புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10 
38 Posts - 66%
heezulia
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10 
8 Posts - 14%
Guna.D
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10 
206 Posts - 74%
heezulia
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_m10ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Sun 28 Jul 2019 - 12:56

வணக்கம் அருமை நண்பர்களே! நான் எழுதிய சில மரபுக்கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் கீழ்க்கண்ட காணொலிகளில் பதிவு செய்து இருக்கிறேன். கேட்டுத் தங்களது பொன்னான கருத்துகளைப் பதிவிடவும்.
















அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Sun 28 Jul 2019 - 13:14

ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Main-qimg-e16d7d38c7036450375c333117ab021c



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 28 Jul 2019 - 18:20

ஒரு பானை சோறுக்கு
ஒரு சோறு பதம் போல்,
பதிவு எண் 2 பறைசாற்றுமே
பதித்த கவிதைதனை.

நேரமெடுத்து காணொலி கண்டு
மீண்டு சந்திப்போம்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 28 Jul 2019 - 19:31

தொளிபூக்கும் தாமரையின் மேனி சிரித்துக்
களிபூக்கும் முத்தெயிற்றுப் பொன்வாய் - ஒளிபூத்தென்
ஆவி உறுத்தும் விழியிணைகள் பெற்றாளே
தேவிநீ காதல் செலுத்து .

கருத்து நன்று . முதல் சீரும் , மூன்றாம் சீரும் முதலெழுத்து ஒன்றி மோனைநயம் பெற்றால் இன்னும் சிறப்பு .

" பெற்றாளே " என்று இருப்பதைப் " பெற்றவளே " என்று முன்னிலை ஒருமையில் வைத்தால் , தேவிநீ என்று விளிப்பதற்குப் பொருந்திவரும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon 29 Jul 2019 - 9:42

T.N.Balasubramanian wrote:ஒரு பானை சோறுக்கு
ஒரு சோறு பதம் போல்,
பதிவு எண் 2 பறைசாற்றுமே
பதித்த கவிதைதனை.

நேரமெடுத்து காணொலி கண்டு
மீண்டு சந்திப்போம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1301302

மிக்க நன்றி ஐயா!

M.Jagadeesan wrote:தொளிபூக்கும் தாமரையின் மேனி சிரித்துக்
களிபூக்கும் முத்தெயிற்றுப் பொன்வாய் - ஒளிபூத்தென்
ஆவி உறுத்தும் விழியிணைகள் பெற்றாளே
தேவிநீ காதல் செலுத்து .

கருத்து நன்று . முதல் சீரும் , மூன்றாம் சீரும் முதலெழுத்து ஒன்றி மோனைநயம் பெற்றால் இன்னும் சிறப்பு .

" பெற்றாளே " என்று இருப்பதைப் " பெற்றவளே " என்று முன்னிலை ஒருமையில் வைத்தால் , தேவிநீ என்று விளிப்பதற்குப் பொருந்திவரும் .
மேற்கோள் செய்த பதிவு: 1301309
பரிந்துரைகளுக்கு மிக்க நன்றி ஐயா!



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon 29 Jul 2019 - 9:44

இதுவும் உங்களுக்குப் பிடிக்குமென்று நினைக்கிறேன்:

ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Main-qimg-d8edc6ee1025ad9c5dc4ec9cad0ca7ce



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon 29 Jul 2019 - 10:06

நகலெடுக்கப் பட்டவை:
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Main-qimg-ad77ea9f71335978ad0325e067fab2e9
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Main-qimg-148c5e223314be5bf8f4a182dc0b1fd7
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Main-qimg-b832c11744553699727e081e2dda432d
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Main-qimg-932838a5d948d1fe0837e4d8b883e467
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Main-qimg-b4da416b8b4e4a74313f5e19accf7cf2
https://qphs.fs.quoracdn.net/main-qimg-3f50bb414c7ae7caecdb382e2a609791
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Main-qimg-9639ff54130abac68bd0bb337f68c87a
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Main-qimg-a6f8337707d117e80c78f7f19d82425b
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Main-qimg-4eda3120fa9d8c81049c97bac93ab6cd
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Main-qimg-9e26fc18a885d3ad63f4e2a4cf6d6fd4
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Main-qimg-1ad453c5c34ba537d4a24d560e0e4ffc
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Main-qimg-e9f99a67a142deb73cc8985b3581673d
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Main-qimg-ce7be07f37d9edf445798cdd13351037
ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Main-qimg-84b46702fa89c1d53efc7e4324b7b435



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon 29 Jul 2019 - 10:09

ஆன்மீகம், காதல் பற்றிய தலைப்புகளில் என் கவிதைகள் Main-qimg-9d4b880bdac93f4356d84c3f11ee04a3



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon 29 Jul 2019 - 10:59

தந்தையும் அன்னையும் இன்றித் தோன்றினான்
அந்தக மான உலக மீதிலே
தோன்று முன்னரும் அவனே அண்டமாய்
ஊன்றி இருந்தனன் ஒளிமிகை செய்தனன்
உருவ மற்றவன் எனினும் அன்பர்
விரும்பும் தோற்றம் நின்று நல்குவன்
மறைகள் வகுத்து மானிடர்க் களித்தனன்
இறையனாய் வண்டமிழ் தந்தனன் தந்ததை
மன்னுமா மதுரையில் விளங்கச் செய்திட
அன்றொரு சங்கம் அமைத்து வளர்த்தனன்
நீறும் உருத்தி ராட்ச மாலையும்
ஆறு தனைப்பிறை தனையுடை ஓதியும்
உறுமும் பெரும்புலி உற்றதோல் கூறையும்
சிறுமை யெரித்திடும் நெற்றியின் விழியும்
என்றிவை கொண்டு மயான மேகி
என்புத்தார் அணிந்து நர்த்தனம் செய்குவன்
பனிச்சூழ் கயிலைச் சிகிரியில் உறைபவன்
நனிச் சிறந்த உமைக்கை பிடிப்பவன்
அப்பனாய் நின்றுபே ரறிவினை நல்குவன்
அன்னையாய் விளங்கிக் கருணை நல்குவன்
குருநா தரைப்போல் தோன்றி ஞானத்
திருவினை அளித்தாட் கொண்டருள் செய்பவன்
அண்ணனாய்த் தம்பியாய்த் தமக்கையும் தானாய்
மாமனாய் அத்தையாய் மனைத்துணை நலமாய்
மடியில் தவழ்ந்து மழலையில் பேசிப்
பிடியில் சிக்கா தோடி யொளிந்தும்
நொடிகள் கழிய வந்துகண் மறைத்தும்
நெகிழ்ந்து நகைக்கும்நம் மகவுமாய் உள்ளவன்
அன்பர்தாம் இட்டவோர் ஏவல் தப்பா
தாற்றி முடிப்பவன் சத்திய வடிவினன்
கூற்றம் உதைத்துக் காக்கும் உயர்ந்தோன்
தூதும் ஏற்பவன் தொல்வினை அறுப்பவன்
ஓதிப் பிரணவம் தனைவி ளக்கும்
சண்முகன் முன்னே அமர்ந்திடும் சீடன்
பண்களைப் பாடித் துதிப்போர் கொண்ட
எண்ணம் தனைநிறைச் செய்யும் சங்கரன்
உற்ற தோழனாய்ப் பழகுதல் செய்பவன்
கற்றவர் செல்வர் உயர்ந்தவர் என்ற
பேதம் காட்டான் பேரொளி ஆனவன்
முதியனாய்த் தோன்றி சலந்திரன் தன்னை
மண்ணில் எழுதியச் சக்கரம் கொண்டு
மாளச் செய்தவன் மேன்மை உடையவன்
நிலத்தவர் உய்ய நஞ்சை உண்டவன்
மலங்க ளைபவன் மாயவன் தன்னைப்
பாடவும் ஏத்தவும் புகழ்ச்சிசெய் திருக்கவும்
ஆடவும் ஆர்க்கவும் பேறுகிட் டாதோ?
அலையும் என்மனம் அடங்கப் பெற்று
நிலையாய்ச் சிவத்தைப் பற்றிவி டாதோ?
உலகம் மெய்யென மயங்கும் பெரும்பிணி
விலகியெம் பெருமான் காட்சிநல் காரோ?
பக்திசெய் வதற்குப் பாவியேன் என்நிலை
சிறுமையோ தகுதி அற்றதோ? காமம்
அறுப்பது யோகியர் மட்டும் செய்வதோ?
சங்கத் தமிழ்ப்பே ராழியில் மூழ்கிப்
பொங்கும் உணர்ச்சியைப் பெருங்கவி யாக்க
நான்மு னைவது தவறோ? தாழ்வோ?
ஏன்நீ எனக்கு விளங்கச் செய்திலை?
கனவில் தோன்றிக் கட்டளை அளித்திடு
தினம்தினம் உன்னைத் துதிக்கும் உளத்தை
இன்றெனக் களித்திடு என்னிறை யோனே
சொல்லவொண் ணாதப் பெருமைகள் கொண்டோய்!
அல்லும் பகலும் அறிவொளி தேடிச்
சிந்தித் திருக்கிறேன் சீக்கிரம் வாநீ!
மந்திரம் தன்னையென் நாவில் எழுதி
எந்திரம் கூரநான் காவியம் பாட
ஓரடி எடுத்தெனக் களித்தருள் செய்யே!
உலகம் உய்யநான் தொண்டுசெய் திடவே
உளங்கொண் டிருப்பதை அறிந்திலை யோநீ?
பேரொளிக் கடலே! பிச்சா டனனே!
வாரண முகத்தனை முருகனை ஈன்ற
பரமேசு வரனே! அன்பின் இருப்பே!
வரந்தரத் தோன்று! நின்முகம் காட்டு!
வாய்திறந் தோர்சொல் கூறிநெஞ் சேகு!
குருதிசேர்ந் திருக்கும் இதயக் கமலத்து
அருகுவந் தேநின்றுப் பொருந்தித் துணைசெய்!
வெள்ளித் திரையுள வடப்புர கங்கையின்
வேகத்தி லேகவி இங்குநான் உரைத்தேன்
தாகம் தணித்திடு! தவசியாய் என்னை
மாற்றி இருத்திடு மண்ணின் வேந்தனே!
சோற்றிலும் நீரிலும் உடுப்பிலும் பாயல்
விரிப்பிலும் குளிப்பிலும் ஆகா யத்திலும்
நிலத்திலும் நெருப்பிலும் காற்றிலும் நின்னையே
கண்டென் நெஞ்சம் களிப்பதும் கூடுமோ?
சம்பந் தனுக்குப் பாலைக் கொடுத்தாய்
சீர்பெரும் அப்பர்பால் சூலை கொடுத்தாய்
சுந்தரர் கையில் ஓலை கொடுத்தாய்
எனக்கேன் தெளிந்திடா மாலைக் கொடுத்தாய்?
இத்தனை துன்பம் எனக்கெ தற்கு?
பக்தியில் என்னைச் சிறந்தோ னாக்கு!
சாத்திரம் நான்மறை இலக்கியம் எல்லாம்
வந்தென் இதயம் புகுந்திட வழிதா!
நமச்சி வாயம் நமச்சி வாயம்
நமச்சி வாயம் என்றென் வாய்சொல
நீறினை இவ்வுடல் உவந்துமேற் கொள்ள
சிவபதம் எண்ணியே வாழ்வினை நடத்த
சிவனே அருள்செய் இன்றேல்
சாகச் செய்யுன் சூலத் தாலே!




அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon 29 Jul 2019 - 11:00

நாமகள் அந்தாதி

விநாயகர் துதி

வாரணத் தோற்றம் பெரும்வயிறு நல்வினையின்
காரணம் என்றிவை கொண்டெவரும் – ஆர
மகிழ்விக்கும் நற்பிள்ளாய் நாமகள்அந் தாதி
அகிலத்தில் ஓங்கநின் காப்பு

நூல்

1. பாருக் குழைத்திடும் பேறும் உயிர்மூச்சு
தீரும் வரைப்பாடும் நற்புலமும் – சோரும்
மடிநீக்கும் வீறும் அளித்திடுவாய் வாணி
அடிசேர்ந்தேன் நின்னைப் பணிந்து.

2. பணிவார்க் கருள்செய்யும் பாமகளை என்பா
அணிசேர்த் தினித்திருக்க வேண்டி – மணிவிழியால்
பார்த்தருளச் செய்யப் பணிக்கின்றேன் பைந்தமிழில்
ஆர்த்தெழுக எந்தன் கவி.

3. கவியாகி அக்கவியின் சீராய்த் தளையாய்க்
குவிந்த கரம்காக்கும் தாயாய்ப் – புவியெங்கும்
தானாகி நிற்கும் கலைமகளே என்நாவில்
தேனாகி நிற்பாய் உவந்து.

4. உவகை தனைக்கூட்டும் உத்தமியே பண்ணும்
நவரச பாவமும் நல்கு – தவறாமல்
நின்புகழ் பாடிநற் கைமாறு தானாற்றி
நன்றி நினைவேன் விழைந்து.

5. விழைவும் வெறுப்பும் புலன்மயக்கம் ஐந்தும்
பிழைசேர் மலக்கழிவு மூன்றும் – கழைவதும்
ஞான விழிதிறந்து பார்ப்பதும் வேண்டும்நீ
தானம்செய் தாயே இரங்கி.

6. இரக்கப் பெருங்குணமும் ஈனச் செருவைக்
கரங்கோர்த் தணைக்கும்பண் பாடும் – பரப்புமிகு
பூவாழ் உயிர்க்கருளும் பக்குவமும் தாவெந்தன்
நாவாழ் முருகே எனக்கு.

7. எனக்குரிமை பூண்டதென எண்ணும் செருக்கும்
மனங்கொல்லும் காமக் கனலும் – சினச்சேறும்
அண்டாமல் தானென்னைக் காப்பாய் ஒளிர்பவளே
வெண்டா மரைமேல் உறைந்து.

8. உறைவதும் பூமேல் மறைவதும் ஏற்றுச்
சிறைபட்டேன் ஒன்பதுவாய்க் கூட்டில் – மறைபொருளே
ஓங்கும் இயலிசைக் கூத்துமெய் ஞானம்தா
தூங்காதே இன்றேல் விழி.

9. விழிவாங்கும் காட்சி அனைத்தும்பொய் யாக
வழிகாட்டும் கல்வியினை மெய்யாய் – எழிலதுவாய்த்
தேர்ந்தேன்நான் அவ்வழியாச் செல்வத்தை எந்தாயே
சேர்ந்துவிடச் செய்வாய் விரைந்து.

10. விரைந்துவரும் நெஞ்ச உணர்ச்சிவெள் ளத்தை
உரைக்கின்ற நன்னெறியாம் பாவை – வரைமட்டம்
போகும் உயரத்தில் நான்பாட வொண்ணுமோ
ஆகுமோ வாணி புகல்.

11. புகலாயோ நன்நெஞ்செ நல்லறிவின் வேறு
பகலவனை நேர்க்குமொளி உண்டோ – இகல்செய்து
சொல்லோ டடர்த்தேன் கலைமகளே சொல்லிற்கு
வல்லோனாய் ஆக்கென்னைச் சேர்ந்து.

12. சேர்க்கைபின் ஊடல் இவையில்லாக் காதல்போல்
ஆர்க்காத நெஞ்சும் கசக்குமடி – பார்க்கவெனைப்
பாமகளே என்னுள்ளம் ஆர்க்கும் கவியிலுன்
நாமத்தைப் பாடும் பொழுது.

13. பொழுதும் பிறவியும் பல்யுகமும் சென்றும்
அழுகாத நற்புலம் வேண்டும் – தொழுதுன்னை
ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்பேன் என்னம்மா
தேயுமோ உண்மை அறிவு.

14. அறிவின் விருட்சத்து வேரே அணியே
பொறியைந்தின் வேட்கை விடுத்து – நெறிவாழ
நின்னைச் சரணடைந் தேனடியேன் ஞாலத்தில்
என்னைநீ செய்வாய் தலை.

15. தலைகாக்கும் என்பர் தருமம் அதுவென்
கலைகாக்கச் செய்வாய் இறையே – விலையாக
ஆசு மதுரவித் தாரகவி சித்திரமிக்
காசுகள் நான் தருவேன் வென்று.

16. வென்றென் மனதை ஒருநிலை ஆக்கிடவே
இன்றுளம் கொண்டே முனைந்தென்யான் – நின்றுறைந்து
எங்கும் பரவியநற் பேரொளியே அத்தனையும்
மங்கல மாக்கு மகிழ்ந்து.

17 . மகிழ்ந்து மடையர்போல் பேசிப் பிதற்றி
அகிலத்தின் பொய்யில் மயங்கி – உகிர்போலத்
தீமை வளர்த்துத் திரியேன்நான் பற்றிடுவேன்
ஊமைக்கும் ஈவாளின் தாள்.

18. தாள்பற்றிச் சேவிப்போர்க் கன்போ டருள்நல்கி
ஆள்வதுவுன் பன்னாள் வழக்கமன்றோ – தேள்போல
என்னை வருத்துமிடுக் கண்நீக்கென் தாயேநான்
பொன்வேண்டேன் வேண்டும் கவி.

19. கவிமாரி என்வாய் பொழியவும் ஆழிப்
புவியெலாம் செல்லவும் வேண்டும் – செவிதீட்டிப்
பல்லோர் திரளட்டும் பாவரங் கேரட்டும்
சொல்மகளெ தாயிவ் வரம்.

20. வரமீந்து வாழ்விக்கும் தாயேநல் வீணைச்
சுரமீதில் ஏறிவரும் ஊற்றே – சிரமீது
நீள்கரம் கூப்பினேன் நன்றமிழ்ச் சொல்லெனும்
வாள்தனைத் தாநீ எடுத்து.

21. எடுத்துக் கொடுப்பின் அடிமுதலை நின்பால்
தொடுத்திடுவேன் பாமாலை கோடி – துடுப்பீவாய்
தொன்தமிழ் ஆழியை நீந்திக் கடப்பேன்யான்
மன்றாடிக் கேட்டேன் புலம்.

22. புலம்கொண்ட பாவலர் பல்லா யிரம்பேர்
துலங்கினரே நானிலத்தில் பண்டு – நலங்குன்றி
நாநலம் கெட்டான் மனிதன் கலைவாணி
தாநலம் என்சொல்லில் இன்று.

23. இன்றுடன் வாழ்கின்ற ஈடிலாச் செல்வந்தான்
நின்று நிலைக்காது நாளையில் – என்றைக்கும்
வாழ்வில் துணைநிற்கும் கல்வி அதைத்தருவாய்
தாழ்த்துவமே தாய்முன் சிரம்

24. சிரஞ்சூடிச் செல்லல் சிறப்பன்று நெஞ்சில்
உரஞ்சூடிச் செல்லல் சிறப்பு – சுரவனத்தில்
தோன்றுநன் நீரனையாய் தாவுள்ளத் திண்மையோ
டான்றோரும் ஏத்தும் புகழ்.

25.புகழொழுக்கம் நெஞ்சத் துறுதி மகிழ்ச்சி
திகழ்ந்தொளியை வீசும் கவிதை – பகலிரவு
மாறிடினும் மாறாநன் நெஞ்சம் இவைதருவாய்
ஏறிடுவேன் வெற்றிப் படி.



அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக