ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

AVATAR (2009) – விமர்சனம்

2 posters

Go down

AVATAR (2009) – விமர்சனம் Empty AVATAR (2009) – விமர்சனம்

Post by rikniz Sat Dec 26, 2009 3:39 pm

James Cameron னின் இயக்கத்தில், Aliens , Terminator , True Lies , Titanic வரிசையில் மீண்டும் ஒரு பிரமாண்டமான திரைப்படம். 12 வருடங்களுக்குப் பிறகு நம்மை மீண்டும் தனது திறமையான இயக்கத்தால் மிரட்டியுள்ளார். போன முறை மனிதர்களுக்குள் ஏற்பட்ட காதலின் விளைவைக் கூறியவர் இந்தமுறை மனிதனுக்கும், வேற்று கிரகவாசிப் பெண்ணுக்கும் ஏற்படும் காதலால் நிகழும் விளைவுகளை காட்டுகிறார்.

AVATAR (2009) – விமர்சனம் Avatar5னிம வளத்திற்காக ‘பண்டோரா‘ எனப்படும் கிரகத்தில் சென்றிறங்கும் மனிதர்கள் அங்கே வாழும் ‘நவி’ என்றழைக்கப்படும் அந்த கிரகவாசிகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நவிக்களை பற்றி நடக்கும் ஆராய்ச்சியில் பங்கேற்க வருகிறார் ஹீரோ Jake. இடுப்புக்குக் கீழே செயலிழந்துவிட்ட நிலையில் Jake ஒரு நவியின் உடலில் புகுத்தப்படுகிறார். அதன் மூலம் அவரால் நவிகளின் கூட்டத்தில் கலக்க முடிகிறது. உண்மை தெரியாமல் அதற்கு உதவுபவர், நவிகள் தலைவரின் மகள் Neytiri. இறுதியில் இவர்களுக்குள் காதல் உருவாக, அப்போது வருகிறது ஒரு பிரச்சனை. மனிதர் படைகளின் தலைவர் Colonal Miles நவிக்களின் இருப்பிடத்தை தாக்க, அவர்களைக் காப்பாற்ற முடியாத நிலையில் Jake தவிக்கிறார். பிறகு Miles, நவிகள் பற்றிய ஆராய்ச்சிக்கு தடை விதித்து நவிகளை அழிக்க முடிவிடுக்கிறார். இந்நிலையில் Jake எடுக்கும் முடிவு என்ன..? மனிதர்களுக்கும் நவிக்களுக்குமான யுத்தத்தில் வென்றது யார்..? அதுவரை மனிதனாகவும், நவியாகவும் வாழ்ந்த Jake இறுதில் என்னவாக ஆகிறார் என்பதை பிரமாண்டமாக, அதாவது மிக பிரமாண்டமாக 3D திரையில் நம் முன்னே காட்டுகிறார் இயக்குனர்.
AVATAR (2009) – விமர்சனம் Avatar4ங்கு சென்றாலும், அழிக்க மட்டுமே தெரிந்த மனிதர்களிடமிருந்து இயலாதவர்களை காக்கும் ஒரு மனிதனும், அவன் காதலும் தான் கதை என்றாலும், அதை நம் கண் முன்னே காட்டிய விதம் தான் மற்றவர்களுக்கும், James Cameron க்கும் உள்ள வித்தியாசம். ஒரு நொடி கூட பூமியைக் காட்டாமல் ‘பண்டோரா’ கிரகத்திலேயே ஆரம்பித்து, அங்கேயே முடிகிறது படம். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் நம்மால் பார்க்கமுடிவது பிரமாண்டம் மட்டுமே. அதன் பின்னணியில் இருப்பது இயக்குனரின் சிந்தனையும், அதை தொழில்நுட்பத்தில் புகுத்திய விஷுவல் எபெக்ட் டீமும் மட்டுமே.
விக்களின் உருவ அமைப்பு, மரங்களின் தன்மை, விலங்குகளின் அமைப்பு, வர்ண ஜாலங்கள், மனிதர்களின் விமானங்கள் என அனைத்திலும் இயக்குனரின் கற்பனை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. விலங்குகள் மற்றும் மரங்களுடன் நவிக்கள் வைத்துக்கொள்ளும் நேரடித் தொடர்பு மிக வித்தியாசமான சிந்தனை. காணும் இடமெங்கும் இருளில் ஒளிரும் மரங்கள், செடி கொடிகள், அதைச்சுற்றி மிதக்கும் மலைகள், உயரமான அழகான அருவிகள். அனைத்துமே கண்களுக்கு குளிர்ச்சியான விருந்து. நமது பூமியும் ஒருகாலத்தில் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று வியக்கத்தோன்றுகிறது. அதுபோல் அந்த காட்டில் வசிக்கும் வித்தியாசமான மிருகங்கள், பூச்சிகள், டிராகன்கள் என அத்தனையும் வித்தியாசமான வடிவமைப்பு. குறிப்பாக டிராகன்களின் வர்ணக்கலவை, மிக அருமை. நொடிக்கொருமுறை மாறும் நவிக்களின் முக பாவனைகளை மிகச்சரியாக நிகழ்த்திக்காட்டிய விஷுவல் எபெக்ட் டீமுக்கு ஒரு பெரிய அப்ளாஸ்.
AVATAR (2009) – விமர்சனம் Avatar2கொடிய மிருகத்திடம் இருந்து Jake தப்பும் காட்சி, காட்டின் அழகு, டிராகனை அடக்கும் காட்சி, நவிக்களின் இருப்பிடம் அழிக்கப்படும் காட்சி, Jake டிராகனில் பறப்பது, மனிதர்களின் படைபலம், இறுதிப் போர் என அனைத்து இடங்களிலும் ஒளிப்பதிவு நம்மை மிரட்டுகிறது. இறுதி சண்டையில் நம்மையும் ஒரு நவியாகவே பாவித்து டிராகனில் பறக்க ஆரம்பித்துவிடுகிறோம் நம்மை அறியாமலே. இதுவே ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த வெற்றி. அதுபோல், பண்டோரா கிரகத்தின் அழகு, Jake மற்றும் Neytiri யின் காதல், நவிக்களின் எழுச்சி, வீழ்ச்சி, Miles மற்றும் படையினரின் அட்டகாசம் அனைத்தையும் தன் இசையால் உணர்த்துகிறார் இப்படத்தின் இசையமைப்பாளர் James Horner. நம் செவிகளை பதம் பார்க்காத இசைக்கோர்ப்பு.
டிப்பில் Jake Sully யாக வரும் Sam Worthington, Neytiri யாக வரும் Zoe Saldana, Miles ஆக வரும் Stephen Lang இவர்களுக்கு மட்டுமே அதிக வாய்ப்பு. தவறவிடவில்லை. டெக்னிக்கலாக இப்படத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் பற்றி எனக்கு அவ்வளவாக எழுத தெரியாவிட்டாலும், படம் பார்க்கும்போது உணர முடிந்தவற்றை மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறேன். மற்றபடி அதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஹாலிவுட்பாலா வின் பதிவிற்காக உங்களைப்போல் நானும் காத்திருக்கிறேன். கண்டிப்பாக படம் பாருங்கள், முடிந்தால் 3D யில்.
AVATAR : நாம் கொடுத்த காசிற்கு இரண்டு மடங்கு அதிசயம் திரையில்

நன்றி Oruwebsite


AVATAR (2009) – விமர்சனம் Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

AVATAR (2009) – விமர்சனம் Empty Re: AVATAR (2009) – விமர்சனம்

Post by aarul Tue Dec 29, 2009 7:35 am


அசரவைக்கும் "Avatar" - திரைவிமர்சனம்








பிரம்மாண்ட
படங்கள் என்று என்னை வாயை பிளக்க வைத்தவர்கள் (கொசு போனா கூட தெரியாது
போல) இரண்டு பேர், ஒன்று ஸ்பீல் பெர்க் இரண்டாவது தற்போதைய ஹாட் அண்ணன்
பிரம்மாண்ட மன்னன் ஜேம்ஸ் கேமரூன். யோவ்! உங்களோட கற்பனை திறனக்கு அளவே
இல்லையா! என்று நம்மை தலை சுத்த வைப்பவர்கள். இதில் தற்போதைய நாயகன்
ஜேம்ஸ் கேமரூன் படமான "அவதார்" பற்றி பார்க்க போகிறோம்.



AVATAR (2009) – விமர்சனம் Avatar3

பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு இவரிடமே சரியான விளக்கம் தெரிந்து கொள்ள
வேண்டும் போல..அந்த அளவிற்கு படமுழுக்க அசரடித்து இருக்கிறார். 12 வருட
உழைப்பு மற்றும் கிட்டத்தட்ட 250 மில்லியன் டாலர் செலவில் இந்த படம்
எடுக்கப்பட்டுள்ளது, நினைத்தாலே கண்ணை கட்டுகிறது. ஒருவர் தன் மீது எவ்வளோ
தூரம் நம்பிக்கை வைத்து இருந்தால் இவ்வ்வ்ளோ காலம் உழைத்து இவ்வ்வ்வவளோ
செலவு செய்து படம் எடுப்பார்! உண்மையில் இவர் தைரியத்தை பாராட்ட
வார்த்தைகள் இல்லை.




இவருடைய கடைசி படம் "டைட்டானிக்", அந்தப்படம் வெளிவந்து 11 வருடம் ஆகிறது,
அந்தப்படத்தின் பிரம்மாண்டமே இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை..இப்படி
எல்லாம் கூட படம் எடுக்க முடியுமா! என்று ஆச்சர்யப்படுத்தி இருந்தார். அதை
விட பல மடங்கு பிரம்மாண்டமாக இன்னொரு படம் இது என்றால் என்னவென்று சொல்வது!



இனி "அவதார்"



AVATAR (2009) – விமர்சனம் Avatar1

வேற்று கிரகம் ஒன்றில் விலைமதிக்க முடியாத கனிமங்கள் உள்ளதை கண்டு
பிடிக்கிறார்கள், அங்கு "நவி" என்ற இனத்தினர் யாருக்கும் எந்த தொந்தரவும்
இல்லாமல் அமைதியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். அவர்கள் நம்மை போல
இல்லாமல் மிகவும் உயரமாகவும், காதுகள் நீளமாகவும் மூக்கு வால் உடல்
அமைப்பு என்று அனைத்தும் வித்யாசமாக இருக்கிறார்கள்.




இவர்கள் நவி இனத்தவரை போல ஒரு க்ளோனிங் நவியை உருவாக்கி அவர்களை பற்றிய
தகவல்களை தெரிந்து கொள்ள அனுப்புகிறார்கள், இதற்கு ஜேக் என்பவர் தேர்வு
செய்யப்படுகிறார். இவருடைய உடல் இங்கே இருக்கும் ஆனால் உயிர் மற்றும்
எண்ணங்கள் அனைத்தும் புதிதாக இவர்களால் உருவாக்கப்பட்ட நவியிடம்
இருக்கும். எப்போது வேண்டும் என்றாலும் இவர்கள் நினைத்தால் இவர்கள்
உருவாக்கிய நவியை (ஜேக்கை) செயல் இழக்க செய்யலாம், அனைத்து
கட்டுப்பாடுகளும் இவர்கள் வைத்து இருப்பார்கள். ஏதாவது ஒரு உடல் தான்
ஏக்டிவாக இருக்க முடியும்.



சுருக்கமாக நம்ம முறையில் கூறினால் "கூடு விட்டு கூடு பாய்வது" போலவாகும்.




இவ்வாறு நவியாக செல்லும் ஜேக் ஆபத்தில் மாட்டிக்கொள்ள அங்கு நவி இனப்பெண்
வந்து இவரை காப்பாற்றுகிறார், பின் இவரின் தைரியத்தால் கவரப்பட்டு இவரை
தங்கள் கூட்டத்திற்கு அழைத்து சென்று அறிமுகப்படுத்துகிறார். இதற்கு பலர்
எதிர்ப்பு தெரிவித்தாலும் ஜேக் இவர்களுடைய பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ள
அனுமதிக்கின்றனர்.



AVATAR (2009) – விமர்சனம் Avatar4

ஜேக் நவி இனத்தவரின் அனைத்து பழக்கங்களையும் கற்றுக்கொள்கிறார், அவர்களுள்
ஒருவராகிறார். இடையே தங்கள் குழுவிற்கு இந்த இடங்களை பற்றிய தகவல்களையும்
அனுப்பி வைக்கிறார். இவர் தந்த விவரங்களை வைத்து அங்கு படையெடுத்து வந்து
அனைவரையும் அழிக்க முடிவு செய்கிறார்கள். அங்கு பெண்கள் குழந்தைகள் பலர்
இருப்பதாலும் அவர்கள் ரொம்ப மென்மையானவர்கள் யாருக்கும் தொந்தரவு
தராதவர்கள் என்பதால் இதற்கு ஜேக் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர்
எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், ஆனால் இதற்கு மேலிடம் ஒத்துக்கொள்ளாமல்
முதல் கட்ட தாக்குதலில் அவர்களுடைய ஒரு பகுதியை அழித்து விடுகிறார்கள்.




இரண்டாவது கட்ட பிரம்மாண்ட தாக்குதலுக்கு தயாராகின்றனர், இதை
ஏற்றுக்கொள்ளாத ஜேக் மற்றும் அவரது நண்பர்கள் தப்பி சென்று நவி
இனத்தவருக்கு உதவ முடிவு செய்கின்றனர். இறுதியில் அவர்கள் (ஜேக்) அந்த
இனத்தினரோடு சேர்ந்தார்களா! நவி இனத்தவர் உள்ள "பண்டோரா" காட்டை
காப்பாற்றினார்களா! ஜேக் என்ன ஆனார் என்பதை நம்மை இருக்கை நுனிக்கு
வரவைத்து பட்டயகிளப்பி இருக்கிறார்கள்.



படத்தின் சுவாராசியங்கள் சில




இந்த படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள் சி ஜி எனப்படும் கிராபிக்ஸ்
காட்சிகள். சூடம் கொளுத்தி சத்தியம் செய்தாலும் எவரும் நம்ப மாட்டார்கள்
இவை அனைத்தும் கிராபிக்ஸ் என்றால், அந்த அளவிற்கு தாறுமாறாக இருக்கிறது.




இதில் வரும் போர் விமானங்கள் டிராகன்கள் மற்றும் சில மிருகங்கள் இவர்களின்
கற்பனையின் உச்சம், ஏம்பா! நீங்கெல்லாம் மனுசங்க தானா! இல்ல தெய்வமா!
என்று கேட்கத் தோன்றுகிறது, அந்த அளவிற்கு............ நீங்களே பார்த்து
முடிவு செய்யுங்களேன்.



ஜேக்கும் அவரை காப்பாற்றும் நவி பெண்ணும் காதலிக்கிறார்கள் அதை மிக இயல்பாக ரசிக்கும் படி எடுத்து இருப்பது அருமை



AVATAR (2009) – விமர்சனம் Avatar2

நம்ம ஊர்ல குதிரையை அடக்குனா வீரன் என்கிற மாதிரி இங்க டிராகனை அடக்க
வேண்டும்.. ஒரு பிரம்மாண்டம் வேண்டாமா! :-) இதற்காக ஜேக் முயற்சிக்கிறார்
ஒரு டிராகனுடன்..அவரை பிடிக்காத அல்லது இன்னும் முழுதாக ஏற்றுக்கொள்ளாத
மற்ற நவிக்கள் இவர் திணறுவதை பார்த்து கெக்கே பிக்கே என்று சிரிக்க, நம்ம
ஆளு தான் ஹீரோ ஆச்சே விடுவாரா! அதை அசத்தலாக கட்டுப்படுத்தி தன்
கட்டுப்பாட்டினுள் கொண்டு வருகிறார். இப்படி செய்து விட்டால் அந்த டிராகன்
அவர் வீட்டு நாய்க்குட்டி மாதிரி அவர் சொன்னதெல்லாம் கேட்கும்..இது எப்படி
இருக்கு! சூப்பரா! :-) இது மாதிரி ஆளுக்கொரு டிராகன் வைத்து இருப்பார்கள்.




இதில் ஒரு காண்டா மிருகம் (ஆமா! இதை மட்டும் ஏன் மிருகம் என்று
கூறுகிறார்கள், காண்டா விலங்கு என்று கூறக்கூடாதா, சரி நீங்க
காண்டாகிடாதீங்க! :-D) மாதிரி ஒன்று (பல) இருக்கும், மவனே! அது ஓடி
வந்துதுன்னு வைங்க.. அந்த இடமே ரணகளமே தான்.... கடைசி சண்டையில் இவை
எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிட்டு ஓடி வரும் பாருங்க! நம்ம ஆளுங்க
டர்ர்ர்ர் ஆகிடுவாங்க!



இதில் வரும் போர் விமானங்கள் யப்பா! என்று தலை கிறுகிறுக்க வைக்கிறது, இதை பார்த்தாலே எதிரி ஆள் பயத்திலே ஒண்ணுக்கு போய்டுவான் போல!



AVATAR (2009) – விமர்சனம் Avatar5

இவர்கள் "பண்டோரா" காட்டில் உள்ள தாவரங்கள், தரை பரப்பு, கொடிகள்,
பூச்சிகள் எல்லாம் மின்னுபவையாக சொர்க்கலோகம் போல காட்சி தருகின்றது.




படம் ஆரம்பித்து சாதாரணமாக செல்லும் படம் இந்த "பண்டோரா" காட்டை
அடைந்தவுடன் நம்மை ஒரு புதிய உலகத்திற்கே அழைத்து செல்கிறது,
மிகைப்படுத்தி கூறவில்லை.




இங்கு பெரிய பெரிய (என்றால் உங்கள் கற்பனையில் உள்ளதை விட பல பல மடங்கு
பெரியது) மரங்கள், கொட்டும் நீர்வீழ்ச்சிகள், அந்தரத்தில் தொங்கும் மலைகள்
என்று ஜேம்ஸ் கேமரூனின் (மற்றும் அவரது குழுவினர்) கற்பனை திறன் புகுந்து
விளையாடி உள்ளது.




ஜேக் மற்றும் அவரது காதலி தங்களது டிராகானில் ஒரு பயணம் செல்வார்கள்
பாருங்க! உண்மையில் நாமே அவர்களுடன் அமர்ந்து செல்வது போல இருக்கும்..மேலே
இருந்து ஜிவ்வென்று கீழு தாறுமாறான வேகத்தில் செல்லும் போது நமது அடிவயிறு
ஜிலீர் என்கிறது.




அவர்களை வேறு ஒரு பயங்கர டிராகன் துரத்தும் போது மரங்களுக்கு இடையே
புகுந்து தப்பி செல்வார்கள், அவர்களுடன் நம்முடைய உடலும் வளைகிறது..
இதைப்போல அனுபவம் எனக்கு எந்த படத்திற்கும் கிடைத்தது இல்லை.



AVATAR (2009) – விமர்சனம் Avatar9

படைகள் இவர்களது ஒரு பகுதியை குண்டு போட்டு அழிக்க, அந்த அழகான அமைதியான
இடம் நாசமாவதை கண்டு பொறுக்க முடியாமல் ஜேக்கின் காதலி கண்ணீர் விட்டு
கதறும் போது நம்ம மனது கனத்து விடும்.




இவர்கள் அதி பயங்கரமான விமானங்கள் துப்பாக்கிகளை கொண்டு தாக்க, இந்த
அப்பாவி நவிகள் வில் மற்றும் அம்பை வைத்து தாக்குவதை பார்க்கும் போது
அடப்பாவமே! என்று இருக்கும்.. ஏன்யா! இப்படி பச்ச மண்ணை போட்டு
அடிக்கறீங்க! என்று இருக்கும்.



இதில் கருப்பு புலி மாதிரி பயங்கரமாக வழுவழு தோற்றத்துடன் ஒரு மிருகம் இருக்கும்..அவ்வ்வ்வ் முடியல!




இது 3D படம் என்று அனைவருக்கும் தெரியும்! ஒரு இடத்தில் குண்டு
வீசுவார்கள் அது ஒன்று வேகமாக நம்மை நோக்கி வரும், நான் பயந்து பின்னாடி
நகர்ந்து விட்டேன்.. கலக்கல், ஆனால் இதைப்போல காட்சிகள் ரொம்ப குறைவு,
நான் நிறைய எதிர்பார்த்தேன்.



"அவதார்" என்ற வார்த்தை இந்தியச்சொல்



AVATAR (2009) – விமர்சனம் Avatar6
படத்துல அப்ப குறையே இல்லையா! என்று நீங்கள் கேட்பது புரிகிறது..படத்தின் கதையே அரதபழசானது தான், அதை கூறிய விதம் தான் விஷயம்.



நவிகள் கூட ஆங்கிலம் பேசுகிறார்கள்.. :-o



இதைப்போல குறைகள் உண்டு ஆனால் அவை யாவும் படத்தின் தொழில்நுட்பத்தின் முன்பு அடிபட்டு விடுகிறது.




என்னங்க! நீங்க இப்படி படத்தோட காட்சிகளை கூறி விட்டீர்களே! சுவாராசியம்
போய்டுமே! என்று நினைக்கவே தேவையில்லை.. காரணம் நீங்கள் தற்போது கற்பனை
செய்து வைத்து இருக்கும் காட்சிகளை விட பல பல மடங்கு சிறப்பாக திரையில்
காணலாம். நீங்கள் எதிர்பார்த்து செல்வதற்கு பல மடங்கு மேலே தான் காட்சிகள்
இருக்கும். எனவே என்ஜாய் மாடி!



AVATAR (2009) – விமர்சனம் Avatar8

இது வரை படம் பார்க்காதவர்கள் படம் பார்க்கும் எண்ணம் இல்லாதவர்கள்
கண்டிப்பாய் இந்த படத்தை பார்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்...படம்
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் இதில் உள்ள தொழில் நுட்பத்தை அவர்கள்
12 வருட உழைப்பை பார்க்கவாவது நீங்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும்.
படத்தை பிடிக்காதவர்கள் கூட இதன் தொழில்நுட்பத்தை பாராட்டாமல் இருக்கவே
முடியாது.



"அவதார்" மூன்றே நாளில் 232 மில்லியன் டாலர் நன்றி :கிரி
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum