ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை

Go down

தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை Empty தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை

Post by ayyasamy ram Sat Jun 22, 2019 10:42 pm

தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை 201906221846283650_afghanistan-need-225-runs-against-india-in-WC_SECVPF
-
உலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானுக்கு 225 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

-

சவுத்தாம்டன்:  

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை
தொடரின் 28-வது லீக் ஆட்டம்  சவுத்தாம்டனில் இன்று மதியம்
3 மணிக்கு நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய
அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு
செய்துள்ளார்.  

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும்
ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா ஒரு ரன்னில்
வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது.
விராட் கோலி, கேதார் ஜாதவ் ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடி
அரை சதமடித்தனர். கோலி 67 ரன்னிலும், கேதார் ஜாதவ்
52 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்
இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பதின் நயீப், ரஷித் கான் 2 விக்கெட்
வீழ்த்தினர். இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு 225 ரன்கள்
இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
-
---------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை Empty Re: தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை

Post by ayyasamy ram Sun Jun 23, 2019 9:26 am

தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை 201906230224119691_AfghanistanIndian-team-struggling-and-winning_SECVPF
-
சவுதம்டன்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் குட்டி அணியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கடைசி வரை போராடி வெற்றி பெற்றது. முகமது ஷமி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

ஷமிக்கு இடம்

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறிய 28-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டார். விஜய் சங்கர் காயத்தில் இருந்து தேறிவிட்டதால் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

ரோகித் ஏமாற்றம்

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி துணை கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கினர். குட்டி அணியான ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை இந்திய வீரர்கள் அடித்து துவம்சம் செய்து விடுவார்கள் என்ற பெரும்பாலான நிபுணர்களின் கணிப்பு தூள்தூளானது.

ரோகித் சர்மா (1 ரன், 10 பந்து) சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமானின் பந்து வீச்சில் போல்டு ஆனார். இந்த உலக கோப்பையில் இந்திய விக்கெட்டை கைப்பற்றிய முதல் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் தான். அடுத்து கேப்டன் விராட் கோலி வந்தார்.

கோலி 67 ரன்

விராட் கோலியும், ராகுலும் அணியை சரிவில் இருந்து சற்று மீட்பது போல் தெரிந்தது. ஸ்கோர் 64 ரன்களை எட்டிய போது இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி பிரித்தார். அவரது பந்து வீச்சில் லோகேஷ் ராகுல் (30 ரன்) தேவையில்லாமல் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட் அடிக்க முயற்சித்து கேட்ச் ஆனார். தொடர்ந்து விஜய் சங்கர் வந்தார்.

மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்றது. ஓரளவு பவுன்சும் காணப்பட்டது. இந்த சாதகமான சூழலை ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் கச்சிதமாக பயன்படுத்தி அச்சுறுத்தினர். முஜீப் ரகுமான், முகமது நபி, ரஷித்கான், ரமத் ஷா ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடைவிடாது சுழல் தாக்குதலை தொடுத்து மிரட்டினர்.

இந்திய வீரர்களும், சிறிய அணிதானே என்ற நினைப்புடன் மெத்தனமாக ஆடினார்களோ என்னவோ விக்கெட்டுகளை சர்வ சாதாரணமாக தாரைவார்த்தனர். தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் 29 ரன்னில் (41 பந்து, 2 பவுண்டரி) வெளியேறினார். விராட் கோலியும் (67 ரன், 63 பந்து, 5 பவுண்டரி) முகமது நபியின் சுழலில் சிக்கினார்.

இதனால் இந்தியாவின் ஸ்கோர் ஆமை வேகத்தில் தான் நகர்ந்தது. மூத்த வீரர் டோனியும், கேதர் ஜாதவும் இணைந்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு வர போராடினர். ஆனால் ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை சமாளித்து டோனியால் ஒன்று, இரண்டு ரன் வீதம் தொடர்ச்சியாக எடுக்க இயலவில்லை. 33 பந்துகளில் அவர் ரன்னே எடுக்கவில்லை. இதனால் நெருக்கடிக்குள்ளான அவர் ரஷித்கானின் பந்து வீச்சில் கிரீசை விட்டு சில அடி இறங்கி வந்து சிக்சருக்கு முயற்சித்த போது ஏமாந்து ஸ்டம்பிங் செய்யப்பட்டார். டோனி 28 ரன் (52 பந்து, 3 பவுண்டரி) எடுத்தார்.

இந்தியா 224 ரன்

கடைசி கட்டத்தில் கேதர் ஜாதவ் மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் ஆடினார். எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவும் (7 ரன்) மிளிரவில்லை. கேதர் ஜாதவ் 52 ரன்களில் (68 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. மொத்தம் 152 பந்துகளை இந்திய வீரர்கள் ரன்னின்றி விரயமாக்கியது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்து 50 ஓவர்களை முழுமையாக ஆடிய ஆட்டங்களில் 2010-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் குறைந்த ஸ்கோர் இதுதான். ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்படின் நைப், முகமது நபி தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

திருப்பம் தந்த பும்ரா

அடுத்து குறைவான இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்தனர். அவசரப்படாமல் நிதான போக்கை கடைபிடித்தாலும் இந்திய வீரர்கள் துல்லியமாக பந்து வீசி கடும் நெருக்கடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஸ்ரத்துல்லா 10 ரன்னிலும், கேப்டன் குல்படின் நைப் 27 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.

3-வது விக்கெட்டுக்கு ரமத் ஷாவும், ஹஸ்மத்துல்லா ஷகிடியும் கைகோர்த்து தங்கள் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 26.3 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 100 ரன்களை எட்டியது. இவர்கள் ஆடிய விதம் இந்திய வீரர்களுக்கு கொஞ்சம் ‘கிலி’யை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

இந்த சூழலில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பந்து வீச கேப்டன் கோலி அழைத்தார். அதற்கு உடனடி பலன் கிடைத்தது. ஒரே ஓவரில் ரமத் ஷா (36 ரன்), ஹஸ்மத்துல்லா (21 ரன்) இருவரையும் காலி செய்தார். அதன் பிறகே இந்திய வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனாலும் அடுத்து வந்த வீரர்களும் குடைச்சல் கொடுக்காமல் இல்லை. விக்கெட் சரிவுக்கு மத்தியில் முகமது நபி, இந்திய பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டினார். பும்ராவின் ஓவரில் அட்டகாசமாக ஒரு சிக்சரையும் பறக்க விட்டார்.

இந்தியா திரில் வெற்றி

கடைசி 3 ஓவர்களில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு
24 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரில் முகமது ஷமி
3 ரன்னும், 49-வது ஓவரில் பும்ரா 5 ரன்னும் விட்டுக்கொடுத்து கட்டுப்படுத்தினர். இதனால் கடைசி ஓவரில் அந்த அணியின்
வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசினார்.

புல்டாசாக வந்த முதல் பந்தை முகமது நபி பவுண்டரி அடித்து
இந்திய ரசிகர்களை திகிலடையச் செய்தார். அடுத்த பந்தில்
ரன் எடுக்காத முகமது நபி (52 ரன், 55 பந்து, 4 பவுண்டரி,
ஒரு சிக்சர்) 3-வது பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார்.

தொடர்ந்து இறங்கிய அப்தாப் ஆலம், முஜீப் ரகுமான் இருவரும்
முகமது ஷமியின் அடுத்தடுத்த பந்துகளில் கிளீன் போல்டு
ஆனார்கள். முகமது ஷமியின் ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாதனையோடு
இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை
பெற்றது.

ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் 213 ரன்னில் ஆல்-அவுட்
ஆனது.

5-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணிக்கு இது 4-வது
வெற்றியாகும். ஆப்கானிஸ்தான் சந்தித்த 6-வது தோல்வியாகும்.
பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum