புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
91 Posts - 61%
heezulia
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
1 Post - 1%
viyasan
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
1 Post - 1%
eraeravi
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
283 Posts - 45%
heezulia
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
19 Posts - 3%
prajai
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீதி  மன்ற செய்திகள். Poll_c10நீதி  மன்ற செய்திகள். Poll_m10நீதி  மன்ற செய்திகள். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி மன்ற செய்திகள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Apr 05, 2019 8:45 pm

தேர்தல் தேதி வழக்கு நீதிமன்றம் மறுப்பு
புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், லோக்சபா தேர்தல் தேதியை மாற்றக் கோரிய மனுவை, அவசர வழக்காக விசாரிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.லோக்சபா தேர்தல், இம்மாதம், 11ல் துவங்கி, மே, 19 வரை, ஏழு கட்டங்களாக நடக்கிறது; இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு, இம்மாதம், 18ல் தேர்தல் நடக்கிறது.இந்நிலையில், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் காலங்களில், தேர்தல் நடப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தல் தேதியை மாற்றி, வேறு தேதியில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்' என, கிறிஸ்துவ அமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.'இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:பண்டிகை தினத்தில் ஏன் ஓட்டளிக்க முடியாது... ஓட்டுச்சாவடிக்குசென்றுஓட்டளிக்க,எவ்வளவுநேரமாகபோகிறத...பண்டிகை நாளில், பிரார்த்தனை செய்வது எப்படி, ஓட்டளிப்பது எப்படி என்பது பற்றி, உங்களுக்கு அறிவுரை கூற விரும்பவில்லை. எனவே, இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Apr 05, 2019 8:50 pm

மாஜி' அமைச்சர், 'ஜாமின்' ரத்து
புதுடில்லி:ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த போராட்டத்தில், வன்முறையை துாண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர், யோகேந்திர சாவோவுக்கு வழங்கப்பட்ட, 'ஜாமினை' உச்ச நீதிமன்றம், நேற்று ரத்து செய்தது.
ஜார்க்கண்டில், முதல்வர், ரகுபர்தாஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த, 2013ல், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும், அப்போதைய முதல்வருமான, ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசில், காங்., கட்சியை சேர்ந்த, யோகேந்திர சாவோ அமைச்சராக இருந்தார்.
கடந்த, 2016ல், ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாகில் நடந்த கலவரம் தொடர்பாக, யோகேந்திர சாவோ, அவரது மனைவியும், எம்.எல்.ஏ.,வுமான நிர்மலா தேவி ஆகியோருக்கு எதிராக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.சாவோ மற்றும் அவரது மனைவிக்கு ஜாமின் வழங்கிய, உச்ச நீதிமன்றம், இருவரும், மத்திய பிரதேச மாநிலம், போபாலில் தங்கியிருக்க வேண்டும் என்றும், நீதிமன்ற விசாரணையைத் தவிர, வேறு காரணங்களுக்காக, ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு செல்லக் கூடாது என்றும், நிபந்தனை விதித்தது.இந்நிலையில், 2017, டிசம்பரில், சாவோவும், அவரது மனைவியும் நிபந்தனையை மீறி, ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்றனர்.இதையடுத்து, சாவோ மற்றும் அவரது மனைவியின் ஜாமினை ரத்து செய்த, உச்ச நீதிமன்றம், இருவரும் போபாலில் தங்கியிருக்க உத்தரவிட்டது. இருவர் மீதும், உச்ச நீதிமன்றத்தில், 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Apr 05, 2019 8:50 pm

மாஜி' அமைச்சர், 'ஜாமின்' ரத்து
புதுடில்லி:ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த போராட்டத்தில், வன்முறையை துாண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர், யோகேந்திர சாவோவுக்கு வழங்கப்பட்ட, 'ஜாமினை' உச்ச நீதிமன்றம், நேற்று ரத்து செய்தது.
ஜார்க்கண்டில், முதல்வர், ரகுபர்தாஸ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த, 2013ல், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும், அப்போதைய முதல்வருமான, ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசில், காங்., கட்சியை சேர்ந்த, யோகேந்திர சாவோ அமைச்சராக இருந்தார்.
கடந்த, 2016ல், ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாகில் நடந்த கலவரம் தொடர்பாக, யோகேந்திர சாவோ, அவரது மனைவியும், எம்.எல்.ஏ.,வுமான நிர்மலா தேவி ஆகியோருக்கு எதிராக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.சாவோ மற்றும் அவரது மனைவிக்கு ஜாமின் வழங்கிய, உச்ச நீதிமன்றம், இருவரும், மத்திய பிரதேச மாநிலம், போபாலில் தங்கியிருக்க வேண்டும் என்றும், நீதிமன்ற விசாரணையைத் தவிர, வேறு காரணங்களுக்காக, ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு செல்லக் கூடாது என்றும், நிபந்தனை விதித்தது.இந்நிலையில், 2017, டிசம்பரில், சாவோவும், அவரது மனைவியும் நிபந்தனையை மீறி, ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்றனர்.இதையடுத்து, சாவோ மற்றும் அவரது மனைவியின் ஜாமினை ரத்து செய்த, உச்ச நீதிமன்றம், இருவரும் போபாலில் தங்கியிருக்க உத்தரவிட்டது. இருவர் மீதும், உச்ச நீதிமன்றத்தில், 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Apr 05, 2019 8:53 pm

லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்திற்கு தடை
மதுரை: தமிழக லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்கள் நியமனத்திற்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது.கரூரை சேர்ந்த ராஜேந்திரன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்; கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவர் ராஜாராமும், அரசியலில் தொடர்புடைய ஆறுமுகமும் லோக் ஆயுக்தா உறுப்
பினர்களாக நியமிக்கப்பட்டது சட்டத்திற்கு எதிரானது. இவர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.இதனை விசாரித்த கோர்ட்; இருவரின் நியமனத்தில் உரிய விதிகளை பின்பற்றவில்லை. இருவரின் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும் நியமனம் குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை 22க்கு ஒத்தி வைக்கப்பட்டது.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Apr 05, 2019 8:58 pm

ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணை நடவடிக்கைகள்: நீதிமன்றம் கேள்வி
சென்னை:'அரசு அறிவித்த விசாரணை வரம்புக்கு உட்பட்டு ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்த வேண்டும். கமிஷனின் முன் கமிஷனே மனு தாக்கல் செய்த நடைமுறையை தவிர்த்திருக்க வேண்டும். அதற்கு பதில் விசாரணை கமிஷனே உத்தரவு பிறப்பித்திருக்கலாமே' என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.ஜெ. மரணம் குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை போதுமானதா; சரியானதா என விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை மனு தாக்கல் செய்தது.தனிப்பட்ட மருத்துவர்கள் குழுவை நியமிக்கும்படி மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. மருத்துவமனை சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆரியமா சுந்தரம் பி.எஸ்.ராமன் அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் விசாரணை கமிஷன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜராகினர்.மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பையா கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: விசாரணை கமிஷன் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடரப்படவில்லை. அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ ஆவணங்களை மருத்துவமனை தரப்பு தாக்கல் செய்துள்ளது. விசாரணை துவங்கிய நாள் முதல் ௧௫௪ சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.அப்பல்லோ டாக்டர்கள் ௫௬ பேர் எய்ம்ஸ் டாக்டர்கள் ஐந்து பேர் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மூன்று பேர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ௧௨ பேர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களும் இதில் அடங்கும்.
இவர்களை விசாரிக்கும் போது விசாரணை கமிஷனின் உறுப்பினராக ஒரு மருத்துவர் கூட இல்லை என்பதை மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டவில்லை.மருத்துவ குழு அமைக்க கோரி விசாரணை கமிஷன் முன் ௨௦௧௮ டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டதை ஆரம்பத்தில் எதிர்க்காத நிலையில் சிகிச்சை போதுமானதா என இந்த கட்டத்தில் கமிஷன் விசாரிக்க முடியாது என கூறுவது வீணானது.விசாரணை கமிஷனுக்கு உதவ டாக்டர்கள் மற்றும் 'பயோ - கெமிஸ்ட்' ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கமிஷனுக்கு அறிக்கை அளிக்கலாம். ௯௦ சதவீத விசாரணை நடவடிக்கைகள் முடிந்த நிலையில் கமிஷனுக்கு உதவ மருத்துவ குழுவை அமைக்கும்படி அப்பல்லோ தரப்பில் கோருவதை ஏற்க முடியாது.கமிஷனின் விருப்பப்படி விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதற்கு அதிகாரம் உள்ளது. வழக்கறிஞர் முன்னிலையில் சாட்சியிடம் சில கேள்விகளை கேட்பதை வேண்டுமென்றே செய்ததாக கூற முடியாது. சாட்சிகளிடம் கேள்விகள் கேட்டு துன்புறுத்தியதாக கூற முடியாது. தகவல்கள் சரிதானா என்பதை அறிய நல்ல நோக்கில் கேள்விகள் கேட்கப்படுவது உண்டு. அதை துன்புறுத்தல் என கூறுவதை ஏற்க முடியாது.விசாரணை கமிஷனின் நடவடிக்கை உள்நோக்கம் உடையவை; ஒருதலைபட்சமானவை என மனுதாரர் தரப்பில் கூறியதை பரிசீலிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் கமிஷனின் வழக்கறிஞர் வாயிலாக கமிஷனில் மனுவும் பதில் மனுவும் தாக்கல் செய்த வினோத நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.விசாரணை கமிஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பதில் மனுவில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் தேவையற்றது. கமிஷன் முன் கமிஷனே மனு தாக்கல் செய்த நடைமுறையை தவிர்த்திருக்க வேண்டும்.

அதற்கு பதில் கமிஷனே உத்தரவு பிறப்பித்திருக்கலாம்.விசாரணை நடவடிக்கைக்கு எந்த தயக்கமும் இன்றி அப்பல்லோ மருத்துவமனை ஒத்துழைப்பு அளித்துள்ளது. கமிஷனின் வழக்கறிஞர் வாயிலாக தாக்கல் செய்யப்பட்ட மனு பதில் மனுவில் சில கருத்துக்களை தெரிவித்ததால் தான் நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயத்துக்கு அப்பல்லோ மருத்துவமனை தள்ளப்பட்டுள்ளது.

தேவையற்ற கருத்துக்களை மனுவில் பதில் மனுவில் தெரிவிக்க யார் அனுமதித்தது என கமிஷனின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரிடம் கேட்டோம். அதற்கு வழக்கறிஞரே அவ்வாறு குறிப்பிட்டு விட்டதாக மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார். அப்படி இருந்தால் அவரை கமிஷன் கண்டித்திருக்க வேண்டும் என்பதை மருத்துவமனையின் வழக்கறிஞர் சரியாக குறிப்பிட்டார்.விசாரணை கமிஷன் உண்மையை கண்டறிவதற்காக அமைக்கப்பட்டது. கமிஷனின் விசாரணையின் போது 'கூட்டு சதி மோசடி' என கூறியிருக்க வேண்டியதில்லை. விசாரணை நடவடிக்கையின் போது வரம்பு மீறப்பட்டுள்ளது என்ற அப்பல்லோ மருத்துவமனை வழக்கறிஞரின் வாதத்தில் அழுத்தம் இருப்பதை காண்கிறோம்.

எனவே இதை தவிர்த்திருக்கலாம். கமிஷன் உண்மையை கண்டறியும் அமைப்பு என்பதால் ஒருவர் குற்றவாளியா அப்பாவியா என்பதை முடிவு செய்ய முடியாது. ஏனென்றால் இரு தரப்புக்கு இடையேயான வழக்கை கமிஷன் விசாரிக்கவில்லை.ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் பற்றி அரசுக்கு தன் கருத்தை கமிஷன் தெரிவிக்கலாம்.

மருத்துவமனைக்கு எதிராக சில கருத்துக்களை கூறியதால் மட்டுமே விசாரணை நடவடிக்கை ரத்து செய்யக் கூடியதாகி விடாது.அரசு அறிவித்துள்ள வரம்புக்குள் கமிஷன் விசாரணையை அமைத்து கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம். அறிக்கை எப்படி அளித்தாலும் அரசு தான் அதை செயல்படுத்த வேண்டும். கமிஷன் அளிக்கும் அறிக்கையை அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுத்தால் இயற்கை நியதிப்படி அப்பல்லோ மருத்துவமனைக்கு உரிய சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுஉள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Apr 05, 2019 9:00 pm

யு.பி.எஸ்.சி., தேர்வில் தமிழ் வினாத்தாள் பதிலளிக்க ஆணைய தலைவருக்கு உத்தரவு
மதுரை:தமிழகத்தில், யு.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கு தமிழில் வினாத்தாள் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், ஆணைய தலைவர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரையை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்த தாவது:தமிழ்மொழி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அலுவல் மொழி பட்டியலில், எட்டாவது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில் உள்ள, 22 மொழிகளையும் வினாத்தாளுக்கு ஏற்ற மொழியாக பயன்படுத்தலாம்.
கடந்த, 2017 சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வென்ற, 990 பேரில், 50 பேர் தமிழர்கள். தமிழகத்தில் ஜூன் மாதங்களில் இத்தேர்வு நடக்கிறது. முதல் இருநிலை தேர்வுகளிலும் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் வினாத்தாள் வெளியிடப்படுகிறது.இத்தேர்வு எழுதுவோரில், 60 சதவீதம் பேர் கிராமங்களை சேர்ந்தவர்கள். சேவை செய்யும் நோக்கோடு, தேர்வு எழுத முற்படும்போது, நன்கு அறிந்த தமிழ்மொழியில் வினாத்தாள் இல்லாதது சிரமத்தை ஏற்படுத்துகிறது.எனவே தமிழகத்தை சேர்ந்த கிராமப்புற, திறமை வாய்ந்த மாணவர்களும் இத்தேர்வுகளில் வெற்றி பெற, தமிழ் மொழியில் வினாத்தாளை வெளியிட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, இது குறித்து யு.பி.எஸ்.சி., ஆணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Apr 06, 2019 8:32 pm

கனிமொழிக்கு கோர்ட் சம்மன்
விழுப்புரம்:தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி மீதான அவதுாறு வழக்கு விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணைக்கு வருகிறது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 2018ம் ஆண்டு ஆக.18ம் தேதி நடந்த கூட்டத்தில் தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதுாறாக பேசியதாக, விழுப்புரம் மாவட்ட அரசு வழக்கறிஞர் சீனிவாசன் புகார் அளித்தார்.அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கனிமொழி எம்.பி.,க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வழக்கு மீதான விசாரணை, வரும் 9ம் தேதி விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Apr 06, 2019 8:33 pm

கனிமொழிக்கு கோர்ட் சம்மன்
விழுப்புரம்:தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி மீதான அவதுாறு வழக்கு விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணைக்கு வருகிறது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 2018ம் ஆண்டு ஆக.18ம் தேதி நடந்த கூட்டத்தில் தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதுாறாக பேசியதாக, விழுப்புரம் மாவட்ட அரசு வழக்கறிஞர் சீனிவாசன் புகார் அளித்தார்.அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கனிமொழி எம்.பி.,க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வழக்கு மீதான விசாரணை, வரும் 9ம் தேதி விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Apr 06, 2019 8:34 pm

நகைகள் பறிமுதல் செய்வதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
சென்னை:லோக்சபா தேர்தல் மற்றும், ௧௮ சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், 18ம் தேதி நடக்கிறது.பணப் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் ஆணையம் தரப்பில், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரிகள், வாகனங்களை சோதனையிட்டு, உரிய ஆவணமின்றி எடுத்து செல்லும் பணம், நகைகளை பறிமுதல் செய்கின்றனர்.இதையடுத்து, ஆவணங்களுடன் எடுத்து செல்லப்படும், தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்ய தடை கோரி, உயர் நீதிமன்றத்தில், சென்னை மற்றும் கோவை மாவட்ட நகை வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.நகைகளை பறிமுதல் செய்வதால், தொழில் பாதிக்கப்படுவதாக மனுக்களில் கூறப்பட்டது.
நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், மனுக்கள் விசாரணைக்கு வந்தன. சாலை மார்க்கமாக எடுத்து செல்லப்படும் பொருட்கள், சட்டவிரோத மாக எடுத்து செல்லப்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டியதுள்ளது எனக்கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Apr 06, 2019 8:39 pm

மோடி திரைப்பட வழக்கு அவசரமாக விசாரிக்க மறுப்பு
புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, பி.எம். நரேந்திர மோடி என்ற திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பான வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து பி.எம். நரேந்திர மோடி என்ற, ஹிந்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.இதில், நரேந்திர மோடி வேடத்தில், நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த படத்தை, நேற்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.'லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த படம் வெளியானால், மக்கள் மனதில், பா.ஜ.,வுக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்தும்; எனவே, தேர்தல் முடியும் வரை, இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், திரைப்படத்தை பார்க்க ஏற்பாடு செய்யும்படி, தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை, வரும், 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதையடுத்து, இப்படத்தின் வெளியீட்டை, அதன் தயாரிப்பாளர், தற்காலிகமாக ஒத்தி வைத்தார்.இந்நிலையில், 'இந்த வழக்கை அவசர வழக்காக, விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்' என, மனுதாரர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில், நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், 'இனிமேல் தான் திரைப்படத்தை பார்க்க போகிறோம். எனவே, இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. ஏற்கனவே கூறியபடி, இந்த வழக்கு, 8ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, உத்தரவிட்டனர்.



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக