ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னதான் ஆச்சு இந்த குறும்பட இயக்குநர்களுக்கு..? ஸ்கேன் ரிப்போர்ட்

Go down

என்னதான் ஆச்சு இந்த குறும்பட இயக்குநர்களுக்கு..? ஸ்கேன் ரிப்போர்ட் Empty என்னதான் ஆச்சு இந்த குறும்பட இயக்குநர்களுக்கு..? ஸ்கேன் ரிப்போர்ட்

Post by ayyasamy ram Wed Jul 03, 2019 9:09 pm

என்னதான் ஆச்சு இந்த குறும்பட இயக்குநர்களுக்கு..? ஸ்கேன் ரிப்போர்ட் 26
-

கடந்த பத்தாண்டுகளில் தமிழ் ரசனையின்
மாற்றத்திற்கான எளிய வழிகள் துலங்கிவிட்டன.
புயல்சின்னம் கரை கடக்க முயல்வதை காட்டும்
வரைபடம் போல தமிழ்ப் படங்களின் சமீப கால
நகர்வை அவதானிக்கும்போது நம்பிக்கையான
சில கூறுகளை உணர முடியும்.

ஒரு திரைப்படத்தின் அடிப்படையான கூறு அதன்
கதை சொல்லல். கதையைத் தொடர்ச்சியான
காட்சிகள், உரையாடல் வழி ஒரு முடிவை நோக்கி
சாமர்த்தியமாக கதை சொல்வதே நம் வழி வந்த
மரபாக இருக்கிறது.

அதை கலைத்துப் போட்டு கதையை ஒரு படத்தின்
உப காரணியாக்கி, உணர்வுகளை மட்டுமே
நிறுவுகிற முயற்சிகள் உலக மொழிகளில் செய்யப்
பட்டபோதும், நாம் அந்த விளிம்புகளை யோசிக்கவே
இல்லை. அதிலும் ஆண் - பெண் ஈர்ப்பைத் தவிர
தமிழ்நாட்டில் வேறு எதுவுமே நிகழவில்லையா?

இந்தக் கேள்விகள் எழுந்த சமயத்தில் வந்தவர்கள்தான்
குறும்பட அனுபவத்திலிருந்து வந்த இயக்குநர்கள்.
ஹீரோக்களின் இமேஜை அடித்து நொறுக்கி அவர்களை
கல்யாண குணங்களிலிருந்து வெளியேற்றினார்கள்.

சமூகத்தின் அவல நிலையை சொல்லித் தீர்ப்பதுதான்
குறும்படம் என்ற விஷயம் முன்பிருந்தது. அனைத்தையும்
சொல்லி விட முடிகிற குறும்படத்தை இயக்க
முடிந்தவர்கள், தமிழ் சினிமாவையும் கையாள முடியும்
என நம்பிக்கை கொண்டார்கள்.
அதனால் வந்தவர்களே குறும்பட இயக்குநர்கள்.

நலன் குமரசாமி, கார்த்திக் சுப்புராஜ். லோகேஷ்,
அருண்குமார், ராம்குமார், ரவிக்குமார், ரமேஷ், சர்ஜுன்
என இன்னும் நீள்கிற குறும்பட இயக்குநர்களிடமிருந்து
வித்தியாசமான திரைப்படங்களை, வேறு வடிவத்தில்
பார்த்தபோது, ‘ஆஹா’ என்று தமிழ் கூறும் நல்லுலகம்
மலர்ந்தது.
-
----------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னதான் ஆச்சு இந்த குறும்பட இயக்குநர்களுக்கு..? ஸ்கேன் ரிப்போர்ட் Empty Re: என்னதான் ஆச்சு இந்த குறும்பட இயக்குநர்களுக்கு..? ஸ்கேன் ரிப்போர்ட்

Post by ayyasamy ram Wed Jul 03, 2019 9:09 pm

என்னதான் ஆச்சு இந்த குறும்பட இயக்குநர்களுக்கு..? ஸ்கேன் ரிப்போர்ட் 26b

இதற்கு முன்னர் இருந்தவர்கள் ‘என்ன நடக்கிறது
இங்கே’ என நின்று பார்க்கிற வேடிக்கையும் நடந்தது.
மாறி வந்த ஒரு சூழலில் இப்போது சற்றே ஒரு தேக்க
நிலை... இடைவெளி... அனுபவக்குறைவா, ஆளுமை
குறைவா என்றெல்லாம் எண்ணிப் பார்க்க
வேண்டியிருக்கிறது.

தயாரிப்பாளரும், சினிமா ஆர்வலருமான
தனஞ்செயனிடம் கேட்டால், ‘‘இப்படி கேள்வி எழ
ஆரம்பித்து, கொஞ்ச காலமாகிவிட்டது.

கார்த்திக் சுப்புராஜ், நலன் குமரசாமியை இதில் சேர்க்கவே
முடியாது. அவர்கள் எக்கச்சக்கமாக குறும்படங்களை
எடுத்து தேர்ச்சி பெற்றுக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால், ஒரே குறும்படம் எடுத்துவிட்டு சினிமாவிற்கு
ஸ்கிரிப்ட் எழுத உட்காரும்போது இங்கே மாட்டுகிறார்கள்.
ஸ்கிரீன்ப்ளே என்பது ஸ்டெப் பை ஸ்டெப் கொண்டது.  

அதில் ஒருவிதமான தொடர்ச்சி, நேர்த்தி, ரசிகனைச்
சுருட்டி வைத்துக்கொள்கிற தன்மை வேண்டும் என்ற
நிலையை இப்போது அக்கறையாக எடுத்துக்
கொள்வதில்லை.  

சமீபத்தில் ‘லட்சுமி’, ‘மா’வில் அதிகமும் பேசப்பட்ட
சர்ஜுன் ‘எச்சரிக்கை’, ‘ஐரா’ படங்களை எடுத்தார்.
ஆனால், பேசப்படவில்லை. குறும்படம் எடுத்து வருவது
நல்லதுதான். அதுவே தகுதி கிடையாது.

நீங்கள் வைத்திருக்கிற ஸ்கிரிப்ட்டுக்கு அந்தத் தகுதி
வேணும். ஒரு சினிமாப் படம் எடுப்பதற்கு முன்னால்
சினிமாவில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது என்பதையும்
புரிஞ்சுக்கணும்.

திரைக்கதை... அதுதான் வேண்டும்.
எட்டு குறும்படங்கள் இணைந்ததுதான் ஒரு படம்.
15 நிமிஷம் சுலபம்தான். ஆனால், 60 சீன்ஸை
உருவாக்கும்போது அதில் ஒர்க்கவுட் செய்வது முக்கியம்
இல்லையா..?’’ என ஆதங்கப்படுகிறார்

தனஞ்செயன்.ஆனால், பிரபல விநியோகஸ்தர் திருப்பூர்
சுப்பிரமணியன் சொல்வது வேறு மாதிரி இருக்கிறது.
‘‘இளைஞர்கள் சிலிர்த்து பெருகி வரணும். புதுசு புதுசா
வரணும். பெரிய நடிகர்கள் புது இயக்குநர்களை நம்பிப்
போகணும். அதே மாதிரி பெரிய இயக்குநர்களும் புது
நடிகர்களை நம்பி வேலை செய்யணும்.

இன்னைக்கும் பழைய படியே படம் எடுத்துக்கிட்டு
இருந்தால் எப்படி? நிறைய சேனல், யூடியூப், முகநூல்னு
மக்களை பொழுதுபோக்கு பக்கம் பிரிச்சிட்டுப்
போயிட்டாங்க. புது இயக்குநர்களிடம் இருக்கிற
ஒன்றிரண்டு குறைகளை பெரிதுபடுத்தக்கூடாது. நமக்கு
வேண்டியது புது சினிமா. அவ்வளவுதான்...’’ கறாராகச்
சொல்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன்.
-
----------------------


Last edited by ayyasamy ram on Wed Jul 03, 2019 9:13 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னதான் ஆச்சு இந்த குறும்பட இயக்குநர்களுக்கு..? ஸ்கேன் ரிப்போர்ட் Empty Re: என்னதான் ஆச்சு இந்த குறும்பட இயக்குநர்களுக்கு..? ஸ்கேன் ரிப்போர்ட்

Post by ayyasamy ram Wed Jul 03, 2019 9:13 pm

என்னதான் ஆச்சு இந்த குறும்பட இயக்குநர்களுக்கு..? ஸ்கேன் ரிப்போர்ட் 26a

இயக்குநர் லெனின் பாரதி பேசுவது வேறு பார்வை.
‘‘குறும்பட இயக்குநர்கள் வெறும் ஆசையினால் படம்
எடுக்க வராமல், தீவிரத்தன்மையோடு, கலையாக
சினிமாவை அணுகி வந்தார்களா என்றுதான் பார்க்க
வேண்டும்.

திரைப்பட உள்ளடக்கம் பற்றிய தெளிவான பார்வை,
அரசியல் புரிந்துணர்வு, வாழ்க்கைமீதான அப்சர்வேஷன்...
இதெல்லாம் சேர்ந்து வந்தால் போதுமானது. உண்மையில்
குறும்பட இயக்கம் தீவிரமானது.

ஆனால், சினிமா வணிகம் சார்ந்தது. தயாரிப்பாளர்
பணம் போடுகிறார். ஷூட்டிங்கின் நெருக்கடிகளைப்
புரிந்து கொள்வது, ஒவ்வொரு நிமிஷமும் பணம்
என்பதை உணர்வது, தயாரிப்பாளரை அரவணைக்கிற
பொறுப்பு என எல்லாமே இருக்கிறது.

குறும்படத்தை நண்பர்களிடம் பணம் வாங்கி
எடுத்திருக்கலாம். அதை அவருக்கு திருப்பித்
தரவேண்டியதில்லை. ஆனால், சினிமா அவ்விதம்
அல்ல. இதை உணர்வதே சிறப்பு...’’ அழுத்தமாகச்
சொல்கிறார் லெனின் பாரதி.தமிழ் சினிமாவும்
குறைபாடுகளும் சந்திக்கக்கூடாது என்றுதான்
நினைப்போம்.

ஆனால், அது நேரும். கடவுள் சாதாரணமான
விளையாட்டுக்காரரா என்ன! இயக்குநர் பேரரசு ஒரே
குரலில் சொன்னது இதுதான்.

‘‘ஈசல் மாதிரி பல இயக்குநர்கள் வந்து போய்
விட்டார்கள். சினிமாவில் அவர்கள் ஆயுள் கம்மியாகி
விட்டது. 40 வருஷங்களுக்கு முன்னாடி ‘16 வயதினிலே’
வந்தது. வந்து ஒரு வாரத்தில் பாரதிராஜா பெயர் பட்டி
தொட்டியெங்கும் போய்ச் சேர்ந்தது. ‘பாரதி கண்ணம்மா’
வந்து சேரன் எல்லோருக்கும் தெரிந்துவிட்டார். அ

துமாதிரி ‘மௌன கீதம்’ சக்கைப்போடு போட்டு
பாக்யராஜ் பிரபலம்.

‘ஆண்பாவம்’ வந்து பாண்டியராஜன். இப்ப படம்
ஹிட்டானால் டைரக்டர் பெயரே தெரியவில்லை.
இளம் இயக்குநர்கள் யோசிக்கணும். நான் அடிமட்டம்
வரைக்கும் இறங்கிப்போய் பார்த்தேன்.

கார்த்திக் சுப்புராஜ், பா.இரஞ்சித் பெயர்கள் மட்டும்
தான் தெரியுது. என்னடான்னு பார்த்தால் ரஜினி படம்
பண்ணியிருக்காங்க.

டிவியில் பெண்கள் 300, 400 எபிசோட் விடாமல்
உட்கார்ந்து பார்ப்பாங்க. அவங்களைக் கூப்பிட்டு
சீரியல் டைரக்டர் பெயர் கேட்டால் தெரியாது.
அவ்வளவுதான் சார், டைம்பாஸ்!

இப்ப இருக்கிற குறும்பட இயக்குநர்கள் டெக்னிக்கலில்
அத்துபடி. நல்லது. ஆனால், அவங்க கதாசிரியர்கிட்ட
கதை கேட்கணும். டிஸ்கஷனில் சில இடங்களில் கோர்ட்
மாதிரி இருக்கும். ஆர்குமென்ட்ஸ் பாயிண்டுக்கு மேல்
பாயிண்ட் குவியும்.

அடுத்த வீட்டு கல்யாணத்திற்கு போறதுக்கும், நம்ம
வீட்டு கல்யாணத்துல நிற்கிறதுக்கும் வித்தியாசம்
இருக்குல்ல. அடுத்த வீட்டில சாப்பிட்டு, மொய்
எழுதிட்டு, கை குலுக்கிட்டு வந்திடலாம்.

நம்ம வீட்டில அப்படி இருப்போமா? நம்ம வீட்ல இன்னும்
உணர்வு, உணர்ச்சி, உயிர் இருக்கில்லையா!
அப்படிப்பட்ட இடங்களை வச்சி நாம் படம் எடுக்கணும்.
நானெல்லாம் ‘எவண்டா டைரக்டர்’னு கடைசியா
கேட்டது ‘சுப்பிரணியபுரம்’ சசிகுமாரைத்தான்.

தம்பிகளா, நீங்க சென்டிமென்ட்டை மறந்திட்டிங்க.
அதுதான் ஆதார பலம். ‘விஸ்வாச’த்தில் ஃபைட்,
பாட்டு எல்லாத்தையும் தூக்கிட்டு நின்னது அப்பா -
பொண்ணு சென்டிமென்ட்தான். ‘பாசமலர்’ மாதிரி
டைட்டில் முதற்கொண்டு கடைசி வரைக்கும் அழ
வைக்க வேண்டாம்.

ஆனா, சென்டிமென்ட் வேண்டாம்னு சொல்லிடாதீங்க.
கூத்தடிச்சி படம் பண்ணலாம். ஆனா, அதுக்கு ஆயுசு
கம்மி. அதுல உங்க பெயர் தெரியாமல் போயிடும்…
பார்த்துக்கங்க...’’ என எச்சரிக்கிறார் பேரரசு.

இப்படி எல்லாவற்றையும் சேர்த்து வைத்துப் பார்த்தால்
நாம் இன்னமும் கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது.
தமிழ் சினிமாவில் மாற்றத்தை உணரும், விரும்பும்
அனைவருக்கும் புரிவதுதான் இது.

ஏனென்றால் கலையின் கடந்த காலம் விசித்திரமானது...
எதிர்காலம் மிக விசித்திரமானது.. சினிமாவோ மிக மிக
விசித்திரமானது..!
-
--------------------------------

நா.கதிர்வேலன்
குங்குமம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னதான் ஆச்சு இந்த குறும்பட இயக்குநர்களுக்கு..? ஸ்கேன் ரிப்போர்ட் Empty Re: என்னதான் ஆச்சு இந்த குறும்பட இயக்குநர்களுக்கு..? ஸ்கேன் ரிப்போர்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum