பதிவு: 1301104

காப்பி அடித்தவர் காப்பி அடித்ததை காப்பி பண்ணவேண்டும் என்பதுதானே
நெறிமுறை.அதைத்தானே ஈகரை கூறுகிறது.அதை காப்பி அடித்து எழுதி இருக்கிறீர்.
அது விதி மீறல் இல்லை. குழம்பி(குளம்பி)க்காதீர்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்! Empty Re: புத்திசாலித்தனமாக காபி குடியுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum