ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனேசியாவிலும் ஈழத்து அழுகை!வயிறு எரிகிறதே- சும்மா விடுமா இந்தப் பாவம்

Go down

இந்தோனேசியாவிலும் ஈழத்து அழுகை!வயிறு எரிகிறதே- சும்மா விடுமா இந்தப் பாவம் Empty இந்தோனேசியாவிலும் ஈழத்து அழுகை!வயிறு எரிகிறதே- சும்மா விடுமா இந்தப் பாவம்

Post by nandhtiha Sat 26 Dec 2009 - 17:00

http://meenakam.com/?p=1012


இந்தோனேசியாவிலும் ஈழத்து அழுகை!
பதிந்தவர்_வன்னியன் on December 26, 2009
பிரிவு: செய்திகள்

இந்திய இலங்கைக் கடல் எல்லையில் தமிழன் தத்தளித்தால் போதுமா? எங்கள் எல்லைக்கு அந்தப் பெருமை(!) வேண்டாமா?’ –தன் பங்குக்கு இம்சிக்கிறது இந்தோனேசியா!

இலங்கை தேசத்தில் இருந்து விட்டால்போதும் என்று ஒரு பழைய கப்பலைப் பிடித்துத் தப்பித்த ஈழத் தமிழர்கள், மலேசியா வழியாகப் பயணித்து ஆஸ்திரேலியாவை நோக்கி கலத்தைச் செலுத்தினார்கள். இடையில் குறுக்கிட்டது இந்தோனேசியா. உயி ரைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்த அப்பாவி மக்கள் நடுக்கடலில் சுற்றி வளைக்கப்பட்டு 70 நாட் களாக நிர்கதியாக நிறுத்தப்பட்டுள்ளார்கள். கடலின்
தத்தளிப்பில் தமிழனின் வாழ்க்கை அல்லாடுகிறது!


எப்படியாவது இந்த நாட்டுல இருந்து தப்பிச்சாப் போதும் என்று பலரும் கிளம்ப ஆரம்பிக்கிறார்கள். லட்சங்களில் பணம் வைத்திருப்பவர்கள், சில அதி காரிகளிடம் கொடுத்து விமானங்களில் வெளியேறு கிறார்கள். ஆண்களாக இருந்தால், 15 லட்சம் தந்தால் கொழும்பைவிட்டு எந்தத் தடையும்இல்லாமல் வெளியேறலாம். இன்னொரு பகுதியினர் கொழும்பில் இருந்து விமானத்தின் மூலம் மலேசியா அல்லது சிங்கப்பூர் செல்கிறார்கள்.
அங்கே இருந்து பெரிய படகுகள் மூலமாக வேறு நாடுகளுக்குஇடம் பெயர் கிறார்கள். அந்த நாட்டில் அகதிகள் அந்தஸ்தைப் பெற்று வாழலாம் என்பது அவர்களது முடிவு. இது மாதிரி கடந்த ஐந்து மாதங்களில் நான்கு குழுக்கள் போயிருக்கின்றன. 56 பேர்கொண்ட குழு, கனடாவுக்குச் சென்றது. அவர்கள் அகதிகளாக ஏற்கப்பட்டார்கள். ஆஸ்திரேலியாவுக்கு முதல் கப்பலில் போனவர்களை அந்நாடு ஏற்றுக்கொண்டது. அடுத்த கப்பலில் போனவர்கள் 27 பேர் வேறு இடம் மாறி காக்கஸ் தீவுக்குப் போய் கவிழ்ந்து இறந்துபோன கொடுமையும் நடந்தது. அடுத்த 78 பேர், இடம்மாறி பின்டன் தீவில் இறங்கிவிட்டார்கள். அங்கு இன்னமும் காத்திருக்கிறார்கள்.
இவர்களை விரைவில் ஆஸ்திரேலியா அழைத்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாளைக்குத் தங்கவிட மாட்டோம் என்று அங்கும் நெருக்கடி
ஆரம்பித்து உள்ளது.
எங்களுக்குத் தேவை இல்லாமல் நெருக்கடி கொடுத்தால், தற்கொலை செய்துகொள்வோம் என்று அவர்கள் மிரட்ட ஆரம்பித்துள்ளனர். இப்போது சென்றவர்கள் 225 பேர். ஆஸ்திரேலியா வுக்குப் போவதற்கு முன்பே இந்தோனேசியக் கடல் எல்லையில் தடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் 30 பேர் பெண்கள். 10 குழந்தைகள் இருக்கிறார்கள்.

அக்டோபர் மாதம் 18-ம் தேதி சுந்தா ஜலசந்தியை இவர்களது படகு கடந்தது. இது இந்தோனேசியாவுக்கும் ஜாவா சுமத்திராவுக்கும் இடைப்பட்ட சிறிய கடல் பகுதி. இவர்களை அந்நாட்டு அதிகாரிகள் வளைத்தனர். ஆனால், மீட்புப் படகு அவர்களிடம் கிடையாது. எனவே, ஆஸ்திரேலியாவின் உதவியைக் கேட்டனர். கடற்படைக் கப்பலான ஹமிஸ் ஆர்மி டேல் அங்கு சென்றது. நாங்கள் அனைவரும் இலங் கைத் தமிழர்கள். ஆஸ்திரேலியாவுக்குத்தான் போகி றோம் என்று சொன்னார்கள். உடனே இந்தோனேசிய அதிகாரிகள், உங்களது நாட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்கள். அதை ஆஸ்திரேலியா மறுத்ததுதான் வேதனையின் தொடக்கம்.

ஒரு வார கால அவகாசம் தருவதாக இந்தோ னேசியா சொன்னது.
ஆனால், அவர்களிடம்இருந்து சம்மதம் வரவில்லை.
நாங்கள் உங்களைத் துரத்த வில்லை. அதே சமயம்
நெடுநாளைக்கு இங்குநீங்கள் இருக்கவும் முடியாது
என்று இந்தோனேசியா சொல்லிவிட்டது.

இதுவரை வந்த அனைத்து அகதிகளையும்ஏற்றுக் கொண்ட நாடுதான் ஆஸ்திரேலியா. அங்கு ஆட்சியில் இருக்கும் பிரதமர் கெவின் ரூட் இவர் களைப் பரிவுடன்தான் பார்த்தார். ஆனால், தொடர்ச்சியாக அகதிகள் வந்து குவிவதை அங்கு உள்ள எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்க்கஆரம்பித்துள்ளன. மனிதாபிமான நடவடிக்கையா உள்நாட்டுப் பாதுகாப்பா? என்ற கேள்வி இன்றுபிரதான மாக எழுந்துள்ளது ஆஸ்திரேலியாவில்.

எனவே நடுக்கடலில் தத்தளிக்கிறான் தமிழன். அவர்களிடம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ரத்தம் உறையவைக்கிறது. ஆறு மாதக் கர்ப்பிணியான அந்த தமிழீழப் பெண் அருகில் ஒன்றரை வயதுக் குழந்தை படுத்திருக்கிறது. இந்த வயித்தைவெச்சுக்கிட்டு என்னால வாழவே முடியல. வலியால துடிச்சேன். ஒருநாள் மட்டும் டாக்டர் வந்து பார்த்தாரு. அதுக்குப் பிறகு வரல. சரியான சாப்பாடு இல்ல. குடிக்கத்தண்ணி இல்ல.
சரியான பாத்ரூம் வசதி இல்ல. யாருக்குமே எங்களோட கஷ்டம் புரியல. எந்த நாடாவது திரும்பிப் பார்க்குமான்னு கவலையா இருக்கு. மலேசியா காட்டுல 21 நாள் கஷ்டப்பட்டுத்தான் படகைப் பிடிச்சு வந்தோம். ஆனா, நிம்மதியான இடத்துக்குப் போய்ச் சேர முடியல
என்றுகண்ணீர்வடிக் கிறார். இந்த மாதிரி சூழ்நிலையில இந்தக் குழந்தை பிறந்தா எப்படி நிம்மதியா வாழும்? இது பிறக்காமலே இருந்தாக்கூட
நல்லது
என்று அந்தப் பெண் கதறுகிறார். வயிற்றில் இருக்கும் பிஞ்சு, பிறக்காமலே இருக்கட்டும் என்று ஒரு தாய் நினைத்தால், அவர் அனுபவிக்கும் கொடுமை எப்படி இருக்கும்?

இன்னொரு பெண்ணுக்கு அதைவிட சோகம். தன்னை கடற்படை அதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கதறி பேட்டி தந்துள்ளார்.

ஒரு சிறுமி… ”ஸ்ரீலங்காவுல நாங்க ஸ்கூலுக்குப் போகும்போது ஆர்மி அடிச்சது.ஏரோபிளேன்ல வந்து ஸ்கூல் மேல குண்டுபோட்டாங்க. அதனால அங்க இருக்க முடியாம, வேற நாட்டுக்குக் கிளம்பிட்டோம்.
ரெண்டு மூணு மாசமா ஸ்கூலுக்குப் போக முடியல. படிக்காம எப்படி இருக்க முடியும்?
என்று அப்பாவியாகக்
கேட்டாள்.
இப்ப உங்க ளுக்கு என்ன வேணும்? என்றுகேட்கிறார் கள். எங்க ஊர்ல குண்டு போடுறாங்க.
பாதுகாப்பான நாடா இருந்தா, எங்கனாலும் போயி நாங்க தங்கிப்போம்
என்று பதில் அளித்தாள்.

அலை கடலுக்கு அப்பால் இன்னும் அவலம் தொடர்கிறது!

நன்றி: விகடன்
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum