ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Today at 2:26 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Today at 1:57 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Today at 1:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:29 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Yesterday at 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Yesterday at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Oct 06, 2024 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Oct 06, 2024 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Oct 06, 2024 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Sun Oct 06, 2024 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Oct 06, 2024 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 06, 2024 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Oct 06, 2024 4:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Oct 06, 2024 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Sun Oct 06, 2024 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Sun Oct 06, 2024 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

Top posting users this week
ayyasamy ram
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
heezulia
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 
sanji
உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_m10உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னையே நீ அறிவாய் - எஸ்.கே.முருகன்

2 posters

Go down

உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Empty உன்னையே நீ அறிவாய் - எஸ்.கே.முருகன்

Post by ayyasamy ram Tue Apr 02, 2019 3:04 pm

உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Iyz2DqLQe2aD1QkDxkV8+p52
-



‘‘நீங்கள் வாழ்வதற்குப் புறப்படுங்கள், நான் விடை
பெறுகிறேன்!’’ என நீதிபதிகளைப் பார்த்துப் புன்னகைத்து
விட்டு, கை கால்களில் பூட்டப்பட்டிருந்த விலங்குடன் சிறைக்
கூடத்துக்குள் நடந்தார் சாக்ரடீஸ்
-
சிறைப் பணியாளர்கள், சீடர்கள், மனைவி, மக்கள் அனைவரும்
சுற்றி நின்று விம்மி அழுத சூழலிலும், மகிழ்ச்சி குறையாமல்
தனக்கான நஞ்சுக் கோப்பையை வாங்கிக்கொண்டார்.

‘‘நஞ்சினை இப்போதே பருக வேண்டியதில்லை. சற்று நேரம்
கழித்தும் பருகலாம்’’ என சிறைக் காவலர் அன்புடன் சொல்ல, ‘‘
காலம் தாழ்த்துவதால், உங்கள் அனைவருக்கும் இல்லம் திரும்பத்
தாமதமாகலாம். அதனால் இப்போதே குடிக்கிறேன்’’ என்றபடி,
ஒரு சொட்டுகூட மிச்சம் வைக்காமல் குடித்து முடித்தார்.

‘‘உங்கள் இறுதிச் சடங்கு எப்படி அமைய வேண்டும்?’’ என
ஒரு நண்பர் கேட்க, ‘‘மரணத்துக்குப் பின் என்னை உங்களால்
பிடிக்க முடியாது. என் உடலை என்ன செய்தாலும், அதனால்
எந்தப் பயனும் இல்லை’’ என்று சின்ன சிரிப்புடன் திரும்பிய
சாக்ரடீஸ், மரணத்தை வரவேற்கக் குறுக்கும் நெடுக்குமாய்
வேகவேகமாக நடக்கத் துவங்கினார்.

விஷம் அவரது உடம்பில் கிறுகிறுவென்று பரவி, கால்கள்
குளிரெடுக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அடுத்த அடி எடுத்து
வைக்க முடியாமல் அப்படியே மெள்ளச் சரிந்து குப்புறப்
படுத்துக்கொண்டார்.
சில விநாடிகளில், விடைபெற்றார் சாக்ரடீஸ்!
-
கி.மு 469-ல்... கிரேக்க நாட்டில் ஒரு ஏழைச் சிற்பியின்
மகனாகப் பிறந்தவர் சாக்ரடீஸ். ராணுவத்தில் பணியாற்றப்
போனவர், சில காலத்துக்குள்ளேயே வெளியேறி, தந்தையின்
சிற்பத் தொழிலுக்கே திரும்பி வந்தார்.

சதா சிந்தனையிலேயே காலம் கழித்த சாக்ரடீஸை முதலில்
அறிந்துகொண்டது அவர் தந்தைதான். ‘‘நீ யார், எதற்காக
வந்திருக்கிறாய், என்ன செய்யப்போகிறாய் என்பதை முதலில்
தெளிவாக அறிந்து கொள். பின், அதன்படி நட!’’ என்றார் அப்பா.

தன் நாற்பதாவது வயதுக்குப் பின்னரே, தன் எண்ணங்களை
எல்லோ ரிடமும் தைரியமாக, வெளிப்படையாகப் பேசத்
தொடங்கினார் சாக்ரடீஸ்.

அந்தக் காலத்தில் மதம், அரசு இரண்டையும் அப்படியே ஏற்றுக்
கொள்வதே கிரேக்கர்களின் மரபு. சாக்ரடீஸ் அதை முதலில்
உடைக்க விரும்பினார். விவாதங்கள், தத்துவங்களை அள்ளித்
தெளிப்பார்.

கடவுளை அவர் மறுக்கவில்லை என்றாலும், கடவுள் பெயரால்
நடைபெறும் மூடத்தனங் களை எதிர்த்தார். ஆட்சியாளர்களின்
அநியாயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

உருண்டையான சப்பை மூக்கு, பிதுங்கி நின்ற கண்கள்,
குட்டையான உருவம், சாய்ந்த நடை, அவலட்சணமான தோற்றம்...
இதுதான் சாக்ரடீஸ். ஆனால், அவரது பேச்சைக் கேட்பதற்காக
இளைஞர்கள் திரண்டு வந்தார்கள்.

கிரேக்கக் கடவுளை நிந்தித்து புதிய மதத்தைப் பரப்பி,
இளைஞர்களை கெடுக்கப் பார்க்கிறார் என்ற குற்றச் சாட்டுதான்
எழுபதாவது வயதில் இவர் மீது சுமத்தப்பட்டது. மன்னிப்புக்
கேட்டால் உயிர் பிழைக்கலாம் என நீதிபதிகள் சொன்னபோதும்,
‘‘உயிரை விட என் கருத்துக்கள் உயர்ந்தவை’’ என்று மரணத்தைத்
தழுவினார்.


சாக்ரடீஸின் மந்திரம் என்ன தெரியுமா...
‘‘நண்பர்களே! நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் ஒன்றே
ஒன்றுதான்... உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
அதுதான் உண்மையான அறிவு. உன்னையே நீ அறிவாய்!
அதன் பிறகே, உன்னைச் சுற்றி நடப்பதை அறிய முடியும்;
ஆராய முடியும்; வாழ்வை வெல்ல முடியும்!’’

-
விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84218
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உன்னையே நீ அறிவாய்  - எஸ்.கே.முருகன் Empty Re: உன்னையே நீ அறிவாய் - எஸ்.கே.முருகன்

Post by ஹர்ஷித் Tue Apr 02, 2019 3:38 pm

உருண்டையான சப்பை மூக்கு, பிதுங்கி நின்ற கண்கள், குட்டையான உருவம், சாய்ந்த நடை, அவலட்சணமான தோற்றம்... இதுதான் சாக்ரடீஸ். ஆனால், அவரது பேச்சைக் கேட்பதற்காக இளைஞர்கள் திரண்டு வந்தார்கள். wrote:

வெற்றி பெற வெளித்தோற்றம் அவசியமல்ல என்பதை தெளிவாக உணர்த்தியவர் இவர்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum