புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பதி பெருமாளை "கோவிந்தா " என்று ஏன் எல்லோரும் அழைக் கிறார்கள் உங்களுக்கு தெரியுமா ?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருப்பதி பெருமாளை "கோவிந்தா " என்று ஏன் எல்லோரும் அழைக்
கிறார்கள் உங்களுக்கு தெரியுமா ?
கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் திருவேங்கட மலையான்.
திருமலை திருப்பதியில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் பெருமாள்.
பெருமாளுக்கு ஆயிரம் திரு நாமங்கள்.அவற்றுள் சிறப்பு மிக்க நாமங்கள் பன்னிரண்டு.
அவற்றுள்ளும் சிறப்பு மிக்க நாமமாகப் போற்றப்படுவது கோவிந்தா என்னும் திரு நாமம்.
பாகவதத்தில் பகவான் கிருஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்யும் போது சூட்டப்பட்ட நாமம் கோவிந்தா என்பது.
ஆதி சங்கரரும் தனது பஜகோவிந் தத்தில், கோவிந்த நாமத்தையே முன்னிலைப் படுத்துகிறார்.
ஆண்டாள், குறையொன்றும் இல்லாத கோவிந்தா என்று சொல்லிப் போற்றுகிறார்.
அத்தகைய சிறப்பு மிக்க கோவிந்த நாமம் கருணைக் கடலான வேங்கடவனுக்கு ஏற்பட்டதற்கு ஒரு சுவாரஸ்யமான புராண சம்பவம் ஒன்று சொல்லப் படுகிறது.
மகாவிஷ்ணு கலியுகத்தில் அவதரிக்க முடிவு செய்து, மனித வடிவில் திருப்பதிப் பகுதியில் தோன்றினார்.
மனித உருவில் வந்த காரணத்தால் அவருக்கும் பசி, தாகம் போன்ற அடிப்படை உணர்வுகள் இருந்தன.
தான் பால் அருந்த ஒரு பசு இருந்தால் நலம் என்று நினைத்தார்.
அவர் வசிக்கும் மலைக்கு அருகிலேயே ஒரு மலையில் தான் மாமுனிவர் அகத்தியரின் ஆசிரமமும் இருந்தது.
அகத்தியர் தன் ஆசிரமத்தில் பெரிய கோசாலை ஒன்றை வைத்திருந்தார்.
அதில் நூற்றுக் கணக்கான பசுக்கள் இருந்தன.
வேங்கடேசன் அவர் குடிலுக்குச் சென்றார். அவரைக் கண்டதும் அவரே இந்த உலகத்தைக் காக்கும் மகாவிஷ்ணு என்பதை அகத்தியர் ஞானத்தால் அறிந்து கொண்டார்.
வேங்கடேசனை வணங்கி வரவேற்றார்.
முனிவரே, நான் கலியுகத்தில் சில செயல்களை முடிக்கத் திருவுளம் கொண்டு
இங்கு வந்து வந்திருக்கிறேன்.
தங்களிடம் உள்ள பசுக் கூட்டங்களி லிருந்து எனக்கு ஒரு பசுவினை தானம் செய்ய வேண்டும்" என்று கேட்டார்.
மூவுலகையும் காக்கும் இறைவன் தன் குடிலுக்கு வந்து தன்னிடம் தானம் கேட்பது குறித்துப் பெருமகிழ்ச்சி யடைந்தார் அகத்திய முனிவர்.
அதே வேளையில் இந்த மாயவன் ஏன் நம்மைத் தேர்ந்தெடுத்தான் என்றும் யோசித்தார்.
இதில் ஏதேனும் மாயத் திருவிளையாடலைச் செய்யத் திருவுளம் கொண்டாரோ என்று சிந்திக்கலானார்.
தொடரும்.....
Re: திருப்பதி பெருமாளை "கோவிந்தா " என்று ஏன் எல்லோரும் அழைக் கிறார்கள் உங்களுக்கு தெரியுமா ?
#1296029- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐயனே, நீர் யார் என்பதை நான் நன்கு அறிவேன்.
உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய நியதி எதுவுமில்லை.
பசுவினை பிரம்மச்சாரிக்கு தானம் செய்யக் கூடாது என்று சொல்வர்.
ஒருவன் இல்லறத்தில் இருக்கும் போது தான்,
அவனுக்கு தானமாகத் தரப்படும் பசுவினை அவன் நல்ல முறையில் பராமரிப்பான்.
இல்லத்தில் இருக்கும் அவன் மனைவி அந்தப் பொறுப்பைச் சரிவரச் செய்வாள்.
அப்படிப் பணிவிடை செய்ய ஆள் இல்லாத பிரம்மச்சாரிக்கு பசுவை தானமாகத் தர இயலாது.
மேலும் கலியுகத்தில் தாங்கள் அவதரித்தது போல், அன்னை மகாலட்சுமியும் அவதரித்திருக்கிறார்.
நீங்கள் அன்னையைக் கரம் பற்றி தம்பதி சமேதரராக இங்கு வருவீர்கள் என்றால், நான் அடுத்த கணமே தங்களுக்கு ஒரு பசுவை தானமென அளிக்கிறேன்" என்று பணிவுடன் கூறினார்.
பெருமாளும் அகத்தியர் சொல்வதில் இருக்கும் நியாயத்தைப் புரிந்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.
பின்னர் அவர் அன்னை பத்மாவதியைத் திருமணம் செய்து
கொண்டு தனது வாசஸ்தலமான திருமலைக்குச் செல்லத் தொடங்கினார்.
அதற்கு முன்னர், அகத்தியரின் குடிலுக்குச் சென்று அவர் தருவதாகச் சொன்ன பசுவையும் வாங்கிக் கொண்டு செல்லலாம் என்று முடிவு செய்தார்.
அதற்காக அவர் அகத்தியரின் இருப்பிடம் சென்றார்.
ஆனால், அப்போது அகத்தியர் அங்கே இல்லை.
முனிவரின் சீடர்களே, அங்கிருந்தனர்.
அவர்களிடம் பெருமாள் அகத்தியர் தமக்கு ஒரு பசுவை தானமாகத் தருவதாக வாக்குப் பண்ணியிருக் கிறார்' என்பதைச் சொல்லி பசுவைப் பெற்றுச் செல்லவே தான் வந்திருப்பதாகச் சொன்னார்.
செய்வதறியாது திகைத்தனர் சீடர்கள்.
ஐயா, தங்களையும் அன்னையையும் கண்டால் வைகுண்ட வாசனான அந்தப் பரந்தாமனையும் அன்னை மகாலட்சுமி யையும் காண்பது போல் உள்ளது.
தாங்கள் கேட்டு மறுக்க வேண்டிய சூழல் எங்களுக்கு.
இந்த ஆசிரமத்தில் அனைத்தும் எங்கள் குருநாதர் அகத்தியருக்கே உரிமையானவை.
அவர் அனுமதி யில்லாமல் நாங்கள் எதையும் தரவும் பெறவும் இயலாது.
நீங்கள் அவர் வரும் வரை இங்கேயே தங்கியிருந்தால் நாங்கள் உங்களுக்குப் பணிவிடை செய்யக் காத்திருக் கிறோம்.
அதன் பின் குருதேவர் வந்ததும், நீங்கள் பசுவினை அவரின் திருக்கரத்தா லேயே பெற்றுச் செல்லலாம்" என்றனர்.
பெருமாளும் அவர்கள் சொன்ன பதிலில் வருத்தம் கொள்ளாது, அவர்களின் குருபக்தியையும், அதிதிகளிடம், காட்டும் மரியாதையையும் கண்டு மகிழ்ந்தார்.
பின்பு அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு தன் நிரந்தர வாசஸ்தலம் நோக்கிப் புறப்பட்டார்.
சற்று நேரத்துக் கெல்லாம் அங்கு வந்த அகஸ்தியர் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு வருத்தமுற்றார்.
உலகையே காக்கும் உத்தமனை ஒரு பசுவின் காரணமாக அலைக்
கழித்து விட்டதற்காக வருந்தினார்.
எப்படியும் பெருமாளைச் சந்தித்து தன்னிடம் உள்ளதில் ஆகச் சிறந்த பசுவினைத் தந்து விடுவது என்று முடிவு செய்து காமதேனுவைப் போன்ற பசு ஒன்றினை அவிழ்த்துக் கொண்டு, பெருமாள் தாயாரோடு சென்ற வழியை விசாரித்துக் கொண்டே சென்றார்.
வேகமாக நடந்ததில் கொஞ்ச நேரத்திலேயே பெருமாள் முன்பாக நடந்து செல்வதை அகத்தியரும் பார்த்து விட்டார்.
பெருமாளை நோக்கிக் குரல் கொடுத்தார். " சுவாமி கோவு இந்தா " என்று சத்தமிட்டார்.
தெலுங்கில் ` "கோவு " என்றால் பசு. `இந்தா' என்றால் எடுத்துக்
கொள் என்று பொருள்.
ஆனால், சுவாமிக்கு முனிவரின் குரல் கேட்கவில்லை போலும். மீண்டும் சத்தமாக `சுவாமி கோவு இந்தா என்று சொன்னார்.
அப்போதும் அவர் திரும்பவில்லை.
மீண்டும் மீண்டும்
சுவாமி கோவு இந்தா...
சுவாமி கோவு இந்தா...
சுவாமி கோவு இந்தா"
என்று அழைத்துக் கொண்டே யிருந்தார்.
அதுவரை அன்னநடை போட்டுக் கொண்டிருந்த பெருமாளும் தாயாரும் விரைவாக நடக்க ஆரம்பித்து விட்டனர்.
அகத்தியரோ, தன் குரலை இன்னும் உயர்த்தி `கோவு இந்தா கோவு இந்தா' என்று வேகவேகமாக உச்சரிக்க அதுவே சற்று வேகமான வழக்கில் வார்த்தையில் கோவிந்தா... கோவிந்தா என்று ஆனது.
கோவிந்தா, கோவிந்தா என்று அவர் அழைத்தது 108 முறை ஆனதும் பெருமாள் நின்றார்.
திரும்பிப் பார்த்தார். அகத்தியர் மூச்சு வாங்க அவரிடம் ஓட்டமும் நடையுமாய்ப் பசுவோடு வந்தார்.
பெருமாள் அவரை ஆசுவாசப் படுத்தி, அந்தப் பசுவை தானமாகப் பெற்றுக் கொண்டார். பின்னர்,இந்தக் கலியுகத்தில் என்னை அழைக்க
உகந்த நாமம் கோவிந்தா என்பதே.
நீங்கள் `கோவு - இந்தா' என்று சொன்ன தன் மூலம் கோவிந்தா என்னும் நாமத்தைச் சொல்லி என்னை மகிழ்ச்சிப் படுத்தினீர்.
நீர் மட்டுமல்ல, இனி யார் யார் எல்லாம்,தம் ஜீவனாகிய பசுவினை என்னிடம் சேர்ப்பிக்க விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாருமே கோவிந்தா என்னும் நாமத்தைச் சொன்னாலே போதும், நான் உடனடியாக அவர்களை நோக்கி விரைவாக அனுக்கிரகம் செய்வேன்" என்று சொல்லி விடை பெற்றுத் திருமலையில் ஆனந்தமாக ஆர்ப்பாட்டமின்றி குடிபுகுந்தான் வேங்கட மலையான்.
நன்றி : வாட்சப் !
Similar topics
» முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?
» ஆன்டிபயாட்டிக்(antibiotic) எடுக்கும் போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?
» திருப்பதி சென்று பெருமாளை சேவிக்கும் முறை !
» முகலாய கொள்ளையர்களிடமிருந்து திருப்பதி பெருமாளை காப்பாற்றிய வராகமூர்த்தி
» திருப்பதி செல்பவர்கள் எப்படி முறையாக பெருமாளை தரிசிக்க வேண்டும்
» ஆன்டிபயாட்டிக்(antibiotic) எடுக்கும் போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?
» திருப்பதி சென்று பெருமாளை சேவிக்கும் முறை !
» முகலாய கொள்ளையர்களிடமிருந்து திருப்பதி பெருமாளை காப்பாற்றிய வராகமூர்த்தி
» திருப்பதி செல்பவர்கள் எப்படி முறையாக பெருமாளை தரிசிக்க வேண்டும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1