ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணிலேயே விண்ணைக் காண்போம்!

2 posters

Go down

மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Empty மண்ணிலேயே விண்ணைக் காண்போம்!

Post by ayyasamy ram Thu Apr 25, 2019 4:35 am

மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Tamil_News_large_2261709
-
ஆத்திசூடி' -அகர வரிசையில் அவ்வையார் படைத்துள்ள ஓர் அற நூல். அறம், பொருள், இன்பம் என்னும் வாழ்வியல் அறத்தை 108 எளிய இரு சீர் ஓரடிச் சூத்திரங்களால் உணர்த்தும் உயரிய நுால் இது.

பாப்பா பாட்டுப் பாடிய பாரதியார் 'புதிய ஆத்திசூடி' எழுதினார். பாரதிதாசனார் ஆத்திசூடிகள் இரண்டு எழுதினார்.அவ்வையார் ஆத்திசூடியில் வலியுறுத்தியுள்ள இன்றியமையாத வாழ்வியல் அறங்களை காண்போம்.

1. அறச்செயல் செய்ய ஆசைப்படு!


எவ் வகையான அறத்தைச் செய்வதற்கும் முதலில் தேவைப்படுவது உள்ளார்ந்த விருப்பமே ஆகும். இதனைத் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே ஔவையார் “அறஞ்செய விரும்பு” எனத் தொடங்கியுள்ளார்.

'அறத்தைச் செய்' எனப் பொதுப்படக் கூறாமல், 'அறச்செயல் செய்ய ஆசைப்படு' என அவர் கூறியிருப்பது அடிக்கோடு இட வேண்டிய அடிப்படையான செய்தி ஆகும்.

2. செய்யும் செயல்களைச் செம்மையாகச் செய்!


அவசரப்படுவதாலோ பதறுவதாலோ ஒரு செயலில் நமக்கு வெற்றி வசப்பட்டு விடாது. செய்யும் செயல்களைச் செம்மையாக, எண்ணித் துணிந்து, திட்டமிட்டு தொலைநோக்குடன் செய்தல் வேண்டும்.

அப்போது தான் வாழ்வில் வெற்றி வாகை சூட முடியும். இதனை உணர்த்தும் 'செய்வன திருந்தச் செய்' என்னும் ஆத்திசூடி, இன்றைய மேலாண்மை இயலில் வலியுறுத்தப் பெறும் பால பாடம் ஆகும்.

3. மன வலிமையைக் கைவிடாதே!


வாழ்வில் தடம் பதிக்க விரும்புவோர் தவறாமல் பின்பற்ற வேண்டிய பொன்னான விதி உண்டு. அது எந் நிலையிலும் ஊக்கத்தினை, மன வலிமையை கைவிட்டு விடாமை ஆகும்.

இக் கருத்தினை உணர்த்தும் ஆத்திசூடியே 'ஊக்கமது கைவிடேல்' என்பதாகும்.4. எதற்கும் கலக்கம் அடையாதே!

வாழ்வில் எதற்கும் கலக்கம் அடையக்கூடாது. 'உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!' என்ற படி எதையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்;

நம்மைத் தாக்க வரும் துன்பத்திற்கும் துன்பம் தரும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். 'மனந் தடுமாறேல்' என்று அவ்வையார் கூறியுள்ளார்.


Last edited by ayyasamy ram on Thu Apr 25, 2019 4:40 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Empty Re: மண்ணிலேயே விண்ணைக் காண்போம்!

Post by ayyasamy ram Thu Apr 25, 2019 4:35 am

5. துன்பத்திற்குச் சிறிதும் இடங்கொடாதே!

வாழ்வில் துன்பம் வரத்தான் செய்யும்; அதன் வருகையைத் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. ஆனால் துன்பம் நம்மைத் தாக்காமல், அதற்குச் சிறிதும் இடம் கொடுக்காமல் வாழக் கற்றுக் கொண்டால் போதும் துன்பத்தை வெற்றி கொண்டு விடலாம்.

இக் கருத்தினை உணர்த்துவதே “துன்பத்திற்கு இடங்கொடேல்” என்னும் ஆத்திசூடி. முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி நாம் அதனை விட்டுவிடல் ஆகாது. 'முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்று தானே வள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.

6. 'ங' எழுத்துப் போல் நீயும் உன் சுற்றத்தைத் தழுவு!


'ஙப்போல் வளை' என்பது சுற்றம் தழுவி வாழ வேண்டியதன் சீர்மையை உணர்த்தும் ஓர் அரிய ஆத்திசூடி. “'ங' எழுத்துப் போல் நீயும் உன் சுற்றத்தைத் தழுவு. 'ங' என்னும் எழுத்தானது தான் பயனுடையதாய் இருந்து பயன் இல்லாத ஙா முதலிய தன் வர்க்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாய் இருந்து உன் இனத்தார் பயன் இல்லாதவர் ஆயினும் அவரைத் தழுவிக் கொள்” என்பது பொருள் ஆகும்.

“ஒரு மனிதன் உயர வேண்டும். உயர்ந்த அத்தனை பேரிடமும் பழகி அனுபவங்களைக் கற்றுக் கற்று ஆழமாகக் கீழே இறங்கி, பணிந்து, குனிந்து உனக்குக் கீழே உள்ளவர்களையும் சேர்த்து உயரக் கொண்டு வர வேண்டும். அது தான் 'ங'. அந்த 'ங'ப் போல வளர வேண்டும்” என பொருள் காண்போரும் உள்ளனர்.

7.பொருளைப் போற்றி வாழ்வாயாக!

பண்டைத் தமிழர் பொருளின் அருமையினையும் தேவையினையும் நன்கு உணர்ந்திருந்தனர். அறம் பொருள் இன்பம் என்னும் வரிசை முறையில் பொருளுக்குத் தரப் பெற்றிருக்கும் நடு இடமும் இதனை உறுதி செய்யும். பொருள் இருந்தால் தான் ஒருவர் அறச் செயல்களை ஆற்ற முடியும்;

இன்பம் நுகர்வதற்கும் பொருள் வேண்டும். ஆனால் ஒன்று: பொருள் வரும் வழி தீது இல்லாததாக இருத்தல் வேண்டும். 'பொருள் செயல் வகை' என்னும் தலைப்பில் ஓர் அதிகாரமே படைத்துள்ள வள்ளுவர்.“அறன்ஈனும் இன்பமும்ஈனும் திறன் அறிந்துதீதின்றி வந்த பொருள்” என்றார்.

வள்ளுவரை அடியொற்றி
அவ்வையாரும் “பொருள்தனைப் போற்றி வாழ்” என ஓர் ஆத்திசூடி
எழுதியுள்ளார். 'வீண் செலவு செய்யாமல் பொருளைக் காத்துப் பெருக்கி வாழ்வாயாக!” என்பது பொருள்.


Last edited by ayyasamy ram on Thu Apr 25, 2019 4:39 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Empty Re: மண்ணிலேயே விண்ணைக் காண்போம்!

Post by ayyasamy ram Thu Apr 25, 2019 4:37 am

8. மென்துயில் புரிக!

'இலவம் பஞ்சின் துயில்' என்னும் ஆத்திசூடிக்கு 'இலவம் பஞ்சினால் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு' எனப் பொருள் காண்பதில் இருந்து வேறுபட்டு மகாவித்துவான் இரா.இராகவையங்கார் இச்சூடிக்கு வரைந்துள்ள பொருள் விளக்கம் மிகவும் நுட்பமானது. 'இலவம் பஞ்சு போல மெல்லத் தூங்குக' என்பதே அவ்வையார் இங்கே உணர்த்த விரும்பும் உண்மைப் பொருள்.

9. 'மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே!'


'தையல் சொல் கேளேல்' என்பது மிகுந்த கருத்து வேறுபாட்டிற்கு இடம் தரும் ஓர் ஆத்திசூடி. 'பெண்டாட்டி சொல்லைக் கேட்டு ஒழுகற்க' என்றோ 'தையல் உன் சொல்லைக் கேட்குமாறு செய்' என்றோ இச் சூடிக்குப் பொருள் கூறுவது பொருத்தமாக இருக்குமா?

இச் சூடியின் சரியான பொருள் இது தானா? ஒரு பெண்பாற் புலவராக இருந்து கொண்டு அவ்வையார் இப்படிப் பாடி இருப்பாரா?

'மனைவி சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டு நடவாதே; ஆராயாமல் நடவாதே' என்று ஆண்மகனுக்கு வாழ்வியல் அறத்தினை உணர்த்தும் நோக்கிலேயே 'தையல் சொல் கேளேல்' என்று பாடி இருப்பார்.10. எக்காலத்தும் படித்துக் கொண்டே இரு!

உலக வரலாற்றில் சாதனை படைத்த வெற்றியாளர்கள் யாவருமே புத்தகங்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர். 'ஓதுவது ஒழியேல்' என்னும் ஆத்திசூடியே அவர்கள் எந்நாளும், எப்போதும்,எந்நிலையிலும் தவறாமல் பின்பற்றி வந்துள்ள முதன்மையான தாரக மந்திரம் ஆகும்.

ஆத்திசூடியில் வலியுறுத்தியுள்ள இத்தகைய உயரிய அறங்களை மனம் கலந்து, கருத்துான்றிப் பயில்வோம்; அவற்றின் வழி வாழ்வில் நடப்போம்; இம் மண்ணிலேயே விண்ணைக் காண்போம்; பாரதி போற்றும் 'தெய்வ வாழ்க்கை'யை வாழ்வோம்.

-பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர், மதுரை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Empty Re: மண்ணிலேயே விண்ணைக் காண்போம்!

Post by Dr.S.Soundarapandian Thu Apr 25, 2019 11:00 am

:நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மண்ணிலேயே விண்ணைக் காண்போம்! Empty Re: மண்ணிலேயே விண்ணைக் காண்போம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum