புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
53 Posts - 42%
heezulia
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
304 Posts - 50%
heezulia
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
21 Posts - 3%
prajai
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
செய்திகள்  Poll_c10செய்திகள்  Poll_m10செய்திகள்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்திகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Apr 02, 2019 9:31 pm

21 நாட்களில் ரூ. 302 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை..>
....புதுடில்லி தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய வாகன சோதனைகளில், கணக்கில் வராத, 302 கோடி ரூபாய், நாடு முழுவதும் கைப்பற்றப்பட்டுள்ளது.கடந்த, மார்ச், 10ல், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் ஆணைய அதிகாரிகள், போலீசார் துணையுடன், வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் சிக்குவோர், தங்கள் பணத்திற்கு கணக்கு காட்டத் தவறும்பட்சத்தில், அவர்கள் வைத்துள்ள தொகை, பறிமுதல் செய்யப்பட்டு, வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது.இந்த வகையில், மார்ச், 31 வரையிலான, 21 நாட்களில், 302 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டு உள்ளது. இத்துடன், அமலாக்கத் துறையினரால், 63 லட்சம் லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; இதன் மதிப்பு, 135 கோடி ரூபாய்.ஆந்திராவில், அதிகப்பட்சமாக, 94 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம், 91 கோடி ரூபாயுடன், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதிக அளவில் மது பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்களில், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், முதல் இரண்டு இடங்களில் உள்ளன.தேர்தல் ஆணையம், அன்றாடம் கைப்பற்றப்படும், கணக்கில் காட்டாத பணம், நகை உள்ளிட்ட விபரங்களை, அதன் இணையதளத்தில் வெளியிடுகிறது. உரிய கணக்கு காட்டு வோருக்கு, பறிமுதல் செய்த பணம், நகை ஆகியவை, திரும்ப வழங்கப்படுகிறது.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Apr 02, 2019 9:33 pm

காங்கிரசுக்கு தொடர்புடைய 687 'பேஸ்புக்' கணக்குகள் நீக்கம்>>
புதுடில்லி, காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய, 687 'பேஸ்புக்' கணக்குகள், சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரே நேரத்தில் செயல்பட்டதால், அவை நீக்கப்பட்டுள்ளதாக, பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.தேர்தல் பிரசாரங்களில், சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால், 'பொய் தகவல்கள் பரப்பப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும்' என, பேஸ்புக் நிர்வாகத்துக்கு, மத்திய அரசு, கோரிக்கை வைத்திருந்தது.லோக்சபா தேர்தல் முடியும் வரை, இந்தியாவில் உள்ள பேஸ்புக் கணக்குகளை, அதன் நிர்வாகம், தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி வருகிறது.பாதுகாப்புஇந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய, 687 பேஸ்புக் கணக்குகளில், சில சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக, பேஸ்புக் நிர்வாகம் கண்டுபிடித்தது. இதையடுத்து, அந்த கணக்குகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.இது குறித்து, பேஸ்புக் நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு பிரிவின் தலைவர், நாதெனியல் கிளேய்ஷர் கூறியதாவது:இந்த, 687 பேஸ்புக் கணக்குகளை நிர்வகித்தவர்கள் அனைவருமே, போலி பெயர்களில் இயங்கி வருவதை, முதலில் கண்டுபிடித்தோம். பின், அவர்களை தீவிரமாக கண்காணித்தபோது, அவர்கள் அனைவருமே தங்களை, நிறைய குழுக்களில் இணைத்து, தகவல்களை அதிக அளவில் பரப்பி வந்தனர்.அந்த தகவல்கள் அனைத்துமே, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., வுக்கு எதிராக வெறுப்புணர்வை பரப்புவதாகவே இருந்தன; எல்லாம் ஒன்று போலவே இருந்தன.நடவடிக்கைஇந்த கணக்குகள் அனைத்துமே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனிநபர்களுக்கு தொடர்புடையதாக இருந்தன. அந்த, 687 கணக்குகளையும் நீக்கினோம்.அவர்கள் பகிர்ந்த தகவல்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களது செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.





சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Apr 02, 2019 9:35 pm

கட்சி நன்கொடை பத்திரங்கள் ரூ.1,700 கோடிக்கு விற்பனை..>
புதுடில்லி,கட்சி நன்கொடை பத்திரங்கள், இந்த ஆண்டு 1,700 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன; இது, கடந்த ஆண்டை விட, 62 சதவீதம் அதிகம்.'அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள், அவற்றை, எஸ்.பி.ஐ., எனப்படும், 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வாயிலாக, நன்கொடை பத்திரங்களாக வாங்கி, தாங்கள் விரும்பும் கட்சிகளுக்கு வழங்கலாம்' என, மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில், கட்சி நன்கொடை பத்திரம் குறித்து, மஹாராஷ்டிரா மாநிலம், புனேயைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது.அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கட்சி நன்கொடை பத்திர விற்பனை, கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும், 97 சதவீத பத்திரங்கள் விற்பனையாகி உள்ளன. அதில், 10 லட்சம் ரூபாய் மற்றும் 1 கோடிரூபாய்மதிப்பிலானபத்திரங்கள்மட்டுமே,அதிகம்விற்பனையாகி உள்ளன. குறைந்த மதிப்புள்ள பத்திரங்கள், அதிகம் விற்பனையாகவில்லை.கடந்த, 2017 - 18ல், இந்த நன்கொடை பத்திரம் மூலம், பா.ஜ., 1,000 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, எவ்வளவு கோடி ரூபாய் மதிப்புக்கு, நன்கொடை பத்திரங்கள் விற்பனையாகி உள்ளன என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கேள்வி எழுப்பியது.அதற்கு, எஸ்.பி.ஐ., வங்கி அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:கடந்த ஆண்டு, மார்ச் முதல், நவம்பர் வரை, 1,056 கோடி ரூபாய்க்கு, கட்சி நன்கொடை பத்திரங்கள் விற்பனை ஆகின. அதுவே, இந்த ஜனவரி முதல், மார்ச் வரை, 1,716 கோடி ரூபாய்க்கு பத்திரங்கள் விற்பனை ஆகி உள்ளன; இது, கடந்த ஆண்டை விட, 62 சதவீதம் அதிகம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Apr 02, 2019 9:39 pm

புதுச்சேரிக்கு கூடுதல் கண்காணிப்பாளர்களை அனுப்ப வேண்டும்..........................>
புதுச்சேரி:தேர்தல் நியாயமாக நடைபெற இந்திய தேர்தல் ஆணையம் கூடுதல் கண்காணிப்பாளர்களை புதுச்சேரிக்கு அனுப்ப வேண்டும் என சட்டசபை குழு அ.தி.மு.க., தலைவர் அன்பழகன் பேசினார்.அரியாங்குப்பத்தில் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளின் செயல்வீரர் கூட்டம் நடந்தது. என்.ஆர்.காங்., துணைத் தலைவர் சபாபதி தலைமை தாங்கினார். அ.தி.மு.க., மாநில செயலர் புருசோத்தமன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவர் அன்பழகன் பேசிய
தாவது:தேசிய கட்சிகள் என மார்தட்டிக்கொள்ளும் காங் மற்றும் கம்யூ., கட்சிகள் மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசமான கூட்டணி அமைத்துள்ளது. மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் எதிரும் புதிருமாக இருக்கும் இவ்விரு கட்சிகளும் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தங்கள் கொள்கைகளை மறந்து தி.மு.க., வுடன் ஒன்று சேர்ந்துள்ளனர்.புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி வினோதமான அரசு நடத்தி வருகிறார். தனது ஆட்சியின் சாதனையை எடுத்துக்கூறி ஓட்டு கேட்பதை விட்டுவிட்டு, ஆட்சி இருக்கிறது என்ற தைரியத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி, கொடுக்க வேண்டியதை கொடுத்து எதிர்காலத்தில் ஆளுக்கு ஒரு பதவி என்ற குச்சிமிட்டாய் கையில் கொடுத்து ஆள் பிடிக்கும் வேலையை செய்து வருகிறார். ஏற்கனவே என்.ஆர். காங்.,. கட்சியை சேர்ந்த நான்கு முன்னாள் வாரிய தலைவர்களை விலைக்கு வாங்கினார். தற்போது முத்துப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., இளைஞர் பாசறை செயலரை வாங்கியுள்ளார்.தமிழகத்தில் வேலுார் காட்பாடியில் வாக்காளர்களுக்கு, கொடுக்க தி.மு.க.,வினர் பதுக்கி வைத்திருந்த 15 கோடி ரூபாய் பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த சோதனைக்கும் தடை கேட்டு தி.மு.க., கோர்ட்டுக்கு சென்றுள்ளது. இவர்கள் கொள்ளையடித்த பணத்தை கட்டுக்கட்டாக பதுக்கி வைப்பார்களாம். தேர்தல் துறை, வருமான வரி துறை சோதனை கூட செய்யக்கூடாதாம். இந்த தேர்தல் முடியும் வரை தி.மு.க., வை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கம் செய்ய வேண்டும்.வேலுார் காட்பாடி பணம் புதுச்சேரியிலும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். இங்கு ஆட்சியில் தி.மு.க., வும் காங்., கட்சியும் உள்ளதால் பணப்புழக்கம் தங்கு தடையின்றி அதிகமாக இருக்கிறது. இந்த பணத்தை வைத்துக் கொண்டு மாற்றுக்கட்சியினரை லட்சக்
கணக்கில் விலை கொடுத்து காங்., கட்சி வாங்கிக் கொண்டிருக்கிறது.எனவே புதுச்சேரியில் தேர்தல் நியாயமாக நடைபெற, இந்திய தேர்தல் ஆணையம் கூடுதல் கண்காணிப்பாளர்களை அனுப்ப வேண்டும். ஆளும் கட்சியினரின் பணப்புழக்கத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.நடைபெற இருக்கும் இத் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சி நடத்தும் காங்., கட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். உங்கள் எம்.எல்.ஏ., இந்த தொகுதிக்கு என்ன நன்மை புரிந்துள்ளார். சுனாமியின் நலத்திட்ட உதவிகளை கூட மீனவர்களுக்கு பெற்ற தராதவர். ஆளுங்கட்சி சேர்மனாக இருக்கும் உங்கள் எம்.எல்.ஏ கொடுத்துள்ளார்.இதையெல்லாம் உணர்ந்து நாம் வாக்காளர்களிடம் ஜக்கு சின்னத்திற்கு ஓட்டு சேகரிக்க வேண்டும். அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.காங்., வேட்பாளர் கே.நாராயணசாமி வெற்றி பெறுவது மூலம் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அந்த உண்மையை சொன்னால் கூட நம் முதல்வர் ஆட்சி மாற்றம் என பேசினாலே, உள்ளே துாக்கி போட்டு விடுவோம் என மிரட்டுகிறார். இந்த மிரட்டல் நெடுங்காலம் நீடிக்காது.இவ்வாறு அவர் பேசினார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Apr 03, 2019 6:41 pm

கடந்த மூன்று லோக்சபா தேர்தல்களில், தேசிய கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதத்தில், இரு முறை காங்., கட்சியும், ஒருமுறை பா.ஜ.,வும் முதலிடம் பெற்றுள்ளன.
2004 லோக்சபா தேர்தலில் 26.53 ஆக இருந்த காங்., ஓட்டு சதவீதம், 2009ல் 28.55 ஆக உயர்ந்தது. 2014 தேர்தலில் காங்., ஓட்டு சதவீதம் 19.52 ஆக சரிவடைந்தது. அதேசமயம் 2004ல் 22.16 ஆக இருந்த பா.ஜ., ஓட்டு சதவீதம், 2009ல் 18.80 ஆக சரிவடைந்து, 2014ல் 31.34 என அசுர வளர்ச்சி பெற்றது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Apr 03, 2019 7:30 pm

நடிகர் மோகன்பாபுவுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை......
திருப்பதி:காசோலை மோசடி வழக்கில், பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கு, ஐதராபாத் நீதிமன்றம், ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து, உத்தரவிட்டது.
பிரபல தெலுங்கு நடிகர், மோகன்பாபு, 69. இவர், 2010ல், சலீம் என்ற திரைப்படத்தை தயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்த படத்தை, வி.எஸ்.சவுத்ரி என்பவர் இயக்கினார். இவருக்கு சம்பளமாக, 40.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, மோகன்பாபு அளித்தார். ஆனால், அந்த காசோலை, வங்கியில் பணமில்லாமல் திரும்பி விட்டது. இதையடுத்து, காசோலை மோசடியில் ஈடுபட்டதாக, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நீதிமன்றத்தில், மோகன்பாபுவுக்கு எதிராக, சவுத்ரி வழக்கு தொடர்ந்தார். ஒன்பது ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு, நேற்று இறுதி கட்டத்தை அடைந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் மோகன்பாபுவுக்கு, ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 41.75 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். அபராதத்தை கட்டத் தவறினால், மேலும் மூன்று மாதங்கள் தண்டனை நீட்டிக்கப்படும் என்றும் உத்தரவிட்டனர்.தனக்கு தண்டனை கிடைத்ததை அடுத்து, மோகன்பாபு, ஜாமினுக்கு விண்ணப்பித்தார். அபராத தொகையை செலுத்தினால், ஜாமின் தருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அபராதத்தை செலுத்த, மோகன்பாபு, ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளார்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Apr 03, 2019 7:32 pm

திருமணம் நிச்சயித்த பெண் மாயம்...
புதுச்சேரி:திருமணம் நிச்சயிக் கப்பட்ட பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.துத்திபேட்டை சேர்ந்தவர் பெருமாள் மகள் வளர்மதி,22; புதுச்சேரியில் பிரஞ்ச் மொழி டியூசன் நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் நிச்சியிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 29ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளிய சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்த புகாரின் பேரில் உருளையான்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன வளர்மதியை தேடி வருகின்றனர்.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Apr 03, 2019 7:41 pm

ஏ.டி.எம்., மையங்களுக்கு இரவில் பணம் எடுத்து செல்லக்கூடாது
தேர்தல் பார்வையாளர் உத்தரவு
காரைக்கால்:வங்கி ஏ.டி.எம்.,மையங்களுக்கு இரவு 7:00 மணிக்கு மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என தேர்தல் பார்வையாளர் சக்கரவர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல்துறை சார்பில் தேர்தல் பார்வையாளர் (செலவினம்) சக்கரவர்த்தி தலைமையில் பறக்கும்படை, சோதனைச்சாவடி அதிகாரிகள் மற்றும் கலால், வருமானவரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.கலெக்டர் விக்ரந்தராஜா,துணை ஆட்சியர் ஆதாஷ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேர்தல்துறை சோதனை செய்யும் விதிமுறைகள் விளக்கப்பட்டது. இதில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால் எவ்விதமான நடைமுறை விதிகளை கடைபிடிக்க வேண்டும். மேலும் ஏ.டி.எம்.,க்கு பணம் கொண்டு செல்லும் வாகனங்கள் இரவு 7:00 மணிக்கு மேல் செல்லக்கூடாது. பறக்கும் படை மற்றும் சோதனைச்சாவடிகளில் உள்ள அலுவலர்கள் தங்கள் பணி நேரத்தில் பறிமுதல் ஏதேனும் நடைபெற்றால் அதனை தனியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும். எனவே சோதனைச்சாவடிகளில் உள்ள அதிகாரிகள் சாலையில் செல்லும் வாகனங்களை கவனமாக சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Apr 03, 2019 7:43 pm

தேர்தல் செலவின கணக்குகளை நேரில் சமர்ப்பிக்க வேண்டுகோள்
புதுச்சேரி:தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவின கணக்குகளை, மத்திய செலவின பார்வையாளர்களிடம் நேரில் சமர்பிக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலக செய்திக்குறிப்பு:இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செலவினங்களை கண்காணித்தல் தொடர்பான அறிவுரைகளில் கூறியுள்ளவாறு, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மத்திய செலவினப் பார்வையார்கள், வேட்பாளர்களால் பராமரிக்கப்படும் தேர்தல் செலவினக் கணக்குகளை மூன்று முறை பார்வையிட்டு, குறைபாடுகள் குறித்த குறிப்புகளை தெரிவிக்க வேண்டும்.அதன்படி, புதுச்சேரியில் லோக்சபா மற்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் பராமரிக்கப்படும் தேர்தல் செலவின கணக்குகளை இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட மத்திய செலவினப் பார்வையாளர்கள் அசிம் குமார் சக்ரபர்த்தி, அஜித் டேன் ஆகியோர் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் வரும் 4, 10 மற்றும் 17 ம் தேதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை பார்வையிட உள்ளனர்.எனவே, தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் தங்களது தேர்தல் செலவினக் கணக்குகளை நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Apr 05, 2019 8:30 pm

கமல்நாத் மருமகனிடம் விசாரணை ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் அதிரடி
புதுடில்லி: ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு தொடர்பாக, மத்திய பிரதேச மாநில முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, கமல்நாத்தின் சகோதரி மகன், ராடுல் புரியிடம், அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய, ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ஐரோப்பிய நாடான, இத்தாலியைச் சேர்ந்த, 'அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' நிறுவனத்துடன், 3,600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த விவகாரத்தில், 423 கோடி ரூபாய் ஊழல் நடந்தது தெரிய வந்தது.இந்த ஒப்பந்த விவகாரத்தில், இடைத்தரகர்களாக செயல்பட்ட சிலர், கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த வழக்கில், மத்திய பிரதேச மாநில முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, கமல்நாத்தின் சகோதரி நீடாவின் மகன், ராடுல் புரிக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.'ஹிந்துஸ்தான் பவர் புராஜக்டஸ்' என்ற நிறுவனத்தின் தலைவராக, புரி உள்ளார். இதைஅடுத்து, அவருக்கு, அமலாக்கத் துறை, 'சம்மன்' அனுப்பியது. இதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், புரி, நேற்று காலை ஆஜரானார். அவரிடம், அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவரது வாக்கு மூலத்தையும் பதிவு செய்தனர்இது குறித்து, நிருபர்களிடம் புரி கூறுகையில், ''இந்த வழக்கிற்கும், எனக்கும், எந்த தொடர்பும் இல்லை. விசாரணைக்கு, அமலாக்கத்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்,'' என்றார். இதற்கிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகன் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக, கூடுதல் குற்றப் பத்திரிகையை, அமலாக்கத் துறை நேற்று தாக்கல் செய்தது.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக