புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_m10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10 
25 Posts - 69%
heezulia
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_m10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_m10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_m10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10 
361 Posts - 78%
heezulia
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_m10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_m10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_m10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10 
8 Posts - 2%
prajai
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_m10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_m10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_m10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_m10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_m10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_m10நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 12, 2019 8:31 am

நான் சுவாசிக்கும் சிவாஜி! - ஒய்.ஜி.மகேந்திரா (5) E_1382689721
-
இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில், மூன்றாம் பிறை,
நீங்கள் கேட்டவை, ஊமைக்குயில், (மலையாளம்) மற்றும்
உன் கண்ணில் நீர் வழிந்தால் போன்ற படங்களில், நடிக்கும்
வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பாலு நல்ல நண்பர். சினிமாவில் புது ட்ரெண்டை அறிமுகப்படுத்தியவர்.
ஒரு சமயம், பாலுவிடம் பேசும் போது, சிவாஜி பற்றிய, பேச்சு வந்தது.
அப்போது அவர், "நான் சிவாஜியின் ரசிகன், சிவாஜியின் பல படங்களை
மிகவும் ரசித்திருக்கிறேன், சிவாஜியை ஒரு படத்திலாவது இயக்க
வேண்டும் என்பது, என் நீண்ட நாள் கனவு' என்று கூறினார்.

இதைக் கேட்ட எனக்கு, இன்ப அதிர்ச்சி. "சிவாஜியை சந்திக்க, ஏற்பாடு
செய் கிறேன்...' என்று கூறினேன்.

அப்போது, சிவாஜி யுடன் பல படங்களில், நடித்துக் கொண்டிருந்ததால்,
தினமும், அவரை சந்தித்து வந்தேன். கவுரவம் படத்தில் ஆரம்பித்து,
அன்புள்ள அப்பா வரை, 35 படங்களில், சிவாஜியுடன் நடித்திருக்கிறேன்.

சிவாஜியிடம், பாலு மகேந்திராவை, நான் சந்தித்ததை பற்றி சொன் னேன்.
"அவரை வரச் சொல்லுடா. தோட்டத்தில், லஞ்ச் சாப்பிட்டபடியே, பேசலாம்...'
என்றார்.

பாலு மகேந்திராவை, சிவாஜியின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றேன்.
"உங்க படங்களை பார்த் தேன். பிரமாதமா செய்றீங்க...' என்று பாராட்டி,
பாலு மகேந்திராவை, வரவேற்றார் சிவாஜி. பாலு, இதை
எதிர்பார்க்கவில்லை.

தன் படத்தின் கதையை பற்றி பேச வந்தவரை, சிவாஜி, "முதலில்
சாப்பிடலாம். பின், கதை டிஸ்கஷன்...' என்றார். சாப்பிட்ட பின், கதையை
கேட்டார். காணாமல் போன, தன் மகளை, தேடிக் கொண்டு போகும் தந்தை.
சந்தர்ப்பவசத்தால், விபசார விடுதியில், மகளை சந்திக்கிறார்.

இதற்கு பின், தந்தையின் மனப் போராட்டம் தான் இந்தக் கதை.
இக்கட்டத்தை, பாலு விவரித்த போது, நாங்கள், எங்கள் எதிரில்
உட்கார்ந்திருந்த சிவாஜியை, பார்க்கவில்லை. அவர் முகத்தில்,
பெண்ணின் அவல நிலையை நினைத்து, பரிதவிக்கும், அந்த தந்தையை
தான், பார்த்தோம்.

"மகள் ரோலுக்கு, ஸ்ரீதேவியை கேட்கலாம்' என்றார் பாலு.
படத்தில் உள்ள மற்றொரு முக்கிய பாத்திரத்தை, நான் செய்ய
வேண்டும் என்று, சிவாஜியே கூறினார்.

"சார்... இப்போது நீங்க இருக்கிற மாதிரியே இருந்தால் போதும்.
"மேக்-அப்' இல்லாமல், படத்தை எடுக்க விரும்புகிறேன்... ' என்றார்
பாலு. சிறிதும் யோசிக்காமல், "அப்படியே செய்யுங்க...' என்றார்
சிவாஜி. பாலு சொன்ன கதை, அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது.

இந்தப்படம், சிவாஜி - பாலு மகேந்திரா காம்பினேஷனில் வெளி
வந்திருந்தால், சரித்திரம் படைத்திருக்கும். யார் காரணம் என்று
தெரிய வில்லை. அந்த, "ப்ராஜெக்ட்' நின்று போனது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 12, 2019 8:31 am

சிவாஜி, சினிமாவில் ரொம்ப பிசியாக இருந்த போதும்,
அவர் வீட்டி லிருக்கும் போது, போன் மணி அடித்தால், அவரே தான்
போனை எடுப்பார். அவர், "ஹலோ' என்று சொன்னதுமே,
நமக்கு, "யார் பேசுவது' என்று தெரிந்து விடும்.

தமிழர்கள், கேட்டு கேட்டு, நன்கு பழக்கமான சிம்மக் குரலாயிற்றே.
நான் போன் செய்து, அவரே எடுத்து, பதில் சொல்லிய அனுபவம்,
எனக்கு, நிறைய தடவை நடந்திருக்கிறது.

சென்னையில், வீடியோ கேசட் பிளேயர் வந்த சமயம்.
சிவாஜியின் பழைய படங்களை, வீடியோ கேசட் மூலம், பார்த்து
ரசிப்பதோடு, வீடியோ கேசட்களை சேகரிப்பதிலும், எனக்கு ஈடுபாடு
உண்டு.

ஒரு மாலை பொழுதில், சிவாஜியிடமிருந்து போன் அழைப்பு வந்தது.
"நான் தான் பேசறேன்...'
"சொல்லுங்க சார்...'
"என்ன... நீ, நிறைய வீடியோ டேப்ஸ் எல்லாம் வச்சிருக்கியாமே...'
-
"ஆமாம்... எங்க சிவாஜிங்கிறவர் நடித்த, படங்களுடைய, வீடியோ
டேப்ஸ் வைச்சிருக்கேன்...'

"அப்படிங்களா... அந்த, உங்க சிவாஜிங்கிறவர் நடித்த, புதிய பறவை
வீடியோ டேப் கொடுடா. பார்க்கணும் போல இருக்கு... 'என்றார்.
உடனே, ஒரு மணி நேரத்திற்குள், அவர் கேட்ட, புதிய பறவை, வீடியோ
கேசட்டை அனுப்பி வைத்தேன்.

நான், தியேட்டருக்கு சென்று பார்த்த, முதல் சிவாஜி படம்,
பாவ மன்னிப்பு. சென்னை நகரின், முதல், "ஏசி' தியேட்டரான,
சாந்தி தியேட்டரில், அப்படம் ஒடிக் கொண்டிருந்தது. என் பாட்டி
அலமேலு அம்மாள், "சிவாஜி, முஸ்லிமாக நடித்திருக்கிறாராம்.
எப்படி செய்திருக்கார்ன்னு பார்க்கணும்டா...' என்று கூறி,
அழைத்துச் சென்றார். என் பாட்டி,

ரொம்ப ஆச்சாரமானவர். சினிமா அதிகம் பார்ப்பதில்லை.
அப்படிப்பட்டவரைக் கூட, தன் நடிப்பால் கவர்ந்திருந்தார் சிவாஜி.

படத்தில், சிவாஜி படும் கஷ்டங்களை பார்த்து, "என்னடா, இந்த
எம்.ஆர்.ராதா இப்படி, அக்கிரமம் செய்யறான்...' என்று,
அங்கலாய்த்துக் கொண்டார் என் பாட்டி.

படிக்காத மேதை படத்தில், ரங்கனாக, விசுவாசமுள்ள
வேலைக்காரனாகவே வாழ்ந்து காட்டிய சிவாஜி, பாவ மன்னிப்பு
படத்தில், முஸ்லிம் இளைஞராக மாறியிருந்தார்.

இப்படத்தில், சிவாஜி இரைந்து பேசாமல், ரொம்ப நளினமாக
நடித்திருப்பார். இந்தப் படத்தை, ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்,
அவரது நடிப்பில், ஒரு புது பரிமாணம் தெரியும்.

நான் கெமிக்கல் இன்ஜினியரிங் பி.டெக்., படித்துக் கொண்டிருந்த
சமயம். என்னுடன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த,
வட மாநில நண்பன் ஒருவனை, இப்படத்திற்கு அழைத்து சென்றேன்.
படத்தில், முகத்தில் அமிலத்தை ஊற்றும் காட்சியில், அப்படியே,
துடிதுடித்து, தத்ரூபமாக நடித்திருப்பார் சிவாஜி.

அதைப் பார்க்கும் போது, யாரோ, நம் முகத்தில் அமிலத்தை ஊற்றி
விட்டது போன்ற உணர்வு, ஏற்படும். அத்தகைய, சிறப்பான நடிப்பை,
வெளிப்படுத்தியிப்பார்.

ஆனால், அந்த வடமாநில நண்பனோ, "அமிலம் முகத்தில் படும்
காட்சியில், அந்த நடிகர், சரியாக நடிக்கவில்லை. ரொம்ப ஓவர்
ஆக்டிங்...' என்று விமர்சித்து பேச ஆரம்பித்தான்.

என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "நாம இரண்டு பேரும்,
ரசாயன லேபுக்கு போகலாம். அங்கேயிருந்து, கொஞ்சம் ஆசிட் எடுத்து,
உன் முகத்திலே வீசுகிறேன். ஆசிட் பட்ட எரிச்சலை, ஓவர் ஆக்டிங்
செய்யாமல், நளினமாக செய்து காட்டு...' என்றேன்.

என் உணர்வை புரிந்து கொண்ட அந்த நண்பன், மன்னிப்பு கேட்டு
சென்றான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 12, 2019 8:33 am

மீண்டும் சாந்தி தியேட்டருக்கு வருவோம்.
"என்கையிலே மாத்திரம் ஒரு கத்தி இருந்தால், எம்.ஆர்.ராதாவை
குத்தியிருப்பேன்...' என்றார் என் பாட்டி. அவ்வளவு வெறுப்பு அவர் மீது.
தான் ஏற்ற பாத்திரத்திற்கேற்ப, வில்லத்தனம் செய்து, ரசிகர்களின்
வெறுப்பை சம்பாதித்ததிலிருந்து, எம்.ஆர்.ராதா எவ்வளவு பெரிய நடிகர்,
என்பதை புரிந்து கொள்ளலாம்.

இப்படத்தின் உண்மையான ஹீரோ எம்.ஆர்.ராதா தான் என்பதை,
படத்தை பார்த்த பின், உணர முடிந்தது. படம் முழுவதும் வருகிற
கதாபாத்திரம் எம்.ஆர்.ராதா தான். தன் திறமை மீது உள்ள
அசாத்தியமான நம்பிக்கையில், சிவாஜி, அவருக்கு, முக்கியமான
பாத்திரத்தை கொடுத்து, முக்கியத்துவம் குறைந்த பாத்திரத்தை,
ஏற்று நடித்திருக்கிறார்.

மொத்த குழுவும், படம் வெற்றி பெற, உழைக்க வேண்டும் என்பதே,
அவருடைய எண்ணம், குறிக்கோளாக இருந்திருக்கிறது.

* ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் திருப்பூர் குமரன், பகத்சிங்;
ராமன் எத்தனை ராமனடி படத்தில் சத்ரபதி சிவாஜி, ரத்த திலகம்
படத்தில் ராணுவ வீரன், கை கொடுத்த தெய்வம் படத்தில் பாரதியார்
(பாடல் காட்சியில் மட்டும்) சினிமா பைத்தியம் படத்தில்
வாஞ்சி நாதன், தச்சோளி அம்பு (மலையாளப்படம்) போன்று பல
படங்களில், தேச பக்தியை வெளிப்படுத்தும் பல ஓரங்க நாடகங்களில்
நடித்திருக்கிறார் சிவாஜி.

அப்போதைய இளைஞர் சமுதாயத்திற்கு, நம் தேச பக்தி வீரர்களை
அதிகமாக அறிமுகப்படுத்தி வைத்தது, சிவாஜியாகத் தான் இருக்க
முடியும்.
-
--------------------------------------------------
***
— தொடரும்.

எஸ். ரஜத்-
நன்றி- வாரமலர் 27-10-2013

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக