புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_m10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10 
85 Posts - 79%
heezulia
வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_m10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_m10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_m10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_m10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10 
250 Posts - 77%
heezulia
வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_m10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_m10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_m10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10 
8 Posts - 2%
prajai
வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_m10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_m10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_m10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_m10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10 
2 Posts - 1%
Barushree
வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_m10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_m10வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 05, 2019 10:40 pm

வ.வே. சுப்பிரமணியம் இறந்த தினம்: ஜூன் 4- 1925 201706040544134251_va-ve-subramaniam-memorial-day_SECVPF
-

இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த
இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர்
தமிழகத்திலுள்ள திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர்.

தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை
தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.

வெங்கடேச சுப்பிரமணியம் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த
வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த
காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881-ல் பிறந்தார். வேங்கடேச ஐயர்
எம்.ஏ. தேர்ச்சி பெற்று, திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம்,
ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தவர்.

வ.வே. சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில்
கல்வி பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி
(மெட்ரிகுலேஷன்) மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார்.

அக்கால மரபையொட்டி அவ்வயதிலேயே அத்தை மகள்
பாக்கியலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார்.
பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில்
முதலாவதாகத் தேறினார். பின்னர் சென்னை சென்று வக்கீல்
பரீட்சையில் முதல் பிரிவில் தேறி, சென்னை மாநகர் ஜில்லா
கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில்
நடத்தினார்.

கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ்
மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.

வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி
திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். இவரின்
மைத்துனர் பசுபதி ஐயர் என்பார், இவரை ரங்கூனுக்கு அழைத்துச்
சென்று பாரிஸ்டர் கல்வி பயில வைக்கத் திட்டமிட்டார்.

1907-ல் வ.வே.சு. ரங்கூன் வழி லண்டன் சென்றார். லண்டன் சென்று
பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின்
அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில்
தங்கினார்.
-
---------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 05, 2019 10:42 pm





-
பட்டம் பெற வந்த வ.வே.சுவை சுதந்திர வீரராக்கியது இந்தியா
ஹவுஸ். அங்கு அடிக்கடி சென்றபோது தீவிர தேசிய
இயக்கவாதியான வீர சாவர்க்கர் போன்ற புரட்சி வீரர்களின்
தொடர்பு அவருக்குக் கிடைத்தது.

ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, வினாயக் தாமோதர் சாவர்க்கர்,
டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில்
ரகசியமாக இயங்கி வந்த அபிநவபாரத் சங்கத்தில் வ.வே.சுவை
உறுப்பினராகச் சேரவைத்தது.

பிபின் சந்திர பால், லாலா ஹரிதயாள், மேடம் காமா
முதலியோருடன் ஒன்றிப் பழகினார். இவர் இலண்டனில் வாழ்ந்த
காலத்தில் பாரதியாரின் இந்தியா பத்திரிகைக்கு எழுச்சியூட்டும்
கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.

அபிநவபாரத் சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின்
களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப்
பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார். அவர் மனதிலும்
தேசிய வெறி குடியேற, பாரிஸ்டர் படிப்பு அவருக்கு இரண்டாவது
பட்சமாகியது. ஆயினும் படிப்பை அவர் புறக்கணிக்காமல் படித்து
முடித்தார். தேர்வில் வெற்றியும் பெற்றார்.

லண்டன் இந்தியா விடுதியில் தங்கியிருந்த அவருடன் 30 பேர்
சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். வ.வே.சுவும்
துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். மற்ற புரட்சி இளைஞர்களுக்கும்
அப்பயிற்சியை அளித்தார்.

1909-ல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில்
கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை
அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் கர்னல் கர்ஸான்
வில்லி லண்டனில் சுடப்பட்டார்.

இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா என்ற இந்திய
ஹவுஸ் மாணவர். மதன்லால் திங்கராவை இந்த வீரச் செயலுக்கு
தயார் செய்தவர் வ வே சு. மாபெரும் வீரரான டிங்கரா, வ வே சு
வைத்த பல சோதனைகளில் வென்று இச்செயலுக்குத் தகுதியானவர்
என்பதை நிறுவியபின் இச்செயலுக்குப் பணிக்கப்பட்டார்.

உதாரணமாக, மதன் லால் டிங்கராவின் புறங்கையில் குத்தப்பட்ட
ஊசியானது கையின் மறுபுறம் வந்தபோதிலும் புன்னகைபூத்த
முகத்தோடு இவ்வேதனையை மதன்லால் திங்கரா தாங்கிகொண்ட
நிகழ்வை கூறலாம்.

டிங்கராவிற்கு மரணதண்டனை அளிக்கப் பெற்றதும், அந்த வீர
இளைஞர் தூக்குமேடை ஏறி, வீர மரணத்தைத் தழுவினார்.
-
------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 05, 2019 10:44 pm


டிங்கரா, கர்ஸன் வைலியைக் கொன்றதன் விளைவாக, சாவர்க்கர்
கைது செய்யப்பட்டார். இந்தியர்களை தாழ்வாக நடத்திய
கர்ஸானின் துர்மரணத்தின் காரணமாக பலரும் தலைமறைவாயினர்.
*பாரிஸ்டர் பட்டமளிப்பு விழாவில் ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக்
கொண்டால் மட்டுமே பட்டம் அளிப்பதாக வழக்கம்.

பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்ற வ.வே.சு. பட்டமளிப்பு விழாவில்
அரச நம்பிக்கையாளன் உறுதிமொழி (ராஜவிசுவாசப் பிரமாணம்)
எடுக்க மறுத்தார். பட்டமும் பெறவில்லை.

பட்டமளிப்பு விழாவில் ராஜவிசுவாசப் பிரமாணம் எடுக்க மறுத்ததால்
அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது.
வினாயக் தாமோதர் சாவர்க்கரை மாறுவேடத்தில் வ.வே.சு சந்தித்தார்.
அப்போது சாவர்க்கர் வ.வே.சு.வை எவ்வாறாயினும் இந்தியா தப்பிச்
செல்லக் கூறினார்.

அவ்வண்ணம் வ.வே.சுவும் சீக்கியர் போல் வேடம் பூண்டு பிரான்ஸ்
சென்றார். அங்கே அவரை வேவுபார்க்க வந்தவனிடம்
தாம் வீர விக்ரம்சிங் என்ற சீக்கியர் என்று கூறி ஏமாற்றி, துருக்கி,
கொழும்பு வழியாகப் பயணம் செய்தார். அப்பயணம் வீரதீர சாகசச்
செயல்கள் நிறைந்தது.

மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பல பிரிட்டிஷ்
உளவாளிகளை வெற்றிகரமாக எமாற்றி பயணம் செய்த பின், 1910
அக்டோபர் 9-ல் வ.வே.சு. புதுச்சேரி வந்தார்.

மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், மகாகவி பாரதியார்,
நீலகண்ட பிரம்மச்சாரி, வ. ரா. போன்ற மற்ற வீரர்களோடு இணைந்து
இந்திய விடுதலைக்குப் போராடினார். இங்கும் வ.வே.சு. இந்தியா
பத்திரிகைக்கு தொடர்ந்து எழுதி வந்தார்.

இங்கு தர்மாலயம் என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத்
தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம்,
துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார். வ.வே.சு.
தமது உட்கிடக்கையாக விளங்கிய கெரில்லாப் புரட்சி முறைகளை
முதிர்ந்தவர்க்கு புகட்டியதுடன், துப்பாக்கிச் சுடும் பயிற்சியை விடுதலை
வேட்கிகளுக்கு அளித்தார்.

சங்கேத பாஷையில் செய்தி பரப்பி தேச விடுதலை உணர்வுக்கு உரம்
இட்டு ஊக்கி வளர்த்தார்.
-
-----------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 05, 2019 10:46 pm


முதல் உலகப் போரின்போது, வவேசுவை அல்ஜியர்ஜுக்கு நாடு கடத்த
ஆங்கில அரசு சூழ்ச்சி செய்து, பிரஞ்சு அரசை அணுகிற்று. இது
கைகூடவில்லை. கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன்
என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் முன்னதாக வ.வே.சு. துப்பாக்கி
சுடும் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் என்றறியப்படும் கருவடிக்குப்பத்தில்
இந்தப் பயிற்சி நடந்தது.

கலெக்டர் ஆஷைக் கொல்ல வாஞ்சிநாதன் பயன்படுத்திய துப்பாக்கி
பிரெஞ்சு நாட்டுத் தயாரிப்பு. வவேசு தந்தது என்றொரு குறிப்பு இருக்கிறது.
ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க
முடியாத நிலை உருவானது.

ஆனால், இவ்வளவு இருந்த போதிலும் கொலை வழக்கில் வவேசு ஐயருடைய
பெயர் வரவே இல்லை என்பதும் நோக்கத்தக்கது.

புதுச்சேரியில் ஆங்கிலேய உளவாளிகளால் வவேசு மட்டுமன்றி அவரின்
மனைவி திருமதி பாக்கியலஷ்மி அம்மாளும் பல துன்பங்களை அடைந்தார்.

இப்போது அவருக்கு மகாத்மா காந்தியை இரண்டாம் முறை சந்திக்கும்
வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக்
காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

முதல் உலகப்போர் முடிந்ததும், வ.வே.சு பிரிட்டிஷ் இந்தியா வர
அனுமதிக்கப்பட்டார். 14 ஆண்டுகள் தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு
வரமுடியாமல் மற்ற மனிதர்களுக்காகப் போராட்டத்திற்கு வாழ்வை
அர்ப்பணித்த வவேசு 1920-ல் பொது மன்னிப்புப் பெற்று
திருச்சிராப்பள்ளியிலுள்ள வரகனேரி இல்லம் வந்தார்.

ஏதேனும் ஒருவகையில் சுதந்திரத்திற்குப் போராடிக்கொண்டே இருப்பது
என்று தீர்மானித்த அவர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு
உழைத்தார். தமிழ்த்தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தேசபக்தன்
இதழிலிருந்து விலகவும், அதன் ஆசிரியர் பொறுப்பை வ.வே.சு ஏற்றார்.

1920-ல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம்
பணியாற்றினார். பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக பல வீரர்களை
உருவாக்கிய கட்டுரைகளை எழுதினார். இதனால் ஆங்கில அரசு அவரை
காவுகொள்ள நினைத்தது.

தேசபக்தனில் அவர் எழுதாத ஓர் எழுச்சிக் கட்டுரையைக் காட்டி,
இராஜதுவேஷ குற்றம் சாட்டி பெல்லாரி சிறைக்கு அனுப்பியது எதேச்சதிகார
ஆங்கிலேய அரசு. பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து, பின்னர்
விடுதலையானார்.

மகாகவி பாரதியார் தலித்தாகப் பிறந்த ரா.கனகலிங்கத்துக்குப் பூணூல்
அணிவித்த புண்ணிய நிகழ்வை தலைமை தாங்கி நடத்தினார் வவேசு.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 05, 2019 10:47 pm


பாரதிக்கு உடல் நலமில்லை என்ற செய்தி பல நண்பர்களுக்குத்
தாமதமாகவே தெரிந்தது. தாம் எழுதாத ஒரு தலையங்கத்திற்காக
செப்டம்பர் 11-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று
கொண்டிருந்த வ.வே.சு, நிலைமையறிந்து, போகும் வழியில், போலீஸ்
துணையோடு பாரதியின் வீட்டுக்கு வந்து அவரைப் பார்த்தார்.

அவரது குடும்பத்தாருடன் பேசினார். அவர்கள் பாரதி மருந்துட்கொள்ள
மறுப்பதைச் சொன்னர்கள். "பாரதி, நீ மருந்து சாப்பிட மாட்டேன்
என்கிறாயாமே? சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?"
என்று பரிவோடு அறிவுறுத்திவிட்டு வேதனையோடு சிறை சென்றார்."

தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 அன்று அம்பாசமுத்திரம் அருவி
காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும்
அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். சுற்றுலாவைக்கூட
மாணவர்களை வீரர்களாக உருவாக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதிய
வவேசு அவர்கள் அகண்ட அருவியை பயமின்றி தாண்டுமாறு
மாணாக்கருக்குப் பணித்தார்.

சிறுபெண்ணான சுபத்திரை தானும் அவ்வருவியை எந்த உதவியும்
இன்றி தாண்ட விரும்பினார்.

தந்தையான வவேசுவின் தயக்கத்தைக் கண்டு "ஆணுக்குப் பெண்
சரி நிகர் சமானம் என்று கூறும் நீங்கள் பெண் என்பதால் என்னை
தாண்ட அனுமதிக்காமலிருக்கிறீர்களா" என்று கூறியதால் உவகை
அடைந்த பெருமான் தன் பெண் குழந்தைக்கும் அருவி தாண்ட
அனுமதி தந்தார்.

சிறு பெண்ணான சுபத்திரை அம்முயற்சியில் தவறி அருவியில்
விழுந்தார். அவரைக் காப்பாற்ற குதித்த வவேசுவும் அவ்வருவியிலேயே
அமரத்துவம் எய்தினர். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம்
அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து
1925 ஜூன் 4-ல் அணைந்தது.
-
-----------------------------
நன்றி- மாலைமலர்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக