ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஜோசப் பிட்சை என்னும் நடிகர் சந்திரபாபு
by சிவா Today at 8:35 am

» ஐ.என்.எஸ் விக்ராந்த்
by சிவா Today at 8:31 am

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:37 am

» வெயிலோடு விளையாடு
by curesure4u Today at 7:33 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:32 am

» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Yesterday at 2:01 pm

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:54 am

» நாலடியார் பாடல் 148 - விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by aanmeegam Tue Aug 03, 2021 9:23 pm

» பரம(ன்) இரகசியம் அமானுஷ்யன் நாவல்கள்
by shivi Tue Aug 03, 2021 6:49 pm

» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:37 pm

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:22 pm

» சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்!
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:17 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:02 pm

» கடைசியில் இவ்வளவு தானா?
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 3:49 pm

» உங்கள் உடல் தோஷத்தைக் கண்டறிந்து கமெண்ட் செய்யுங்கள் ..
by curesure4u Tue Aug 03, 2021 8:41 am

» என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை
by ayyasamy ram Tue Aug 03, 2021 7:52 am

» இனிப்பான தேங்காய் போளி செய்வது எப்படி
by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 03, 2021 7:24 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Mon Aug 02, 2021 10:14 pm

Admins Online


விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி Empty விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி

Post by ayyasamy ram Sun Apr 21, 2019 9:35 am

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி UuUnKTsgSwiRXpAQxRYG+27f701d2P2196945mrjpg
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69519
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி Empty Re: விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி

Post by ayyasamy ram Sun Apr 21, 2019 9:37 am


சென்னை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில்தான் மிகக் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநில அளவில் மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி கடைசி இடத்துக்குச் சென்றுள்ளது.

ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு தேர்தல் நடத்தும் அலுவலரும், எளிமையான நிர்வாகத்துக்காக மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஓர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் நியமிக்கப்படுகின்றனர்.

தேர்தல் பயிற்சி, பணியாளர் களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு, வாக்குப்பதிவு இந்திரங்களை அனுப்புதல், வாக்குகளை எண்ணுதல் ஆகியவை சட்டப்பேரவைத் தொகுதி அளவில் மேற்கொள்ளப்பட்டு, மக்களவைத் தொகுதி அளவில் ஒன்றிணைக்கப்படுகிறது.

56.34 சதவீத வாக்குகள்


நடந்து முடிந்த மக்களவை வாக்குப்பதிவில் தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் தென் சென்னையில்தான் மிகக் குறைந்த அளவாக 56.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அந்த மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள சட்டப்பேரவை தொகுதி அளவில் பார்க்கும்போது, மாநில அளவில் 54.78 சதவீத வாக்குகளுடன் மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் 10 தொகுதிகள்


குறைவான வாக்குகள் பதிவான முதல் 10 தொகுதிகளில் மயிலாப்பூர் முதலிடத்திலும், சோழிங்கநல்லூர் தொகுதி 2-ம் இடத்திலும், சைதாப்பேட்டை தொகுதி 4-ம் இடத்திலும், தியாகராயநகர் தொகுதி 9-வது இடத்திலும், விருகம்பாக்கம் தொகுதி 10-வது இடத்திலும் உள்ளன.

அறிவுஜீவிகள் பகுதியாக அறியப்படும் மயிலாப்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருப்பது அந்தத் தொகுதிக்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது குறித்து, அத்தொகுதி முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறும்போது, “ஏழை,எளிய மக்களிடம் உள்ள விழிப்புணர்வு, படித்த மற்றும் மேல்தட்டு மக்களிடம் இருப்பதில்லை.

மேலும் அத்தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பிராமணர்கள் உள்ளனர். அவர்களைக் கவரும் வேட்பாளரை தென் சென்னையில் நிறுத்தாததும் அவர்களைக் கவரும்பேச்சாளர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தாததும் வாக்குப்பதிவு குறைந்ததற்கு முக்கிய காரணமாகும்” என்றார்.

மறுகுடியேற்றம்


மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.நட்ராஜ் கூறும்போது,
“இத்தொகுதியில் 262 வாக்குச்சாவடிகள் உள்ளன. நான் போட்டியிட்டு வென்றபோது 59 சதவீதம் வாக்குகள் பதிவாயின. இத்தொகுதியில் சீனிவாசபுரம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரப் பகுதிகளில் வசித்தோர் பலர் கண்ணகிநகர், செம்மஞ்சேரி பகுதிகளுக்கு மறுகுடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்களதுஓட்டுரிமை இன்றும் இத்தொகுதியில் உள்ளது. பலர் வீடு மாறி சென்றுள்ளனர். அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவில்லை. அதை முறையாக செய்தால்தான் சரியான வாக்குப்பதிவு சதவீதம் கிடைக்கும்” என்றார்.

மயிலாப்பூர் தொகுதியில் குறைவான வாக்குகள் பதிவாகி இருப்பது தொடர்பாக மயிலாப்பூர் மக்கள் நலச் சங்க செயலர் கே.விஸ்வநாதன் கூறியதாவது:இத்தொகுதியில் அபிராமபுரம், மத்திய அபிராமபுரம், ஜெத்நகர், சி.பி.ராமசாமி சாலை, லஸ்அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில்குறைவானவர்களே வாக்களிக்கவந்தனர்.

அது குறித்து விசாரித்தபோது, பலர் வாக்களிக்க வராமல் இருந்ததும், பல குடும்பங்கள் அப்பகுதியில் வாக்காளர் அட்டை வைத்துக்கொண்டு, வெளியூருக்கு குடிபெயர்ந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்


வாக்களிப்பது நமது உரிமை, நமது பெருமையும் கூட. அதை செய்யத் தவறுகிறவர்கள் மீது, ஆதார் அட்டை ரத்து போன்ற கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

6 மாதங்களுக்கு ஒரு முறை, கணக்கெடுத்து, குறிப்பிட்ட வீடுகளில் வசிக்காதோரை, எத்தகைய பலம் மிக்கவராக இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி கூறும்போது, “வாக்களிப்பதற்கான வசதியைத்தான் தேர்தல் ஆணை யம் செய்துக்கொடுக்கும். அவர்கள் வராவிட்டால், தேர்தல் ஆணையம் எதுவும் செய்ய முடியாது.

எந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி களாலும் வாக்காளர்களின் மனதை மாற்ற முடியாது. அவர்களின் உரிமையை உணர்ந்து, அவர்களாக வாக்களிக்க முன்வர வேண்டும்” என்றார்.

மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறும்போது, “வாக்காளர்கள் வாக்களிக்கவராதது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சொகுசாக இருப்பவர்கள்தான் வாக்களிக்க வருவதில்லை.

வாக்குப்பதிவு குறைவான பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகப்படுத்த இருக்கிறோம். இது ஜனநாயக நாடு. வாக்களிக்காதோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என்றார்.
-
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69519
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13133

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி Empty Re: விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 22, 2019 11:18 am

மேற்கோள் செய்த பதிவு: 1296889
மேற்கோள் செய்த பதிவு: 1296889
அதிகம் படித்தவர்கள் வாழும் மயிலை
படித்தவர்கள் அரசியல் என்பது அவர்களுக்கு தேவையற்றது என்று
நினைக்கிறார்கள்.
ஒரு நாட்டில் அரசியல் கட்டமைப்பு சரியில்லை எனில்
அனைவருக்கும் பிரச்சனை தான்
இதில் படித்தவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என்ற பாகுபாடில்லை.
எனவே நல்லதொரு ஜனநாயகம் காக்க ஒவ்வொரு நபரும் பொறுப்புணர்ந்து
ஓட்டு போட வேண்டும், இதில் படித்தவர்கள் இதை தட்டிக் கழிப்பது மன்னிக்க
முடியாத குற்றம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15344
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி Empty Re: விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Apr 22, 2019 11:18 am


மேற்கோள் செய்த பதிவு: 1296889
அதிகம் படித்தவர்கள் வாழும் மயிலை
படித்தவர்கள் அரசியல் என்பது அவர்களுக்கு தேவையற்றது என்று
நினைக்கிறார்கள்.
ஒரு நாட்டில் அரசியல் கட்டமைப்பு சரியில்லை எனில்
அனைவருக்கும் பிரச்சனை தான்
இதில் படித்தவர்கள், பணக்காரர்கள், ஏழைகள் என்ற பாகுபாடில்லை.
எனவே நல்லதொரு ஜனநாயகம் காக்க ஒவ்வொரு நபரும் பொறுப்புணர்ந்து
ஓட்டு போட வேண்டும், இதில் படித்தவர்கள் இதை தட்டிக் கழிப்பது மன்னிக்க
முடியாத குற்றம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15344
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி Empty Re: விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை