ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்!

5 posters

Go down

டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Empty டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்!

Post by ayyasamy ram Thu May 30, 2019 5:08 pm

டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! 1a
-
ஜப்பான் அரசு இந்தத் தமிழரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது

‘‘ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு செலவு பண்றீங்க..? அதை விட குறைஞ்ச செலவுல உங்க டூவீலர் 200 கி.மீ. வரை போகும்னு சொன்னா எப்படித் துள்ளிக் குதிப்பீங்க? அப்படியொரு துள்ளலைத்தான் நான் செய்திருக்கேன்!’’ நிமிர்ந்து சொல்கிறார் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த சவுந்தரராஜன் குமாரசாமி.


‘‘இப்ப அதிகபட்சம் 60 கி.மீ.தான் வண்டிங்க மைலேஜ் கொடுக்குது. பெரும்பாலான வண்டிங்க இதுக்கும் கீழதான். இந்த உண்மை டூவீலர் ஓட்டற எல்லாருக்குமே தெரியும். வண்டிக்கு நாம போடற பெட்ரோல்ல 30%தான் எரிபொருள். மத்ததெல்லாம் புகை, கூலன்ட்னு சுற்றுச்
சூழலைக் கெடுக்கிற கார்பன் கலந்தவைதான்.


அதனாலதான் இதுக்குத் தீர்வா ஹைட்ரஜன் இன்ஜினை உருவாக்கி இருக்கேன்!’’ பெருமையாகச் சொல்லும் சவுந்தரராஜன் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ‘‘வெள்ளக்கோவில்தான் எனக்கு சொந்த ஊர். விவசாயம் சரியத் தொடங்கினதும் அப்பா பவர்லூம் தொழில் ஆரம்பிச்சார்.

அவர் கூடவே சேர்ந்து வேலை செய்தேன். அங்க இருக்கற மெஷினை எல்லாம் நான்தான் பராமரிச்சுட்டு இருந்தேன். மெக்கானிக், மோட்டார் வேலைகள்ல எனக்கு ஆர்வம் அதிகம். பவர்லூம் மெஷின்கள்ல எதுனா பிரச்னைனா இறங்கி சரி செய்துடுவேன். அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு மெஷின் வேலைகள் பழக்கமாச்சு.

படிச்சது 11ம் வகுப்புதான். அப்பா பிஸினஸ் என்னை மேற்கொண்டு மெக்கானிக்கல், எலக்ட்ரானிக் வேலைக்குள்ள கொண்டு வந்துச்சு. அப்பதான் லேசர் மூலமா எப்படி மின்சாரம் கொண்டு வரலாம் என்பதை கண்டுபிடிச்சேன். அதுக்கு பேட்டன்ட் ரைட்ஸ் கூட எடுத்தேன். அப்துல் கலாம் ஐயா என்னை நேர்ல சந்திச்சு பாராட்டினார்!

2008லதான் இந்த ஹைட்ரஜன் இன்ஜின் வேலைகளுக்குள்ள இறங்கினேன். பத்து வருஷங்கள் ஓடிருச்சு. கல்யாணம் பத்தி கூட யோசிக்கலை. ஏன் நாம எரிபொருளுக்கு இவ்ளோ செலவு செய்யணும் என்கிற கேள்விதான் என்னையும் சிந்திக்க வெச்சுது. உலகம் முழுக்க இதுல லட்சக்
கணக்கான விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துட்டு இருக்காங்க.

நிறைய ஹைட்ரஜன் இன்ஜின்கள் இருக்கு. ஆனா, எதுவுமே ஆன் போர்டுல ஹைட்ரஜனை உற்பத்தி செய்து இன்ஜின் ஓட்டக்கூடிய மெஷின்களா இல்ல. என் கண்டுபிடிப்பே அதுதான். ‘சூப்பர்சோனிக் ஹைட்ரஜன் ஹையர் எபிசியன்ஸி இன்ஜின்’.

இதைப் பத்தி கேள்விப்பட்ட ஜப்பான், என்னைப் பாராட்டி சான்றிதழ் கொடுத்தது! அதோட உலக அளவுல பேட்டன்ட் ரைட்ஸும் ஜப்பான் விஞ்ஞானிகள் எனக்கு பெற்றுக் கொடுத்திருக்காங்க. முறைப்படி இந்த இன்ஜினை அங்க வெளியிடவும் அனுமதி வழங்கி கவுரவிச்சிருக்காங்க. 7 மாதங்களா அங்க கம்பெனி நடத்திட்டு இருக்கேன்!’’ புன்னகைக்கும் சவுந்தரராஜன், தன் இன்ஜின் குறித்து விளக்கினார்.  

‘‘ஒரு ஹைட்ரஜன் நிரப்பும் ஃபில்லிங் ஸ்டேஷன் அமைக்க ரூ.15 கோடி வரை செலவாகும். அதுல 300 கி முதல் 400 கி வரை மட்டுமே சேமிக்க முடியும். ஆனா, நான் கண்டுபிடிச்சிருக்கிற இன்ஜினுக்கு எந்த ஃபில்லிங் ஸ்டேஷனும் வேண்டாம்! வெறும் ஃபேக்டரிகள்ல பயன்படுத்துற டிஸ்டில்டு வாட்டர் ஊத்தினாலே இந்த இன்ஜின் ஹைட்ரஜனை உற்பத்தி செய்துடும்!

100சிசி வண்டிக்கு 10 லிட்டர் டிஸ்டில்டு வாட்டர் போதும். ஒரு கிலோ ஹைட்ரஜனை உற்பத்தி செய்துக்கும்! 10 லிட்டர் டிஸ்டில்டு வாட்டர் ரூ.50 முதல் ரூ.70 மட்டுமே. இது டூவீலருக்கு 200 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும். லாரி, பஸ்ஸுக்கு 10 முதல் 15 கிமீ கொடுக்கும். இதை கப்பல்
களுக்கும் பயன்படுத்தலாம்.

முக்கியமான விஷயம், இதுல கார்பன் கிடையாது. அதனால சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது. விரைவில் ராயல்டி அடிப்படைல மோட்டார் கம்பெனிகளுக்கும் பிற நாடுகளுக்கும் இதை விற்பனை செய்யப் போறோம்!’’ என்று சொல்லும் சவுந்தரராஜன், பெரிய அளவில் இதை உற்பத்தி செய்ய தன்னிடம் பணமில்லை என்றும், இதை அறிந்த ஜப்பான் அரசு எவ்வித கேள்வியும் இன்றி தனக்கு உதவ முன்வந்திருப்பதாகவும் சொல்கிறார்.
--
நன்றி- குங்குமம்


Last edited by ayyasamy ram on Thu May 30, 2019 10:03 pm; edited 2 times in total (Reason for editing : editing)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Empty Re: டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்!

Post by T.N.Balasubramanian Thu May 30, 2019 8:36 pm

அருமையான செய்தி .சிறந்த கண்டுபிடிப்பு.
நம்ம அரசியல்வாதிகளுக்கு இதை பற்றி இன்னுமா தெரியவில்லை.?

ரமணியன்


( அய்யா இரண்டாம் முறையும் செய்திகள் பதிவாகி உள்ளனவே. உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். பிறகு நீக்கி விடுகிறேன்.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Empty Re: டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்!

Post by T.N.Balasubramanian Thu May 30, 2019 8:43 pm

சுற்று புற சூழல் பகுதிக்கு மாற்றப்படுகிறது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Empty Re: டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்!

Post by ayyasamy ram Thu May 30, 2019 10:05 pm


இரண்டாம் முறை பதிவானதை நீக்கி விட்டேன்!
-
டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Empty Re: டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri May 31, 2019 10:44 am

எப்படி ஒரு பெரிய கண்டுபிடிப்பு. இவ்வளவு நாட்களாக இதை பெரிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியாததை நம் தமிழர் கண்டுபிடத்துள்ளர்
என்பதில் பெறு மகிழ்ச்சி.
நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
இவரை யாரும் ஏமாற்றாமல் இருந்தால் சரி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Empty Re: டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்!

Post by T.N.Balasubramanian Fri May 31, 2019 11:06 am

பேட்டண்ட் பண்ணிவிட்டு ஒரு சிறந்த கம்பெனிக்கு உரிமைகளை விற்றுவிடலாம்.
ராயல்டியும் கேட்டுக்கொள்ளலாம்.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Empty Re: டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்!

Post by Dr.S.Soundarapandian Sun Jun 02, 2019 11:49 am

:வணக்கம்:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Empty Re: டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்!

Post by கண்ணன் Mon Jun 03, 2019 3:09 pm

சிறந்த பயனுள்ள கண்டுபிடிப்பு. பயன்பாட்டுக்கு வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்! Empty Re: டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum