புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
87 நாடுகள் மாறிவிட்டன... நாம் எப்போது? Poll_c1087 நாடுகள் மாறிவிட்டன... நாம் எப்போது? Poll_m1087 நாடுகள் மாறிவிட்டன... நாம் எப்போது? Poll_c10 
5 Posts - 63%
heezulia
87 நாடுகள் மாறிவிட்டன... நாம் எப்போது? Poll_c1087 நாடுகள் மாறிவிட்டன... நாம் எப்போது? Poll_m1087 நாடுகள் மாறிவிட்டன... நாம் எப்போது? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
87 நாடுகள் மாறிவிட்டன... நாம் எப்போது? Poll_c1087 நாடுகள் மாறிவிட்டன... நாம் எப்போது? Poll_m1087 நாடுகள் மாறிவிட்டன... நாம் எப்போது? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

87 நாடுகள் மாறிவிட்டன... நாம் எப்போது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 14, 2019 12:06 pm

87 நாடுகள் மாறிவிட்டன... நாம் எப்போது? Tamil_News_large_2255708
-
தேர்தல் ஜனநாயக முறை, குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே
பயனளிக்கிற தன்மை கொண்டதாக மாறிவிட்டது.

பண பலம், ஆள் பலம், மாபியா பலம், ஊடக பலம் யாரிடம் இ
ருக்கிறதோ, அவர்கள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறமுடியும்.
நீங்கள், 300 கொடுத்தால் அவர், 500 கொடுத்து உங்களை
தோற்கடித்துவிடுவார். இதுதான், இன்றைய விசித்திர நிலை.

அதுமட்டுமல்லாமல், தேர்தல் முடிவுக்குப் பின்னர்
, 'எங்களுக்கு இத்தனை சதவீத ஓட்டுக்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனால், போதுமான இடங்கள் கிடைக்கவில்லை' என்று பல
கட்சிகள் புள்ளி விபரங்களை சொல்லி புலம்புவதை கேட்கிறோம்.

இந்த விசித்திரத்துக்கும், புலம்பலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க
வேண்டும். அதற்கு, நமது தேர்தல் முறையை, விகிதாச்சார
பிரதிநிதித்துவ தேர்தல் முறையாக மாற்ற வேண்டும்.

அப்படி செய்தால் மட்டுமே, ஒவ்வொரு ஓட்டுக்கும் உண்மையான
மதிப்பு கிடைக்கும். ஒரு தொகுதியில் அதிக ஓட்டு பெற்றவரே
வெற்றி பெற்றவர். மேலோட்டமாக பார்த்தால், இதில் தவறு
இருப்பதாக தெரியாது. ஆனால், பதிவான ஓட்டுகளில், 30 சதவீத
ஓட்டுகளை பெற்று, முதல் இடத்தை பிடிப்பது இப்போது சகஜமாகி
விட்டது.

அதாவது, ஜெயித்தவர், 30 சதவீதம் பெற்றிருப்பார். அதன் அர்த்தம்
என்ன? 70 சதவீதம் பேருக்கு அவரை பிடிக்கவில்லை. ஆனால்,
அவருக்கு எதிராக, ஏழு பேர் நின்றதால், அந்த, 70 சதவீத ஓட்டுகள்
அவர்களுக்கு ஆளுக்கு, 10 சதவீதமாக விழுந்திருக்கும்.

சுருக்கமாக சொல்லப் போனால், 30 சதவீத ஓட்டுக்கு மதிப்பு கொடுத்து
அவரை, எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., ஆக்குகிறது நமது தேர்தல் முறை.
ஆனால், 70 சதவீத வாக்காளர்களின் ஓட்டுகளுக்கு எந்த மதிப்பும் த
ரவில்லை.
-
----------------
கடந்த, 1989 லோக்சபா தேர்தலில், தி.மு.க., 31 இடங்களில் போட்டியிட்டு,
அனைத்திலும் தோற்றது. ஆனால், அந்த கட்சிக்கு, 70 லட்சம் பேர் ஓட்டு
போட்டு இருந்தனர். 1990 தேர்தலிலும், தி.மு.க., 29 தொகுதிகளில்
போட்டியிட்டு, 56 லட்சம் ஓட்டுக்கள் வாங்கியும், ஒரு இடம்கூட
ஜெயிக்கவில்லை. 2014 லோக்சபா தேர்தலில், தி.மு.க., 24 சதவீத ஓட்டு
பெற்றது;

95 லட்சம் பேர், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டிருந்தனர்.
எனினும், ஒரு எம்.பி., கூட கிடைக்கவில்லை. மாறாக, 2014 லோக்சபா
தேர்தலில், பா.ஜ., பெற்ற ஓட்டுக்கள், 17 கோடியே, 16 லட்சத்து,
37 ஆயிரத்து 684. இது மொத்த ஓட்டுக்களில், 31 சதவீதம்தான்.

ஆனால், அக்கட்சிக்கு, 282 எம்.பி.க்கள் இருந்தனர்.
இது மொத்தமுள்ள, எம்.பி.,க்களின் எண்ணிக்கையில்,
51.9 சதவீதம்.அதே போல் காங்கிரசுக்கு, 10 கோடியே,
69 லட்சத்து, 35 ஆயிரத்து, 311ஓட்டுக்கள் கிடைத்தன.

இது, 19.3 சதவீதம். ஆனால், காங்., -- எம்.பி.,க்களின் எண்ணிக்கை,
44 மட்டுமே. அந்த தேர்தலில், உ.பி.,யில், 20 சதவீத ஓட்டுக்களை
பெற்ற, பகுஜன் சமாஜ் கட்சிக்கு, ஒரு எம்.பி., கூட கிடைக்கவில்லை.
-
விகிதாச்சார தேர்தல் முறையில், ஒவ்வொரு கட்சியும் பெற்ற
ஓட்டு விகிதத்துக்கு ஏற்ப, சட்டசபை மற்றும் பார்லிமென்டில்
இடங்கள் வழங்கப்படுகின்றன.

சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை, 100 என வைத்துக்கொண்டால்,
1 சதவீத ஓட்டு பெற்ற ஒரு கட்சிக்கு, ஒரு இடம் கிடைப்பது உறுதி.
பிரதிநிதிகள் பட்டியலை கட்சிகள் முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும்.

கட்சிக்கு கிடைக்கும் மொத்த ஓட்டுக்களுக்கு, ஏற்ப ஏற்கனவே
கட்சி அளித்துள்ள பெயர் பட்டியல்படி,எம்.பி., -- எம்.எல்.ஏ.க்கள்
அறிவிக்கப்படுவார்கள். தனித்து ஆட்சி அமைக்க, 'மெஜாரிட்டி'
வராவிட்டால், ஒரே எண்ணம் கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து
கூட்டணி ஆட்சி அமைக்கலாம்.

அரசியல், ஒரு, 'பிசினசாகும்' ஆபத்தை தடுக்க வேண்டும்;
ரஷ்யா, ஜெர்மனி ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், நார்வே,
ஸ்பெயின், சுவீடன், சுவிஸ், பிரேசில், வெனிசுலா உள்பட பல நாடுகளில்
விகிதாச்சார தேர்தல் முறையே நடைமுறையில் உள்ளது.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இம்முறையையே பின்பற்றுகின்றன.
இலங்கை, இம்முறையில் தான், எம்.பி.,க்களை தேர்ந்தெடுக்கிறது.
கடந்த, 1932 ல் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற தேர்தலில்,
33.1 ஓட்டுக்களை பெற்றே ஹிட்லர் அதிபராக வந்தார்.

1949ம் ஆண்டு அந்த நாட்டில், விகிதாச்சார தேர்தல் முறை வந்தது.
விகிதாச்சார பிரதிநிதித்துவம் கொண்ட ஜனநாயக ஆட்சி தான்
சிறந்தது என்ற நம்பிக்கை, அன்று முதல் பரவலானது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 14, 2019 12:07 pm


அப்படி மாறுவது, இங்குள்ள பல்வேறு சமூகங்களின் அச்சத்தை
அகற்றுவதுடன், நாட்டின் எதிர்கால குழப்பங்களுக்கான தீர்வாகவும்
அமையும் என்பது, 1928ம் ஆண்டு நேருவின் கருத்தாக இருந்தது.
பின்னர் அவர் பார்வை மாறியது வேறுவிஷயம். 1962 ல் கோவையில்
நடைபெற்ற, தி.மு.க., பொதுக்குழுவிலும், மாநாட்டிலும், தேர்தல்
அறிக்கையிலும் இந்தியாவுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை
வேண்டும் என்று அண்ணாதுரை வலியுறுத்தினார்.

1974ம் ஆண்டு, ஜெயபிரகாஷ் நாராயணனால் நியமிக்கப்பட்ட
தார்க்குண்டே குழு ஜெர்மனியில் இருப்பது போன்ற தேர்தல் முறை
இந்தியாவுக்கு வேண்டும் என பரிந்துரைத்தது.

அதன் பிறகு, தினேஷ் கோஷ்சுவாமி குழு (1990), வோரா கமிட்டி
(1993), இந்திரஜித் குப்தா குழு (1998), தேர்தல் சட்ட திருத்தத்தின்
மீதான சட்ட ஆணையத்தின், 170வது அறிக்கை (1999), அரசியல்
சாசன நடைமுறை மறு ஆய்வுக்கான தேசிய ஆணையம் (2001),
இந்திய தேர்தல் ஆணையத்தால் முன்னுரைக்கப்பட்ட தேர்தல்
சீர்திருத்தங்கள் (2004), நிர்வாக சீர்திருத்த, இரண்டாவது ஆணையம்
(2008), மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையிலான
இந்திய சட்ட ஆணையம் (2011) ஆகிய அனைத்தும் விகிதாச்சார
பிரதிநிதித்துவம் குறித்து நீண்ட ஆய்வை சமர்பித்தன.எனினும்,
எந்த மாற்றமும் நிகழவில்லை.

விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை வந்தால், அனைத்து
ஓட்டுகளும் மதிப்பு பெறும். பணபலம், ரவுடியிசம், சாதி, மதவெறி
குறைய வாய்ப்பு ஏற்படும். அவரவர் ஜாதி ஆதரவின் அடிப்படையில்
பிரதிநிதித்துவம் பெறக்கூடும் என்றாலும், மாகாணம் முழுவதும்
சிதறிக்கிடக்கிற ஜாதிகளும், சிறிய ஜாதிகளும் எளிதில்
பிரதிநிதித்துவம் பெற முடியும்.

இந்தியா போன்ற பல்வேறு மொழிகள், இனங்கள் கொண்ட
சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாச்சார ஓட்டுரிமை நடைமுறையில்
இருக்கிறது. இந்தியாவில் இப்போதுள்ள தேர்தல் முறையை
பின்பற்றிய, 89 நாடுகள், இன்று விகிதாச்சார பிரதிநிதித்துவ
முறைக்கு மாறி விட்டன.

உலகில் பெரும்பாலான நாடுகளில் அந்த நடைமுறைதான்
உள்ளது. ஒவ்வொரு துறையிலும் முன்னேறுவதாக சொல்லப்படும்
நமது நாடு, அனைத்து துறைகளுக்கும் தாயான, தேர்தல் துறையில்
தேர்தல் முறையில் பின்தங்கி நிற்கலாமா?

விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை கொண்டுவர
கட்சிகளுக்கு நாம்தான் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
நாம் போடும் ஓட்டுக்கு மரியாதை வேண்டுமா, வேண்டாமா?
யோசியுங்கள்.
-
-------------------------------------
-ப.திருமலை, பத்திரிகையாளர்
நன்றி-தினமலர்


avatar
Guest
Guest

PostGuest Sun Apr 14, 2019 3:59 pm

87 நாடுகள் மாறிவிட்டன... நாம் எப்போது? 103459460 87 நாடுகள் மாறிவிட்டன... நாம் எப்போது? 1571444738

வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களில் 69% மானோர் பாஜக விற்கு (மோடிக்கு) ஆதரவாக வாக்களிக்கவில்லை.அதாவது வாக்களித்த 54.1 கோடிப் பேரில் 16.5 கோடி பேர் மட்டுமே பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்கள்.இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மை இந்திய மக்களை சிறுபான்மை ஆதரவுள்ள ஒரு கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது.
அப்போ மோதி அலை புஷ்வாணமா? அதனால் தான் சிஸ்டத்தை மாற்ற மறுக்கிறார்களா?




avatar
Guest
Guest

PostGuest Sun Apr 14, 2019 4:06 pm

ஜேர்மன் நாட்டில் உள்ள முறையில் Bundestag  எனச் சொல்லப்படும் பாராளுமன்றத்தில் 598 உறுப்பினர்கள் இருப்பார்கள். இரண்டு வாக்குகளில் ஒன்றை தங்கள் பகுதி விரும்பிய ஒருவரை நேரடியாக தெரிவு செய்யவும்,இரண்டாவதை கட்சிக்கும் வாக்களிக்கலாம்.

இந்த MMP முறையில் சில சமயம் கட்சிக்கு அதிக விகிதம் வாக்களிக்கப்பட்டால்,வழமையான விருப்ப தேர்வில் 299 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். கட்சிகளுக்கு விகிதாசாரப்படி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அப்படி செய்யும் போது கட்சி உறுப்பினர்கள் அதிகமாக தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் வர வாய்ப்புண்டு.
வாக்காளர்கள் விரும்பிய கட்சிக்கு வாக்களிக்கும் அதேசமயம்,உள்ளூர் வேட்பாளர் திறமையற்றவராக பிடிக்காதவராக இருக்கும் போது இப்படி ஏற்படலாம்.

அந்த முறைப்படி இன்றைய பாராளுமன்றில் (2019) மொத்தமாக 299+410 என 709 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.இதுவே ஜேர்மன் நாட்டு வரலாற்றில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றம் ஆகும்.
87 நாடுகள் மாறிவிட்டன... நாம் எப்போது? 39272221_401

87 நாடுகள் மாறிவிட்டன... நாம் எப்போது? 82b3421a6c264577bc6fe09e72c5f585_7

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக