ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை

Go down

ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை Empty ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை

Post by ayyasamy ram Tue 25 Jun 2019 - 8:04

ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை 201906250522334886_Will-Australias-dominance-continue--Clash-today-with_SECVPF
-
லண்டன்,

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, போட்டியை நடத்தும் இங்கிலாந்தை சந்திக்கிறது.


ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகளை தோற்கடித்தது. 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக உள்ளது. 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கும் ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை தொடர்வதுடன், இந்த ஆட்டத்தில் வென்று அரைஇறுதியை உறுதி செய்ய தீவிரம் காட்டும்.

இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், வெஸ்ட்இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும், முந்தைய லீக் ஆட்டத்தில் இலங்கையிடமும் தோல்வியை சந்தித்தது. இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 233 ரன் இலக்கை எட்டிப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ளது. முந்தைய தோல்வியை மறந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப இங்கிலாந்து அணி முனைப்பு காட் டும். தசைப்பிடிப்பு காயம் காரணமாக கடந்த 2 ஆட்டங்களில் ஆடாத தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் இந்த ஆட்டத்திலும் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் களத்தில் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் மோதும் ஆட்டத்துக்கு எப்பொழுதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அதேபோல் இந்த ஆட்டத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னரை இங்கிலாந்து ரசிகர்கள் குறிவைத்து கிண்டல் செய்து வெறுப்பேற்றுவார்கள். அந்த நெருக்கடியையும் அவர்கள் சந்திக்க நேரிடலாம். சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. போட்டி நடைபெறும் லண்டனில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஸ்டீவன் சுமித், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர் நிலே, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.

இங்கிலாந்து: ஜேம்ஸ் வின்ஸ், பேர்ஸ்டோ, ஜோரூட், இயான் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82780
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய அணியின் வெற்றி தொடருமா! இன்று நியூசிலாந்துடன் 2வது மோதல்
» பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை
» சற்றுமுன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் ராஜினாமா..!!
» இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் இன்று துவக்கம்
» எழுச்சி பெறுமா இந்தியா ? இன்று இங்கிலாந்துடன் மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum