ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

Top posting users this week
ayyasamy ram
சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
heezulia
சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 
mohamed nizamudeen
சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_m10சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

3 posters

Go down

சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Empty சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by ayyasamy ram Mon May 06, 2019 2:43 pm

புதுடெல்லி:
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மூவர் கட்சி விரோத நடவடிக்கைகளில்
ஈடுபட்டதற்கு விளக்கம் கேட்டு தமிழக சபாநாயகர் தனபால்
நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

அந்த நோட்டீசுக்குஇடைக்காலத்தடை விதித்த சுப்ரீம் கோர்ட்,
அதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சபாநாயகருக்கு நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள்

முன்னதாக, அ..தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி,
கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் டி.டி.வி.தினகரனுக்கு
ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறி அவர்கள் 3 பேர் மீதும்
கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை
எடுக்குமாறு சபாநாயகர் தனபாலிடம் அ.தி.மு.க. கொறடா
ராஜேந்திரன் புகார் அளித்தார்.

அதன் பேரில் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய
மூன்று பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீசு அனுப்பினார்.

அதில், ஒரு வாரத்துக்குள் மூன்று எம்.எல்.ஏ.க்களும் தங்களது
நிலை பற்றி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்
என்று சபாநாயகர் தனபால் கடந்த ஏப்ரல் 30 அன்று அனுப்பி
உள்ள நோட்டீசில் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக,சபாநாயகரால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட
3 எம்.எல்.ஏ.,க்களில் 2 பேர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்திருந்தனர். அதில், தமிழக சபாநாயகர் தனபால்,
தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால், சபாநாயகர்
மீதே நம்பிக்கையில்லா தீர்மானம் இருப்பதால், அவர் தங்கள்
மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவேண்டும் என்று
சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டிருந்தனர்.

வழக்கு :

அந்த நோட்டீசு அனுப்பப்பட்ட சில மணி நேரத்துக்குள்
சட்டசபை செயலாளரிடம் தி.மு.க. சார்பில் ஒரு மனு
கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில், “சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. நம்பிக்கை
இல்லா தீர்மானம் கொண்டு வருவதாகவும் உடனே அதை
எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்திலும், தி.மு.க.,. சார்பில்
3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை
விதிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது.

இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும்
தலைமை நீதிபதி அமர்வில் திமுக சார்பில் முறையீடு
செய்யப்பட்டது. தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று
திங்கட்கிழமை வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம்
தெரிவித்திருந்தது.

நோட்டீஸ் :

அதன்படி, 'சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
உள்ளதால், அவர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை
விதிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.,க்கள் அறந்தாங்கி
ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர்
தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்,
சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால
தடை விதித்ததுடன், விளக்கம் கேட்டு சபாநாயகருக்கு
நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

பின்னடைவு :

சுப்ரீம் கோர்ட்டின் இடைக்காலத் தடை காரணமாக, அதிருப்தி
எம்.எல்..ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்து ஆட்சியை காப்பாற்ற
முயற்சிக்கும் அ.தி.மு.க.,வின் நோக்கத்திற்கு பின்னடைவு
ஏற்பட்டுள்ளதாக, அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
-
---------------------------------------------
தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84873
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Empty Re: சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 06, 2019 5:01 pm

இந்த விளையாட்டு முடிவுக்கு வர வேண்டும்.
எப்போது தீருமோ?
மே 23 தீர்வு தேதியாக இருக்குமா??
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Empty Re: சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by சிவனாசான் Mon May 06, 2019 9:11 pm

சபா நாயகர்  கட்சி கொரடாவுக்கு ஏற்பட்ட  சந்தேகத்தை  நிவர்த்தி செய்ய  சபா நாயகர் தனபால்  விளக்கம்  கேட்டு நோட்டீஸ்  அனுப்பினது சரி. அதென்ன நேரில் வந்து விளக்கம் தரனும் என்பது சரியல்ல. இவர் கேட்ட ஏட்டின் மூலம்  ஏட்டிலேயே பதில் அளித்திருக்கலாம். அதைவிட்டு வீண்வேலை......  வீரியம் பெரிதா  காரியம் பெரிதா என்பார்களே அதுபோல்  வீண் செலவு.திமுக சந்துல சிந்து பாயஅஞ்சுவதே இல்லை. நாங்கள் குறுக்கு வழியில்  ஆட்சியை பிடிக்க  எண்ணமாட்டோம். கொடுமை படுத்தி பிடிக்க முயல்வோம் என்பதுபோல உள்ளது அதன் செயல்பாடு. போறாமை  ஒருபோதும் தன் வெற்றியை தடைசெய்திடும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Empty Re: சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by சிவனாசான் Mon May 06, 2019 9:25 pm

தற்போது நீதி மன்றம் நேர்மையை கடைபிடிக்க தயங்குகிறது எனலாம். அதுவும் விளக்கம்தானே கேட்கிறது. என்ன அரசியலோ போங்க.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை Empty Re: சபாநாயகர் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum